மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா?சாபமா? 6

ஆதார், அலைக்கற்றை போட்டியில் தொடங்கும் புதிய பொருளாதார முறையை செயல்படுத்துவதற்கான முன்னெடுப்பு இந்தப் போட்டியின் தொடர்ச்சியில் எதேச்சதிகார வகுப்புவாத சிந்தனை கொண்ட கட்சியை ஆட்சியில் அமர்த்துவதிலும், மக்களின் உரிமைகளை கிஞ்சித்தும் மதிக்காமல் அவர்களின் உணர்வுகளை உசுப்பிவிட்டு வாழ்வாதாரத்தை பறிக்கும் பணமதிப்பிழப்பாகவும், ஜனநாயகமறுப்பு வடிவம் பெறுகிறது. அதைத் தொடர்ந்து மாநிலங்களின் வரிவிதிக்கும் உரிமையை மறுத்து ஒன்றிய மாமன்னரின்கீழ் வாழும் குறுநில மன்னர்களாக மாற்றும் ஜிஎஸ்டி வரிவதிப்பு முறையைக் கொண்டுவந்து இந்தியாவைப் பின்னோக்கி நகர்த்துகிறது. இந்த நடவடிக்கைகள் மக்களை வஞ்சகமாக … மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா?சாபமா? 6-ஐ படிப்பதைத் தொடரவும்.

என்னடா நடக்குது இங்கே .. ..?

செய்தி: ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகை தொடர்பான வழக்கை நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எஸ்.அப்துல் நசீர் மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு இன்று விசாரித்தது. விசாரணையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகையைச் செலுத்த, சுமார் 10 ஆண்டுகள் அவகாசம் அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. கட்டணங்களைச் செலுத்தத் தவறினால் அபராதம் மற்றும் வட்டி வசூலிக்கப்படும் என்றும் நீதிமன்ற அவமதிப்பாக அது கருதப்படும் என்றும் நீதிபதிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குக் கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். செய்தியின் பின்னே: ஏ.ஜி.ஆர் தொகை என்பது தொலைத் … என்னடா நடக்குது இங்கே .. ..?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பி.எஸ்.என்.எல் ஏன் விற்கப்படுகிறது?

பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது என்பது அரசுகள் பின்பற்றி வரும் பொருளாதாரக் கொள்கை. அந்தக் கொள்ளை, மன்னிக்கவும் கொள்கை சரியா தவறா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நட்டமடைந்து விட்டது அதனால் விற்கிறோம் என்பது எளிதான பதிலாக இருக்கிறது. ஆனால் ஏன் நட்டமடைந்தது என்பதை அரசு மக்களுக்கு விளக்குவதே இல்லை. உலகிலேயே பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கென்றே ஒரு அமைச்சரவையை ஏற்படுத்திய முதல் அரசாங்கம் பாஜக அரசாங்கம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். (வாஜ்பேயி அமைச்சரவையில் அருண்ஷோரி என்பவர் … பி.எஸ்.என்.எல் ஏன் விற்கப்படுகிறது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா?

அன்பார்ந்த நண்பர்களே! தோழர்களே!   நான் முகநூலில் அதிகம் உலவுவனல்லன். அதன் விருப்பக் கணக்குகளிலும், பகிர்வு எண்ணிக்கைகளிலும் சிக்கிக் கொள்பவனல்லன். காரணம், முகநூல் போன்ற சமூக அரட்டை ஊடகங்கள் நம் பெரும்பகுதி நேரத்தை விழுங்கும் பெரும்பசியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும், அது நம் சமூக உணர்வுகளை வரம்பிட்டு மழுங்கடிக்கும் உத்தியை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டிருகின்றன என்றும் நான் ஏற்றிருப்பதால் தான் முகநூலில் அதிக நேரத்தை செலவிடுவதில்லை. ஆனாலும் வெகு சில போதுகளில் சில குறு விவாதங்களில் … மல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: மக்களை வயிற்றிலடித்து தாளமாய் ரசிக்கும் கொடூரம்

இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு வழக்கம் போல சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துவிட்டது, பெட்ரோலிய நிறுவனங்களின் இழப்பு அதிகரிக்கிறது, நட்டம் என்று காரணங்கள் கூறப்படுகின்றன. இதிலும், தவிர்க்கவியலாத நிலையில் சிறிதளவே உயர்த்தியிருப்பதாகவும், பெட்ரோல் பயன் படுத்துவோர் இதைத் தாங்கும் அளவுக்கு சக்தி படைத்தவர்கள் என்றும் சமாதானம் வேறு. அப்படி என்ன தவிர்க்கவியலாத நிலை அரசுக்கு? கடந்த சில ஆண்டுகளாகவே பன்னாட்டளவில் கச்சா எண்ணெயின் விலை … மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: மக்களை வயிற்றிலடித்து தாளமாய் ரசிக்கும் கொடூரம்-ஐ படிப்பதைத் தொடரவும்.