அரச பயங்கரவாதம் எனும் சொல் நாளுக்கு நாள் இயல்பாகிக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் இதற்கான எடுத்துக் காட்டுகளை நம்மால் நாளிதழ்களில் காண முடியும். அவற்றுள் பல விபத்துகளாக, நோய்களால் ஆனதாக, தனிப்பட்ட பகைகளாக, திடீர் நிகழ்வுகளாக, ஏன் இயற்கை பேரிடராகக் கூட வகைப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ராம்குமார் கொலையும் சிறையில் நடந்த தற்கொலையாக காட்டப்படுகிறது. ஆனால் அதற்கான ஆவணங்கள் .. .. ? அது அரச பயங்கரவாதத்தின் விளைவு என்பதை ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த ஆவணங்கள் … ராம்குமார் கொலை வழக்கு ஆவணங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ராம்குமார்
ராம்குமார் கொலை வழக்கு
சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சுவாதி படுகொலை வழக்கு (இப்போது இந்தப் பெயர் பொருத்தமானதாக இருக்கவில்லை. எனவே சுவாதி கொலை வழக்கு என்பதை ராம்குமார் கொலை வழக்கு என்பதாக குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்) சுவாதி படுகொலை நிகழ்ந்ததிலிருந்து இன்றுவரை காவல்துறையின் நடவடிக்கைகளில் பல்வேறு ஐயங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. அவை தீர்க்கப்படக் கூடாது என்பது மட்டுமல்லாமல் அவை எழுப்பப்பட்டிருக்கவே கூடாது என்பது போல் திட்டமிட்ட அலட்சியத்துடன் காவல்துறையின், ஊடகங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. தமிழகத்தில் காவி … ராம்குமார் கொலை வழக்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.
ரவுடித்துறையை என்ன செய்யப் போகிறோம்?
சுவாதி கொலை வழக்கில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டு விட்டார். மூன்று நாட்களுக்குப் முன்பு, கார்த்திக் என்பவரை காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொன்று விட்டு அதை மறைப்பதற்காக அவரின் பெற்றோருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து சரிக்கட்ட முயற்சித்திருக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். கடந்த வாரத்தில் நிகழ்ந்த இவை வெறும் தகவல்கள் அல்ல. மக்கள் மீது காவல்துறை கொண்டிருக்கும் மதிப்பீடு. காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் இதுபோன்ற மனிதத்தன்மையற்ற … ரவுடித்துறையை என்ன செய்யப் போகிறோம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
சுவாதியை அறைஞ்சவன் எவண்டா.. .. .. ?
சுவாதி கொலை குறித்து தெரியாதவர்கள் யாரும் தமிழ்நாட்டில் இருக்க முடியாது எனும் அளவுக்கு ஊடகங்கள் மக்களிடம் இந்த படுகொலையை கொண்டு சென்று சேர்த்திருக்கின்றன. பெண்களுக்கு எதிராக எத்தனையோ வன்புணர்வுக் குற்றங்கள், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு படுகொடூரக் கொலைகள் நடந்திருந்த போதிலும் அவைகளெயெல்லாம் மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு கடந்த ஊடகங்களும், அரசும் ஒரு நிர்பயாவுக்காக கொதித்தெழுந்தது. எத்தனையோ ஆவணக் கொலைகள் உட்பட கொடூரங்கள் நடந்திருந்தும் கூட அரசின், காவல்துறையின், ஊடகங்களின் அழுத்தத்தில் சுவாதி தமிழ்நாட்டின் நிர்பயாவாக … சுவாதியை அறைஞ்சவன் எவண்டா.. .. .. ?-ஐ படிப்பதைத் தொடரவும்.