மநு நீதி காத்த சோழர்கள் காலத்தில் சாதியும் ,வருணமும் செழித்தன என்கின்றன ஆய்வுகள். தமிழகத்தில் 17 ஆம் நூற்றாண்டில் தலித்துகளின் பள்ளு இலக்கியம் தோன்றியுள்ளது. விவசாய வேலைகளில் இருந்த கொத்தடிமை நிலை அதில் வெளிப்படுகிறது. சமஸ்கிருத மொழியின் பாரம்பரியத்தில் வந்த மநு (அ)தர்மமத்தின்படி பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்குப் பிரிவில் சூத்திரர்கள் அடிமைகள் ! ஆனால், பஞ்சமர்கள் எனப்பட்டவர்கள் மனிதர்களே அல்ல. விலங்குகளிலும் கீழாக நடத்தப்பட வேண்டியவர்கள். அவர்களில் தமிழகத்தின் புதுரை வண்ணார்கள் போன்ற … இந்தியாவில் அடிமைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: வன்கொடுமை
மீண்டும் படரும் சாதீய நெருப்பு
மருது சகோதரர்கள், சுந்தரலிங்கம், வ,உ.சிதம்பரம் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் முதல் திருமலை நாயக்கர் போன்ற குறுநில மன்னர்கள், பாளையக்காரர்கள் ஈறாக வரலாற்றில் தெரிந்த தெரியாத, அறிந்த அறியாத அனைவரும் தத்தம் சாதி அடையாளங்களோடு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் சுவரொட்டிகளில். தங்கள் பெயரின் பின்னே பட்டங்களைப் போல் பெருமையுடன் போட்டுக் கொள்ளும் நிலை பெரியாரின் வீச்சுகளின் பின்னே மறைந்திருந்தது. ஆனால் அந்தப் பெருமை(!) தற்போது மீண்டு வந்து கொண்டிருக்கிறது. உலகமயக் கொள்கைகளின் விளைவுகளால் ஓட்டுக் கட்சிகள் சாயமிழக்க சாயமிழக்க … மீண்டும் படரும் சாதீய நெருப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.
வாச்சாத்தியைக் குதறிய வெறிநாய்களை 19 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிப்போட உத்தரவு
மறந்து போய்விட்ட வாச்சாத்தி வழக்கு கடந்த சில நாட்களாக மீண்டும் வலம் வரத் தொடங்கியிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டிருக்க வேண்டிய தீர்ப்பு குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் வரவில்லை என்பதால் மேலும் இரண்டு நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது. தீர்ப்பை கேட்கத் திரண்டிருந்த வாச்சாத்தி மக்களில் ஒருவர் கூறினார், “இருபது ஆண்டுகள் காத்திருந்து விட்டோம் இரண்டு நாட்கள் காத்திருப்பதில் ஒன்றும் பிரச்சனையில்லை” இத்தனை ஆண்டுகள் கடந்து வந்தாலும் அனைவரையும் குற்றவாளிகள் என அறிவித்திருப்பதில் பலர் அமைதி கொள்ளலாம். ஆனால் இந்த … வாச்சாத்தியைக் குதறிய வெறிநாய்களை 19 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிப்போட உத்தரவு-ஐ படிப்பதைத் தொடரவும்.