சமூகம் தன் ஒவ்வாமைகளை உதறும் ஒரே வழியாக அறிவினை மட்டுமே கொள்ள முடியும். அவ்வகையில் தலித் என்ற அடையாளத்துக்கு வரலாற்று விளக்கங்களையோ வரிசைப்படுத்தப்பட்ட தரவுகளையோ அளிப்பதை இக்கட்டுரைகள் நோக்கமாக கொண்டிருக்கவில்லை. மாறாக அவ்வடையாளம் பெருஞ்சமூகத்தில் உருவாக்கும் மிக நுண்ணிய அசௌகரியத்தை உணர்ந்து அதற்கான காரணங்களை ஆராய முயல்கிறது. அதன் வழியே தரவுகளும் சமூக அசைவுகளும் விவரிக்கப்படுகின்றன. தலித்துக்கள் குறித்து வாசிக்க ஒவ்வாமை உடைய பேரரறிவாளிகளும் அணுகுவதற்கு அஞ்சும் சிக்கலான அதே நேரம் மயக்கம் தரும் வசீகரமான மொழிநடையைக் … கபாலி, காலா, அசுரன்… எங்கே தோற்கிறார்கள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ரஜினி
ரீல் ஹீரோக்களும், ரியல் ஹீரோக்களும்!
ஜெயலலிதா செத்ததற்குப் பிறகு, கருணாநிதி செயல்பட முடியாமல் போனதற்குப் பிறகு, தமிழகமே தனக்கு ஒரு தலைவர் இல்லாமல் தவிப்பது போலவும், இக்கட்டான இந்த நேரத்தில் ரஜினியும், கமலும் விஜயும், விஷாலும் நம்மை காப்பாற்றி வாழவைக்க வரிசை கட்டி நிற்பதாகவும் ஊடகங்கள் பரபரப்பு ஏற்படுத்துகின்றன. அரசியலில் நமக்கான அடுத்த தலைமை யார்? என்பதை இவர்கள் வரையும் ஒரு வட்டத்துக்குள் நின்று நம்மை சிந்திக்க வைக்க பழக்குகின்றன ஊடகங்கள். “இனி எவன் வந்தாலும் நமக்கு ஒன்னும் ஆவப் போறதில்லை, … ரீல் ஹீரோக்களும், ரியல் ஹீரோக்களும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
கபாலி: சில கற்பிதங்களை முன்வைத்து
வழக்கமான ரஜினி பட அலம்பல்களைத் தாண்டி கபாலி எனும் புதிய படம் வேறொரு தளத்தில் ஆதரிக்கவும், எதிர்க்கவும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ் திரை உலகைப் பொருத்தவரை பல்வேறு விதங்களில் விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. தொழில்நுட்பத்தை முதன்மையானதாக வைத்து, கலைஞர்களின் நடிப்புத்திறனை முதனமையானதாக வைத்து, கதையை, திரைக்கதையை, ஒளிப்பதிவை, இசையை, இயக்குனரை என பல அம்சங்களை முன்வைத்து திரைப்படங்கள் விமர்சிக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் கபாலி தாண்டியிருக்கிறது. ஒருவேளை இதுவும் கூட சாதனை தானோ, என்னவோ. பொதுவாக கலை என்பது, … கபாலி: சில கற்பிதங்களை முன்வைத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.