வங்கிகள் யாருக்காக?

முன்குறிப்பு 1: இது போன்ற சிக்கல்களில் தொடர்புடையவர்கள் ஏன் வங்கியின் பெயரை மறைக்கிறார்கள்? என்ன வங்கி என வெளிப்படையாக எழுத வேண்டியது தானே. முன்குறிப்பு 2: படித்து வேலையில் இருக்கும் நடுத்தர பிரிவினர்களே இப்படித்தான் நடத்தப்படுவார்கள் என்றால், ஒப்பீட்டளவில் அறியாமையில் இருக்கும் எளிய மக்கள் அன்றாடம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்களின் நடப்புகளும் இவ்வாறு வெளிவர வேண்டும். ஒரு Nationalised bank ல கார் லோன் இரண்டரை லட்சம் வாங்கியிருந்தேன். ஐந்து வருசம் EMI கட்டனும். மாதாமாதம் கட்ட … வங்கிகள் யாருக்காக?-ஐ படிப்பதைத் தொடரவும்.

லட்சுமி விலாஸ் அரிசியும், டிபிஎஸ் உமியும்

லட்சுமி விலாஸ் வங்கியின் சிக்கல் தனிப்பட்ட ஒன்றல்ல, எல்லா வங்கிகளும் வாராக்கடன் பிரச்சையில் சிக்கித் தவிப்பது போலவே லட்சுமி விலாஸ் வங்கியும் வாராக்கடன் சிக்கலில் சிக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் வாராக்கடனின் எல்லை உச்சத்தை தொட்டிருக்கிறது. இந்த வாரக்கடன்களுக்கும் சேமவங்கியின் கொள்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூற முடியுமா? எனவே, இந்த விதயத்தில், லட்சுமி விலாஸ் வங்கி தனிப்பட்ட முறையில் செய்த தவறுகளை சேமவங்கி தலையிட்டு சரி செய்ய முயல்கிறது எனும் புரிதலே பிழையானது.

ரொக்கமற்ற பொருளாதாரம் எதற்காக கொண்டு வரப்படுகிறது?

உயர் மதிப்பு கொண்ட ரூபாய்த் தாள்கள் மதிப்பிழந்தவைகளாக அறிவித்து நாற்பது நாட்களைக் கடந்து விட்டது. கருப்புப் பணம் என்றார்கள், கள்ளப்பணம் என்றார்கள், ஊழலை ஒழிக்க என்றார்கள் சல்லடையில் அள்ளிய தண்ணீர் போல் எதுவும் நிற்கவில்லை மக்களிடம். கடைசியில் நிதியமைச்சரின் வாயிலிருந்தே பூனைக்குட்டி வெளியே வந்தது, கேஷ்லெஸ் எகானமி தான் எங்கள் நோக்கம் என்று. அதாவது கருப்புப் பணத்தை, கள்ளப்பணத்தை ஒழிப்பதெல்லாம் எங்கள் நோக்கமல்ல நாட்டில் ரொக்கமற்ற பொருளாதாரத்தை கொண்டு வருவதே எங்கள் நோக்கம் என்கிறார்கள். கடந்த நாற்பது … ரொக்கமற்ற பொருளாதாரம் எதற்காக கொண்டு வரப்படுகிறது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

500, 1000: இனி செய்ய வேண்டியது என்ன?

மக்களின் வாழ்வு தலைகுப்புற புரட்டிப் போட்டது போலிருக்கிறது. எதிர்ப்படும் அனைத்து முகங்களிலும் ஏனைய அனைத்து உணர்ச்சிக் குறிகளையும் விட என்ன செய்வது எனும் கவலையே மேலோங்கித் தெரிகிறது. ரூபாய்தாள்கள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு எல்லாம் முடங்கிக் கிடக்கிறது. மக்களின் அவலங்கள் அன்றாடச் செய்திகளாய் சுருங்கி, கடந்து போய்க் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இன்று என்ன அறிவிப்பு புதிதாய் வரப்போகிறது? அதைக் கொண்டு எப்படி தங்களின் அடிவருடித்தனத்தை புதுப்பித்துக் கொள்வது என்று ஊடகங்கள் அலைகின்றன. பொதுவாக ஊடகங்களும் … 500, 1000: இனி செய்ய வேண்டியது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பட்ஜெட் எனும் மூடநம்பிக்கை

கன்னையா குமார், ஜே.என்.யு பிரச்சனைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு ஊடகங்கள் பட்ஜெட் குறித்து பேச ஆரம்பித்து விட்டன. இல.கணேசன் பட்ஜெட் பற்றி கூறும் போது வெளிப்படையாக ஒன்றை ஒப்புக் கொண்டார், எதிர்க் கட்சிகள் என்றால் எதிர்ப்பதும், ஆளும் கட்சிகள் என்றால் ஆதரிப்பதும் இயல்பானது தான். அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார். ஓட்டுப் பொறுக்கும் எந்தக் கட்சிக்கும் இதைத் தாண்டிய அறிவோ, தெளிவான பார்வையோ இருப்பதில்லை. ஊடகங்களில் உரை தரும் பொருளாதார அறிஞர்கள் எனும் … பட்ஜெட் எனும் மூடநம்பிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.