அனைவரும் மார்க்சியராவோம் என்பதன் பொருள் அனைவரும் முழுமையான மக்களாவோம் என்பது தான். இது மார்க்சியம் குறித்த புரிதலுக்கான தொடக்கம். கொரோனாவை நாடுகள் கையாண்ட விதம், கொரானாவுக்கு முன்னதான உலகின் பொருளாதார நெருக்கடி, நெருக்கடிகளின் போது அதிலிருந்து முதலியம் எவ்வாறு மீள்கிறது? அவ்வாறு மீளும் போது உலகின் பல கோடி மக்கள் வறுமையின் பிடிக்குள் சிக்கிக் கொள்வது என மக்களை வாழ விடாமல் தடுக்கும் முதலியத்திலிருந்து மக்களை விடுதலை செய்யும் ஒன்றே மார்க்சியம் எனும் புரிதலை நோக்கி முதல் … மார்க்சியமே வாழ்வின் முழுமை-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: முதலாளித்துவம்
பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள்
மார்க்சிய பேராசான் எங்கெல்ஸின் 127 வது நினைவு நாள் இன்று. மார்க்ஸ் – எங்கெல்ஸ் இருவருக்கும் முந்தைய தத்துவஞானிகள் இந்த உலகைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்த தருணத்தில், இவர்கள் இந்த உலகை மாற்றுவதற்கான தத்துவத்தைப் படைத்தனர். மார்க்சின் பெயரைத் தாங்கியிருந்தாலும் மார்க்சியம் என்பது மார்க்ஸ், எங்கெல்ஸ் என்ற இரண்டு ஆளுமைகளின் பிரிக்க முடியாத பணியாகும். மார்க்சியம் எனும் சமூக ஆய்வுமுறையை உருவாக்குவதிலும், அதனை சமகாலத்திய முதலாளித்துவ சமூகத்தின் மீது பிரயோகித்து பாட்டாளி வர்க்கத்துக்கான சித்தாந்தத்தை படைப்பதிலும் இருவரின் … பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இனவெறியூட்டும் ஊடகங்கள்
செய்தி: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் நூற்பாலையில், உள்ளூர் மக்களுக்கு பணி வழங்கியதை எதிர்த்து வடமாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .. .. .. நூற்பாலை நிர்வாகம் காணாமல் போன வடமாநில தொழிவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அங்கு பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தனியார் நூற்பாலை நிர்வாகம் உள்ளூர் தொழிலாளர்கள் சிலரைக் கொண்டு … இனவெறியூட்டும் ஊடகங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஆண்கள் மறைந்து கொண்டிருக்கிறார்கள்
பல எச்சரிக்கை அறிகுறிகுறிகளும், தொடர்ந்து அதிகரித்து வரும் பெருமளவிலான ஆதாரங்களும் ஆண்களின் பாலின ஆரோக்கியத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதையே குறிக்கின்றன.கடந்த ஐம்பதாண்டுகளில், உலகம் முழுவதும் விந்து எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. அசாதாரண விந்தணு மாற்றங்களும், ஆண் மலட்டுத் தன்மையின் விகிதமும், பெருமளவு அதிகரித்திருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில் இரு மடங்காகி இருக்கிறது. கேள்வி என்னவென்றால், "ஏன்"? நாற்பதாண்டுகளாக ஃப்ளோரிடாவில் ஒரு மாசடைந்த ஏரியில் வாழும் அலிகேட்டர் முதலை இனத்தை தொடர்ந்து கண்காணித்து, ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகள், … ஆண்கள் மறைந்து கொண்டிருக்கிறார்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இலங்கையும் அதன் பொருளாதாரமும்
கடந்த பல மாதங்களாக, ஆழமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றிய கட்டுரைகள் உள்ளூர் ஊடகங்களிலும் உலகளாவிய ஊடகங்களிலும் பிரதானமாக இடம்பெறுகின்றன. ஆயினும்கூட, இலங்கையினுடைய பெரும் வெளிநாட்டுக் கடன் சுமை, அந்நியச் செலாவணி இருப்புக்கள் குறைதல், எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்டுள்ள சவால்கள் முதலான நெருக்கடியின் அறிகுறிகள் பற்றி பெரும்பாலான கட்டுரைகள் பேசுகின்றன. எவ்வாறாயினும், இலங்கை அரசியல் பொருளாதாரத்தின் நீண்டகால அம்சங்களும், அவற்றுக்கு இப்போதைய நெருக்கடியுடன் உள்ள உறவுகளும் பற்றிய கேள்விகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கடந்த கால … இலங்கையும் அதன் பொருளாதாரமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
உக்ரைன்: யாருடைய களிமண் பொம்மை?
