மல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா?

அன்பார்ந்த நண்பர்களே! தோழர்களே!

 

நான் முகநூலில் அதிகம் உலவுவனல்லன். அதன் விருப்பக் கணக்குகளிலும், பகிர்வு எண்ணிக்கைகளிலும் சிக்கிக் கொள்பவனல்லன். காரணம், முகநூல் போன்ற சமூக அரட்டை ஊடகங்கள் நம் பெரும்பகுதி நேரத்தை விழுங்கும் பெரும்பசியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும், அது நம் சமூக உணர்வுகளை வரம்பிட்டு மழுங்கடிக்கும் உத்தியை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டிருகின்றன என்றும் நான் ஏற்றிருப்பதால் தான் முகநூலில் அதிக நேரத்தை செலவிடுவதில்லை. ஆனாலும் வெகு சில போதுகளில் சில குறு விவாதங்களில் பங்கெடுத்திருக்கிறேன். இவைதவிர நான் எழுதும் பதிவுகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் மட்டுமே சமூகத் தளங்களை பயன்படுத்தியிருக்கிறேன். அண்மையில் பலரின் முகநூல் கணக்குகளை அதன் புனை பெயர் காரணமாக முடக்கப்பட்டும் அல்லது ஆவணங்களைக் காட்டி இயற்பெயரில் பதிவிடுமாறும் முகநூல் நிர்வாகம் வற்புறுத்தியது. இவ்வாறான ஒருநிலை எனக்கு ஏற்பட்டால் முகநூல் கணக்கிலிருந்து விலகி விடுவது என முடிவெடுத்திருந்தேன். அப்படியான நிலையில், பழைய பதிவுகளை, அதாவது முகநூலில் மட்டுமே இட்டிருக்கும் பதிவுகளை ஆவணப்படுத்துவது என எண்ணி தேடினால் முகநூலில் அதற்கு எளிய தேடும் வழி இருப்பதாக தெரியவில்லை. எனவே, அப்படியான ஒரு முடக்கத்தை சந்திக்கும் முன்னர் இயன்றவரை பதிவிட்டு விடுவது என்ற எண்ணத்திலும், பெரும்பாலான சமூக நடப்புகளுக்கு ஏற்ற எதிர்வினையை கட்டுரைகள் வடிவில் நான் செய்வதில்லை வெகு சொற்பமான அளவில் மட்டுமே செய்கிறேன் என்பதாலும் இப்படி ஒரு ஏற்பாட்டை தொடங்கியுள்ளேன். ஆதாவது மாதம் ஒருமுறை அந்த மாதத்தில் முகநூலில் பதிவுடும் குறுந்தகவல்களை முகநூல் நறுக்குகள்என்ற பெயரில் தொகுத்துக் கொடுப்பது எனும் எண்ணத்தின் விளைவே இப்பகுதி. இது குறித்த உங்களின் ஆலோசனைகளும், விமர்சனங்களும் வரவேற்கப் படுகின்றன.

முகநூல் நறுக்குகள் 1-6

*****************************************************

இந்தப் படத்துக்கு வசனம் தேவையில்லை என்று முன்பெல்லாம் நாளிதழ்களில் சிரிப்புப் படம் போடுவார்கள். அதேபோல இந்த வசனத்துக்கு விளக்கம் தேவையில்லை என்று போட்டு விடலாம். அந்த அளவுக்கு இது ஊடகங்களை செவிட்டில் அறைகிறது.

 

என்னிடம் பெற்ற உதவிகளை மறந்துவிடாதீர்கள்; அவை ஆவணபடுத்தப்பட்டிருக்கின்றன

 

ஊடகங்களின் முகத்திரையை கிழிக்கும் மல்லையா.

****************************************************

எனக்கு ஒண்ணு புரியவே மாட்டேங்குதுங்க.. ..

