இன்று தீபாவளித் திருநாளாம், வழக்கமான உற்சாகம் இல்லாமலும், வெடிச்சத்தம் குறைவாகவும் இருக்கிறது. இதற்கு சமூகம், பொருளாதரம் உள்ளிட்ட காரணங்கள் இருக்கலாம். போகட்டும். தீபாவளி கொண்டடலாமா? கூடாதா? தமிழ்நாட்டில் பெரியாரியவாதிகள் தொடங்கி இடதுசாரிகள் வரை தீபாவளி கொண்டாடுவதில்லை. காரணம் அது பொங்கலைப் போலன்றி இந்து மதத்தின் திருநாளாக இருப்பதால் தான். இந்து மதத்தின் திருநாட்கள் கொண்டாட்டத்துக்கு உரியவைகள் அல்ல. ஏனென்றால் இந்து மதம் என்பதே பார்ப்பன மேலாதிக்கத்தின் திணிப்பு. ஆகவே, அவை கொண்டாட்டத்திற்கு உரியவையல்ல. இதையும் மீறி தீபாவளியின் … தீபாவளியை என்ன செய்வது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: வரலாறு
அசோகர் இந்துவா? முஸ்லீமா?
பொன்னியின் செல்வன் என்றொரு திரைப்படம் வந்தாலும் வந்தது. ‘இ’னா ‘ஈ’யன்னா தெரியாவிட்டாலும் கூட இராஜராஜனைப் பற்றி பேசுவோம் என்று சமூக வலைதளங்களில் எழுதிக் குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். தஞ்சை பெரிய கோவிலில் இதுவரை இல்லாத அளவில் அன்றாட நாட்களில் கூட பெருங்கூட்டம் கூடுகிறதாம். வரலாற்றை அறிந்து கொள்வது குறித்த விருப்பம் தற்காலிகமாக சற்று கூடியிருக்கிறது என்பதைத் தவிர இந்த அலப்பல்களில் எந்தப் பயனும் இல்லை. ஆனால் எதையும் தன்னுடைய மேலாதிக்கத்துக்கு ஏற்ப திரிப்பதையே நோக்கமாகக் கொண்ட அதிகாரத்தில் … அசோகர் இந்துவா? முஸ்லீமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பறவை மீது சாவர்க்கர்
செய்தி: சாவர்க்கர் பற்றி கர்நாடக பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குறிப்புகளால் சர்ச்சை கிளம்பியுள்ளது. கர்நாடக மாநில 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சாவர்கர் பற்றி ஒரு குறிப்பு உள்ளது. அதில், சாவர்கர் அடைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு சாவித் துவாரம் கூட இல்லை. ஆனால், அங்கு புல்புல் பறவைகள் தினமும் வந்து செல்லும். அந்தப் பறவையில் மீதேறி அன்றாடம் தாய்நாட்டிற்கு சாவர்க்கர் வந்து செல்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளை சுட்டிக்காட்டி வரலாற்றில் இல்லாத ஒன்றை புனைவாக பாடப்புத்தகத்தில் கூறலாமா … பறவை மீது சாவர்க்கர்-ஐ படிப்பதைத் தொடரவும்.
வரலாற்றுப் போக்கில் தென்னக சமூகம்
பிற்காலச் சோழர்கள் என்று கூறியதும் தற்போது இணையப் பரப்பில் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வரும் ராஜராஜ சோழன் பார்ப்பனர்களை ஆதரித்தானா இல்லையா எனும் விவாதம் தான் நினைவில் வருகிறது. மறுபக்கம் பேராசான் மார்க்ஸ் முன்வைத்த ஆசியபாணி சொத்துடமை வடிவம் எனும் முடிவில் மாற்றங்கள் தேவையா என்பதும் முதன்மையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் ஆசியபாணி சொத்துடமை வடிவத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும், வரலாற்று ஆய்வாளர்கள் மாற்றுக் கருத்து கொண்டிருக்கிறார்கள். பேராசான் மார்க்ஸ் கூட இறுதியில் … வரலாற்றுப் போக்கில் தென்னக சமூகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
காணாமல் போன தேசங்கள்
இந்தியா குறித்து விரிவாக பேசத் தெரிந்த பலரும் - கம்யூனிஸ்டுகளும் கூட - உலக அளவில் எத்தனை நாடுகள் குறித்து தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று கேட்டால், அது கேள்விக்குறியாகவே முடியும். உலக அறிவு பெற்றவர்களும் கூட அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்சு என சில நாடுகளின் வரலாறுகளைத் தான் தெரிந்து வைத்திருப்பார்கள். அண்மைக் காலம் வரை நாடாக இருந்து பின்னர் பெயர் மாற்றம், உடைந்து போவது உள்ளிட்ட காரணங்களால் தற்போது இல்லாமல் போயிருக்கும் நாடுகள் குறித்து பெரும்பாலானோர் … காணாமல் போன தேசங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்து மதம் என்றால் என்ன?
