பதின்ம வயது தொடங்கி, மரணம் வரை பொதுமை மெய்யியலை உயர்த்திப் பிடித்து, அதற்காகவே இயல்பாக இருந்த வாழ்விலிருந்து விலகி நின்று, திருமணம் உள்ளிட்ட எந்த சட்டகங்களுக்குள்ளும் சிக்காமல், உழைத்த ஒரு தோழரை இழந்திருக்கின்றோம். தோழருடன் நேரடியாக எனக்கு எந்தப் பழக்கமும் இல்லை. சில முறைகளைத் தவிர சந்தித்ததும் இல்லை. இரண்டைத் தவிர மற்ற அனைத்தும் பொதுச் சந்திப்புகள் தாம். வகுப்புகளில், தலைப்புகளில். இரண்டு முறை மட்டுமே தனியாக சந்தித்து உரையாடியிருக்கிறேன். என்ன சொன்னாலும், அதை எப்படிச் சொன்னாலும் … தோழருக்கு செவ்வஞ்சலி-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: மா.அ.க
SOC: சில கேள்விகள்
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே SOC க்குள் நடக்கும் குழப்பங்கள், தங்கராசு முறைகேட்டுக்குப் பிறகு வெளிப்படையாகவே விவாதிக்கப்படுகின்றன. செயலர் பக்கமும், அதற்கு எதிர்ப் பக்கமும் தங்கள் தன்னிலை விளக்கங்களை அறிக்கைகள் எனும் பெயரில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் புரட்சிகர இயக்கங்களுள் தனி(!) என நம்பப்படும் SOCயில் இவ்வாறான நேர்வுகள் நிகழ்வது கண்டு, பொதுவான சமூக செயற்பாட்டாளர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்திருக்கலாம். ஆனால், இவை அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரியனவல்ல. SOCயின் தொடக்க காலத்திலிருந்தே விலகல்களும், விலக்கல்களும், பிளவுகளும் இருந்தே வந்திருக்கின்றன. … SOC: சில கேள்விகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.