 

விசயகாந்து பொது இடத்துல தூ.. .. ன்னு துப்பினா [அது சரியான விமர்சனம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும்]

அதை பெரிய பிரச்சனையாக்குனாங்க. கட்சிக்காரவுங்கள அடிச்சாரு, திட்டினாரு, நாக்க துருத்தினாருன்னு .. .. .. அவருக்கு ஒரு பைத்தியக்கார பிம்பத்தை திறமையா ஒட்ட வச்சுட்டாங்க.

 

ஆனா நம்ம சீமான் அண்ணாச்சி நேத்து பேரா. அருணனை லூசுன்னு கைய நீட்டி ஏக வசனத்துல திட்டினாரு. ஏற்கனவே, அவரு போன்ல பீப் ல்லாம் பேசிருக்காரு.

 

ஆனா, விசயகாந்து மாதிரி பட்டம் கொடுக்கலாம்னு பாத்தா.. .. தம்பிமார்கள்லாம் ரெம்ப சூடா இருக்காங்களே ஏன்?

 

என்ன இருந்தாலும், ..கூ வை விட ஓட்டு கூட வாங்கலைன்னா கட்சிய கலைச்சிடுவேன்னு சவால் விட்டாரு பாருங்க .. .. அங்க நிக்குறாருங்க நம்ம சீமான்.

 

நமக்கு சந்தோசம் தாங்க .. தேர்தலுக்கு பின்னால ஒரு கட்சி முழுசா காணாம போகப் போகுதுண்ணு உறுதியா தெரிஞ்சப்புறமும் சந்தோசப்படாம இருக்க முடியுங்களா?

******************************************************

பெரியாரிய செயல்பாட்டாளரான தமிழச்சியின் மீது ததஜ வினரின் அராஜக ஆபாச வசைபாடல்கள் வக்கிரமானவை. கடைந்தெடுத்த ஆணாதிக்க பொறுக்கிகளின் மொழியாடல். ஆர்.எஸ்.எஸ் வானரங்களைப் போலவே இவர்களும் பாஸிச கோரப் பற்களைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 

இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் அல்லாவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை போலவே இவர்கள் மீதும் மூடத்தனமான நம்பிக்கையை வைத்துக் கொண்டிருக்கும் முஸ்லீம்களை பார்த்துத் தான் பரிதாபமாக இருக்கிறது.

 

இப்படி தனக்கு எதிராக கருத்து கொண்டிருப்பவர்களை எந்த குரான் ஹதீஸ் அடிப்படையில் விபச்சாரப் பட்டம் கட்டுகிறார்கள்?

 

இப்படி விருப்பம் போல் பொய்களை இட்டுக் கட்டிக் கூறுவதற்கு அல்லா இவர்களுக்கு வஹீ இறக்கினானா?

 

இப்படி கேள்வி கேட்க திராணியில்லாத தமிழ் முஸ்லீம்கள் மேலே இரண்டாவது பத்தியில் சொல்லப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துகிறார்கள் என்றே பொருளாகும்.

 

http://www.tamizachi.com/articles_detail.php?id=355

****************************************************

ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன பாசிசங்கள் எதற்கும் தயங்க மாட்டார்கள்.

 

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணையா தேசத் துரோகி என்றார்கள். எது தேசதுரோகம் என விளக்குவது அவர்களுக்கு அவசியமில்லை.

 

பாகிஸ்தான் ஆதரவு கோஷம் என்றார்கள். போலியாக தயாரிக்கப்பட்ட வீடியோ என்று சந்தி சிரிக்கிறது.

 

கால்சட்டையில் சிறுநீர் கழிக்கும் அளவுக்கு அடித்தோம். போலீசு எங்களுக்கு துணை நின்றது என்று வெளிப்படையாக பேட்டி கொடுத்திருக்கிறார்கள். மோடியியும் அவரது மூடிகளும் எல்லா ஓட்டைகளையும் அடைத்துக் கொண்டு கிடக்கிறார்கள்.

 

எதுடா உங்க தேசபக்தி?

ஆர்.எஸ்.எஸ் அஜண்டாவுக்கு எதிரான எதுவும் தேச விரோதம் என்றால் .. .. ..

