நாங்கள் கேட்கும் விடுதலை என்ன?- தந்தை பெரியார் "100க்கு 97 பேராயுள்ள மக்களைக் கீழ் ஜாதி என்று கூறி அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் கட்டிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதுதான் நமது சமதர்மக் கொள்கையும் முதல் விடுதலையுமாகும். நம் நாட்டில் தங்கம், செம்பு, பித்தளை, துணி முதலிய வியாபாரங்களிலும் வட்டிக்கடையிலும் வியாபாரத்தின் எல்லாத் துறைகளிலும் மார்வாரி, குஜராத்திகள், பனியாக்கள் இவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொள்ளை லாபம் பெற்று நம்நாட்டுப் பணத்தை சுரண்டிக் கொண்டு போகிறார்களா இல்லையா? இதைத்தானே வெள்ளையன் … நாங்கள் கேட்கும் விடுதலை என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: விடுதலை
மார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது
உலகம் முழுவதும் மார்ச் 8 ம் நாள் உழைக்கும் பெண்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதிலும் இது போல் பல நாட்கள் பல்வேறு சிறப்புகளாக கூறப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு நாளாக கடந்து போக முடியாத நாள் இது. இன்றில் கொண்டாடப்படுவது போல் கோலப் போட்டியாகவோ, பூனை நடை அழகிப் போட்டியாகவோ, சமையல் போட்டியாகவோ, பெண்களுக்கு மட்டும் என்று அரங்குக்குள் ஆட்டம், பாட்டு என கேளிக்கை கொண்டாட்டமாகவோ முடித்துவிட முடியாத, முடித்து விடக் … மார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது-ஐ படிப்பதைத் தொடரவும்.
பகத் சிங்: அந்த வீரன் இன்னும் சாகவில்லை
அந்த சிறுவன் நடந்து வருகிறான். சுற்றிலும் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. அந்த சூழலின் அழுத்தத்தை தாங்கும் வயதோ அல்லது உடல் பலமோ கொண்டவனாக அந்தச் சிறுவன் இல்லை. ஆயினும் அந்த சிறுவன் நடந்தான். அவனது கண்களில் குளமாய் தேங்கிய துக்க முத்துக்கள் சிதறி விழுகின்றன. சிதறிய முத்துக்கள் உள்ளக் கொதிப்பின் வெம்மையை படர விடுகின்றன. அதில், தோல்கள் கருகுகின்றனவோ என்று அய்யுறும் அளவு, ஆற்றாமையின் துயரம் அவனது முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது.கரி மருந்தின் நாற்றமும், புதிய ரத்தத்தின் … பகத் சிங்: அந்த வீரன் இன்னும் சாகவில்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.
போலி சுதந்திரத்திற்கு எதற்கு கொண்டாட்டம்?
நூறு விளக்கங்கள் தரவேண்டிய புரிதலை இந்த ஒற்றைப் படம் தந்து விடுகிறது.
ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்
அண்மையில் ஆனந்த விகடன் இதழில் “ஒரு பெண் போராளியின் மனக் குமுறல்” என்ற தலைப்பில் ஒரு பெண் புலியின் செவ்வி வெளியாகியிருந்தது. பரவலாக கவனத்தை ஈர்த்த, அதிர்வலைகளை ஏற்படுத்திய கட்டுரையாக அது இருந்தது. அந்த செவ்வியின் மெய்த்தன்மையில் எனக்கு ஐயம் உண்டு. அது புனைவாகக் கூட இருக்கலாம். அதன் நோக்கம் பரிதாபம் காட்டுவது எனும் போர்வையிலான கேவலப்படுத்தலாகக் கூட இருக்கலாம். ஏனென்றால், உயிருடன் கைது செய்யப்பட்ட ஈழப் புலிப் போராளிகள் கைக்கூலிகளாக செயல்பட ஒப்புக் கொண்ட … ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
விடுதலைப் போரின் விடிவெள்ளி தோழர் பகத்சிங்கின் பிறந்த நாள் இன்று
மாவீரன் பகத்சிங் பிறந்த தினத்தில் உங்களை போராட அழைக்கிறது இந்த கட்டுரை…. 18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு, நிசாம்; மருது, தொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் … விடுதலைப் போரின் விடிவெள்ளி தோழர் பகத்சிங்கின் பிறந்த நாள் இன்று-ஐ படிப்பதைத் தொடரவும்.
