பெனிக்ஸ், பிளாய்ட் ஆவாரா?

ஒவ்வொறு முறையும் அது மிக நிதானமாக, எல்லையில்லா வெறியுடன் பாய்ந்து குதறுவதும், பின் பதட்டமே இல்லாமல் தன் பற்களில் சொட்டும் குருதியை நாவால் தடவி ருசித்துக் கொண்டு கடந்து செல்வதும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதை அடக்க முடியாது, பாய்ந்து குதறுவதற்காகவே அதை பழக்கி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அது யார் மீது பாய்ந்து சிதைத்து துப்பி இருக்கிறது என்பதைக் கொண்டு (என்கவுண்டர்கள், கழிப்பறையில் வழுக்கி விழுவது போன்ற நிகழ்வுகளில்) பூப் போட்டு வாழ்த்துவதும் (ஜெயராஜ், … பெனிக்ஸ், பிளாய்ட் ஆவாரா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்

இன்று ஜனவரி 8. பத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. பொதுவாக, 1991 க்குப் பிறகு இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தங்கள் நடந்ததே இல்லை. ஆனால், பொது வேலை நிறுத்தங்களை நடத்த வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட 1991க்குப் பிறகு அதிகம் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த முரண்பாடான சமூக நிலைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, எண்பதுகளின் பிற்பகுதியில் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட உலகமயக் கொள்கையால், வேலை செய்தால் … பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அறுகதையற்றதை காட்டும் மழை

பெருமழை! கன மழை! மாதம் மும்மாரி பொழிகிறதா? கேள்வி மாறி விட்டது. ஏசி காரில், கண்ணாடியும் இறக்காமல் மூன்று மாத மழை மூன்று நாளில். கேள்வி மட்டுமா? மழையும் மாறிவிட்டது. அம்மா வந்த சாலையில் தேங்கவே இல்லையே மழை நீர்.   எல்லாருமே நடிகர்கள் தாம். முட்டிவரை ரப்பர் செருப்பில் ஒரு நடிகர் தொடைவரை மடித்துக் கட்டி ஒரு நடிகர் வாக்காளப் பெருங்குடி மக்களே என்றொரு நடிகர் இந்த துன்பியல் நாடகத்தில் மக்களுக்கு மட்டுமே சோகம்.   … அறுகதையற்றதை காட்டும் மழை-ஐ படிப்பதைத் தொடரவும்.

எவனடா புலியைக் காப்பது?

அடுத்த பசுமை வேட்டை - கிரீன் ஹண்ட் - தமிழ் நாட்டிலா? நாட்டின் பல்வேறு இடங்களில் புலிகள் காப்பகம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. வனங்களைக் காப்பது, வன விலங்குகளைக் காப்பது என்ற பெயரில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. திட்டங்கள் பலவாக இருந்தாலும், செயல்படுத்தப்படும் இடங்கள் பலவாக இருந்தாலும் அனைத்திலும் பாதிக்கப்படுவது அங்கு வாழும் பழங்குடியின மலைவாழ் மக்களே. தெளிவாகச் சொன்னால் வனம், காடுகள் மலைகள் தொடர்பாக தீட்டப்படும் திட்டங்கள் அனைத்தும் அங்கு கிடைக்கும் மரம் உள்ளிட்ட வனச் … எவனடா புலியைக் காப்பது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..

காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டு (ஆடு தாண்டும் காவிரி) எனும் இடத்தில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசியல்வாதிகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இதற்கு எதிராக சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இப்போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. பெரும்பாலான இடங்களில் முழுவதுமாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. என்றாலும், மக்களின் உணர்வுபூர்வமான பங்களிப்புடன் நடந்தது என்று கூற முடியவில்லை. ஏன் இது உணர்வுபூர்வமான பிரச்சனை இல்லையா? தமிழகம் கடைமடை மாநிலமாக இருப்பதன் … ஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.

தனியார்மயக் கொள்ளையைத் தடுப்போம் வாருங்கள்.

  அன்பார்ந்த உழைக்கும் மக்களே,   மே தினம் - முதலாளி வர்க்கத்திற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளை ரத்தம் சிந்தி போராடி நிலை நாட்டிக் கொண்ட நாள். எட்டு மணிநேர வேலை என்ற உரிமை மட்டுமல்ல, குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம், இலவசக் கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை உலகெங்கும் மக்கள் போராடித்தான் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு போராடிப் பெற்ற பல உரிமைகள் இன்று நேரடியாக பறிக்கப்படுவதுடன், பல மறைமுகமான வழிகளிலும் நம் … தனியார்மயக் கொள்ளையைத் தடுப்போம் வாருங்கள்.-ஐ படிப்பதைத் தொடரவும்.

