இந்தியாவின் அரசியல் பொருளாதார பாதை

நிலைகுலைக்கப்படும் தெற்காசியா! பகுதி 3 மிகைடாலர் அச்சடிப்பால் ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த விலைவாசி உயர்வு பிரச்சினையை உக்ரைன் போர் எண்ணெய் ஊற்றி கொழுந்துவிட்டு எரியச் செய்திருக்கிறது. அமெரிக்காவின் டாலர் வர்த்தகத்தை ஆயுதமாக்கும் நடவடிக்கையும் அதற்கு எதிரான ரஷ்ய - சீன நாடுகளின் சொந்த நாணய வர்த்தக மாற்று முன்னெடுப்பும் இதுவரையிலான உலக வர்த்தகக் கட்டமைப்பை உலுக்கி உடைக்க ஆரம்பித்திருக்கிறது. இது உலகம் முழுக்க விலைவாசி உயர்வு, டாலர் கடன் கொடுப்பனவுப் பற்றாக்குறை பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்நாட்டுக் குழப்பங்கள், போராட்டங்களை … இந்தியாவின் அரசியல் பொருளாதார பாதை-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாகிஸ்தானில் நடந்தது என்ன?

நிலைகுலைக்கப்படும் தெற்காசியா! பகுதி 2 உக்ரைன் போரை அடுத்து ரஷ்யாவின் மீது ஏவப்பட்ட பொருளாதாரத்தடை எனும் நிதிய - அணு ஆயுத ஏவுகணை ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்க என எல்லா கண்டத்தினரையும் பாதித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் கோதுமை, எரிபொருள், உரங்கள், உலோகங்கள் உலக வர்த்தகத்தில் இருந்து நீக்கப்பட்டால் அது உற்பத்தியை பாதித்து உணவுப்பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வைக் கொண்டுவரும் என்பதை நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த அமெரிக்காவின் மிகைடாலர் அச்சடிப்பால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு … பாகிஸ்தானில் நடந்தது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நிலைகுலைக்கப்படும் தெற்காசியா

எண்ணெயைப் பின்புலமாகக்கொண்டு கட்டப்பட்டதுதான் ‘பெட்ரோ டாலர் மூலதனக் கோட்டை’ என்பதும் அந்த டாலர் நிதி மூலதனம் உலக முழுக்க பாய்வதற்கு ஏற்ப கட்டமைக்கப்பட்டதுதான் ‘ஒற்றை துருவ உலக ஒழுங்கு விதி’ (Monopoly rules based world order) என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதலே இந்தக் கோட்டை, விரிசல்களைக் கண்டு வந்திருந்தாலும் 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு விரிசல்கள் பெரிதாகி, ஓட்டைகள் வெளியே தெரிய ஆரம்பித்தது. டாலரைத் தவிர்த்துவிட்டு ஓட்டைகளின் வழியே ஒழுகி … நிலைகுலைக்கப்படும் தெற்காசியா-ஐ படிப்பதைத் தொடரவும்.

மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா?சாபமா? 8

என்னவாகும் அண்ணாச்சிக் கடைகள்? உலகம் முழுவதும் விற்பனையாகும் சில்லறை வணிகத்தில் மதிப்பு 3.25 ட்ரில்லியன் டாலர்கள் (2017). இந்திய சில்லறை வணிகத்தின் மதிப்பு 2019 மதிப்பின்படி 700 பில்லியனாகவும், 2025க்குள் 1.3 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாகவும் வளரும் என்றும் கணக்கிட்டு இருக்கிறார்கள். எனில், இந்திய சில்லறை வணிகத்தின் பரிமாணத்தை நாம் புரிந்துகொள்ளலாம். தற்போது இந்தியாவில் இந்த வணிகத்தில் ஈடுபடும் கடைகளின் எண்ணிக்கை 1.2. கோடி. இவர்களில் பாதி பேரை மட்டும் வெளியேற்றி அதை மூன்று பேர் … மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா?சாபமா? 8-ஐ படிப்பதைத் தொடரவும்.

மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா?சாபமா? 6

ஆதார், அலைக்கற்றை போட்டியில் தொடங்கும் புதிய பொருளாதார முறையை செயல்படுத்துவதற்கான முன்னெடுப்பு இந்தப் போட்டியின் தொடர்ச்சியில் எதேச்சதிகார வகுப்புவாத சிந்தனை கொண்ட கட்சியை ஆட்சியில் அமர்த்துவதிலும், மக்களின் உரிமைகளை கிஞ்சித்தும் மதிக்காமல் அவர்களின் உணர்வுகளை உசுப்பிவிட்டு வாழ்வாதாரத்தை பறிக்கும் பணமதிப்பிழப்பாகவும், ஜனநாயகமறுப்பு வடிவம் பெறுகிறது. அதைத் தொடர்ந்து மாநிலங்களின் வரிவிதிக்கும் உரிமையை மறுத்து ஒன்றிய மாமன்னரின்கீழ் வாழும் குறுநில மன்னர்களாக மாற்றும் ஜிஎஸ்டி வரிவதிப்பு முறையைக் கொண்டுவந்து இந்தியாவைப் பின்னோக்கி நகர்த்துகிறது. இந்த நடவடிக்கைகள் மக்களை வஞ்சகமாக … மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா?சாபமா? 6-ஐ படிப்பதைத் தொடரவும்.

மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா? 5

கூட்டுக்களவாணித்தனப் பொருளாதார முறையும் அதற்கு ஏற்ற அரசும் சந்தையில் தனது சொந்த உற்பத்தி தொழில்நுட்பத்தின் வலிமையில் சீன நிறுவனங்களுடன் போட்டியிட்டு வெல்ல முடியாத அமெரிக்க நிறுவனங்களுக்கும், இந்திய தொலைதொடர்பு துறையில் ஏற்கனவே வலிமையாக உள்ள ஏர்டெல் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் வலிமையற்ற ஜியோவுக்கும் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்தையைக் கைப்பற்றுவதை தவிர வேறு வழி இருந்திருக்கவில்லை. ஆனால் தென் கொரியாவைப் போல கூட்டுக் களவாணித்தனப் பொருளாதாரத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த ராணுவ சர்வாதிகாரம் சாத்தியமற்றது மட்டுமல்ல, அவசியம் … மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா? 5-ஐ படிப்பதைத் தொடரவும்.

மின்னணுப் பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா?

மின்னணுப் பொருளாதாரம், எதிர்வரும் உலகை ஆளப் போகும் சொல் இது. இதை திறன் பேசியில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பணம் அனுப்புவது என்று குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. இதனால் உலக மக்களின் ஒட்டுமொத்த வாழ்வும், அவர்களின் பழக்க வழக்கங்களும், சிந்தனை முறையும் மாறும், மாற்றும் வாய்ப்பு இந்தச் சொல்லுக்கு இருக்கிறது. இதை புரிந்து கொள்வது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. அந்த அடிப்படையில் மின்னம்பலம் தளத்தில் பாஸ்கர் செல்வராஜ் எழுதும் இது குறித்து தொடராக எழுதி வருகிறார். மின்னணுப் பொருளாதாரம், … மின்னணுப் பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இதெல்லாம் ஒரு பட்ஜெட்டா?

ஒவ்வொரு ஆண்டும் ‘வரவு செலவுத் திட்டம்’ என்பதை எதிர்பார்த்தாக வேண்டும். அதிலிருந்து தான் அந்த ஆண்டிற்கான நம் போக்கை தீர்மானிக்க வேண்டும் என்பன போன்ற மாயைகள் எதுவும் இங்கு இல்லை. உழைக்கும் மக்கள் யாரும் நாட்டின் வரவு செலவுத் திட்டம் குறித்து அலட்டிக் கொள்வதில்லை. அவர்களைப் பொருத்தவரை பட்ஜெட் மற்றுமொரு அறிவிப்பு அவ்வளவு தான். ஆனால் அது ஏதோ எதிர்பார்த்தே ஆக வேண்டிய ஒன்றாகவும், அதன் திட்டங்கள் கூடுதல்கள் குறைதல்கள் குறித்து விளக்கங்களும், விவாதங்களும் செய்தாக வேண்டும் … இதெல்லாம் ஒரு பட்ஜெட்டா?-ஐ படிப்பதைத் தொடரவும்.