 

பாம்புக்கு பாடம் நடத்தவும் முடியாது, மகுடி வாசிக்கவும் முடியாது. போட்டு நசுக்குவது ஒன்றே வழி.

*****************************************************

காக்கைக்கு இருக்கும் மதிப்பாவது இருக்குமா மக்கள் உயிருக்கு?

முன்னாள் ராணுவத்தினர் 16 ஆயிரம் பேரை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது [பொருட்பிழை இல்லிங்கோ]. ரிலையன்ஸ் குழும நிறுவனங்களை பாதுகாக்க இந்த ராணுவப் பிரிவு பயன்படுத்தப்படும். அதாவது நாட்டின் இராணுவம் என்பதே பெரு முதலாளிகளின் நிறுவனங்களையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்காகத் தான் இருக்கிறது. ஏற்கனவே ரிலையன்ஸின் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு 200 மத்திய படை வீரர்கள் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் ரிலையன்ஸே நேரடியாக கையாளும் இராணுவப் பிரிவு உருவாக்கப் பட்டிருக்கிறது.

காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் மக்கள் இந்திய இராணுவத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசு எந்திரம் அவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது.

இந்த நிலையில் ரிலையன்ஸ் இராணுவம் மக்களை என்ன செய்யும்?

*******************************************************

251 ரூபாய்க்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாம். நான்கு மாதம் கழித்து டெலிவரியாம்.

120 கோடி ஜனத் தொகையில் ஒரு ரெண்டு கோடி பேர் பதிவு செய்ய மாட்டாங்களா? கெடச்சது 582 கோடி

ரெண்டு கோடி பேர்கிட்ட இண்டெர்நெட் வசதியுள்ள போன் இருந்தா நாலு பெரிய கம்பனிகளுக்கு குறஞ்சது 50 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள். ஒரு வாடிக்கையாளர் ஒரு மாசத்துக்கு 200 ரூபாய்க்கு ரீசார்ச் செஞ்சா ஒரு மாசத்துக்கு 400 கோடி

சாமி இப்பவே கண்ணை கெட்டுதே.. .. ..

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

குடியரசு கொண்டாட்டம் ஒரு முரண்தொடை

image0101310

 

கிடத்தப்பட்டிருக்கும் அந்த உடலின்

கைகளில் இன்னும் காயவில்லை

மலம் அள்ளிய ஈரம்.

ஒருமுறை கைதட்டிக் கொள்வோம்

ஐந்து செயற்கைக் கோளுடன்

வெற்றிரமாக ஏவப்பட்டது ராக்கெட்.

 

வெமுலாக்கள் சாதி வெறியால் மரணம்

ஆனால் என்ன?

தலித்தா இல்லையா ஆய்வு செய்வோம்.

கொஞ்சம் பாராட்டலாம்

ஊனமுற்றோர்க்கு மோடி

சக்கர நாற்காலி வழங்கினார்.

 

இடுகாட்டுக்கு பாதையில்லை

போலீசே பிணம் திருடி

புதைத்த கொடூரம்.

பெருமிதம் கொண்டால் என்ன?

பன்னாட்டு தரத்தில் எட்டு வழி

வழுக்கும் சாலைகள்.

 

இரு கால், ஒரு கை செயல் தராவிடினும்

அபாயகரமான பயங்கரவாதி

பேராசிரியருக்கு நீதிமன்றம் தந்த பெயர்.

இந்தியராய் பெருமை கொள்வோம்

பதான்கோட்டில் தீவிரவாதிகள்

சுட்டுக் வீழ்த்தப்பட்டனர்.

 

பனங்கள் இறக்க அனுமதிக்க மாட்டோம்

டாஸ்மாக்குக்கு இலக்கு நிர்ணயித்தவாறே

சட்டமன்றத்தில் அமைச்சர்.

இதெல்லாம் ஒரு பிரச்சனையா?

வெள்ள நிவாரணம்

முறையாக கொடுக்கப்பட்டது.

 

கச்சா எண்ணெய் விலை இறங்க இறங்க

பெட்ரோல் விலை உயரும்

இது மோடி விதி.

