அண்மையில் தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருந்தது. இதற்கு மக்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர், ஒன்றிய அரசு மின் கட்டண உயர்வை அறிவிக்கச் சொல்லி எங்களை கட்டாயப்படுத்துகிறது என்று தெரிவித்திருந்தார். அமைச்சர் சொல்வது உண்மை தான் என்று கடந்த எட்டாம் தேதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மின்சாரத் திருத்தச் சட்டம் 2022 வெளிப்படையாக அறிவித்து விட்டது. தற்போது மின் பகிர்மானம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதை தனியாருக்கு மாற்றுவதை … மின்சார தூக்குக் கயிறு-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: மின்சாரம்
பொதுத்துறை ஆய்வறிக்கை
"மக்கள் சேவையை மறந்த ஆட்சியாளர்கள்" வெளிச்சம் போடும் ஆய்வறிக்கை... தமிழ்நாட்டில் உள்ள 55 பொதுத்துறை நிறுவ னங்களும் 2017-18 ஆம் ஆண்டுக்கான கணக்குகளை இறுதிப்படுத்தியுள்ளன. அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு அறிக்கையை, மூன்று நாட்கள் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான செப்டம்பர் 16 அன்று பேரவையில் சமர்ப்பித்தனர். அது குறித்து ஒரு கண்ணோட்டம்: 276 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கைக்கு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் முன்னுரை … பொதுத்துறை ஆய்வறிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.
நமக்கு ஊரடங்கு, அரசுக்கு விற்றடங்கு
கொரோனாவை முன்வைத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 50 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வேறு வழி இல்லாமல் அல்லது வேறு வழி தெரியாமல் மக்கள் தங்களை வீடுகளுக்குள் முடக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதே இந்த ஊரங்கு நேரத்தில் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? கைதட்டு, விளக்கணை, தீவட்டி ஏற்று, பூத்தூவு என்று மக்களை கேலி செய்வதை விடுத்து அரசு வேறு என்ன செய்து கொண்டிருக்கிறது? ஏற்கனவே கொரோனா மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வதை நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவது போன்ற … நமக்கு ஊரடங்கு, அரசுக்கு விற்றடங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொள்ளயடிக்கணும் கொஞ்சம் செத்துப் போறீங்களா?
தமிழ்நாடு மின்சார வாரியம் நட்டமடைந்த வரலாற்றை பேசும் ஆவணப் படம் இது. இது ஏற்கனவே பலராலும், குறிப்பாக மின்சாரத்துறையில் இருக்கும் திரு. காந்தி போன்றவர்களால் கட்டுரைகளாக எழுதப்பட்டு, பரவலாக கவனத்துக்கு உள்ளான விசயம் தான் என்றாலும் தற்போது ஆவணப்படமாக வெளிவந்திருப்பது வெகு மக்கள் கவனத்தை பெறும், பெற வேண்டும். மின்சாரம் என்பது மக்களுக்கு இன்றியமையாத ஒரு உற்பத்திப் பொருள் என்பதிலிருந்து மாறி அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் கொள்ளையடிப்பதற்கான கருவி என எப்படி மாறிப்போனது என்பதை ‘ஊழல் மின்சாரம்’ … கொள்ளயடிக்கணும் கொஞ்சம் செத்துப் போறீங்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பவரை (அதிகாரத்தை) கையிலெடுப்போம்! பவரை (மின்சாரத்தை) வரவைப்போம்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பதினாறு மணி நேர மின்வெட்டால் இருண்ட தமிழகத்தில் தினந்தோறும் மக்கள் புழுங்கி சாகிறார்கள். மின்சாரம் இன்றி கண் முன்னே அழியும் பட்டறை, விசைத்தறி, மற்றும் சிறு குறுந்தொழில் நிறுவனங்கள், தண்ணீரின்றி கருகும் பயிர்கள், கண்ணீரிலும் கடனிலும் தத்தளிக்கும் விவசாயங்கள், தூக்கமின்றி தவிக்கும் நோயாளிகள், முதியவர்கள். தூங்காமல் அழும் குழந்தைகள், வேலையிழந்து, இரவில் தூக்கமிழந்து பட்டினிச்சாவை நெருங்கும் லட்சக்கணக்கான கூலி தொழிலாளி வர்க்கம். நாள்தோறும் டெங்குவிற்கு பலியாகும் எண்ணற்ற அப்பாவி உழைக்கும் மக்கள். எப்போது … பவரை (அதிகாரத்தை) கையிலெடுப்போம்! பவரை (மின்சாரத்தை) வரவைப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
