கொரோனாவை முன்வைத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 50 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வேறு வழி இல்லாமல் அல்லது வேறு வழி தெரியாமல் மக்கள் தங்களை வீடுகளுக்குள் முடக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதே இந்த ஊரங்கு நேரத்தில் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? கைதட்டு, விளக்கணை, தீவட்டி ஏற்று, பூத்தூவு என்று மக்களை கேலி செய்வதை விடுத்து அரசு வேறு என்ன செய்து கொண்டிருக்கிறது? ஏற்கனவே கொரோனா மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வதை நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவது போன்ற … நமக்கு ஊரடங்கு, அரசுக்கு விற்றடங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: மானியம்
நூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்
சிறு வயதில் ஒருவன் கற்கும் நூல்களே பின்னர் அவனை ஆற்றுப்படுத்துகின்றன, அவனுக்கான கண்ணோட்டத்தை வந்தடைய உதவுகின்றன. வழி நடத்தும் தோழனாகின்றன. நூல்களின் சுவை கண்ட யாரும் ஒற்றை ஒரு நாளேனும், இந்த வாசிப்புப் பழக்கத்தை மக்களிடம் எப்படி ஏற்படுத்துவது என்று சிந்திக்காமல் இருந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு சரியான நூல்கள் மக்களின் உள்ளொளியை பற்றிக் கொள்கின்றன. இதை விரிவாக்குவதும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவதும் யார் பொறுப்பு? ஐயம் சிறிதும் இல்லாமல், இது அரசின் கடமையே. ஆனால் அரசு … நூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
உணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா? பறிப்பதற்கா?
கடந்த வாரத்தில் அமைச்சரவை கூடி உணவுப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவருவதிலுள்ள சிக்கல்களை களைவது குறித்து விவாதித்தது. வறிய மக்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யும் விதத்தில் இந்த சட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்று அரசு கூறுகிறது. ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தான் கிடங்குகளில் சேமிக்கப்பட்டிருக்கும் உணவு தானியங்கள் வீணாய் கெட்டுப் போனாலும் போகலாமேயன்றி ஏழைகளுக்கு அதை வழங்க முடியாது என்று மண்மோகன் சிங் முழங்கியிருந்தார். அப்படியிருக்க திடீரென்று என்ன மாற்றம் எப்படி நேர்ந்தது? மாற்றமோ மாறுதலோ … உணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா? பறிப்பதற்கா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பட்ஜெட்: வலுத்தவனுக்கு மானியம் உழைப்பவனுக்கு வரிச்சுமை
பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், முதலாளிகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. "இந்த பட்ஜெட் விவசாயிகள், தொழில் முனைவோர், முதலீட்டாளர்கச்ளுக்கு உரியது" என 2010-11 ஆம் ஆண்டுக்கான மைய அரசின் வரவு செலவு அறிக்கை பற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு பாதி உண்மை; இன்னொரு பாதியோ திரித்துக் கூறப்பட்டிருக்கிறது. விவசாயிகள் என அவர் குறிப்பிடுவது நமக்குத்தெரிந்த குப்பன், சுப்பன் போன்ற சிறு நடுத்தர விவசாயிகளையோ, விவசாய கூலித்தொழிலாளர்களையோ குறிக்கவில்லை. ஏற்றுமதியை குறிவைத்து விவசாயத்தில் குதித்துள்ள … பட்ஜெட்: வலுத்தவனுக்கு மானியம் உழைப்பவனுக்கு வரிச்சுமை-ஐ படிப்பதைத் தொடரவும்.