ஒரிஸ்ஸா பாலசோர் ரயில் விபத்துக்கு அரசின் பக்கமிருந்து காரணங்கள் சொல்லப்பட்டாலும், மெய்யான காரணங்கள் என்ன? இது போன்ற விபத்துகள் ஏன் நடக்கின்றன? விபத்துகளை தடுக்க முடியாதா? இவைகளுக்கு யார் பொறுப்பேற்பது போன்றவைகளை அலசுகிறது இந்தக் காணொளி. https://www.youtube.com/watch?v=eCw4U9iLVOc
குறிச்சொல்: மோடி
சொல்லுளி பிப் 23 மாத இதழ்
பிப்ரவரி 23 மாதத்திற்கான சொல்லுளி மாத இதழ் வெளிவந்து விட்டது. நன்கொடை செலுத்தி உறுப்பினர்களாக இணைந்தவர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பபட்டு விட்டது. யாரேனும் விடுபட்டு இதழ் கிடைக்கவில்லை என்றால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொருளடைவு: ஆசிரிய உரை துருக்கி சிரியா நிலநடுக்கம் – கட்டுரை – உலகம் Chat GPT: மனிதன் யார்? மீனா வலையா – கட்டுரை – அறிவியல் இந்தியாஅவிலும் வேண்டும் ஒரு நியூரெம்பெர்க் – கட்டுரை - … சொல்லுளி பிப் 23 மாத இதழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.
சொல்லுளி
சற்றேறக் குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்து தொடங்கி பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலத்தை சிற்றிதழ்களின் காலம். குறிப்பாக இடதுசாரி இதழ்களின் காலம் என்று கூறலாம். இன்று அவ்வாறு இல்லை. ஆனால், அப்படி கூறுவதற்குப் பின்னால் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இணையம் வந்ததும் பரவியதும் பெருங்காரணம். என்றாலும், அந்த சிற்றிதழ்களின் அடர்த்தி வெகுமக்களிடம் போய்ச் சேர்வில்லை என்பது முதன்மையான காரணம். கல்கி, குமுதம், ஆனந்த விகடன் முதல் கல்கண்டு, தேவி வரையிலான ஏராளமான இதழ்கள் வெகுமக்களை ஈர்த்தன. … சொல்லுளி-ஐ படிப்பதைத் தொடரவும்.
மோடி பேச்சின் நஞ்சு
உலகின் எந்த ஒரு தலைவருக்குமே கிடைக்காத சிறப்பு பிரதமராக இருக்கும் மோடிக்கு உண்டு. மோடியின் பொய்கள் என்று அவர் கூறிய பொய்களை மட்டுமே தொகுத்து நூலாக கொண்டு வந்திருக்கிறார்கள். உலகின் எந்த தலைவருக்கு இது போன்ற சிறப்பு கிடைத்திருக்கிறது? மோடியின் பேச்சில் நஞ்சு கலந்திருக்கிறதா? அல்லது மோடியின் பேச்சே நஞ்சு தானா? இதை பட்டிமன்ற தலைப்பாக வைக்கலாம். அந்த அளவுக்கு அவர் பேச்சு நஞ்சூறிப் போய் இருக்கும். எடுத்துக் காட்டாக குஜராத் முதல்வராக இருந்த போது அவர் … மோடி பேச்சின் நஞ்சு-ஐ படிப்பதைத் தொடரவும்.
பட்டினிச் சாவின் விளிம்பில் இந்தியா
ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் புள்ளிவிவரங்களையும் தொகுத்து உலகளாவிய பட்டினிக் குறியீடு உருவாக்கி வெளியிட்டு வருகிறார்கள். இதில் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் பட்டினிக் குறியீடு 107 வது இடத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது மொத்தம் 121 நாடுகளின் பட்டினி, ஊட்டக் குறைப்பாடு தொடர்பானபுள்ளி விவரங்களைத் தொகுத்துப் பார்த்ததில் இந்தியாவின் இடம் 107. இந்தியாவுக்கு முன்னால் 106 நாடுகளும், இந்தியாவுக்குப் பின்னால் 14 நாடுகளும் இருக்கின்றன. பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாள் உள்ளிட்ட பல … பட்டினிச் சாவின் விளிம்பில் இந்தியா-ஐ படிப்பதைத் தொடரவும்.