தண்ணீர்: நாசமாக்கினால் பரிசு, குடித்தால் காசு.

  சில பத்தாண்டுகளுக்கு முன் தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதற்கு காசு கொடுக்க வேண்டும் என்று மக்களிடம் கூறினால் வயிறு வலிக்கச் சிரித்திருப்பார்கள் அல்லது கண் சிவக்க கோபப்பட்டிருப்பார்கள். ஆனால் இன்று அது தான் யதார்த்தம். இதில் ஒரு அடி மேலே எடுத்து வைத்து ஏழையை மிதித்து இன்னும் கீழே தள்ளுவதற்கு அரசு தயாராகி விட்டது. அதன் அடையாளம் தான் ”தேசிய நீர் கொள்கை 2012” இதன் முதன்மையான ஒரு அம்சம் நிலத்திலிருந்து கிடைக்கும் நீர் அந்த நிலத்தின் … தண்ணீர்: நாசமாக்கினால் பரிசு, குடித்தால் காசு.-ஐ படிப்பதைத் தொடரவும்.

எல்லோரும் ஜோரா கை தட்டுங்கள்: 2023 ல் ஏழைகளே இருக்க மாட்டார்களாம்

இந்தியாவில் அரசவைக் கோமாளி என்று ஒருவர் இருந்தார். போகுமிடமெல்லாம் தூங்குங்கள் கனவு காணுங்கள் என்று கூவிக் கொண்டிருப்பது தான் அவர் வேலை. மார்டின் லூதர் கனவு கண்டார்,விகடர் ஹியூகோ கனவு கண்டார் என்று கூறிக் கொண்டு தமிழ் நாட்டிலும் ஒருவர் தான் கனவு கண்டதாய் தொலைநோக்கு திட்டம் 2023 என்று அறிவித்திருக்கிறார். அதாவது ஆசிய வளர்ச்சி வங்கி போட்டுக் கொடுத்த திட்டத்திற்கு வாயசைத்திருக்கிறார்.   கிராமப் பகுதிகளில் கதை ஒன்று கூறுவார்கள். களத்து மேட்டில் அப்பாவும் மகனும் … எல்லோரும் ஜோரா கை தட்டுங்கள்: 2023 ல் ஏழைகளே இருக்க மாட்டார்களாம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெயரில் குடியரசு செயலில் முடியரசு

  வரிசையான பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இன்னுமொரு பண்டிகையாக வந்திருக்கிறது குடியரசு தினம். ஆனால் ஏனைய பண்டிகைகளை விட இந்த பண்டிகைக்கு அரசு காட்டும் முனைப்பு மக்களிடையே பீதியூட்டுவதாக இருக்கும். தொடர்ந்து அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. குடிமக்களுக்கான அரசு இது அதை குலைப்பதற்காக தீவிரவாதிகள் முயல்கிறார்கள், அவர்களிடமிருந்து மக்களை பாதுகாக்கவே இத்தகைய கெடுபிடிகள் என்பது வழக்கமாக அரசு கூறும் காரணம். சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களில் 800 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவெங்கும் பாதுகாப்பு … பெயரில் குடியரசு செயலில் முடியரசு-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊழலை ஒளிக்க உருளும் ரத யாத்திரைகள்

இன்றைய தேதியில் இந்தியாவில் ஊழல் தான் செல்லுபடியாகும் சரக்கு. அதனால் தான் அன்னா ஹஸாரே முதல் அத்வானி வரை அதைக் கொண்டு கல்லா கட்ட துடிக்கிறார்கள்.  இவர்களின் ஊழல் ஒழிப்பு நாடகங்களில், ஊழல் ஒழிப்பைத் தவிர மற்ற எல்லாம் இருக்கிறது.  ஏற்கனவே அயோத்தியில் ராமனுக்கு கோவில் கட்ட ரத யாத்திரை நடத்தி பலருக்கு கல்லறை கட்டிய அனுபவம் இருப்பதால் இப்போது ஊழலுக்கு கல்லறை கட்ட ரத யாத்திரை நடத்தி அதற்கு கோவில் கட்டி எழுப்புவார் என எதிர்பார்க்கலாம். … ஊழலை ஒளிக்க உருளும் ரத யாத்திரைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.