அதனால் என்ன?

பென்ஸ் கார் இரண்டு லட்சம்

திட்டம் இருக்கிறதே.

 

அடடே! மறந்து விட்டேன்.

மக்கள் வதங்கினால் என்ன?

இன்று குடியரசு தினம்.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

ரோஹித் வெமுலா: கொலை செய்தவர்களை என்ன செய்வது?

12507441_1129797033699125_5059966828576283960_n

மீண்டும் ஒரு முறை பார்ப்பனிய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய மாணவன் ஒருவன் கொலை செய்யப்பட்டிருக்கிறான். ஒருபக்கம், “கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான்.. தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்” என்று பாட்டுப் பாடி கலை என்ற பெயரில் பார்ப்பனிய நச்சுக் கருத்தை மக்களிடம் பரவ விடுகிறார்கள். மறுபக்கம் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி நிறுவங்களுக்குள் நுழைந்து விட்டாலோ கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஏதாவது ஒரு விதத்தில் கொலை செய்து விடுகிறார்கள். இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்? என்று ஒரு பக்கம் பொதுக் கருத்தை உருவாக்க முயல்கிறார்கள். மறுபக்கமோ பொதுப் பாதையில் ஒடுக்கப்பட்டவர்கள் பிணத்தைக் கொண்டு சென்றால் காவல் துறையே பிணத்தைப் பிடுங்கி தனிப் பாதையில் கொண்டு சென்று புதைக்கிறது. பழைய மனுவின் காலம் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று அத்தனை துறையும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதன் வெளிப்பாடு தான் இது. இதற்கான இப்போதைய சான்று தான் ரோஹித் வெமுலாவின் கொலை.

கடந்த டிசம்பர் 21ம் தேதியிலிருந்து ரோஹித் வெமுலா உட்பட ஐந்து மாணவர்கள் ஹைதராபாத் பல்கலைக் கழகத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார்கள்.  ஏன் இவர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள் என்பதை அறிய வேண்டுமென்றால் அதை முசாபர் நகர் படுகொலைகளிலிருந்து தொடங்க வேண்டும்.

இந்திய அரசு நிர்வாகம் பார்ப்பன மயமாகி இருப்பதற்கு தனியே சான்றுகள் ஏதும் தேவையில்லை. ஆனாலும் மோடி ஆட்சியேறிய பிறகு பரிவாரக் குரங்குகள் அனைத்துக்கும் வெறி பிடித்திருக்கிறது. மாட்டுக்கறி இருக்கிறதா என்று எந்த வீட்டிலும் நுழைந்து சோதனை செய்யும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது. இரயில் பயணத்தில் கூட யாரையும் சந்தேகப்பட்டு சோதனை செய்து அடித்து உதைக்கும் அதிகாரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. காதலர்களைக் கண்டு விட்டால் கலாச்சார காவலர்களாகி எந்த பாசிச எல்லைக்கும் செல்ல முடியும் அவர்களால். இப்படி ஒரு பெண்ணை கேலி செய்ததான முகாந்திரத்தில் தான் முசாபர் நகரில் கலவரம் என்ற பெயரில் படுகொலைகள் நடத்தப்பட்டன. இதை நாடெங்கிலும் உள்ள முற்போக்கு சக்திகள் கண்டித்தன. அதன் ஒரு வடிவமாக “முசாபர் நகர் பாக்கி ஹை” எனும் ஆவணப்படம் வெளிவந்தது.

