தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் வள்ர்ச்சிக்கும், அரசியல் நிறுவன ஒழுங்கமைப்புக்கும் உதவுவது தான் நமது முதன்மையான அடிப்படையான பணி. இந்தப் பணியைப் பின்னுக்குத் தள்ளுகிறவர்கள், எல்லாத் தனிப்பட்ட பணிகளையும் குறிப்பிட்ட போராட்ட முறைகளையும் இதற்கு கீழ்ப்படுத்த மறுப்பவர்கள் தவறான பாதையில் செல்கிறவர்களாவர். இயக்கத்துக்கு பெருந்தீங்கு இழைப்பவர்களாவர். .. .. .. .. .. .. அரசியல், பிரச்சாரம், கிளர்ச்சி, நிறுவன ஒழுங்கமைப்பு இவற்றின் உள்ளடக்கத்தையும் வீச்சையும் குறுகச் செய்து விடுவோராலும் தொழிலாளர்களுடைய வாழ்க்கையில் விதிவிலக்கான சில தருணங்களில் … வெகுஜனங்களிடையே கட்சியின் பணி-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: லெனின்
இடதுசாரி கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு
“அதெல்லாம் இருக்கட்டும், ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சி பற்றி இன்றுவரை ஏன் பேசிக் கொண்டிருக்கிறோம்? …” “அது சரி …புரட்சிக் கட்சிக்கு தேர்தலில் என்ன வேலை? …” “ம்ஹுக்கும் … கம்யூனிஸ்டுகளால் நடத்தப்படும் சங்கங்களில் பிற்போக்கானவர்கள் இருக்கிறார்களே?” “சமரசமில்லாமல் போராட வேண்டாமா?” போகிற போக்கில், இப்படி ஏராளமான ‘புரட்சிகர‘ கேள்விகள் நம்மை நோக்கி வீசப்படுகின்றன. இவைகளெல்லாம் இங்கு மட்டும்தான் எழுப்பப்படுகின்றனவா?… உலகெங்கிலும் இப்படி வீராவேசம் பேசுவோரால் நடந்தது என்ன? என்ன செய்துவிட முடியும்? என்பதைத்தான் ‘இடதுசாரி கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு’ புத்தகத்தில் தோழர் வி.இ.லெனின் விமர்சனப்பூர்வ ஆய்வுக்கு உட்படுத்துகிறார். படியுங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள் மின்னூலாக (பிடிஎஃப்) பதிவிறக்க
எங்கள் லெனின்
"லெனினை ஸ்தாபகராகவும் ,தலைவராகவும் கொண்ட கட்சியின் உறுப்பினர் என்பதைவிட மேலான கௌரவம் ஒன்றுமில்லை". - ஜே.வி.ஸ்டாலின்
தேசிய இனப் பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும்
இந்தியாவில் கம்யூனிசம் குறித்தோ, புரட்சி குறித்தோ பேச முற்பட்டால் தவிர்க்கவே முடியாமல் முன் வந்து நிற்கும் சிக்கல் தேசிய இனச் சிக்கல் தான். இந்தியாவில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிசக் குழுக்களில் பாதிக்கும் மேற்பட்ட குழுக்களின் பிளவுக்கு தேசிய இனச் சிக்கல் ஒரு காரணியாக இருந்திருக்கிறது. தவிரவும், தமிழ்நாட்டைப் பொருத்தவரை, பார்ப்பனியம் ஒன்றிய அதிகாரத்தில் அழுத்தமாக காலூன்றி நிற்கும் - இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் அரசு உறுப்புகளிலும், அரசாங்க உறுப்புகளிலும் மிக அழுத்தமாக காலூன்றி நிற்கும் … தேசிய இனப் பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
நவ.7: கொண்டாடும் தகுதி வேண்டும்
இன்று ரஷ்யப் புரட்சி நாள். தோழர் லெனின் தலைமையில் பரந்துபட்ட நாட்டில், பல்வேறு கட்சி அமைப்புகளை ஒன்றுபடுத்தி, எஃகுறுதியான கட்சியைக் கட்டி, பாட்டாளி மக்களின் அதிகாரத்தை வென்றெடுத்த நாள். நூறாண்டுகளைக் கடந்த பின்பும், நினைக்குந்தோறும் அந்தப் பெருமிதம் நம் நெஞ்சை நிறைத்து வழிகிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் யாராலும் உலகின் முதல் சோசலிச அரசு அமைந்த அந்த நாளை, உழைக்கும் மக்களின் உவகை ஊற்றெடுத்த அந்த நாளை மறக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அதேநேரம் இந்த … நவ.7: கொண்டாடும் தகுதி வேண்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பொதுக் கல்வி – லெனின்
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மக்களுக்கு எதிராக கல்வியை முழுக்க முழுக்க கார்ப்பரேட் பிடியில் ஒப்படைக்கும் ஒன்றிய அரசின் கொள்கைக்கு, அதன் வரைவை வெளியிட்டபோதே பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஒரு கொடுந்தொற்று காலத்தில் தேசிய கல்விக் கொள்கை வரைவை இந்தியா முழுவதிலுமிருந்து அளிக்கப்பட்ட பரிந்துரைகள், எதிர்ப்புகள் என எதையும் கணக்கில் கொள்ளாமல் சட்டமாக்கியது. இன்று கொரோனாவின் இரண்டாவது அலையில் பிணக் குவியல்களுக்கு நடுவே அந்தக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் … பொதுக் கல்வி – லெனின்-ஐ படிப்பதைத் தொடரவும்.
