சாதி வெறியனின் குருபூஜைக்கு மலர் மாலை, அதை எதிர்த்து போராடியவனின் குருபூஜைக்கு துப்பாக்கிக் குண்டு

கடந்த (11/09/2011) ஞாயிறன்று பரமக்குடியில் நடந்ததை கலவரம் என்கிறார்கள் சிலர்.  சாதிக்கலவரம் என்கிறார்கள் வெகுசிலர்.  காவலர்களைத் தாக்கியதால் துப்பாக்கிச்சூடு என்கிறார்கள்.  பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்து வன்முறை என்கிறார்கள்.  அனைவரும் சிந்திக்க மறுப்பவர்களா? அல்லது உண்மையைப் பேசுவதில்லை என சத்தியம் செய்தவர்களா? செய்தி ஊடகங்கள் அனைத்தும், காட்சி ஊடகங்களானாலும், அச்சு ஊடகங்களானாலும் கலவரத்தில் துப்பாக்கிச்சூடு ஏழுபேர் மரணம் என்று தான் தம் வாசகர்களிடம் பூசுகின்றன. காட்சி ஊடகங்கள் இன்னும் சற்று மேலே போய் பேருந்துக்காக காத்திருப்பவர்களை, தாங்கள் … சாதி வெறியனின் குருபூஜைக்கு மலர் மாலை, அதை எதிர்த்து போராடியவனின் குருபூஜைக்கு துப்பாக்கிக் குண்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜாதி வெறியர்களின் கைகளிலோ விடுதலையின் குறியீடு…

இதைக் காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும் ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால், மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். … ஜாதி வெறியர்களின் கைகளிலோ விடுதலையின் குறியீடு…-ஐ படிப்பதைத் தொடரவும்.