தில்லி ஜாமியா மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிய போது காவல்துறை கண்மூடித் தனமாக தாக்கியது. காவல் துறை உயர் அதிகாரிகளும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதை மறுத்தனர். காவலர்களே தீ வைக்கும், கல்லெறியும், காணொளிகள் இணையத்தில் வெளியாயின. இரண்டு மாதங்களைக் கடந்த பின்னும் காவல்துறை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மெரீனா எழுச்சியின் போது கூட காவல் துறையினர் வாகனங்களை அடித்து நொறுக்கும், வாகனங்களுக்கு தீ வைக்கும், குடிசைகளை சேதப்படுத்தும், திருடும் காணொளிகள் வெளியாகி … ஏவல் நாய்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: மாணவர் போராட்டம்
தாக்கியது ABVP தான்
ஞாயிற்றுக் கிழமை இரவில் ஜேஎன்யூ வில் நடத்தப்பட்ட தாக்குதலில், தாக்குதலில் ஈடுபட்டது RSS ன் மாணவர் அமைப்பான ABVP தான் என்று மாணவர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் கூறினார்கள். ஆனால் பிஜேபியினரோ இடதுசாரிகள் தாம் கலகம் நடத்தினார்கள் என்றார்கள். இங்குள்ள நாரவாய் நாராயணனும் அதையே வாந்தியெடுத்தான். நடுநிலை என்ற பெயரில் சிலர் கல்வி வளாகத்தினுள் இப்படி கலகம் செய்வதை கண்டிக்கிறோம் என்று, தாக்குதலை கலகம் என்றார்கள். அமித்ஷா விசாரணை நடத்தப்படும் என நாடகமாடினார். இதோ, இப்போது ABVP … தாக்கியது ABVP தான்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தீப்பொறியின் நாவுகள் பேசட்டும்
கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டு எனும் முகாந்திரத்துடன் அரசுகளுக்கு எதிராக நடந்த மாணவர்கள், இளைஞர்களின் மாபெரும் போராட்டம் அரசு ரவுடிகளின் வக்கிரமான வன்முறை வெறியாட்டத்தால் முடிவுக்கு கொண்டுவரப் பட்டிருக்கிறது. அமைதியான, அறவழியிலான, இந்தியாவுக்கே முன்மாதிரி எனக் குறிப்பிடப்பட்ட போராட்டம் அரசினால் திட்டமிட்டு தீய்க்கப்பட்டிருக்கிறது. அரைநாள் நேரம் கொடுங்கள் நாங்களே கலைந்து செல்கிறோம் என்று மாணவர்கள் கோரினார்கள், பத்து மணி வரையாவது நேரம் கொடுங்கள் என்று கேட்டுப் பார்த்தார்கள். இரண்டு மணி நேரம் மட்டுமாவது கொடுங்கள் என்று கெஞ்சிப் … தீப்பொறியின் நாவுகள் பேசட்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஜல்லிக்கட்டும் பொங்கலும் விவசாயிகளுக்கு உயிர் தருமா?
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகிறார்கள். தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இடையே பொங்கல் விடுப்பு விடுபட்டதும் வந்து போனது. ஆனால் இப்படி பொங்கி எழுந்து போராடும் அளவுக்கு ஜல்லிக்கட்டுக்கு என்ன கனம் இருக்கிறது? வீர விளையாட்டு, நாட்டு மாடுகள், தமிழர் அடையாளம் இத்யாதி, இத்யாதிகளை.. .. .. கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு பார்ப்போம். மாட்டுக் கொம்பின் கூர்ப்பில் கண்டுபிடிக்கப்பட்ட வீரமா? கொத்துக் … ஜல்லிக்கட்டும் பொங்கலும் விவசாயிகளுக்கு உயிர் தருமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஈழத்தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, சிங்கள இனவெறிப் பாசிஸ்டு ராஜபக்சேவுக்கு எதிராக தமிழக மாணவர் போராட்டம் தோற்றுவித்த பொதுக் கருத்தைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்காக, தாங்களும் மாணவர் கோரிக்கைகளை ஆதரிப்பது போல எல்லா ஓட்டுக் கட்சிகளும் நடிக்கின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ, “இலங்கையின் மீது பொருளாதாரத் தடை, போர்க்குற்ற விசாரணை, பொது வாக்கெடுப்பு” என்று அடுத்தடுத்து சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றி, நடிப்பில் மற்றெல்லா ஓட்டுக் கட்சிகளை விஞ்சுகிறார். இராஜபக்சேவுக்கு எதிரா … ஈழத்தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை-ஐ படிப்பதைத் தொடரவும்.
இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி! போராட்டமே அவர்களின் கல்வி!!
சமச்சீர் பாடநூல்களை ஜூலை 22 ஆம் தேதிக்குள் விநியோகித்து முடித்து, ஆசிரியர்கள் பாடம் நடத்தத் தொடங்கிவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 18 ஆம் தேதி உத்தரவிட்டது. தமிழக அரசு விநியோகிக்கவில்லை. சமச்சீர் நூல்களை விநியோகிப்பதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் கேட்டது. “சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி சமச்சீர் பாட நூல்களை உடனே விநியோகிப்பதுடன், வகுப்புகளைத் தொடங்குவதற்கும் தமிழக … இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி! போராட்டமே அவர்களின் கல்வி!!-ஐ படிப்பதைத் தொடரவும்.