இதை டெல்லி பல்கலைக் கழகத்தில் திரையிட முனைந்த போது அந்த பரிவாரக் குரங்குகளின் அட்டகாசத்தால் திரையிட முடியாமல் போனது. ஆனால் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் அந்தக் குரங்குகளின் அட்டகாசத்தை மீறி ‘அம்பேத்கார் மாணவர் கூட்டமைப்பு’ அந்த ஆவணப்படத்தை திரையிட்டது. இப்படத்தை திரையிட்டது தேச துரோக குற்றம் என்பது போல்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் எனும் அமைப்பு ரவுடித்தனத்தில் ஈடுபட்டு அமபலப்பட்டுப் போனது. மட்டுமல்லாது யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி காவிக் காலிகளை அம்பலப்படுத்தும் பணியையும் அம்பேத்கார் மாணவர் கூட்டமைப்பு செவ்வனே செய்தது. இதை நேரடியாக எதிர்க்க முடியாததால் நரித்தனத்தில் இறங்கியது ஏ.பி.வி.பி. பல்கலைக் கழக தலைமைக்கும், மத்திய தொழில்துறை இணையமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கும் பொய்ப்புகார்களை அனுப்பினார்கள். தத்தாத்ரேயா ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் அம்பேத்கார் மாணவர் கூட்டமைப்பு என்ற பெயரில் தேசத்துரோக பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாக அமைச்சர் சுமிதி இரானிக்கு எழுதி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தான் ரோஹித் வெமுலா உட்பட ஐந்து ஒடுக்கப்பட்ட மாணவர்கள் நீக்கப்படுகிறார்கள். இதனை எதிர்த்து அவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே தறகாலிக கூடாரம் அமைத்து பதினைந்து நாட்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருந்த நிலையில், மாணவர்கள், ஜனநாயக சக்திகள் என அனைவரும் அந்த போராட்டத்துக்கு ஆதரவளித்த நிலையில் திடீரென கடந்த 17ம் தேதி ஞாயிறு இரவில் விடுதி அறையில் பிணமாகத் தொங்கினார் ரோஹித் வெமுலா. அதிர்ச்சியடைந்த மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த போராடிய ஆறு மாணவர்களைக் கைது செய்த காவல் துறை, யாருக்கும் சொல்லாமல் ரோஹித் வெமுலாவின் உடலை திருடிச் சென்று போஸ்ட்மார்ட்டம் கூட செய்யாமல் எரித்து விட்டது.

ரோஹித் வெமுலாவின் கடைசிக் கடிதம் கிடைத்திருப்பதால் அது தற்கொலை என்று முடிவு செய்யப்பட்டு விட்டது. என்றாலும் இறந்த மாணவனின் உடலை திருடிச் சென்று எரிக்கும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டா? இதே நிகழ்வு தான்

திருநாள்கொண்டச்சேரி கிராமத்திலும் நடந்திருக்கிறது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் காவல்துறையின் இந்த அதிகாரம் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டாமா?

தற்கொலை என்றாலும் கூட இது நிறுவனக் கொலை தான் என்பதற்கு நிரூபணம் எதுவும் தேவையில்லை. அதாவது கொலை செய்வதற்குப் பதிலாக தற்கொலை செய்யும் அளவுக்கு நெருக்குதல் தொடுப்பது. தற்போது தத்தாத்ரேயா, சுமிதி இரானி, துணைவேந்தர் ஆகியோரை கொலை வழக்கில் கைது செய்யக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசும், ஊடகங்களும் கள்ள மௌனம் சாதிக்கின்றன. இன்னும் சில நாட்களில் போராட்டங்களும் கூட குறைந்து போகலாம். அடுத்தொரு கொலை நிகழும் வரை இது ஒரு சம்பவமாக் கூட எஞ்சி விடலாம். ஆனால் இது போன்ற கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டாமா? எனும் கேள்வியை என்ன செய்வது?

ரோஹித் வெமுலா முதன்முறையோ கடைசி முறையோ அல்ல. கடந்த நான்கு ஆண்டுகளில் பதினெட்டு தலித் மாணவர்கள் இது போல் உயர் கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை பேரை இந்த பட்டியலில் சேர்ப்பது?