உலகின் கொரோனாக்களுக்கு ஒரே தடுப்பூசி
இன்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு 1870ல் இதே நாளில் (ஏப்ரல் 22) ரஷ்யாவில் ஓடும் வால்கா ஆற்றின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் இல்யா உல்யானவ் - மாயா உல்யானவ் தம்பதிகளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு விளாடிமிர் இலீச் உல்யானவ் என்று பெயரிட்டனர் பெற்றோர். பின்னர் அந்தக் குழந்தை வளர்ந்து தனக்குத் தானே ஒரு பெயரைச் சூட்டிக் கொண்டது. உலகத் தொழிலாளர்களின் ஒப்புயர்வற்ற தலைவனும், மார்க்சிய கோட்பாடுகளை செழுமைப்படுத்தியதோடு மட்டுமன்றி, சோவியத் புரட்சி … உலகின் கொரோனாக்களுக்கு ஒரே தடுப்பூசி-ஐ படிப்பதைத் தொடரவும்.
மார்க்சியம் மட்டுமே தீர்வு
இன்று நவம்பர் ஏழு. உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் மதிப்பு வாய்ந்த நாள் இன்று. அரசு தோற்றம் கொண்ட காலத்திலிருந்து உழைக்கும் வர்க்கம் சுவைத்தறியாத நிர்வாக அதிகாரத்தை சமைத்தறிந்த நாள். மனிதன் உருவாகி வந்த தொடக்கத்திலிருந்து சாதாரண மக்கள் பாவித்திராத வசதிகளையும் வாய்ப்புகளையும் அவர்களுக்கு உருவாக்கித் தந்த நாள். 102 ஆண்டுகளுக்கு முந்திய அந்த நாளின் தனித் தன்மை இன்றும் மக்களின் உயிரோடு கலந்திருக்கிறது. மீண்டும் அந்த நாள் வாராதா? எனும் ஏக்கத்தை மக்களின் மனதில் ஏற்றிக் … மார்க்சியம் மட்டுமே தீர்வு-ஐ படிப்பதைத் தொடரவும்.
உழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்!
தோழர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள். இந்தியாவிலும் அப்படியான புரட்சியைக் கட்டியமைக்க நாம அனைவரும் செங்கற்களாவோம். https://youtu.be/jtis45ReK5k
எச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்
பார்ப்பன பாசிஸ்டுகள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஏராளமான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது அதற்கு மற்றுமோர் சான்று. ஒரு தேர்தல் வெற்றி என்பது ஒரு போதும் மக்களின் விருப்பங்களை எதிரொலிக்காது என்பதற்கு, தேர்தல்கள் எப்படி எந்த அடிப்படையில் நடத்தப்படுகின்றன என்பது தொடங்கி ஏராளமான ஆய்வுகள் இருக்கின்றன. தேர்தல் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் இறங்க ஆயத்தமாக இருப்பவர்கள் தான் இந்த பார்ப்பன பாசிச ஓநாய்கள். அப்படியான இழி உத்திகள் மூலம் … எச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.