(சீன) சோவியத் இயக்கம் ௨

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௨ 1928 மே மாதத்தில் சூடே, சிங் காங் சின் வந்து சேர்ந்தார். அதோடு எங்கள் படைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. நாங்கள் ஒருங்கிணைந்து (முதலாவது பிங் மாநாட்டில் இங்கு மாசேதுங்கும் சூடேயும் மாவோ லின் பியா, சியா சீ ஆகியோருடன் இணைந்து கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆதரவு பெற்ற அரசியல் மத்தியக்குழுத்தலைவர் லி லி சான் மேற்கொண்ட நெருக்குதலால் அனைத்திற்கும் எதிராக தாக்குப்பிடித்தனர். அதன் பின்னீடு மாஸ்கோவில் கல்வி கற்றுத் திரும்பிய 28 போல்ஷ்விக்குகளும்) … (சீன) சோவியத் இயக்கம் ௨-ஐ படிப்பதைத் தொடரவும்.

(சீன) சோவியத் இயக்கம் ௧

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௧ வெகுவாக பிரச்சனைக்குறியதாக இருந்த 1927 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து மா சே துங் அவர்களுடன் ஒரு கலந்துரையாடலை நான் நிகழ்த்தினேன். இது பற்றி இங்கு குறிப்பிடுவதற்கு போதுமான விடயம் என்று நான் இதைக் கருதினேன். இது அவரது சுயசரிதையின் பகுதி அல்ல. ஆனால் அவர் இது பற்றி ஒரு தனிப்பட்ட மனிதனின் பிரதிபலிப்பாக இதை எனக்கு சொன்னபோது, ஒவ்வொரு சீனக் கம்யூனிஸ்டின் வாழ்க்கையிலும் இது … (சீன) சோவியத் இயக்கம் ௧-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேசியவாத காலகட்டம் ௨

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௦ அந்த வருடத்தில்  வம்போவா ராணுவப் பயிற்சிக் கல்லூரி திறக்கப்பட்டது. காலில் அதன் ஆலோசகரானார். ரஷ்யாவிலிருந்து சோவியத் ஆலோசகர்கள் வந்து சேர்ந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி கோமிண்டாங் கட்சி கூட்டிணைவு ஒப்பந்தம் ஒரு நாடு தழுவிய புரட்சிகர இயக்கமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. அடுத்த குளிர்காலத்தின் போது ஓய்வுக்காக நான் ஹூனான் திரும்பினேன். நான் ஷாங்காயில் சுகவீனமுற்றென். ஆனால் நான் ஹூனானில் இருக்கும்போது அந்த மாகாணத்தின் மாபெரும் விவசாய் இயக்கத்தின் மையத்தளத்தை நான் ஒழுங்குபடுத்தினேன். … தேசியவாத காலகட்டம் ௨-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேசியவாத காலகட்டம் ௧

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௯ மாவோ தற்போது ஒரு மார்க்சியவாதியாக இருந்தார் ஆனால் ஒரு கம்யூனிஸ்டாக ஆகவில்லை. ஏனென்றால் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் சீனாவில் இருக்கவில்லை. பீக்கிங்கில் வாழ்ந்த ரஷ்யர்கள் மூலமாக, சென் ரூ கியூ அவர்களும், லி ரா சாவ் அவர்களும் கம்யூனிஸ்ட் சர்வதேசியத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். 1920ஆம் ஆண்டு வசந்த காலத்தின் போதுதான் கம்யூனிஸ்ட் அகிலத்தின் உத்தியோக பிரதிநிதிகிரி கோரி வோய்ட்டின்ஸ்கி பீக்கிங் வந்து சேர்ந்தார். ரஷ்ய கம்யூனிஸ்ட் … தேசியவாத காலகட்டம் ௧-ஐ படிப்பதைத் தொடரவும்.

புரட்சிக்கு முன்னோடி ௨

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௮ நான் பூகூவை அடைந்ததும் மீண்டும் ஒரு செப்புக்காசும் இல்லாதவனாக ஆகினேன். பயணச்சீட்டும் இருக்கவில்லை. எனக்கு கடனாகத்தர ஒருவரிடமும் பணம் இருக்கவில்லை. இந்த நகரத்தைவிட்டு வெளிக்கிளம்ப எனக்கு ஒரு வழிடியும் புரியவில்லை. இதிலும் மோசமான துக்ககரமான நிகழ்ச்சியாக என்னிடம் இருந்த ஒரே சோடி சப்பாத்தையும் ஒரு கள்ளன் திருடிக்கொண்டான். ஆனால் மீண்டும் அதேகதை சொர்க்கம் ஒரு பயணியை தாமதிக்க விடாது. ரயில்வே நிலையத்திற்கு வெளியே ஹூனானை சேர்ந்த ஒரு பழைய நண்பனை … புரட்சிக்கு முன்னோடி ௨-ஐ படிப்பதைத் தொடரவும்.