பில்கிஸ் பானு பேசுகிறேன்
எனதருமை இந்திய குடிமக்களே! அனைவருக்கும் வணக்கம். அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை நான் என் வயிற்றில் சுமந்து கொண்டிருந்தேன். என் தந்தையின் வீட்டுக்கு நான் வந்திருந்தேன். துயர்மிகுந்த 2002 பிப்ரவரி 27 அன்று என் வீட்டிற்கு முகத்தில் கலவரமும், பீதியும் சுமந்து என் உறவினர்கள் சிலர் வந்தார்கள். நான் அப்போது சமயலறையில் இருந்தேன். அவர்களது வீடுகள் எல்லாம் தீ வைத்து கொளுத்தப்பட்ட … பில்கிஸ் பானு பேசுகிறேன்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தேசியக்கொடியில் புரளும் மலந்தின்னிகள்
1947 ஆகஸ்ட் 15ல் கிடைத்தது விடுதலை அல்ல, அதுவொரு ஆட்சி மாற்றமே என்று கம்யூனிஸ்டுகள் தொடக்கத்திலிருந்தே சொல்லி வருகிறார்கள். அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய அனைத்திலுமே ஒரு சிறு கூட்டத்துக்கு மட்டுமே விடுதலை கிடைத்துள்ளது, ஏனைய எவருக்கும் இல்லை. இது தான் கடந்த 75 ஆண்டு கால வரலாறு. ஆனால் இந்த நாளின் மீது மிகைப்படுத்தப்பட்ட புனிதத்தை ஏற்றி வைத்திருப்பதால் அனைவரையும் உள்ளடக்க முடிகிறது. அதில் ஒன்று தான் தேசியக் கொடி. அது நாட்டைக் குறிக்கும் கொடி … தேசியக்கொடியில் புரளும் மலந்தின்னிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஊழல் செய்யாத உத்தமக் கட்சி பாஜக
செய்தி: கடந்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் வாங்கி விட்டு திரும்பச் செலுத்தாத கடன்களின் தொகை 2,40,000 கோடியை தாண்டி இருக்கிறது. 2012ல் 23,000 கோடியாக இருந்த வாராக்கடன் தொகை 2022ல் 2,40,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றியவர்கள் 36 பேர். இந்த 36 பேரில் பெரும்பாலானோர் இன்று இந்தியாவில் இல்லை. டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி செய்தியின் பின்னே: இந்த 2,40,000 கோடி என்பது நேரடியாக இந்தியாவின் கொடூரங்களோடு, இந்தியாவின் … ஊழல் செய்யாத உத்தமக் கட்சி பாஜக-ஐ படிப்பதைத் தொடரவும்.
அப்பன் வீட்டு சொத்தா இது?
செய்தி: கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றிய அரசு விளம்பரத்துக்காக மட்டும் சுமார் ஆயிரம் கோடி செலவழித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துளளார். சரியாகச் சொன்னால் 986.85 கோடி தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்காக செலவிடப்பட்டுள்ளது. சன் நியூஸ் தொலைக்காட்சி செய்தியின் பின்னே: சராசரியாக நாள் ஒன்றுக்கு 55 லட்சம் விளம்பரத்துக்காக மட்டும் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இரவு உணவு இன்றி உறங்கச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 25 கோடி. வேலையில்லா … அப்பன் வீட்டு சொத்தா இது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
மோடியின் பாக்ய நகர்
செய்தி: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் 19 மாநில முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஹைதராபாத்தை பாக்யா நகர் என்று குறிப்பிட்டு பேசினார். பாக்யநகரில் தான் சர்தார் படேல் இந்தியாவை ஒருங்கிணைக்கும் "ஏக் பாரத்" என்ற வார்த்தையை உருவாக்கினார் என்று தெரிவித்தார். இதனால் ஹைதராபாத் நகரின் பெயர் … மோடியின் பாக்ய நகர்-ஐ படிப்பதைத் தொடரவும்.