தன்னை இந்து என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் சொல்லுங்கள் .. .. யார் இந்து?

இன்னைக்கு பெண்கள் தினமாம், இருந்துட்டு போகட்டும்.. சித்ரா ராமகிருஷ்ணன்னு ஒரு பெண் பங்குச்சந்தை ஊழலில் கைதுன்னு செய்தி வருது ஆனா போட்டோ வரமாட்டேங்குது. ஒரு பத்திரிக்கைல கூட போட்டோ வரமாட்டேங்குது ஏன்னு தெரில, ஆனா கனிமொழி  2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டபோது பிசி ஸ்ரீராம் ரேஞ்சுக்கு விதவிதமாக போட்டோ எடுத்து குமிச்சிறுக்காங்க.. என்ன மாயம்னே தெரில சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட மாதிரி ஒரு புகைப்படம் கூட வரல.. ஹீரோயின் மாதிரி டாம்பீகமான அந்த நான்கு புகைப்படங்கள்தான் … தன்னை இந்து என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் சொல்லுங்கள் .. .. யார் இந்து?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு சம்பவம் நடந்த போது .. ..

முகநூல் நேரலை 1 மேற்கண்ட இந்த முகநூல் நேரலையை பாருங்கள். இந்த நேரலையில் தோழர் தமிழச்சி ஒரு சம்பவம் செய்யப் போவதாக குறிப்பிடுகிறார். அந்த நேரலையில் மிக விரிவாக ஒரு சிக்கல் குறித்து, பாலியல் சுரண்டல் குறித்து பேசுகிறார். ஆனால், முதன்மையான அதை விடுத்து ஒரு சம்பவம் செய்யப் போவதாக கூறிய ஒற்றைச் சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்கள் ஒரு அமைப்பினர். அவர்கள் வேறு யாருமல்லர், தன் மீது ஒற்றைச் செருப்பை … ஒரு சம்பவம் நடந்த போது .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.

மரண வியாபாரி

"உங்களது மாமன்னன் ஒரு அயோக்கியக் கொலைகாரன் என்றால், அவனுக்கு முட்டுக் கொடுக்கும் நீங்கள் அதை விடக் கொடூரமான ஈவு இரக்கமற்றக் கொலைகாரர்கள். அதை மறவாதீர்கள்.ஒருவேளை நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம்." ******** இந்தியா கோவிட்டின் மரணக் கிணறாக மாறி வருகிறது. முற்றிலும் செயலற்ற ஒரு பிரதமரும் அவரைச் சுற்றி இருக்கும் அமைச்சர்களும் எந்தக் குற்றவுணர்வும் இன்றி அடுத்து இந்தியாவின் எந்தப் பொதுத்துறை நிறுவனத்தை அம்பானிக்கும் அதானிக்கும் விற்கலாம் என்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தெற்கு பரவாயில்லை. … மரண வியாபாரி-ஐ படிப்பதைத் தொடரவும்.

பிய்ந்த செருப்பு இருக்கிறதா?

ஜெகத் கஸ்பரின் யுடியூப் பேட்டி ஒன்றைப் பார்த்தேன் (liberty Tamil சானலில்). அதில் அவர் ஓரிடத்தில் தனக்கு தில்லியில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் இருந்து ஒரு கோரிக்கை வந்தது என்கிறார். தமிழகத்தில் உள்ள கிறுத்துவர்களை ஒரு வாக்குவங்கியாக திரட்டி அவர்களிடம் பிரச்சாரம் பண்ணினால் 20 இடங்களை பெற்றுத் தருவதாக கூறியிருக்கிறார்கள். இவர் தனக்கு மதசார்பற்ற அரசியலில் மட்டுமே நம்பிக்கை எனச் சொல்லி அதை மறுத்திருக்கிறார். பாஜகவினரின் சிறுபான்மை அரசியல் குறித்த ஒரு சரியான புரிதல் இதில் … பிய்ந்த செருப்பு இருக்கிறதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

வங்கிகள் யாருக்காக?

முன்குறிப்பு 1: இது போன்ற சிக்கல்களில் தொடர்புடையவர்கள் ஏன் வங்கியின் பெயரை மறைக்கிறார்கள்? என்ன வங்கி என வெளிப்படையாக எழுத வேண்டியது தானே. முன்குறிப்பு 2: படித்து வேலையில் இருக்கும் நடுத்தர பிரிவினர்களே இப்படித்தான் நடத்தப்படுவார்கள் என்றால், ஒப்பீட்டளவில் அறியாமையில் இருக்கும் எளிய மக்கள் அன்றாடம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்களின் நடப்புகளும் இவ்வாறு வெளிவர வேண்டும். ஒரு Nationalised bank ல கார் லோன் இரண்டரை லட்சம் வாங்கியிருந்தேன். ஐந்து வருசம் EMI கட்டனும். மாதாமாதம் கட்ட … வங்கிகள் யாருக்காக?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தி .. .. .. !

