ஓரின ஈர்ப்பும் விவாதங்களும் பகுதி இரண்டு

ஓரின ஈர்ப்பும் விவாதங்களும் என்ற தலைப்பில் இடப்பட்ட இடுகைக்கு வந்த எதிர்வினைகளுக்கு பதிலளிக்கும் முகமாக இந்த இரண்டாம் பகுதி இடப்பட்டுள்ளது. பின்னூட்டமிட்ட தோழர் பென் அவர்களுக்கும், குடும்பக்கட்டுப்பாடு குறித்து மின்னஞ்சலில் கேள்வி கேட்ட நண்பர் சூ.பிரகாஷ் அவர்களுக்கும் நன்றி ஓரின ஈர்ப்பு பற்றிய விவாதங்களையும் விமர்சனங்களையும் கிளப்பிவிட்டதில் தில்லி உயர்நீதி மன்றத்திற்கு பெரும்பங்குண்டு. ஓரினச்சேர்க்கை என்ற சொல்லை உச்சரிப்பதே ஒழுக்கக்கேடான ஒன்று, அதைப்பற்றி பேசுவதே அபத்தமானது என்ற நிலையில் அது சரியா தவறா என்று பேசவைத்திருக்கும் அந்த…

ஓரின ஈர்ப்பும் விவாதங்களும்.

                            அண்மையில் தில்லி உயர்நீதிமன்றம் ஓரின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவான தீர்ப்பொன்றை அளித்தது. அதன்படி ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருதும் 377ஆவது பிரிவு நீர்த்துப்போனது, அதாவது இனிமேல் விருப்பத்துடன் ஈடுபடும் ஓரினச்சேர்க்கையானது குற்றமாக கருதப்படாது. இதனைத்தொடர்ந்து நாடெங்கும் சூடாக விவாதம் நடைபெற்றுவருகிறது. குறிப்பாக இஸ்லாமிய மத அமைப்புகள் இதை கடுமையாக எதிர்த்து நாள்தோறும் ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகிறது. பெண்கள் பார்களில் குடிப்பதற்கு எதிராக இந்துத்துவ அமைப்புகள் கலாச்சார காவலர்களானதைப்போல் ஓரினச்சேர்க்கையை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் கலாச்சார காவலர்களாக அவதாரம் எடுத்துள்ளன.                              இது…