இந்து என்று தங்களை நம்பிக் கொண்டிருக்கும் பலருக்கு தாங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் மதத்தின் வரலாறு தெரியாது. இஸ்லாமை போல், கிருஸ்துவத்தைப் போல் இந்து என்பதும் ஒரு மதம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறன்றி இந்து என்பது ஒரெ மதமே கிடையாது என்று விளக்குகிறார் தோழர் தியாகு. இந்து மதத்துக்கு ஏன் ஒற்றைக் கடவுள் இல்லை? என்பதில் தொடங்கி இந்து என்பது ஒரு மதமே கிடையாது என்பதை நிருவுகிறார். பாருங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. … இந்து மதம் என்றால் என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.
இஸ்லாம் : கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே.. .. ..
அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே, இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் கட்டுரைத் தொடரை 2008ல் தொடங்கினேன். மிகுந்த வரவேற்பையும், பெரும் விவாதங்களையும் கிளப்பிய தொடர் அது. பின்னர் அத்தொடர் சூழல் கருதி முடிக்கப்படாமல் இடையில் நிறுத்தப்பட்டது. அதை முழுமைப்படுத்தி நூலாக கொண்டுவர வேண்டும் எனும் ஆவல் தொடர்ந்து கொண்டே இருந்தாலும், இரண்டு காரணங்கள் அதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தன. இஸ்லாம் எனும் மதத்தை விமர்சித்து எழுதப்பட்ட இதை பிற மதவாதிகள் தங்களுடைய வெறுப்பு அரசியலுக்கு … இஸ்லாம் : கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே.. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.
தமிழகத்தில் ஆசீவகர்கள்
‘ஆசீவகம்’ தமிழ்ப் பரப்பின் சமூகவியல் ஆய்வாளர்கள் தற்போது அதிகம் உச்சரிக்கும் சொல் இதுவாகத் தான் இருக்கும். அந்த அளவுக்கு ஆசீவகம் குறித்த கவனம் கல்வியாளர்கள் இடையே பரவி வருகிறது. கிமு ஆறாம் நூற்றாண்டு தொடங்கி, கிபி பதினான்காம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் நிலவில் இருந்தது இந்த வாழ்வியல் நெறி. அதன் கோட்பாடுகளும், தத்துவ விளக்கங்களும், அறிவியல் பார்வையும் மெய்யாகவே ஈர்க்கும் படியாக இருகின்றன. ஆனாலும், ஆசீவகம் குறித்த தரவுகள் அதிகம் கிடிக்காததும், கிடைத்தவையும் கூட ஆசீவகத்துக்கு எதிராக … தமிழகத்தில் ஆசீவகர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
திருவள்ளுவர் யார்?
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தொடங்கி தமிழர்களின் அடையாளமாக, மாமன்னர்களாக காட்டப்படும் யாரும் திருவள்ளுவர் குறித்து எந்தக் குறிப்பையும் தரவில்லை. திருக்குறளை அறியச் செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதற்கு ஆங்கிலேயர்கள் வரவேண்டியிருந்தது. முதன்முதலில் சீகன் பால்கு பாதிரியார் தான் திருவள்ளுவரையும், திருக்குறளையும் பற்றிய குறிப்பைத் தந்திருக்கிறார். வீரமாமுனிவர் தான் திருக்குறளை முதன்முதலில் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். இதன் பின்னர் தான் தமிழறிஞர்கள் திருக்குறளைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அப்போதும் கூட திருவள்ளுவர் யார்? எந்த ஜாதியைச் சேர்ந்தவர் … திருவள்ளுவர் யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
திப்பு: விடுதலைப் போரின் முன்னோடி
எதிர்வரும் நவம்பர் 20ம் தேதி திப்புவின் பிறந்த நாள். திப்பு என்றாலே பார்ப்பனியத்துக்கு வேப்பங்காயாய் கசக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கர்நாடக மாநிலத்தில் அரசு தொலைக்காட்சியில் இராமாயணம் ஒளிபரப்பட்டுக் கொண்டிருந்த போது, திப்புவின் வரலாற்றுத் தொடரை ஒளிபரப்ப முன்வந்தது ஒரு தொலைகாட்சி நிறுவனம். அதற்கு எழுந்த எதிர்ப்புகள் காரணமாக, இது கற்பனைக் கதை எனும் முன்னொட்டுடன் திப்புவின் வரலாறு ஒளிபரப்பப்பட்டது. அதாவது, நடந்தது என்பதற்கு எந்தவித் சான்றும் இல்லாத, வெறும் புராணமான இராமாயணம் எந்த முன்னொட்டும் இல்லாமல் … திப்பு: விடுதலைப் போரின் முன்னோடி-ஐ படிப்பதைத் தொடரவும்.