அரசியல் வெற்றிடம் என்றொரு சொற்றொடர் தமிழக அரசியலில் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. யதார்த்தத்தில் அப்படி ஒரு வெற்றிடம் இருக்கிறதா? என்பது ஒருபக்கம் இருக்கட்டும். தமிழக இஸ்லாமியர்களிடம் ஓர் அரசியல் வெற்றிடம் நீண்ட காலமாகவே நிரப்பப்படாமல் இருக்கிறது. அதேநேரம் தமிழக இஸ்லாமியப் பரப்பில் வஹ்ஹாபிய இயக்கங்கள் செல்வாக்குடன் இருக்கின்றன. அதில் முதன்மையான ஒன்றாக இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பில் தற்போது நடந்து கொண்டிருக்கும் குழப்பங்கள், தமிழ்நாட்டில் வஹ்ஹாபிய இயக்கங்கள் தங்களின் கடைசி மூச்சில் … அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: வாழ்க்கை
பாதமில்லாமல் வாழ்வதை விட போராடி இறப்பதே மேல்
விவிலியத்தில் ஒரு கதை உண்டு. ஒரு மன்னன் குடிமக்கள் அனைவரும் தனக்கு பணிந்து, தனக்கு அடிமையாக, தினமும் தன் பாதத்தை பூஜித்து வந்தால் மட்டுமே வாழ அனுமதிப்பேன். இல்லாவிட்டால் அவர்கள் பாதங்களைத் தறித்து விடுவேன் என்று சட்டமிட்டு; மீறுபவர்களின் பாதங்களை துண்டித்து நடக்க முடியாமல், வாழவிடாமல் அவர்களை சாகடித்தான். அப்போது மானமும் அறிவும் கொண்ட மக்கள் போராடி இறந்தனர். இன்றைய சமூக சூழல் தன்னுடைய ஆணாதிக்கத் திமிரினால் அந்த மன்னனைப் போல் தனக்கு அடிபணிந்து வாழுங்கள் … பாதமில்லாமல் வாழ்வதை விட போராடி இறப்பதே மேல்-ஐ படிப்பதைத் தொடரவும்.
விடியவில்லையா? விடிவே இல்லையா?
”நள்ளிரவில் வாங்கினோம் இன்னும் விடியவில்லை” என்றொரு பழங்கவிதை உலவுவதுண்டு. எதிர்மறையில் ஏற்கும் ஏக்கம் அது. கருப்புக் கொடி நாட்டி கருப்பு நாள் என்றறிவித்து எதிர்ப்பை பதிவு செய்யும் எதிர்வினைகளும் இங்குண்டு. எதிர்ப்பின் மூலமே இருப்பதாய் கட்டிக் கொள்ளும் பொருளும் வந்து விடுகிறது அதில். விடியவில்லை எனும் ஏக்கத்துக்கும் கருப்புதினம் எனும் துக்கத்துக்கும் எதிராய், விடுதலை எனும் சொல்லின் வீச்சு இந்த சுதந்திர நாளில்(!) எங்கேனும் ஒட்டியிருக்கிறதா? எனும் கேள்வியே மாற்று. சட்டையில் மூன்றுநிறக் … விடியவில்லையா? விடிவே இல்லையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
Quest For Fire: பழங்கால மனிதனின் வாழ்வை அறிந்து கொள்ள
மனிதன் கண்டுபிடித்த முதல் அறிவியல் கருவி நெருப்பை உண்டாக்குவது. நெருப்பு என்பது இன்றைய காலத்தில் மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால் பண்டைய காலத்தில் ……? நெருப்பு என்பது ஆயுதம், நெருப்பு என்பது ஆற்றல், நெருப்பு என்பது பாதுகாப்பு, நெருப்பு என்பது முன்னேற்றம், நெருப்பு என்பது வல்லமை, நெருப்பு என்பது வாழ்வு. இன்று கருவிகள் இல்லாமல் ஒரு நொடியும் இல்லை என்ற நிலையிலிருக்கும் மனிதன், தொடக்க கால மனிதர்கள் நெருப்போடு கொண்டிருந்த உறவை முழுமையாக அறிந்து கொள்ள முடியுமா? … Quest For Fire: பழங்கால மனிதனின் வாழ்வை அறிந்து கொள்ள-ஐ படிப்பதைத் தொடரவும்.
மட்டக் குதிரை…!
வானத்தில் ஓட்டை விழுந்து விட்டதைப் போல் தொடர்ந்து மழை கொட்டிக் கொண்டிருந்து. மிகவும் அடர்த்தியாகவும் நெருக்கமாகவும். ஒவ்வொரு துளியும் ஒரு புளியாங்கொட்டை அளவுக்குப் பருத்திருந்தது. சாலையில் கணுக்கால் அளவுக்குத் தண்ணீர் நிரந்திருந்தது. அவன் மிகவும் சோர்ந்திருந்தான். அன்னாந்து வானத்தைப் பார்த்தான். இரவின் அடர்த்தியில் மறைந்து போயிருந்த வானத்திலிருந்து கலங்கலான நிறத்தில் மழை நீர் இறங்கிக் கொண்டிருந்தது. “சனியன்…” மழையைச் சபித்தான். நீண்ட நேரமாக பைக்கைத் தள்ளி வந்ததில் லேசாக முதுகு வலித்தது. தொடர்ந்து தண்ணீரில் நடந்து … மட்டக் குதிரை…!-ஐ படிப்பதைத் தொடரவும்.