1947 ஆகஸ்ட் 15ல் கிடைத்தது விடுதலை அல்ல, அதுவொரு ஆட்சி மாற்றமே என்று கம்யூனிஸ்டுகள் தொடக்கத்திலிருந்தே சொல்லி வருகிறார்கள். அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய அனைத்திலுமே ஒரு சிறு கூட்டத்துக்கு மட்டுமே விடுதலை கிடைத்துள்ளது, ஏனைய எவருக்கும் இல்லை. இது தான் கடந்த 75 ஆண்டு கால வரலாறு. ஆனால் இந்த நாளின் மீது மிகைப்படுத்தப்பட்ட புனிதத்தை ஏற்றி வைத்திருப்பதால் அனைவரையும் உள்ளடக்க முடிகிறது. அதில் ஒன்று தான் தேசியக் கொடி. அது நாட்டைக் குறிக்கும் கொடி … தேசியக்கொடியில் புரளும் மலந்தின்னிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: முன்னேற்றம்
ஆழ்துளை குழந்தை மீட்பு கருவி
சில வாரங்களுக்கு முன் நடுக்காட்டுப்பட்டி எனும் கிராமத்தில் இரண்டு வயதே ஆன சுஜித், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மரணித்து, அதிலேயே சமாதியும் ஆகிப் போனான். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தும், விழும் குழந்தைகளைக் காப்பாற்ற தனிப்பட்ட கருவிகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. ஓர் ஒப்பீட்டுக்காக செவ்வாய்க்கு ராக்கெட் விடும் அரசால், ஆழ்துளையில் விழும் குழந்தைகளை காப்பாற்ற வழி காண முடியாதா? எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது, அது சமூக வலை தளங்களில் பரவலாக … ஆழ்துளை குழந்தை மீட்பு கருவி-ஐ படிப்பதைத் தொடரவும்.
மார்க்சியம் மட்டுமே தீர்வு
இன்று நவம்பர் ஏழு. உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் மதிப்பு வாய்ந்த நாள் இன்று. அரசு தோற்றம் கொண்ட காலத்திலிருந்து உழைக்கும் வர்க்கம் சுவைத்தறியாத நிர்வாக அதிகாரத்தை சமைத்தறிந்த நாள். மனிதன் உருவாகி வந்த தொடக்கத்திலிருந்து சாதாரண மக்கள் பாவித்திராத வசதிகளையும் வாய்ப்புகளையும் அவர்களுக்கு உருவாக்கித் தந்த நாள். 102 ஆண்டுகளுக்கு முந்திய அந்த நாளின் தனித் தன்மை இன்றும் மக்களின் உயிரோடு கலந்திருக்கிறது. மீண்டும் அந்த நாள் வாராதா? எனும் ஏக்கத்தை மக்களின் மனதில் ஏற்றிக் … மார்க்சியம் மட்டுமே தீர்வு-ஐ படிப்பதைத் தொடரவும்.
அண்டப் புழுகு .. ஆகாசப் புழுகு .. ஆர்.எஸ்.எஸ். புழுகு
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு மதிப்பை வழங்கும் 370 ஆவது சட்டப் பிரிவை நீக்கி ஒரு மாதம் ஆகிறது. இது எந்த அளவுக்கு பயங்கரமான முடிவோ அதற்கு இணையான அளவில் அதற்கான எதிர்ப்பு இல்லை. உலகளாவிய அளவில் பாகிஸ்தான் எதிர்ப்புகளைக் கிளப்ப முயல்கிறது. உள்நாட்டில் இருக்கும் ஓட்டுக் கட்சிகளுக்கு -தேசியக் கட்சிகளானாலும், மாநிலக் கட்சிகளானாலும்- இதன் விளைவுகள் குறித்த சரியான புரிதல் இல்லையோ எனத் தோன்றுகிறது. ஓரிரு அறிக்கைகளோடு, அடையாளப் போராட்டங்களோடு முடித்துக் கொண்டன. எல்லாம் ஒரு குட்டையில் … அண்டப் புழுகு .. ஆகாசப் புழுகு .. ஆர்.எஸ்.எஸ். புழுகு-ஐ படிப்பதைத் தொடரவும்.