IAS அதிகாரி இளம்பகவத் எழுதியது... நீங்கள் வெளியே போங்கள்! பரீதாபாத்தில் ஐ.ஆர்.எஸ் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தபொழுது, இந்தி மொழி கற்றுத் தருவதற்கான வகுப்புகள் நடத்தப் போவதாக அறிவிப்பு செய்தனர். சரி நாமும் இந்தியைக் கற்றுக் கொள்ளலாம் என்ற முடிவோடு, புதிய நோட்டு புத்தகம் ஒன்றை வாங்கி, பெயரெழுதி, கோடுபோட்டு, குளித்து முடித்து, இன்ன பிற சடங்குகள் எல்லாம் செய்து வகுப்புக்குச் சென்றேன்! எங்கள் ஐ.ஆர்.எஸ் பேட்ச்சில் ஒரு பெரிய தமிழ் கேங்க் இருந்தது. அதில் சிலருக்கு … இந்தி .. .. .. !-ஐ படிப்பதைத் தொடரவும்.

முகநூலா? பாஜகவின் பின்வாயா?

செய்தி: இந்தியாவில் ஃபேஸ்புக் பாஜகவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்குத் தனது வெறுப்பு பேச்சுக் கட்டுப்பாட்டு விதிகளைப் பயன்படுத்துவதில்லை என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) வெளியிட்ட செய்திதான், இன்று இந்திய அரசியலை சூடாக்கிக் கொண்டிருக்கிறது. பாஜகவைச் சேர்ந்தவர்களின் மீறல்களைத் தண்டிப்பதால் இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வணிக வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்பதால், அவற்றை கண்டுகொள்ள வேண்டாம் என ஃபேஸ்புக்கின் தற்போதைய மற்றும் முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டது. ஃபேஸ்புக் பாஜகவுக்கு … முகநூலா? பாஜகவின் பின்வாயா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

உங்களுடைய தருணம் வருவதற்கு முன் பேசி விடுங்கள்

ஆனந்த் டெல்டும்டே கைது எதற்காக?-பாரதி தம்பி அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? ’மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்படும் சில வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எழுதிய கடிதத்தில் இவர் பெயர் குறிப்பிடப்படிருந்தது.’ எப்படி? வெறுமனே To ஆனந்த் என்று. ‘ஆனந்த் டெல்டும்டே’ என்று கூட குறிப்பிடப்படவில்லை. வெறும் ஆனந்த். அதற்காக கைது. இந்தியாவில் ஆனந்த் என்ற பெயரில் குறைந்தது இரண்டு லட்சம் பேராவது இருக்க மாட்டார்கள்? ஆனால், அந்த கடிதங்களில் குறிப்பிடப்படும் ஆனந்த் என்ற பெயருக்குரியவர் இவர்தான் … உங்களுடைய தருணம் வருவதற்கு முன் பேசி விடுங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊரடங்கு: பரிதவிக்கும் மக்கள்

தொடரும் ஊரடங்கு, பரிதவிக்கும் மக்கள், அரசு கட்டமைப்பு செய்யத் தவறுவது என்ன? என்ற தலைப்பில் தோழர் வழக்குரைஞர் சுரேசு சக்தி முருகன், அவர்கள் மக்கள் அதிகாரம் சார்பில் முகநூல் வாயிலான இணையக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் கேட்பொலி வடிவம். கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் விசயத்தில் அரசு பல இடங்களில் கோட்டை விட்டிருப்பது பலருக்கும் புரிந்தே இருக்கிறது. ஆனால் குறிப்பாக என்ன செய்திருக்கலாம், என்ன செய்திருந்தால் மக்களின் பரிதவிப்பை போக்கி இருக்கலாம். அதற்கான காரணம் என்ன? உள்ளிட்ட பல … ஊரடங்கு: பரிதவிக்கும் மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

வெறிபிடித்து அலையும் காவல்துறை

"மர்ம உறுப்பை குறி வைத்து தாக்கினார்கள்", கேட்கும் போதே காதில் அமிலத்தை ஊற்றியதை போல் இருக்கிறது. தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவி தான் இப்படி கதறுகிறார். ஜாமியா மில்லியா மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று பிப்ரவரி 10 ஆம் தேதி காலை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக கிளம்பியுள்ளனர். பாராளுமன்றம் நடைபெற்று வருவதால் கவன ஈர்ப்பாக இருக்கும் என இந்தப் போராட்டம். … வெறிபிடித்து அலையும் காவல்துறை-ஐ படிப்பதைத் தொடரவும்.