மீளும் வரலாறு: அறியப்படாத நந்தன் கதை

நந்தன் யார்? என்றொரு கேள்வியை எழுப்பினால் தில்லை நடராஜர் கோவிலோடு இணைத்து ஒரு பெரிய கதை சொல்லப்படும். இந்தக் கதைக்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், அப்படி எதுவும் கிடைக்காது. சேக்கிழாரின் திருத் தொண்ட புராணத்திலிருந்து தொடங்குகிறது இங்கு வழங்கப்படும் நந்தனின் கதை. ஆனால் நந்தன் ஒரு மன்னன். அந்தனை மன்னனை சூழ்ச்சி செய்து கொன்ற வரலாறு, தமிழ்நாட்டில் பௌத்த சமண மதங்களின் அழிவினோடும், சைவ மத மேலோங்கலோடும் தொடர்புடையது. இதை விளக்குவது தான் இரவிகுமாரின் இந்த … மீளும் வரலாறு: அறியப்படாத நந்தன் கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழ் சங்கம் டு காவிச் சங்கம்

காவி கவ்வத் துடிக்கும் இன்றைய சூழலில் இந்த நூல் காவிகள் துரத்தியடிக்கப்பட்ட கதையை கூறுகிறது. ஆழமாக இல்லாமல் மேலோட்டமாக இருப்பது இந்நூலின் பெருங்குறை என்றாலும், ஒரு பருந்துப் பார்வையில் அந்த வரலாற்றை கூறுவதால், இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்வதற்கும், ஆழமாக பயணிக்க தூண்டுதலாக அமையலாம் என்பதாலும் இந்நூல் இங்கு பதிவு செய்யப்படுகிறது. இது ஆதனூர் சோழன் எழுதி நக்கீரன் இணையத்தில் தொடராக வெளிவந்தது. முன்னுரையிலிருந்து .. .. .. ஆரியர்களைப் போற்றி சொந்த் மக்களை வாட்டிய காலம் … தமிழ் சங்கம் டு காவிச் சங்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தீயது ஆரியமா? பிராமணியமா?

வால்கா முதல் கங்கை வரை நூலை அடிப்படையாகக் கொண்டு யோகேஷ் என்பவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பேராசிரியர் அ. கருணானந்தன் அவர்கள் அளித்துள்ள பதில்கள் குலுக்கை வலைக்காட்சியில் வெளியாகியுள்ளது. ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தும் வரலாற்று உரை. இதை வால்கா முதல் கங்கை வரை எனும் ராகுல சங்கிருத்தியாயனின் நூலுக்கான விமர்சனம் என்றும் கொள்ளலாம். தவறவிட்டு விடாதீர்கள். இதன் தொடர்ச்சியாக இன்னும் சில காணொளிப் பதிவுகளும் உள்ளன. அவைகளையும் சேர்த்துப் பாருங்கள். எழுப்பப்பட்ட கேள்விகள், 1. ஆரியர்களிடையே ஏற்றத்தாழ்வுகள், பிரிவுகள் … தீயது ஆரியமா? பிராமணியமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கோவில் நிலம் சாதி

பல்வேறு நாளிதழ்களுக்கு இடையில் ஒத்த செய்திகள் ஒரே மாதிரி இருக்கிறதா? ஒரு தொலைக்காட்சி சேனல் காட்டிய செய்தியை இன்னொரு சேனல் காட்டுகிறதா? கண்முன்னே நிகழும் செய்திகளிலேயே இத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன என்றால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு எப்படி இருந்திருக்கும்? நந்தன் வரலாறுஇடங்கை வலங்கை மோதல்கள்களப்பிரர்கள் யார்?பக்தி இலக்கியம் ஏன் தோன்றியது?தமிழ் வரலாற்று ஆய்வாளர்களின் கண்ணோட்டம் எப்படி?பழைய காலத்தில் நிர்வாக இயந்திரம் எப்படி இயங்கியது?நிர்வாகவியலில் கோவில்களின் பங்கு என்ன? இப்படி இதுவரை நாம் கொண்டிருந்த அத்தனை கருத்துகளிலும் … கோவில் நிலம் சாதி-ஐ படிப்பதைத் தொடரவும்.

முருகக் கடவுளை மதம் மாற்றியது யார்?

இந்தியாவின் கொடுங்கோன்மையாக இருக்கும் சாதிப் பிரிவுகளாகட்டும், அதன் வழியிலான தீண்டாமையாகட்டும், ஆணவக் கொலை உள்ளிட்டவைகளாகட்டும், அனைத்துக்கும் தொடக்கப் புள்ளியாய் இருப்பது தான் இந்து எனும் உணர்வு. இந்து என்பது ஒரு மதமல்ல, பிறமதங்களுக்கு இருப்பது போன்ற வரலாறு இந்து மதத்துக்கு கிடையாது. வரலாறு பார்த்தால் இந்து எனும் மதமே கிடையாது. இந்து எனும் மதத்தின் விழுமியங்களாக இன்று கருதப்படும் அனைத்துக்கும் நேர் எதிராக முன்னர் இருந்திருக்கிறது என்பது தான் வரலாறு கூறும் உண்மை. அதன் ஒரு பகுதி … முருகக் கடவுளை மதம் மாற்றியது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு?