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருக்கிறது. இதனால் ரஷ்யா உக்ரைன் மீது மீண்டும் பெரும் படைகளை அனுப்பவிருக்கிறது. இந்த போர் குறித்தான செய்திகள் பல வண்ணங்களில், பல வகைகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. போர் குறித்த செய்திகளும், காணொளிகளும் புகைப்படங்களும் ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன, கொட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த செய்திகளின், புகைப்படங்களின், காணொளிகளின் தன்மை எப்படி இருக்கின்றன என்றால் உக்ரைன் அப்பாவியான, நோஞ்சானான, நியாயமான தன்மைகளுடன் செய்வதறியாமல் திகைத்து நிற்பது போலவும், ரஷ்யா கொடூரமான, மிருக பலத்துடன், … உக்ரைன்: யாருடைய களிமண் பொம்மை?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஜியோ கட்டண உயர்வு ஏன்?
அண்மையில் ஜியோ, ஏர்டெல், ஓடஃபோன் நிறுவனங்கள் தங்கள் ப்ரீபெய்டு கட்டணங்களை கடுமையாக உயர்த்தியுள்ளன. இதன் பின்னிருக்கும் காரணம் என்ன? ஏன் BSNL ஆல் ஜியோவுடன் போட்டி போட முடியவில்லை? ஏன் BSNL ஆல் 4ஜி சேவை கொடுக்க முடியவில்லை? ஏன் BSNL சேவை மக்கள் ஏற்கும் அளவுக்கு இல்ல? இது போன்ற கேள்விகளுக்கான விடை, BSNL திட்டமிட்டு சீர்குலைக்கப்படும் வரலாற்றில் சென்று இணைகிறது. இது BSNL க்கு மட்டும் பொருந்தும் ஒன்றல்ல. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இப்படித் … ஜியோ கட்டண உயர்வு ஏன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்தியத் துணைக்கண்டத்தின் உற்பத்தி முறை
(தைமூர் ரஹ்மான் ஒரு பாகிஸ்தானிய கல்வியாளர், இசைக்கலைஞர் மற்றும் சோசலிச அரசியல் ஆர்வலர். இவர் பாகிஸ்தானின் மஸ்தூர் கிசான் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். அவர் முன்னணி கித்தார் கலைஞராகவும், லால் என்ற முற்போக்கான இசைக் குழுவின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார். அவர் லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பிக்கிறார்) பாகிஸ்தானின் வர்க்க கட்டமைப்பு என்ற நூலின் ஆசிரியர் தைமூர் ரஹ்மான் நியூஸ்கிளிக் என்ற ஊடகத்திற்கு இந்நூல் பற்றி YOUTUBE இல் அழைத்த வாய்வழி அறிமுகத்தின் தமிழாக்கமே … இந்தியத் துணைக்கண்டத்தின் உற்பத்தி முறை-ஐ படிப்பதைத் தொடரவும்.
திகைத்து நிற்கிறோம்
இது எல்லா சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டுக் கொண்டிருக்கும் பதிவு. ஒவ்வொரு நாளும் இது போன்ற பல கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இவைகளை தடுப்பதற்கான தீர்வு கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை. இந்த கொடூரத்தில் வெளிப்பட்டிருக்கும் வன்மம் ஆணாதிக்கத்திலும், பார்ப்பனிய ஜாதியப் படிநிலையிலும் வேர் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ ஊழல்மய அதிகாரம் இதற்கு நீர் ஊற்றிக் கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் இந்தக் குற்றவாளிகளே நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். நிகழ்த்துவோர்களாகவும், நிகழ்த்தப்படுவதை தடுப்போர்களாகவும். இப்போதும் இந்த கொடூரம் குறித்த புதிய செய்திகள் … திகைத்து நிற்கிறோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
எது சைத்தானின் படை? 1
கம்யூனிசமும் இஸ்லாமும் ஓர் ஒப்பீடு செங்கொடி வலையொளி தொடங்கிய பின்னர் நண்பர் ஒருவர் ஒரு யூடியூப் வலையொளிப் பதிவு ஒன்றை சுட்டிக் காட்டினார். அது ஒரு மத பரப்புரை வலையொளி. இஸ்லாமிய மத பரப்புரை பதிவுகள் பலநூறு வெளிவந்து கொண்டிருக்கின்றன. என்றாலும், இது வெறுமனே பரப்புரையை மட்டும் செய்யாமல், கம்யூனிசத்தையும் இஸ்லாத்தையும் ஒப்பு நோக்குகிறது. இஸ்லாம் எனும் மதத்துக்கு எதிராக பல தலைப்புகளில் செங்கொடியில் விவாதங்கள் நடந்துள்ளன. மட்டுமல்லாமல், ‘உணர்வு’ இதழில் இஸ்லாத்தை நோக்கி வா தோழா … எது சைத்தானின் படை? 1-ஐ படிப்பதைத் தொடரவும்.