எல்லோரும் ஜோரா கை தட்டுங்கள்: 2023 ல் ஏழைகளே இருக்க மாட்டார்களாம்
இந்தியாவில் அரசவைக் கோமாளி என்று ஒருவர் இருந்தார். போகுமிடமெல்லாம் தூங்குங்கள் கனவு காணுங்கள் என்று கூவிக் கொண்டிருப்பது தான் அவர் வேலை. மார்டின் லூதர் கனவு கண்டார்,விகடர் ஹியூகோ கனவு கண்டார் என்று கூறிக் கொண்டு தமிழ் நாட்டிலும் ஒருவர் தான் கனவு கண்டதாய் தொலைநோக்கு திட்டம் 2023 என்று அறிவித்திருக்கிறார். அதாவது ஆசிய வளர்ச்சி வங்கி போட்டுக் கொடுத்த திட்டத்திற்கு வாயசைத்திருக்கிறார். கிராமப் பகுதிகளில் கதை ஒன்று கூறுவார்கள். களத்து மேட்டில் அப்பாவும் மகனும் … எல்லோரும் ஜோரா கை தட்டுங்கள்: 2023 ல் ஏழைகளே இருக்க மாட்டார்களாம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கூடங்குளத்துடன் போர் தொடுத்திருக்கும் தமிழ்நாடு
கடந்த ஏழு மாதங்களாக கூடங்குளம் அணு உலையை எதிர்த்து மக்கள் அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான். இதில் அந்த பகுதிக்கு வெளியில் உள்ள மக்களில் மாற்றுக் கருத்து கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வேறு விசயம். கூடங்குளம் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள மக்களில் ஆகப் பெரும்பான்மையினர் அணு உலை அமைவதை தீரத்துடன் எதிர்க்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. 200 நாட்களுக்கும் மேலாக அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. … கூடங்குளத்துடன் போர் தொடுத்திருக்கும் தமிழ்நாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.
மின்வெட்டு: இருட்டும் வெளிச்சமும்
சென்னையில் இரண்டு மணிநேரமும் சங்கரன் கோவில் நீங்கலாக ஏனைய பகுதிகளில் எட்டு முதல் பத்து மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப் படுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதத்தில் மின்வெட்டை வெட்டிவிடுவோம் என்று அம்மா கூறியதன் பொருள் என்னவென்பது இப்போது தான் மக்களுக்கு விளங்குகிறது. கடந்த ஆட்சியில் மின்வெட்டு அமைச்சராக ஆர்காடு வீராசாமி புகழப்பட்டார், இப்போது நத்தம் விஸ்வநாதன். யார் மாறினாலும், யார் ஆண்டாலும் மின்வெட்டு மட்டும் மாறாது ஆளும் என்பது வெளிப்படையாகி இருக்கிறது. ஆனால் … மின்வெட்டு: இருட்டும் வெளிச்சமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஆட்டிய புயல், ஆடாத அரசு
கடந்த டிசம்பர் 30 ம் தேதி காலை புதுச்சேரி கடலூரைத் தாக்கிய தானே புயல் ஏறத்தாழ நாற்பது உயிர்களையும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான பொருட்சேதங்களையும் ஏற்படுத்திவிட்டு வலுவிழந்திருக்கிறது. 90 முதல் 135 கிமி வேகத்தில் புயல் வீசியதாக அறிவித்திருக்கிறார்கள். எத்தனை ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் அழிந்தன? யாயெல்லாம் எப்படியெல்லாம் பதிக்கப்பட்டார்கள்? என்னென சேதங்கள் எங்கெங்கு நிகழ்ந்திருக்கின்றன? யார் யாரெல்லாம் பதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்கள்? என்னென்ன பணிகள் நடந்திருக்கின்றன? போன்ற இன்னபிற விபரங்களை கடந்த ஒரு வாரமாக … ஆட்டிய புயல், ஆடாத அரசு-ஐ படிப்பதைத் தொடரவும்.
பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு! பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!
ஜெயலலிதா பதவியேற்றதும்தான் எத்தனை எத்தனை நலத் திட்டங்கள்…! சமச்சீர் கல்வியை ஒழிக்க சில நூறு கோடி செலவு செய்து வீம்பாட்டம் ஆடிய கொடுமை; பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் இழுத்து மூடப்பட்டு, முகமது பின் துக்ளக்கே வெட்கப்படும் அளவுக்கு சிறப்பு மருத்துவமனை என்ற அறிவிப்பு; அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாக்கப்படுமென்ற ஹிட்லர் பாணி உத்திரவு; ஆயிரக்கணக்கான மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிய வக்கிர முடிவு; பரமக்குடியில் … பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு! பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!-ஐ படிப்பதைத் தொடரவும்.