ஓராண்டுக்கும் மேலாக ரஷ்ய உக்ரைன் போர் நீடிக்கும் காரணம்? ரஷ்ய உக்ரைன் போருக்கும், அமெரிக்க ஈராக் போருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? நேட்டோ நாடுகள் உருவாக்கப்பட்டதன் பிண்ணணி, கலைக்கப்படாததன் காரணம்? இந்தப் போரின்ன் பொருளாதார பின்னணி? உள்ளிட்டவற்றை விளக்கும் காணொளி. https://www.youtube.com/watch?v=SqACnctvzCQ
குறிச்சொல்: ரஷ்யா
பொருளாதாரத் தடைகள் உலகை மாற்றுமா?
செய்தி: ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய், எரிவாயு நம்பி இயங்கி வந்த நிலையில், தற்போது ரஷ்யா உக்ரைன் போருக்கு பின்பு, Nors Stream என்னும் எரிவாயு பைப்லைன்-ஐ பராமரிப்பு பணிகளுக்காக மொத்த எரிவாயு விநியோகத்தை 20 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஐரோப்பாவில் குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில் எரிவாயு இல்லாமல் மக்களும், நிறுவனங்களும் எரிவாயு இல்லாமல் குளிர் காலத்தில் முடங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் ஐரோப்பா பல முறை விநியோகத்தை அதிகரிக்கப் பேச்சுவார்த்தை நடத்தியும் … பொருளாதாரத் தடைகள் உலகை மாற்றுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்தியாவின் அரசியல் பொருளாதார பாதை
நிலைகுலைக்கப்படும் தெற்காசியா! பகுதி 3 மிகைடாலர் அச்சடிப்பால் ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த விலைவாசி உயர்வு பிரச்சினையை உக்ரைன் போர் எண்ணெய் ஊற்றி கொழுந்துவிட்டு எரியச் செய்திருக்கிறது. அமெரிக்காவின் டாலர் வர்த்தகத்தை ஆயுதமாக்கும் நடவடிக்கையும் அதற்கு எதிரான ரஷ்ய - சீன நாடுகளின் சொந்த நாணய வர்த்தக மாற்று முன்னெடுப்பும் இதுவரையிலான உலக வர்த்தகக் கட்டமைப்பை உலுக்கி உடைக்க ஆரம்பித்திருக்கிறது. இது உலகம் முழுக்க விலைவாசி உயர்வு, டாலர் கடன் கொடுப்பனவுப் பற்றாக்குறை பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்நாட்டுக் குழப்பங்கள், போராட்டங்களை … இந்தியாவின் அரசியல் பொருளாதார பாதை-ஐ படிப்பதைத் தொடரவும்.
உக்ரைன்: யாருடைய களிமண் பொம்மை?
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருக்கிறது. இதனால் ரஷ்யா உக்ரைன் மீது மீண்டும் பெரும் படைகளை அனுப்பவிருக்கிறது. இந்த போர் குறித்தான செய்திகள் பல வண்ணங்களில், பல வகைகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. போர் குறித்த செய்திகளும், காணொளிகளும் புகைப்படங்களும் ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன, கொட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த செய்திகளின், புகைப்படங்களின், காணொளிகளின் தன்மை எப்படி இருக்கின்றன என்றால் உக்ரைன் அப்பாவியான, நோஞ்சானான, நியாயமான தன்மைகளுடன் செய்வதறியாமல் திகைத்து நிற்பது போலவும், ரஷ்யா கொடூரமான, மிருக பலத்துடன், … உக்ரைன்: யாருடைய களிமண் பொம்மை?-ஐ படிப்பதைத் தொடரவும்.
மக்களியம்
உலகம் முழுவதிலும் உள்ள மக்களை கொரோனா எனும் நுண்ணுயிரி கடும் நெருக்கடிக்குள் தள்ளி இருக்கிறது. முன் காலங்களிலும் பலமுறை இது போல கொள்ளை நோய் உருவாகி மக்களை வதைத்திருக்கிறது. ஆனாலும், கொரோனா போல முன் எப்போதும் அரசே மக்களை முடக்கும் நடவடிக்கைகள் எடுத்ததில்லை. கொரோனா அச்சம் அந்த அளவுக்கு மக்களின் மனதை ஆட்கொண்டிருக்கிறது அல்லது, ஆட்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறது. இந்த தொற்று நோயினால் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு லட்சம் பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இது இந்த நோயினால் … மக்களியம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
உழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்!
