ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே லூலூ குழுவின் பாலியல் சுரண்டல் தமிழ் இணையப் பரப்பில் பேசுபொருளாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், பொள்ளாச்சி பாலியல் கொடுரத்தை விட அளவிலும் தன்மையிலும் விரிந்த அளவில் இருக்கும் லூலூ குழு பாலியல் விவகாரம் பொள்ளாச்சி விவகாரம் அளவுக்கு மக்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. இதற்கு முதன்மையான காரணம் என்ன என்று பார்த்தால், முதன்மையான ஊடகங்கள் - அது அச்சு ஊடகமாக இருந்தாலும், காட்சி ஊடகமாக இருந்தாலும் - இதை வெளிக் கொண்டுவரவில்லை என்பது தான். … யார் அந்த லூலூ?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ரெட்பிக்ஸ்
வலதுசாரிகள் மட்டும் தான் நீதிபதி ஆகமுடியுமா?
அரசு எந்திரம் பார்ப்பனியமயமாகி இருக்கிறது என்பது நீண்ட நாட்களாகவே இங்கு நிலவிக் கொண்டிருக்கும் கருத்து. குறிப்பாக மோடி ஒன்றியத்தில் தலைமை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து இது மிக உச்சமாக, மிக வெளிப்படையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நீதித் துறையில். இதற்கு பல்வேறு தீர்ப்புகளை சான்றாக கூறலாம். பாபரி பள்ளிவாசல் வழக்கு, அப்சல் குரு வழக்கு உள்ளிட்டவை மிகவும் துலக்கமானவை. அண்மையில் வெளியான மூன்று தீர்ப்புகள் குறித்து ரெட்பிக்ஸ் வலையொளிக்காக சவுக்கு சங்கர் அலசுகிறார். நீதிபதிகள் எந்த மாதிரியான சிந்தனையுடன் … வலதுசாரிகள் மட்டும் தான் நீதிபதி ஆகமுடியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
செய்தியாளர்கள் என்ன செய்கிறார்கள்?
பாஜக பாசிசங்கள் ஊடகங்களை மிரட்டுகின்றன என்பதும், அவர்கள் ஊடகங்களை வடிவமைக்க விரும்புகிறார்கள் என்பதும் புதிய செய்தி இல்லை. என்றாலும் சவுக்கு சங்கர் ரெட்பிக்ஸ்க்கு அளித்த இந்த செவ்வி அதன் நீள அகலங்களை எளிமையாக விளக்குகிறது. இதை தடுக்க முடியாதா? இதை இப்படியே அனுமதிக்க வேண்டுமா? என்னுடைய கேள்வி என்னவென்றால், புதிய ஜனநாயகம், தீக்கதிர் என இடதுசாரி இதழ்கள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. இவற்றின் செய்தியாளர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள். பொது இடங்களில் நடக்கும் ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்புகளுக்கும் … செய்தியாளர்கள் என்ன செய்கிறார்கள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.