பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள்

மார்க்சிய பேராசான் எங்கெல்ஸின் 127 வது நினைவு நாள் இன்று. மார்க்ஸ் – எங்கெல்ஸ் இருவருக்கும் முந்தைய தத்துவஞானிகள் இந்த உலகைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்த தருணத்தில், இவர்கள் இந்த உலகை மாற்றுவதற்கான தத்துவத்தைப் படைத்தனர். மார்க்சின் பெயரைத் தாங்கியிருந்தாலும் மார்க்சியம் என்பது மார்க்ஸ், எங்கெல்ஸ் என்ற இரண்டு ஆளுமைகளின் பிரிக்க முடியாத பணியாகும். மார்க்சியம் எனும் சமூக ஆய்வுமுறையை உருவாக்குவதிலும், அதனை சமகாலத்திய முதலாளித்துவ சமூகத்தின் மீது பிரயோகித்து பாட்டாளி வர்க்கத்துக்கான சித்தாந்தத்தை படைப்பதிலும் இருவரின் … பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

செஞ்சட்டைப் பேரணியின் பின்னால்

கடந்த 29ம் தேதி மதுரையில் செஞ்சட்டைப் பேரனி மீகச் சிறப்பாய் நடந்து முடிந்திருக்கிறது. பல்லாயிரக் கணக்கான மக்கள் சிவப்பு சட்டையணிந்து கலந்து கொண்டது மிகுந்த உவகையூட்டக் கூடியதாக இருந்தது. இது இடதுசாரிகள் நடத்திய பேரணி அல்ல. கருப்புச் சட்டைகள் முன்னின்று நடத்திய செஞ்சட்டைப் பேரணி. சிவப்பு, கருப்பு, நீலம் மூன்றும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்பது ஆசையாகவும், கருத்தியலாகவும் இங்கு நீண்ட காலமாக நிலவில் இருக்கிறது. அதற்கு இது பெருந் தொடக்கமாக இருக்க வேண்டும். இந்தப் பேரணி … செஞ்சட்டைப் பேரணியின் பின்னால்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்சியத்தின் சாரம் அடையாள அரசியலா?

மகஇக வின் பாடல்கள் என்றால் உள்ளம் துடித்து எழும். பறையின் அதிர்வுகளைப் போல் மனம் அதிர்ந்து சோம்பலை உதறித் தள்ளி வீரெழும். ஆனால், நேற்று அந்த பாடலைக் கேட்ட போது உள்ளம் துணுக்குற்றுப் போனது. முனை மழுங்கி விட்டால் வாட்கள் கரும்புத் தோகை ஆகிவிடுமோ! மூளை மழுங்கி விட்டால் கோவன் கத்தார் ஆகி விடுவாரோ! கடந்த 7ம் தேதி ‘திராவிட மாடலாகும் இந்தியா’ எனும் தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் மகஇக நடத்திய … மார்க்சியத்தின் சாரம் அடையாள அரசியலா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

உலகப் பேராசான்

மார்க்ஸைப் படி மார்க்ஸே படி

எது சைத்தானின் படை? 1

கம்யூனிசமும் இஸ்லாமும் ஓர் ஒப்பீடு செங்கொடி வலையொளி தொடங்கிய பின்னர் நண்பர் ஒருவர் ஒரு யூடியூப் வலையொளிப் பதிவு ஒன்றை சுட்டிக் காட்டினார். அது ஒரு மத பரப்புரை வலையொளி. இஸ்லாமிய மத பரப்புரை பதிவுகள் பலநூறு வெளிவந்து கொண்டிருக்கின்றன. என்றாலும், இது வெறுமனே பரப்புரையை மட்டும் செய்யாமல், கம்யூனிசத்தையும் இஸ்லாத்தையும் ஒப்பு நோக்குகிறது. இஸ்லாம் எனும் மதத்துக்கு எதிராக பல தலைப்புகளில் செங்கொடியில் விவாதங்கள் நடந்துள்ளன. மட்டுமல்லாமல், ‘உணர்வு’ இதழில் இஸ்லாத்தை நோக்கி வா தோழா … எது சைத்தானின் படை? 1-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்ஸின்றி அமையாது உலகு

