ஹிஜாபும் பூனூலும்

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தின் கல்லூரிகளை மையமாகக் கொண்டு ஒரு சிக்கல், மத மோதலை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது எனும் உத்தரவு போட்ப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இதனால் முஸ்லீம் மாணவிகள் கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்படாமல் படிக்கட்டுகளிலும் வெளியிலும் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளிவந்து சலசலப்பை ஏற்படுத்தின. ராகுல் காந்தி தொடங்கி திமுக எம்பி ஊடாக காஷ்மீரின் மஹ்மூதா முப்தி … ஹிஜாபும் பூனூலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘உணர்வு’ கும்பலிடம் வரலாற்றறிவை எதிர்பார்க்க முடியுமா?

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 8 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் எட்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  8.1, 8.2 இத் தொடரின் கடந்த பகுதியில் இரண்டு அம்சங்களை பின்னர் பார்க்கலாம் என்று கூறி முடித்திருந்தேன். எனவே, ஒன்பதாவது பகுதியை பார்க்கும் முன் அவைகளை விளக்கி விடலாம். இஸ்லாம் பின்பற்ற எளிதானது மார்க்சியம் கடினமானது. இதை ‘உணர்வு’ கும்பல் எந்த அடிப்படையிலிருந்து கூறியிருக்கிறதோ அந்த அடிப்படையிலிருந்து இதை மறுக்க வேண்டும். இஸ்லாமும் … ‘உணர்வு’ கும்பலிடம் வரலாற்றறிவை எதிர்பார்க்க முடியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫

இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௫ குரானின் சவாலுக்கு பதில் எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு "குரானுக்கு சவாலுக்கு பதில்" எனும் கட்டுரையில் குரானில் பயன்படுத்தப்படும் அடைப்புக்குறிகளின் இலக்கு, குரானில் இருக்கும் ஒரு முரண்பாடு, குரானின் வசனங்களுக்கு நிகராக ஒரு குறள் என்று மூன்று குறிப்புகள் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன. இந்த மூன்றையுமே நண்பர் மறுத்திருக்கிறார். அவைகளைப் பார்ப்போம். குரானில் இடம்பெற்றிருக்கும் அடைப்புக்குறிகள் மொழிபெயர்ப்புச் சிக்கல்களை தீர்ப்பதற்குத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்கிறார். அப்படித்தான் சொல்லப்படுகிறது. ஆனால் அவை அதற்கானவையல்ல என்பதற்கு … செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாமிய திருமணம் புரட்சிகரமானதா?

அண்மையில் "உலகின் அழகிய மணமக்கள்" எனும் தலைப்பில் வினவில் ஒரு திருமணம் குறித்த கட்டுரை வெளியானது. பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு ஆணும் பெண்ணும் சமம் என்பதை உரக்கக்கூவி நடத்தப்பட்ட அத்திருமணத்தை பலரும் பாராட்டினர், மணமக்களை அறிந்திராதவர்கள் கூட தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்துகொண்டார்கள், முஸ்லீம்கள் உட்பட. ஆனால் அதுபோன்ற ஒரு திருமணம் பற்றிய செய்தி செப்டம்பர் 2010 புதிய ஜனநாயகம் இதழில் வெளியிடப்பட்டிருந்தது, அதை வினவு "இஸ்லாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்" என … இஸ்லாமிய திருமணம் புரட்சிகரமானதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 18 குரானை, அது இறை வேதம்தான் என மெய்ப்பிக்கும் மற்றொரு திட ஆதாரமாக இஸ்லாமியர்களும் மதவாதிகளும், பிர் அவ்னின் சடலத்தைப்போலவே ஆயுதமாக கையாளும் மற்றொன்றுதான் நூஹின் கப்பல். நூஹ் என்பவர் மக்களை திருத்துவதற்காக இறைவனால் நியமிக்கப்பட்ட தூதர்களில் ஒருவர். இவரின் போதனைகளை மக்கள் ஏற்க மறுக்கவே அவர்களை அளித்துவிடுமாறு இறைவனை வேண்டுகிறார், இறைவனும் கருணை உள்ளங்கொண்டு நூஹையும் அவரின் சீடர்களையும் ஒரு கப்பலைக்கட்டி அதில் உலகின் விலங்குவகைகளை சதை சதையாகவும் … நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 12 கீழ்காணும் குரானின் வசனங்களை கூர்மையாக படித்துப்பாருங்கள். (திரும்பத்திரும்ப) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக... குரான் 86:11 ........வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல நீங்கள் சக்தி பெருவீர்களாயின் ஆனால் அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்கமுடியாது குரான் 55:33 அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகின்றானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் யாரை அவன் வழிகெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவரை போல … விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 6 முஸ்லீம்களின் ஒரே வேதம் குரான் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் அது மட்டுமே போதுமானதல்ல. குரான் ஒரு முஸ்லீமுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியதல்ல. அது மட்டுமன்றி குரான் கூறியிருக்கும் செய்திகளிலேயே விளங்குவதற்கு சிரமமான, இறைவனை தவிர வேறு யாராலும் முழுமையாக பொருள் விளங்கிக்கொள்ள முடியாத வசனங்களும் இருக்கின்றன. 'நீங்கள் அறிந்து கொள்வதற்க்காக இதனை இலகுவாக்கியிருக்கிறோம்' எனும் பொருளில் குரானில் சில வசனங்கள் இருந்தாலும் குரானை மட்டுமே … ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.-ஐ படிப்பதைத் தொடரவும்.