போராடுவோருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?

விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் என்ன நடந்தது? இது பற்றி  இன்று வெவ்வேறு நாளிதழ்களும் வெளியிட்டிருக்கும் தலைப்புகள், உண்மையில் நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களைப் பிரதிபலிப்பனவாக இல்லை. காலிஸ்தானி, மாவோயிஸ்டு, காங்கிரஸ், பாக்-சீனா தூண்டுதல்… என்று சங்கிகள் செய்த எந்த அவதூறும் எடுபடாத நிலையில், அவர்கள்  உச்ச நீதிமன்றத்தைச் சரண் புகுந்திருக்கிறார்கள். National Capital Territory ஐச் சேர்ந்த 20 லட்சம் குடிமக்கள், குறிப்பாக நொய்டா – குர்கான் பகுதிகளைச் சேர்ந்த மிடில் … போராடுவோருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்

கருப்பர் கூட்டம் எனும் யூடியூப் வலைக்காட்சியில், முன்னர் வெளியிடப்பட்டிருந்த கந்த சஷ்டி கவசத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை எடுத்துக் கொண்டு குதித்துக் கொண்டிருக்கிறது சங்கிகள் கூட்டம். காவல்துறையிடம் முறையீடு அளிக்கப்பட்டு அந்த வலைக்காட்சியின் பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது சங்கிகளே நமக்கு தங்கக் காம்பளத்தில் வைத்து அளித்திருக்கும் வாய்ப்பு. முற்போக்கு அமைப்புகள் அனைத்தும் இந்த வழக்கில் இணைந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழி பெயர்ப்பு ஆபாசம் என்றால், அதற்காக அந்த வலைக்காட்ட்சி தடை செய்யப்படலாம் என்றால், அதற்காக … இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஏன் அவர்களால் பதில் கூற முடியவில்லை?

கடந்த 6ம் தேதி நீதிமன்ற அடக்குமுறைக்கு எதிராக வழக்குறைஞர்கள் பேரணி சென்னையில் வெற்றிகரமாக நடந்தது.  ஊழலுக்கு எதிரான வழக்குறைஞர்களின் பேரணி, ஹெல்மெட் பிரச்சனை, விசாரணை என்ற பெயரில் மூத்த வழக்குறைஞர்களுக்கு அவமரியாதை. இந்த விசயத்தில் எந்த சட்ட, நீதிமன்ற மரபுகளும் பின்பற்றப்படாதது, எல்லாவற்றையும் விட, எட்டு மாதங்களுக்கும் மேலாக 43 வழக்குறைஞர்கள் வழக்குகளை நடத்த விடாமல் தடுக்கப்பட்டிருப்பது என, பல மாதங்களாக வழக்குறைஞர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் விவாதங்களுக்கு உள்ளாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தின் … ஏன் அவர்களால் பதில் கூற முடியவில்லை?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மக்களின் சமாதியே நீதிமன்றங்கள்

மண்சோறு, தீமிதி, அலகு குத்தல் காட்சிகள் எவ்வளவு ஆபாசமாக இருந்ததோ, அதைவிட பலமடங்கு ஆபாசமாக இருக்கிறது இன்றைய ஜெயா விடுதலைக்கு பின்னான நீதி வென்றது என்பன போன்ற அலட்டல்கள். இது போன்றே முடிச்சுகள் அவிழ்ந்து விட்டனவா? வாங்கப்பட்ட தீர்ப்பு, கருப்பு நாள் போன்றவையும் ஆபாசமாகவே தெரிகின்றன. இன்று மகிழ்ச்சியில் கூத்தாடும், அல்லது கூத்தாடுவது போல் நடித்துக் கொண்டிருக்கும் அனைவருக்குமே தெரியும் ஜெயா ஊழல் குற்றவாளிதான் என்பது. ஜெயா கும்பலும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறது. பதினெட்டு ஆண்டுகளாக வழக்கை … மக்களின் சமாதியே நீதிமன்றங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

வாச்சாத்தியைக் குதறிய வெறிநாய்களை 19 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிப்போட உத்தரவு

மறந்து போய்விட்ட வாச்சாத்தி வழக்கு கடந்த சில நாட்களாக மீண்டும் வலம் வரத் தொடங்கியிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டிருக்க வேண்டிய தீர்ப்பு குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் வரவில்லை என்பதால் மேலும் இரண்டு நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது.  தீர்ப்பை கேட்கத் திரண்டிருந்த வாச்சாத்தி மக்களில் ஒருவர் கூறினார், “இருபது ஆண்டுகள் காத்திருந்து விட்டோம் இரண்டு நாட்கள் காத்திருப்பதில் ஒன்றும் பிரச்சனையில்லை” இத்தனை ஆண்டுகள் கடந்து வந்தாலும் அனைவரையும் குற்றவாளிகள் என அறிவித்திருப்பதில் பலர் அமைதி கொள்ளலாம். ஆனால் இந்த … வாச்சாத்தியைக் குதறிய வெறிநாய்களை 19 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிப்போட உத்தரவு-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாபர் மசூதி இடிப்பும் டிசம்பர் ஆறும்

கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் ஆறு என்றதும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்பதாக நினைவுக்கு வரும். 1992 க்கும் 2010 க்கும் இடைப்பட்ட எல்லா டிசம்பர் ஆறிலும் இந்த உணர்வு முஸ்லீம்களை போராட்டத்தின்பால் திரட்டியிருக்கிறது. ஆனால் அகமதாபாத் கட்டப்பஞ்சாயத்திற்குப் பிறகான இந்த முதல் டிசம்பர் ஆறில் ஒரு வெறுமை சூழ்ந்திருக்கிறது. சில அமைப்புகள் போராட்டம் வேண்டாம் என முடிவு செய்திருக்கின்றன. சில அமைப்புகள் போராட்ட நாளை மாற்றியிருக்கின்றன. சில அமைப்புகள் சுரத்தின்றி போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றன. … பாபர் மசூதி இடிப்பும் டிசம்பர் ஆறும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

உமாசங்கருக்கு ஆதரவாக… அரசுக்கு எதிராக…..

தருமி ஐயா தொடங்கி வால் பையன் ஊடாக இந்திய ஆட்சிப்பணி அதிகாரி உமா சங்கருக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து எழுதப்படும் கண்டன இடுகைகள் அதிகரித்து வருகின்றன. ஒரே நாளின் ஒரே பதிவில் எதிர்ப்பைத் தெரிவிப்பது எனும் யோசனை நன்றாக தெரிந்ததனால் செவ்வாய் இரவுவரை காத்திருந்தேன், தருமி ஐயாவோ, வால்பையனோ எந்த பதிவையும் பரிந்துரைத்ததாக தெரியவில்லை. இன்று காலை தருமி ஐயா இட்ட நான்கு வரி பதிவு தேவையான சீற்றத்துடன் இல்லாமல் மென்மையாக இருப்பதாக படுகிறது. … உமாசங்கருக்கு ஆதரவாக… அரசுக்கு எதிராக…..-ஐ படிப்பதைத் தொடரவும்.