சுதந்திரம் என்றால் என்ன? குச்சி மிட்டாய்
ஆகஸ்ட் 15. இன்று சுதந்திர தினாமாம். அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாளாம். இன்று கொண்டாட்ட தினம். இன்றைய இந்த கொண்டாட்டத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை விட்டு விடுவோம். ஏனென்றால் அது நமீதாக்களின் பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்ட உச்சரிப்புகளுக்கு சிக்கெடுப்பது போன்றது. எனவே, ஏன் கொண்டாடுகிறார்கள் என்று கேட்போம். 1947ல் நடந்தது விடுதலையல்ல, ஆட்சி மாற்றம் மட்டுமே. இங்கிலாந்து வெள்ளை அரசின் நேரடி காலனி நாடாக வைத்து இந்தியாவை சுரண்டிக் கொண்டிருந்த வெள்ளையர்கள், மக்களின் எழுச்சியும் கிளர்ச்சியும் … சுதந்திரம் என்றால் என்ன? குச்சி மிட்டாய்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பொன்னர் சங்கர் யாருக்காக?
அண்ணன்மார் கதை; சின்னண்ணன், பெரியண்னன் கதை என்றெல்லாம் அழைக்கப்படும் பொன்னர் சங்கர் கதை தமிழகத்தின் மேற்கு பகுதிகளான கோவை ஈரோடு நாமக்கல் கரூர் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம்,ஆகிய பகுதிகளில் குறிப்பாக வெள்ளாளக் கவுண்டர்கள் பெரும்பான்மையாக வாழும் இப்பகுதிகளில் நாட்டார் கதையாகவும், நோம்பி காலங்களில் கிராமங்களில் போடும் தெருக்கூத்துக்களாகவும், நாடகங்களாகவும் இருக்கிறது. இப்படி ஒரு வரலாற்று பாரம்பரியமான அண்ணன்மார் கதை பொன்னர் சங்கர் கதையாக கருணாநிதியால் கூர்மைப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, கருணாநிதியின் அண்ணன்மார் கதையை தியாகராஜன் இயக்கி பிரசாந்த் … பொன்னர் சங்கர் யாருக்காக?-ஐ படிப்பதைத் தொடரவும்.
அஸ்திவார கல்லுக்குள்ள முக்கியத்துவம் வைரக் கல்லுக்கில்லை – பகத் சிங்
23/03/1931- பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தோழர்கள் தூக்கிலிடப்பட்ட நாள் - அவர்களின் நினைவாக! "முதலிலிருந்தே ஜெயதேவ் என்னைக் காட்டிலும் உடல் வலிமை பெற்றவர். ஆபத்துகளை எதிர்கொள்வதென்பது அவருக்கு மிகச் சாதாரண விஷயம்! அடிதடிச் சண்டைக்கு அவர் எப்போதுமே முன்னே நிற்பார். ஜெயதேவின் இச்சிறப்புக்களைக் கண்டே பகத்சிங், பிஸ்மில்லை விடுவிக்கும் 'ஆக்சனுக்கு'(Action) ஜெயதேவை அழைத்துச் செல்ல வேண்டுமென்று முடிவு செய்தார். ஒரு நாள் மத்தியானம் பகத்சிங் தன் முடிவைத் தெரிவித்தபோது, என் பலவீனமான உடலை வெறுத்தேன். கட்சியின் பணி … அஸ்திவார கல்லுக்குள்ள முக்கியத்துவம் வைரக் கல்லுக்கில்லை – பகத் சிங்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஆரியவதியும் சில ஆணிகளும்
நடப்பு வாரத்தில் மிகவும் அதிர்ச்சியடைய வைத்த நிகழ்வாக ஆரியவதி உலகெங்கும் பேசப்பட்டாள். சௌதியில் பணிபுரியச் செல்லும் பெண்களுக்கு நேரும் கொடுமைகளும், கொடூரங்களும் மனித உரிமை மீறல்களாக உலக அரங்கில் தொடர்ந்து எழுப்பபட்டே வந்திருக்கிறது. அடித்தல் உதைத்தல் காம இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுதல் போன்றவைகளிடையே உடலில் ஆணியை அடித்து ஏற்றுதல் என்பது மக்களிடையே ஒரு கொந்தளிப்பான மனோநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. பாத்திரம் கீழே விழுந்து உடைந்துவிடுதல் போன்ற சின்னச்சின்ன தவறுகளுக்கான தண்டனையாக ஆணிகள் உடலில் ஏற்றப்பட்டிருக்கின்றன என்பதை அறியும் போது … ஆரியவதியும் சில ஆணிகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.