எழுவர் விடுதலை: குரலை மாற்றுங்கள்

பேரறிவாளன், சிறையிலிருந்து சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு 30 நாட்களுக்கு விடுவிப்பு செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு அற்புதம்மாள் முதல்வருக்கு நன்றி சொல்லியிருக்கிறார். அவ்வப்போது பரபரப்பாக விவாதிக்கப்படும் எழுவர் விடுதலை என்பது பல முறை பேரறிவாளனின் விடுவிப்போடு முடிந்து போயிருக்கிறது. மட்டுமல்லாமல், எப்போதெல்லாம் எழுவர் விடுதலை பேசப்படுகிறதோ அப்போதெல்லாம் ஈழ அரசியலும் தவிர்க்க முடியாமல் மேலெழுகிறது. அதிலும் தற்போது திமுக, திக, நாம் தமிழர் கட்சி என ஒரு தனிச் சுற்று ஓடிக் கொண்டிருக்கிறது. அவைகளை விலக்கி எழுவர் விடுதலை குறித்து … எழுவர் விடுதலை: குரலை மாற்றுங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய ஆக்கிரமிப்பின் கரங்கள்

இலங்கைப் பிரச்சனை அல்லது தமீழீழப் பிரச்சனை அல்லது விடுதலைப் புலிகள் பிரச்சனை என்பதை அதற்காக போராடும் அமைப்புகளும், மக்களும் - இலங்கையில் இருக்கும் அமைப்புகளானாலும் தமிழகத்தில் இருக்கும் அமைப்புகளானாலும் - எப்படிப் பார்க்கிறார்கள் என்பது முதன்மையான விசயம். இராஜீவ் காந்திக்கு முன் இராஜீவ் காந்திக்குப் பின் என்று பிரித்துப் பார்ப்பவர்கள் உண்டு. அவர்களைப் பொருத்தவரையில் இராஜீவ் கொலை நடந்திராவிட்டால் .. .. .. என்றொரு கற்பனாவாதமே அனைத்திற்குமான மையப் புள்ளி. இலங்கையில் சீனா ஊடுருவிக் கொண்டிருக்கிறது. இந்தியா … இந்திய ஆக்கிரமிப்பின் கரங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

எழுவர் விடுதலை: சிக்கலும் விடுதலையும் ஒன்றே

ராஜிவ் கொலைக் குற்றவாளிகள்(!) எழுவரின் விடுதலை நீதி மன்றத் தீர்ப்பாலும், ஜெயாவின் அறிவிப்பாலும் மீண்டும் பற்றி எறிந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ், பிஜேபி விடுதலைக்கு எதிராகவும், திமுக சற்றே அடக்கி வாசித்தும், அதிமுக, தமிழினவாதிகள் விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் திமுகவை, கருணாநிதியை திட்டுவது தான் தமிழினவாதிகளின் ஈழ ஆதரவாளர்களின் தொல்காப்பியமாக ஆகியிருக்கிறது. அந்த அடிப்படையில் எழுவர் விடுதலை குறித்த குரல்கள், மெய்யாக அவர்களின் விடுதலை எனும் எல்லையை கடந்து, அதிமுக அமைச்சர்களே (அமைச்சர்கள் என்பது … எழுவர் விடுதலை: சிக்கலும் விடுதலையும் ஒன்றே-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்

  அண்மையில் ஆனந்த விகடன் இதழில் “ஒரு பெண் போராளியின் மனக் குமுறல்” என்ற தலைப்பில் ஒரு பெண் புலியின் செவ்வி வெளியாகியிருந்தது. பரவலாக கவனத்தை ஈர்த்த, அதிர்வலைகளை ஏற்படுத்திய கட்டுரையாக அது இருந்தது. அந்த செவ்வியின் மெய்த்தன்மையில் எனக்கு ஐயம் உண்டு. அது புனைவாகக் கூட இருக்கலாம். அதன் நோக்கம் பரிதாபம் காட்டுவது எனும் போர்வையிலான கேவலப்படுத்தலாகக் கூட இருக்கலாம். ஏனென்றால், உயிருடன் கைது செய்யப்பட்ட ஈழப் புலிப் போராளிகள் கைக்கூலிகளாக செயல்பட ஒப்புக் கொண்ட … ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாவீரர் நாள் எனும் சடங்கு

நவம்பர் மாத இறுதியில் ஒருவார காலத்திற்கு போரில் மடிந்த வீரர்களை நினைவுகூறும் பொருட்டு மாவீரர் நாள் கொண்டாட்டங்களை 1989 லிருந்து நடத்தி வருகிறார்கள் விடுதலைப் புலிகள். இதன் இறுதி நாளன்று புலிகள் தலைவர் பிரபாகரன் உரை நிகழ்த்துவார். ஆனால் இலங்கை அரசு நடத்திய இன அழிப்புப் போரில் விடுதலைப்புலிகள் அமைப்பு நிர்மூலமாக்கப் பட்டதுடன் தலைமைப் பொருப்பில் இருந்தவர்களையும் அது நரவேட்டையாடியது. இதனால் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பிரபகரனோ வேறு புலித்தலைவர்களோ உரையேதும் நிகழ்த்தவில்லை. ஆனால் இந்த … மாவீரர் நாள் எனும் சடங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.

இனப்படுகொலையின் பின்னான ஒராண்டு

இலங்கைத்தமிழர்களின் போராட்டம் பேரவலமான கடைசிக்கட்ட இனப்படுகொலையின் மூலம் முடக்கப்பட்டதன் பிறகான இந்த ஓராண்டில், இடைத்தங்கல் முகாம்கள் எனும் பெயரிலான முட்கம்பி சிறைகளின் பின்னே எந்த வசதியுமற்று தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலை மாறாதிருக்கையில்; பயங்கரவாதிகளை வென்றுவிட்டோம் என இலங்கை அரசும், பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாததால் அமெரிக்கர்கள் இனி இலங்கைக்கு பயமின்றி செல்லலாம் என அமெரிக்கா அதையே அங்கீகரித்திருப்பதும் இலங்கை வளர்ச்சியை நோக்கி முகம்திருப்பியதைப்போல் சித்தரிக்கின்றன. நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் இன்னும் மூன்று மாதங்களில் மீள் குடியேற்றம் நிறைவடைந்துவிடுமென்றும் அரசு அறிக்கை … இனப்படுகொலையின் பின்னான ஒராண்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.