ரீல் ஹீரோக்களும், ரியல் ஹீரோக்களும்!

  ஜெயலலிதா செத்ததற்குப் பிறகு, கருணாநிதி செயல்பட முடியாமல் போனதற்குப் பிறகு, தமிழகமே தனக்கு ஒரு தலைவர் இல்லாமல் தவிப்பது போலவும், இக்கட்டான இந்த நேரத்தில் ரஜினியும், கமலும் விஜயும், விஷாலும் நம்மை காப்பாற்றி வாழவைக்க வரிசை கட்டி நிற்பதாகவும் ஊடகங்கள் பரபரப்பு ஏற்படுத்துகின்றன. அரசியலில் நமக்கான அடுத்த தலைமை யார்? என்பதை இவர்கள் வரையும் ஒரு வட்டத்துக்குள் நின்று நம்மை சிந்திக்க வைக்க பழக்குகின்றன ஊடகங்கள். “இனி எவன் வந்தாலும் நமக்கு ஒன்னும் ஆவப் போறதில்லை, … ரீல் ஹீரோக்களும், ரியல் ஹீரோக்களும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

கூடங்குளம் போராட்டம்: மயிலைக் கண்ட சில வான்கோழிகள்

  அமெரிக்கவின் மூன்று மைல் தீவு, ரஷ்யாவின் சொர்னோபில், ஜப்பானின் புக்குஷிமா போன்ற விபத்துகள் அணு உலைகளின் கொடூர முகத்தை வெளிக்காட்டியதுடன் அணு உலைக்கு அதிராக போராடும் உத்வேகத்தையும் மக்களுக்கு தந்திருக்கிறது. அந்த அடிப்படையில் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இடிந்தகரையில் ஓர் ஆண்டுக்கும் மேலாக வெகுமக்கள் திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டங்களை மத்திய மாநில அரசுகள் மயிரளவுக்கும் கூட மதிக்க மறுக்கின்றன. மறுபுறம் இணைய அறிவுஜீவிகள் தங்கள் மேதமையால் நாராயணசாமிகளாய் மாறிக் … கூடங்குளம் போராட்டம்: மயிலைக் கண்ட சில வான்கோழிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெயரில் குடியரசு செயலில் முடியரசு

  வரிசையான பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இன்னுமொரு பண்டிகையாக வந்திருக்கிறது குடியரசு தினம். ஆனால் ஏனைய பண்டிகைகளை விட இந்த பண்டிகைக்கு அரசு காட்டும் முனைப்பு மக்களிடையே பீதியூட்டுவதாக இருக்கும். தொடர்ந்து அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. குடிமக்களுக்கான அரசு இது அதை குலைப்பதற்காக தீவிரவாதிகள் முயல்கிறார்கள், அவர்களிடமிருந்து மக்களை பாதுகாக்கவே இத்தகைய கெடுபிடிகள் என்பது வழக்கமாக அரசு கூறும் காரணம். சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களில் 800 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவெங்கும் பாதுகாப்பு … பெயரில் குடியரசு செயலில் முடியரசு-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழக மீனவர்களை கொல்லச்சொல்வது இந்திய அரசுதான்.

கடந்த ஏழாம்தேதி இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர் செல்லப்பன் என்பவர், இலங்கை கடற்படையினரால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். கடந்த காலங்களில் நாநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கின்றனர். படகுகளை சேதம் செய்வதும், வலைகளை அறுத்தெறிவதும், மீனவர்களை துன்புறுத்துவதும் கொல்வதும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. கருணாநிதி 3 லட்சம் கொடுத்தர், கண்டனக் கூட்டம் நடத்தினார், கடிதம் எழுதினார். வைகோ 25 ஆயிரம் கொடுத்தார். ஜெயலலிதா பதவி விலகச் சொன்னார். நாளிதழ்கள் இரண்டு நாள் … தமிழக மீனவர்களை கொல்லச்சொல்வது இந்திய அரசுதான்.-ஐ படிப்பதைத் தொடரவும்.

மே நாளில் சூளுரைப்போம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, மே நாள்! தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளை போராடி வென்ற நாள். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்றைய தொழிலாளி வர்க்கம் நாளொன்றுக்கு 20 மணி நேரம் உழைக்கவேண்டும். முதலாளியிடம் கோரிக்கை வைக்கவோ, சங்கம் வைக்கவோ அவர்களுக்கு உரிமை கிடையாது. உழைப்பை விற்று உயிர் வாழலாம் அவ்வளவு தான். இந்த அடிமைத்தனத்திற்கு எதிராக 124 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் சிகாகோ வீதியில் ஆயிரக்கணக்கில் வெகுண்டெழுந்தார்கள் தொழிலாளர்கள். அவர்களது போராட்டத்தை அடக்க துப்பாக்கி ஏந்திய … மே நாளில் சூளுரைப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மீனவர்கள் வலையில் சிக்காத கச்சத்தீவு.

மீனவர்கள் வலையில் சிக்காத கச்சத்தீவு. மீண்டும் கச்சத்தீவு செய்திகளில் முக்கியத்துவம் பெறத்தொடங்கிவிட்டது. 1974ல் தொடங்கி இன்றுவரை ஓட்டுக்கட்சிகளுக்கு ஒரு உபரி வசதி போல் தேவைப்பட்டால் கைக்கொள்ளும் பிரச்சனை போல் இருந்துவருகிறது. தற்போது இலங்கையில் இனவெறிப்போர் முடிந்து விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம் என்று அறிவிக்கப்பட்டுவிட்ட பின்னரும்; தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் தாக்குவதும் சுட்டுவீழ்த்துவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால், கச்சத்தீவை மீட்பதன் அவசியம் குறித்த சொல்லாடல்கள் உலவத் தொடங்கியிருக்கின்றன. நூற்றுக்கணக்கான மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போதினிலும், தினம் தினம் மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாகி வாழ்வு … மீனவர்கள் வலையில் சிக்காத கச்சத்தீவு.-ஐ படிப்பதைத் தொடரவும்.