செய்தி: கடந்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் வாங்கி விட்டு திரும்பச் செலுத்தாத கடன்களின் தொகை 2,40,000 கோடியை தாண்டி இருக்கிறது. 2012ல் 23,000 கோடியாக இருந்த வாராக்கடன் தொகை 2022ல் 2,40,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றியவர்கள் 36 பேர். இந்த 36 பேரில் பெரும்பாலானோர் இன்று இந்தியாவில் இல்லை. டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி செய்தியின் பின்னே: இந்த 2,40,000 கோடி என்பது நேரடியாக இந்தியாவின் கொடூரங்களோடு, இந்தியாவின் … ஊழல் செய்யாத உத்தமக் கட்சி பாஜக-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: வாராக்கடன்
லட்சுமி விலாஸ் அரிசியும், டிபிஎஸ் உமியும்
லட்சுமி விலாஸ் வங்கியின் சிக்கல் தனிப்பட்ட ஒன்றல்ல, எல்லா வங்கிகளும் வாராக்கடன் பிரச்சையில் சிக்கித் தவிப்பது போலவே லட்சுமி விலாஸ் வங்கியும் வாராக்கடன் சிக்கலில் சிக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் வாராக்கடனின் எல்லை உச்சத்தை தொட்டிருக்கிறது. இந்த வாரக்கடன்களுக்கும் சேமவங்கியின் கொள்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூற முடியுமா? எனவே, இந்த விதயத்தில், லட்சுமி விலாஸ் வங்கி தனிப்பட்ட முறையில் செய்த தவறுகளை சேமவங்கி தலையிட்டு சரி செய்ய முயல்கிறது எனும் புரிதலே பிழையானது.
500, 1000: இனி செய்ய வேண்டியது என்ன?
மக்களின் வாழ்வு தலைகுப்புற புரட்டிப் போட்டது போலிருக்கிறது. எதிர்ப்படும் அனைத்து முகங்களிலும் ஏனைய அனைத்து உணர்ச்சிக் குறிகளையும் விட என்ன செய்வது எனும் கவலையே மேலோங்கித் தெரிகிறது. ரூபாய்தாள்கள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு எல்லாம் முடங்கிக் கிடக்கிறது. மக்களின் அவலங்கள் அன்றாடச் செய்திகளாய் சுருங்கி, கடந்து போய்க் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இன்று என்ன அறிவிப்பு புதிதாய் வரப்போகிறது? அதைக் கொண்டு எப்படி தங்களின் அடிவருடித்தனத்தை புதுப்பித்துக் கொள்வது என்று ஊடகங்கள் அலைகின்றன. பொதுவாக ஊடகங்களும் … 500, 1000: இனி செய்ய வேண்டியது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.