ஆறாம் கட்டுரை : காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு? காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. மன்றத்துக்குக் கொண்டுபோய், அதனைச் சர்வதேசப் பிரச்சினையாக மாற்றியதுதான் நேருவின் சாதனை” என்பது பா.ஜ.க.வின் குற்றச்சாட்டு. பிரிவு 370-ஐ செயலற்றதாக்கியதன் மூலம் நேருவின் அச்சாதனையை” முறியடித்துவிட்டார் மோடி. காஷ்மீர் பிரச்சினை என்பது பாகிஸ்தானால் பயிற்றுவித்து அனுப்பப்படும் சில பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று இந்திய அரசு மிகவும் கஷ்டப்பட்டு ஊதி உப்பவைத்திருந்த பலூனைத் தனது தைரியமான நடவடிக்கையின் மூலம் ஒரே நொடியில் … காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல

ஐந்தாம் கட்டுரை : நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசமைப்புச் சட்டம் 370-வது பிரிவின் முக்கியக் கூறுகளை நீக்கி, அச்சட்டப்பிரிவைச் செயலற்றதாக்கிவிட்ட மோடி அரசின் நடவடிக்கையை ஆதரிக்கும் வலதுசாரிகள் அனைவரும், அச்சட்டப் பிரிவின் காரணமாகத்தான் காஷ்மீரில் தீவிரவாதம் வளர நேரிட்டதாகவும் ஏறத்தாழ 40,000 பேர் இறந்து போனதற்கும் அச்சட்டப் பிரிவுதான் காரணமென்றும்” வாதாடி வருகிறார்கள். காஷ்மீரின் ஒரு பகுதியை இந்தியாவுடன் இணைக்கும் … நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல-ஐ படிப்பதைத் தொடரவும்.

சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன்

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் கொள்கை அறிக்கையான புதிய காஷ்மீர் வெளியீட்டின் முகப்பு அட்டை. (கோப்புப் படம்) நான்காம் கட்டுரை : காஷ்மீர் நிலச் சீர்திருத்தம் : சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன் அதென்ன காஷ்மீருக்கு மட்டும் தனிச் சட்டம்? அவனுக்கு மட்டும் கொம்பா முளைத்திருக்கிறது?  இதுதான் சட்டப்பிரிவு 370 பற்றி ஒரு பாமரனின் பார்வை. காஷ்மீரில் வெளியாள் யாரும் சொத்து வாங்க முடியாதாம்” என்று பா.ஜ.க.வினர் பேசினால், சொந்த ஊரில் சென்ட் நிலம் வாங்க … சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம்

மூன்றாம் கட்டுரை : காஷ்மீரின் சிறப்புரிமை ரத்து : இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம் ஜம்மு காஷ்மீருக்குத் தனிச் சிறப்புரிமைகள் வழங்குவதாகக் கூறப்படும் அரசியல் சாசனப் பிரிவு 370- செயலற்றதாக்கியதன் மூலம், ஜம்மு காஷ்மீருக்கென பெயரளவில் இருந்துவந்த தனிக் கொடி, தனி அரசியல் சாசனச் சட்டம், கிரிமினல் சட்டங்கள் அனைத்தும் ரத்தாகிவிட்டன. இனி, இந்திய அரசமைப்புச் சட்டம் மட்டுமின்றி, மைய அரசின் சட்டங்கள், திட்டங்கள் அனைத்தும் எவ்வித மாறுதலும் இன்றியும், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிய … இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா

இன்றைய தேதியில் அத்தி வரதரைப் பற்றி தெரியாமல் யாருமே இருக்க முடியாது. அப்படி யாரேனும் இருந்து விடக் கூடாது என்று தான் ஊடகங்களும் அரசும் நடந்து கொள்கின்றன. இன்று எத்தனை லட்சம் பேர் பார்க்க வந்தார்கள் என்பது தொடங்கி, என்ன நிறத்தில் பட்டு உடுத்தினார் என்பது வரை (அத்தி வரதர் ஆணா பெண்ணா? ஆணென்றால் ஏன் பட்டுச் சேலை உடுத்துகிறார்?) அனைத்தும் செய்திகளாக மக்களின் மண்டைக்குள் திணிக்கப்படுகின்றன. உயிருள்ள மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது பார்த்து ஆறுதல் கூற, … அத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா-ஐ படிப்பதைத் தொடரவும்.