தெளிவான விஞ்ஞானபூர்வமான பொருள் புரிதலின்றிச் சமூக நீதி குறித்து மொந்தையாகப் பொதுப்பட பேசுவது என்பது இன்றைக்கு ஒரு நாகரீகமாகிவிட்டது.  சமூகச் சமத்தன்மை மற்றும் சமூக நீதி என்பது எப்போதும் மனிதர்களின் பெருமுயற்சியின் விளைவாக இருக்கிறது. தாங்கள் படும் துன்பங்களுக்குத் தீர்வு காண மனிதர்கள் உலகியல் வழியில் போராடவும் வானத்துத் தேவர்களிடம் வேண்டவும் செய்கிறார்கள். சமூக வரலாறு நெடுக அநீதிகளும், சமத்துவமின்மையும் பெரிதும் காணப்படுகின்றன. இன்று முரண்பாடுகள் முற்றி நிலைமையை மோசமாக்க, குறிப்பாக நமது தேசத்தில், சமூக நீதி … மார்க்ஸின்றி அமையாது உலகு-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம் – 3

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 8 இந்தக் குடும்ப வடிவம் அமெரிக்க முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இரத்த உறவுகளை மிகவும் துல்லியமாகக் காட்டுகிறது. எனது தாயினுடைய சகோதரிகளின் குழுந்தைகள் அவளுக்கும் குழந்தைகளாகவே இருந்து வருகிறார்கள். அதே போல் என் தகப்பனாருடைய சகோதரின் குழந்தைகளும் அவருக்கும் குழந்தைகளாகவே இருந்து வருகிறார்கள். அந்தக் குழந்தைகள் எல்லாரும் எனக்கு சகோதரர், சகோதரிகள் ஆவர். ஆனால் எனது தாயின் சகோதரர்களுடைய குழந்தைகளோ இப்பொழுது அவளுக்கு மருமான், மருமக்களாக இருக்கிறார்கள். என்னுடைய தகப்பனாரின் … குடும்பம் – 3-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம் – 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 7 மனிதச் சமூகங்களைப் பற்றி முடிவுகள் எடுப்பதில் மிருகச் சமூகங்களுக்கும் சிறிதளவு மதிப்பு இருக்கிறது, ஆனால் அது எதிர்மறைப் பொருளில் இருக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. நாம் தெரிந்து கொண்டுள்ள வரைக்கும் முதுகெலும்புள்ள மிருக இனத்தைச் சேர்ந்த உயர்தரப் பிராணிகளிடையே பலதார மணம், இணை மணம் ஆகிய இரண்டு குடும்ப வடிவங்கள் மட்டுமே இருந்து வருகின்றன. இவ்விரண்டு வடிவங்களிலும் ஒரே வயது வந்த ஆண்தான், ஒரே கணவர் தான் … குடும்பம் – 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்சியமும் இலக்கியமும்

வறுமையின் தத்துவம் என்ற தலைப்பில் ஒரு நூலை புருதோன் எழுதினார். மார்க்ஸ் இதை மறுத்து விளக்கி எழுதிய நூலுக்கு வைத்த தலைப்பு தத்துவத்தின் வறுமை. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை மார்க்ஸ் ஏங்கல்ஸ் எழுதிய போது ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டுகிறது, கம்யூனிசம் எனும் பூதம் என்று எழுதினார்கள். இப்படி மார்க்சிய எழுத்துகளில் ஊடாடிக் கிடக்கும் அழகியலை சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு படைப்பின் இலக்கிய மதிப்பு எங்கிருந்து வருகிறது? சொற்கோர்ப்பால் உண்டாகும் அழகியலில் இருந்து மட்டுமா? … மார்க்சியமும் இலக்கியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கம்யூனிசத்தின் உயிர்

இன்று மாமேதை, பேராசான் மார்க்ஸின் 202 ஆவது பிறந்த நாள். உலகை புரட்சிகரமாக மாற்றியமைக்க விரும்பிய அந்த மாபெரும் மேதையின் கனவு இன்னும் நனவாகவில்லை. அதை நோக்கிய நகர்வில் இருக்கிறோமா என தன்னைத் தானே ஆய்வு செய்வதும், அந்த திசையில் பயணிப்பதை உறுதி செய்வதுமே நம்மையும், சமூகத்தையும் மேன்மைப் படுத்தும். கயூனிஸ்டுகள் யாரும் மார்க்ஸை கடவுளாக கருதுவதில்லை. மூலதனம் நூலை வேதமாக கொள்வதில்லை. ஏனென்றால் கடவுள், வேதம் போன்ற சொற்களின் பொருள், நடப்பு உலகை அப்படியே தக்க … கம்யூனிசத்தின் உயிர்-ஐ படிப்பதைத் தொடரவும்.