தோழர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள். இந்தியாவிலும் அப்படியான புரட்சியைக் கட்டியமைக்க நாம அனைவரும் செங்கற்களாவோம். https://youtu.be/jtis45ReK5k
கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூல் வெளியிடப்பட்டதற்கு இது 150 -வது ஆண்டு. அந்நூலில் பாட்டாளி வர்க்கத்தின் எதிர்காலம் குறித்து மார்க்ஸ் வெளியிட்ட கணிப்பை மெய்ப்பித்தது ரசியப் புரட்சி. அந்த ரசிய சோசலிசப் புரட்சிக்கு இது 100-வது ஆண்டு. ஆலைகள் உள்ளிட்ட உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்படுமானால், அரசு அதிகாரம் தொழிலாளர்கள், விவசாயிகளின் கைக்கு மாறுமானால் ஒரு நாடு எத்தகைய சாதனைகளையெல்லாம் நிகழ்த்த இயலும் என்பதை ரசிய சோசலிசம் நிரூபித்துக் காட்டியது. … கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!-ஐ படிப்பதைத் தொடரவும்.
மனித குலத்தின் ஆகப் பெருங்கனவை நனவாக்கிய நாள்!
வால்கா புதிய மனித சமுதாயத்தின் முகத்தில் தன்னை கழுவிக் கொண்டது. பூமிப்பந்து முதன் முதலாய் மனிதப் பண்பின் உச்சத்தில் தன்னை தழுவிக் கொண்டது. அன்றலர்ந்த மலர்களுக்கு தன்னிலும் மென்மையான இதயங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பரந்து விரிந்த வானம் சோசலிசத்தின் உள்ளடக்கத்தில் தன்னை உணர்ந்து கொண்டது. அலைஓயா கடல்கள் கம்யூனிச பொதுஉழைப்பின் மனதாழம் பார்த்து வியந்தது! சுரண்டலின் நகங்களால் அவமானக் கீறலோடு அலைந்த காற்றுக்கு வரலாற்றில் முதலாய் மனித சுவாசத்தின் மதிப்பு கிடைத்தது! இயற்கையின் மகிழ்ச்சியாய் … மனித குலத்தின் ஆகப் பெருங்கனவை நனவாக்கிய நாள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
உக்ரைன் பிரச்சனையில் மூக்குடைபட்டது யார்?
உக்ரைன் – உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் – 6 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க உக்ரைன் தொடரை, ‘தமிழ் இந்து’ கீழ்க்கண்டவாறு முடித்திருக்கிறது. "தன்னுடைய எல்லையைப் பல்வேறு திசைகளில் அதிகரித்துக் கொள்ள ரஷ்யா முயற்சி செய்கிறது. முதலில் ஜார்ஜியா, அடுத்ததாக கிரிமியா இப்போது கிழக்கு உக்ரைன். உக்ரைனிலேயே ரஷ்ய ஆதரவாளர்கள் கணிசமாக இருப்பதால் பிரச்சினை இப்போ தைக்குத் தீரப் போவதில்லை" அதாவது ரஷ்யா ஒவ்வொரு நாடாக ஆக்கிரமித்து வருவதால் … உக்ரைன் பிரச்சனையில் மூக்குடைபட்டது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பொய்மை நின்றிட வேண்டும் – தமிழ் இந்துவின் முழக்கம்
உக்ரைன் - உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் - 5 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க தொடரின் கடந்த பகுதியில் உக்ரைன் பிரச்சனையின் மையம் என்ன என்பதைப் பார்த்தோம். இன்னும் சற்று நுணுக்கமாக அதைப் பார்க்கலாம். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ரஷ்யா ஆதரவு அதிபர் யனுகோவிச், மேற்கத்திய நாடுகளின் ‘திட்டமிட்ட’ கலவரங்கள் மூலம் தூக்கி வீசப்பட்டு அமெரிக்க, ஐரோப்பிய ஆதரவாளரான யுஷென்கோ பதவியில் அமரவைக்கப்பட்டார். ஆனால் மீண்டும் … பொய்மை நின்றிட வேண்டும் – தமிழ் இந்துவின் முழக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.