கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் ஆறு என்றதும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்பதாக நினைவுக்கு வரும். 1992 க்கும் 2010 க்கும் இடைப்பட்ட எல்லா டிசம்பர் ஆறிலும் இந்த உணர்வு முஸ்லீம்களை போராட்டத்தின்பால் திரட்டியிருக்கிறது. ஆனால் அகமதாபாத் கட்டப்பஞ்சாயத்திற்குப் பிறகான இந்த முதல் டிசம்பர் ஆறில் ஒரு வெறுமை சூழ்ந்திருக்கிறது. சில அமைப்புகள் போராட்டம் வேண்டாம் என முடிவு செய்திருக்கின்றன. சில அமைப்புகள் போராட்ட நாளை மாற்றியிருக்கின்றன. சில அமைப்புகள் சுரத்தின்றி போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றன. … பாபர் மசூதி இடிப்பும் டிசம்பர் ஆறும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ராமன்
ராமனா? பாபரா? நாட்டை இடித்தவன் யாரெனச் சொல்
அயோத்தி தீர்ப்பு வெறும் இடப்பிரச்சனையோ, ஆவணங்களின் அடிப்படையிலான பிரச்சனையோ அல்ல. மக்களின் உயிரோடும் உடமைகளோடும் தொடர்புடையது எனவே தான் நீதிபதிகள் இடத்தைப் பிரித்துக்கொடுத்தி தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள் என்று பார்ப்பன பாசிச கட்டைப்பஞ்சாயத்து தீர்ப்புக்கு சப்பைக்கட்டு கட்டும் இந்துவெறியர்களுக்கு இதைச் சொல்லிக்கொள்கிறோம். தானும் இந்து என்று அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருப்பவர்கள் இதை படித்துப்பார்த்துக் கொள்ளட்டும். நீளமான இக்குறிப்புகளை தேடி எடுத்து ஒருங்கே தொகுத்து டிவிட்டரிலும் கூகுளிலும் உலவவிட்டு சாதனை படைத்திருக்கும் தோழர் மணி, தோழர் ஏழரை ஆகியோருக்கு மிக்க நன்றி … ராமனா? பாபரா? நாட்டை இடித்தவன் யாரெனச் சொல்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு அறுபது ஆண்டுகள் எதற்கு?
ஆயிரம் ஆயிரமாய் காவலர்கள் பாதுகாப்பு, ஊர்வலம் செல்லத்தடை, ஊரடங்கு என ஏகத்துக்கும் பீதியூட்டப்பட்ட தீர்ப்பு(!) வந்தேவிட்டது. சுற்றிவளைத்து இந்துப் பாசிச வெறியர்களின் செயல் சரியானது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். என்பதுதான் தீர்ப்பின் சாராம்சம். மூன்று நீதிபதிகள் (அதில் ஒருவர் முஸ்லீம்) அடங்கிய பென்ச் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மசூதியாக இருந்ததை உடைத்துத் தள்ளிவிட்டு அந்த இடம் இந்துக்களுக்குச் சொந்தம் கோவில் கட்டிக்கொள்ளுங்கள், போனால் போகிறதென்று முஸ்லீம்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் தருகிறோம் என்று … கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு அறுபது ஆண்டுகள் எதற்கு?-ஐ படிப்பதைத் தொடரவும்.