வேலையில்லா இந்தியா வளர்கிறது

மக்களுக்கு சாப்பிடுவதற்கு ரொட்டி இல்லாவிட்டால் என்ன, அவர்களை கேக் சாப்பிடச் சொல்லுங்கள் என்று திமிருடன் பதில் சொன்னாளாம் பிரெஞ்ச் நாட்டு அரசி ஆண்டோநிட்டா. இது பசி என்றால் என்ன? மக்கள் வாழ்வதற்கு என்னபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கற்பனையில் கூட சிந்தித்துப் பார்க்க முடியாத பேர்ரசி சொன்னது. மக்கள் வரலாறு தனக்குள் பதிவு செய்து கொண்ட இந்தச் சொல், இன்றளவும் அந்த வர்க்கத்தின் மனோநிலையை இழித்துரைத்துக் கொண்டிருக்கிறது. வேலையில்லாவிட்டால் என்ன அவர்களை பக்கோடா விற்கச் சொல்லுங்கள் என்று … வேலையில்லா இந்தியா வளர்கிறது-ஐ படிப்பதைத் தொடரவும்.

உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!

சீனிவாச ராமானுசனுக்கு என்ன வேண்டும்? சிறையில் இருக்கும் 4 பயங்கரவாதிகளை ரூட் போட்டு வெளியில் கொண்டு வந்து குண்டு வைத்து கொலை செய்கிறார் காமன்மேன். “வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் காமன்மேனின் கருத்து. பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லன்களாக இருந்தபோதிலும் காமன்மேனுடைய மேற்படி கருத்தை அமல்படுத்த நிச்சயமாக அவர்கள் தடையாய் இல்லை. என்கவுன்டர்தான் தீர்ப்பு எனும்போது சாகமுடியாது … உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!-ஐ படிப்பதைத் தொடரவும்.