முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை

உலகு தழுவிய அளவில் சத்தான உணவு கிடைக்காமல், அரைகுறை பட்டினியால் உடல் மெலிவுற்று, வயதுக்கு ஏற்ற வளர்ச்சியும், உயரத்துக்கு ஏற்ற எடையும் இன்றி நோஞ்சான்களாக உயிர் வாழும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், அன்றாடம் ஊட்டமான உணவு கிடைக்காமல் வெந்ததைத் தின்று உயிர் வாழும் மக்களைக் கொண்ட நாடுகள் அடங்கிய தரவரிசைப் பட்டியல் உலகப் பட்டினிக் குறியீடு 2020 எனும் பெயரில் வெளியாகி இருக்கிறது. வழமை போலவே இந்தியா இந்தப் பட்டியலில் பிந்தங்கி இருப்பதோடு - 107 … முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை-ஐ படிப்பதைத் தொடரவும்.

வறுமை சூழுது… ஜாக்கிரதை!

மக்கள் என்ன தேவையைக் குறைத்தாலும் குறைக்க முடியாத தேவை உணவுத் தேவை என்று சொல்லப்படுவது உண்டு. அதேசமயம், சமூகத்தில் என்ன மாற்றம் நடந்தாலும் அது உடனடியாகப் பிரதிபலிப்பதும் உணவுச் சந்தையில்தான். உணவுப் பொருட்கள் விற்பனை எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டின் செல்வந்த நகரமான கோவை வியாபாரிகளிடம் பேசினேன். சையது - ஜாகீர் உசேன் சகோதரர்கள், அரிசி வணிகர்கள். ஊரடங்கு வரப்போகுதுன்னு தெரிஞ்சதும் மக்கள் கூட்டம் அலைமோதியதை வெச்சு, அரிசி யாவாரிங்க காட்ல அடைமழைதான்னு சொன்னாங்க. ஆரம்பத்துல அப்படித்தான் இருந்துச்சு. … வறுமை சூழுது… ஜாக்கிரதை!-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘உணர்வு’ கும்பலின் தரம் பொய்களும், அறியாமையும் தான்

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 7 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் எட்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  8.1, 8.2 ‘உணர்வு’ தன்னுடைய தொடரின் ஏழாம் பகுதியின் முடிவிலும், எட்டாம் பகுதியின் தொடக்கத்திலும் ‘இஸ்லாம் எனும் நேரான மார்க்கத்தை[!] மக்களுக்கு எடுத்துச் சொன்னபோது முகம்மது நபி பட்ட துன்ப துயரங்களை’ எடுத்து இயம்பியிருக்கிறது. 1. முகம்மது வாழ்ந்த காலத்தில் அந்த மக்கள் காட்டுமிராண்டி நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். 2. முகம்மதின் கொள்கைகளை … ‘உணர்வு’ கும்பலின் தரம் பொய்களும், அறியாமையும் தான்-ஐ படிப்பதைத் தொடரவும்.

எல்லோரும் ஜோரா கை தட்டுங்கள்: 2023 ல் ஏழைகளே இருக்க மாட்டார்களாம்

இந்தியாவில் அரசவைக் கோமாளி என்று ஒருவர் இருந்தார். போகுமிடமெல்லாம் தூங்குங்கள் கனவு காணுங்கள் என்று கூவிக் கொண்டிருப்பது தான் அவர் வேலை. மார்டின் லூதர் கனவு கண்டார்,விகடர் ஹியூகோ கனவு கண்டார் என்று கூறிக் கொண்டு தமிழ் நாட்டிலும் ஒருவர் தான் கனவு கண்டதாய் தொலைநோக்கு திட்டம் 2023 என்று அறிவித்திருக்கிறார். அதாவது ஆசிய வளர்ச்சி வங்கி போட்டுக் கொடுத்த திட்டத்திற்கு வாயசைத்திருக்கிறார்.   கிராமப் பகுதிகளில் கதை ஒன்று கூறுவார்கள். களத்து மேட்டில் அப்பாவும் மகனும் … எல்லோரும் ஜோரா கை தட்டுங்கள்: 2023 ல் ஏழைகளே இருக்க மாட்டார்களாம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அமெரிக்கா ஆஸ்திரேலியா செல்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களா?

சில மாதங்களுக்கு முன்னால் இந்தியாவின் ஒட்டுமொத்த ஊடகங்களும் ஆஸ்திரேலியாவை நோக்கி திரும்பியிருந்தன. சில மாணவர்கள் தாக்கப்பட்டதை அனைத்து ஊடகங்களும் திறமையாக மொழிபெயர்த்து இந்தியாவின் பொது வேதனையாக மக்களை உணரச் செய்திருந்தன. அமெரிக்க இந்தியர்களின் வரதட்சனைக் கொடுமைகளும், கண்ணீரும் கூட இந்தியாவில் உழலும் மக்களின் இதயத்தில் ஊடுறுவி நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் இதுபோன்றே எதிர்வினைகளையும் ஆதரவையும் கோரும் வேறுசில செய்திகளோ எவ்வித கேள்விகளையும் நம்முள் எழுப்பாது கடந்துவிடுகின்றன. ஊடகங்கள் இவற்றை முதன்மைப்படுத்துவதில்லை, ஒரு மூலைச் செய்தியாக கடந்துவிடுகின்றன. தம் … அமெரிக்கா ஆஸ்திரேலியா செல்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

சுதந்திரம் என்றொரு கற்பிதம்

இன்று 64 ஆம் சுதந்திர தினமாம். உள்ளீடற்று சடங்காய் பின்பற்றப்படும் பண்டிகை போல் ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 வந்துவிட்டால் சுதந்திரமும் நினைவுக்கு வந்துவிடுகிறது. சில நாட்களுக்கு முன்பிருந்தே ஊடகங்கள் கொண்டாட்டங்கள் பற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் நீட்டி முழக்கி வருகின்றன. சென்னையை மட்டும் 5000 காவலர்கள் பாதுகாக்கப் போகிறார்களாம். கண்காணிப்பு கேமராக்கள் ஆயுதப் படை உள்ளிட்ட கெடுபிடிகளுக்கு மத்தியில் கொண்டாடப்படப்போகும் விழாவின் பெயர் சுதந்திர தின விழா. முரண்தொடைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இது. சுதந்திரம் என்றால் என்ன? … சுதந்திரம் என்றொரு கற்பிதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.