ரோஹித் வெமுலாவும் ஏனையோரும் ஏன் எதனால் தற்கொலை நோக்கி நெட்டித் தள்ளப்படுகிறார்கள்? தாத்ரியில் ஒரு இஸ்லாமிய முதியவர் கொல்லப்பட்டதற்கும் இதற்கும் ஒரு வேறுபாடும் இல்லை. பொது இடங்களில் வானரங்கள் நேரடியாக தாக்குதலில் இறங்குகின்றன. அதுவே உயர் கல்வி நிருவனங்கள் என்றால் கல்லூரிகளிலிருந்து, விடுதிகளிலிருந்து நீக்கப்படுதல், உதவித் தொகையை நிறுத்துதல், உரிய அங்கீகாரம் கிடைக்கவிடாமல் செய்தல் என நிர்வாக வழிகளில் தாக்குதல் நடக்கிறது. அரசுப் பதவிகள் என்றால் தேர்வு செய்ய மறுப்பது, சிறு குறைகளுக்கும் மீப்பெரும் தண்டனைகளை வழங்குவது. வங்கிகளில் இஸ்லாமியர்கள், தலித்கள் வாழும் பகுதிகளுக்கு கடன் தர மறுப்பது. நீதிமன்றங்களில், மருத்துவமனைகளில், நிர்வாகத் துறைகளில் என எல்லா இடங்களிலும் நடப்பது ஒன்றுதான், வடிவங்கள் மட்டுமே வேறு வேறு.

நாங்கள் உற்பத்தி செய்து குவிக்கும் நுகர் பொருட்களை வாங்கும் சக்தியற்ற யாரும் உயிர் வாழத் தகுதியற்றவர்கள் என்கிறது ஏகாதிபத்தியம். பார்ப்பனிய அடிமைகளைத் தவிர வேறு யாரும் இந்தியாவில் இருக்கத் தகுதியற்றவர்கள் என்கிறது பார்ப்பனீயம். இதை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சாம பேத தண்டங்களை வீசத் தயங்க மாட்டோம் என்கிறது பார்ப்பனீயம்.

ரோஹித் வெமுலாவும் ஏனையோரும் ஏன் கொல்லப்பட்டார்கள்? ஒடுக்கப்பட்டவர்கள் என்பவர்கள் பெரும்பான்மை காட்டுவதற்காக இந்து எனும் பட்டிக்குள் அடைபட்டிருக்க வேண்டும். தேர்தல் வழியாக அதிகாரம் பெறுவதற்கோ, அல்லது வேறு பலன்களுக்காகவோ கை காட்டிய இடத்தில் இஸ்லாமியர்கள் கிருஸ்தவர்கள் மீது ஏவல் நாய் போல் பாய்ந்து குதற வேண்டும். இது தான் தலித்துகள் குறித்த பார்ப்பனியத்தின் இலக்கணம். இதை மீறி பார்ப்பனியத்துக்கு எதிராக செயல்பட்டாலோ, பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டாலோ அவர்கள் கொல்லப்படும் அல்லது தற்கொலைக்குள் தள்ளப்படும் தகுதியை எட்டுவார்கள்.

இதை மழுங்கடிக்கும் நைச்சியங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த இலக்கணத்துக்குள் இருக்க விரும்புகிறோமா? என்பது தான் முக்கியமான கேள்வி. நிகழ்வதை ஆழ அவதானிக்காமலிருப்பது கூட குற்றமில்லை. ஆனால் நிகழ்வதை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்ப்பது அதிக ஆபத்தானது. பார்ப்பனிய மதத்துக்குள் நீடிக்க வேண்டுமா என்பது கடைசிக் கேள்வி. இப்போதைக்கு ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையோர் ஒன்றிணைய வேண்டும். சாதி மத ஏனைய பேதங்களை மறந்து வர்க்க அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும். ஒன்றிணைந்து பார்ப்பனியத்துக்கு ஆதரவான ஒவ்வொரு செங்கலும் நொருக்கப்பட வேண்டும். இன்று நடக்கும் போராட்டங்கள் மக்களை இந்த நோக்கத்தை நோக்கி கொண்டுவருவதற்கு பயன்பட வேண்டும். ரோஹித் வெமுலா செய்ததும் அது தான், இனியொரு ரோஹித் வெமுலா உருவாகாமல் தடுப்பதும் அது தான்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

%d bloggers like this: