வெகுஜனங்களிடையே கட்சியின் பணி

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் வள்ர்ச்சிக்கும், அரசியல் நிறுவன ஒழுங்கமைப்புக்கும் உதவுவது தான் நமது முதன்மையான அடிப்படையான பணி. இந்தப் பணியைப் பின்னுக்குத் தள்ளுகிறவர்கள், எல்லாத் தனிப்பட்ட பணிகளையும் குறிப்பிட்ட போராட்ட முறைகளையும் இதற்கு கீழ்ப்படுத்த மறுப்பவர்கள் தவறான பாதையில் செல்கிறவர்களாவர். இயக்கத்துக்கு பெருந்தீங்கு இழைப்பவர்களாவர். .. .. ..   .. .. .. அரசியல், பிரச்சாரம், கிளர்ச்சி, நிறுவன ஒழுங்கமைப்பு இவற்றின் உள்ளடக்கத்தையும் வீச்சையும் குறுகச் செய்து விடுவோராலும் தொழிலாளர்களுடைய வாழ்க்கையில் விதிவிலக்கான சில தருணங்களில் … வெகுஜனங்களிடையே கட்சியின் பணி-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஏன் சோசலிசம்? – ஐன்ஸ்டீன்

  உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்தக் கட்டுரை, அமெரிக்காவின் ‘மன்த்லி ரிவியூ’ என்ற பத்திரிக்கையின் முதல் இதழில் (மே 1949) வெளியிடப்பட்டது. பொருளாதார சமூக பிரச்சனைகளில் நிபுணராக இல்லாத ஒருவர் சோசலிசம் குறித்து தனது கருத்துகளை வெளியிடுவது சரி தானா? பல காரணங்களுக்காக அது சரி தான்  என்று நான் கருதுகிறேன். முதலில், அறிவியல் கண்னோட்டத்தில் இந்தக் கேள்வியைப் பரிசீலிக்கலாம். முதல் பார்வையில் வானவியலுக்கும்  பொருளாதாரவியலுக்கும் அடிப்படையில் முறையியல் வேறுபாடுகள் இல்லாதது போலத் … ஏன் சோசலிசம்? – ஐன்ஸ்டீன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சுடுகாடு

  ஜூலை 1ம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி யை முன்வைத்து உருவாக்கி உலவ விடப்பட்டுள்ள ஏராளமான பொய்களில் மிகவும் கொடூரமானது, “சாமானிய மனிதன் ஜி.எஸ்.டி யை வரவேற்கிறான்” என்பது. சாதாரண உழைக்கும் அடித்தட்டு மக்களை விட்டு விடுவோம், படித்து ஓரளவு நல்ல வேலையில், ஊதியத்தில் இருக்கும் பலருக்கும் ஜி.எஸ்.டி என்றால் என்ன? எந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்பது தெரியாது. ஏதோ ஒரு புதிய வரிமுறை என்பதைத் தாண்டி இங்கே … ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சுடுகாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

சதி, பொய், பித்தலாட்டம், கம்யூனிச அவதூறு

முன்னுரை பழைய பொய்களை மீண்டும் மீண்டும் உலவ விட்டால் நடப்பு உண்மைகளை மறைத்துக் கொள்ளலாம். இப்படி ஒரு புதுமொழிக்கு உள்ளகம் வேண்டுமென்றால் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய “பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிசம்” எனும் நூலை எடுப்பாய் காட்டலாம். தலைப்பே கதை சொல்கிறது. ஹிட்லர் தொடங்கி அரவிந்தன் நீலகண்டன் வரையிலும், இன்னும் எத்தனை பேர் வர இருக்கிறார்களோ அவர்கள் வரையிலும் கம்யூனிசத்தை அவதூறு செய்ய வேண்டுமென்றால் அவர்களுக்கு பஞ்சம் படுகொலை போன்ற சொற்களைத் தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை. அவ்வளவு … சதி, பொய், பித்தலாட்டம், கம்யூனிச அவதூறு-ஐ படிப்பதைத் தொடரவும்.

சுடாத நெருப்பு இருக்க முடியுமா?

வணக்ககம் தோழர் முதலாளித்துவத்தை தான் எதிர்க்கிறோம் முதலாளிகளை அல்ல அதுபோல ஆளும் வர்க்கத்தை தான் எதிர்க்கிறோம் ஜெயலலிதாவையோ கலைஞரையோ அல்ல என்று நண்பர் ஒருவர் மார்க்சிய பாடம் எடுத்தார்.இந்த உதாரணம் என்னுடைய கேள்வியை சரியாக விளக்கத்தான். உண்மையில் முதலாளி வேறு ? முதலாளித்துவம் வேறுதானா ?  ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து.   வணக்கம் ராஜ்ரம்யா,   முதலாளியும் முதலாளித்துவமும் வேறு வேறா? அப்படி இருக்க முடியாது. முதலாளித்துவம் என்பது, முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது முதலாளியின் … சுடாத நெருப்பு இருக்க முடியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

500, 1000 செல்லாது: மோடியை கழுவி ஊற்றிய மக்கள்

நேற்று (08/11/2016) மாலையில் திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடியால் அறிவிக்கப்பட்டது. இரவு 12 மணிக்குள் மாற்றாவிட்டால் வைத்திருக்கும் பணம் ஒன்றுமில்லாமல் காற்றில் கரைந்து விடுமோ எனும் பரிதவிப்பில் மக்கள் அலைந்ததை பார்க்கையில் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. தமிழில் இதுவரை செவியுற்றிருக்காத சொற்களை உருவாக்கி மக்கள் மோடியை அர்ச்சித்துக் கொண்டிருந்தார்கள். மக்களே! பதட்டம் வேண்டாம். ஓரிரு நாட்களில் வங்கிகள் இயங்க தொடங்கியதும் உங்கள் கையிலிருக்கும் பழைய 500, 1000 ரூபாய் தாள்களை … 500, 1000 செல்லாது: மோடியை கழுவி ஊற்றிய மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பட்ஜெட் எனும் மூடநம்பிக்கை

கன்னையா குமார், ஜே.என்.யு பிரச்சனைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு ஊடகங்கள் பட்ஜெட் குறித்து பேச ஆரம்பித்து விட்டன. இல.கணேசன் பட்ஜெட் பற்றி கூறும் போது வெளிப்படையாக ஒன்றை ஒப்புக் கொண்டார், எதிர்க் கட்சிகள் என்றால் எதிர்ப்பதும், ஆளும் கட்சிகள் என்றால் ஆதரிப்பதும் இயல்பானது தான். அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார். ஓட்டுப் பொறுக்கும் எந்தக் கட்சிக்கும் இதைத் தாண்டிய அறிவோ, தெளிவான பார்வையோ இருப்பதில்லை. ஊடகங்களில் உரை தரும் பொருளாதார அறிஞர்கள் எனும் … பட்ஜெட் எனும் மூடநம்பிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.

வேட்டைக் களமா? உயிரி ஆயுதமா? பன்றிக் காய்ச்சல்

  பன்றிக் காய்ச்சல் பீதி மீண்டும் பற்றிப் படரத் தொடங்கியிருக்கிறது. நாளிதழ்கள், செய்தி ஊடகங்கள் மிகுந்த முதன்மைத்தனம் அளித்து இந்தச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன. சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ எனும் ஐயம் மக்களை தனியார் மருத்துவமனைகளில் ஆயிரங்களை செலவு செய்து சோதித்துக் கொள்ள தூண்டுகிறது. நோய், அதற்கான எதிர்பாராத மருத்துவச் செலவுகள், அதனால் ஏற்படும் சிரமங்கள் போன்றவை உடல்நலம் எனும் அடிப்படையில் தவிர்க்க இயலாதவை. ஆனால் இந்த அடிப்படையைக் கொண்டே சுரண்டல்கள் … வேட்டைக் களமா? உயிரி ஆயுதமா? பன்றிக் காய்ச்சல்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கூடங்குளத்துடன் போர் தொடுத்திருக்கும் தமிழ்நாடு

கடந்த ஏழு மாதங்களாக கூடங்குளம் அணு உலையை எதிர்த்து மக்கள் அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.  இதில் அந்த பகுதிக்கு வெளியில் உள்ள மக்களில் மாற்றுக் கருத்து கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வேறு விசயம். கூடங்குளம் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள மக்களில் ஆகப் பெரும்பான்மையினர் அணு உலை அமைவதை தீரத்துடன் எதிர்க்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. 200 நாட்களுக்கும் மேலாக அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. … கூடங்குளத்துடன் போர் தொடுத்திருக்கும் தமிழ்நாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்!

ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!! அன்பார்ந்த உழைக்கும் மக்களே, காண்டிராக்டர்கள், ரியல் எஸ்டேட் முத்லாளிகள், தொழிலதிபர்கள், சுயநிதிகல்விக் கொள்ளையர்கள், மணல் கொள்ளையர்கள், கந்துவட்டி பைனான்சுக்காரர்கள் இவர்கள் தான் எல்லாக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்கள். அனைவருமே கோடீசுவரர்கள் தான். கோடீசுவரன் என்பவன் யோக்கியனாக இருக்க் முடியது. அதிலும் தேர்தலில் போட்டியிடுபவன் அயோக்கியனாக மட்டுமே இருக்க இயலும். இவர்களுக்கோ இவர்களுடைய கட்சிக்கோ கொள்கையும் கிடையாது; லட்சியமும் கிடையாது. இவர்களைப் பொருத்தவரை தேர்தல் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டை … இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.