பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. ஏற்கனவே தேனீர் விற்ற பட்டறிவு(!) (அனுபவம் என்பதற்கு ஈடான தமிழ்ச் சொல்) கொண்ட, தேர்தல் காலங்களில் வடை சுடுவதில் வல்லவரான மோடி பஞ்சாப் சென்றிருக்கிறார். பெரோஸ்பூரில் 42,750 கோடிக்கு வடை சுடுவதாக மன்னிக்கவும் 42,750 கோடிக்கு நலத்திட்ட அறிவிப்புகள் செய்வதாக திட்டமிட்டு பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பஞ்சாப் மாநில அரசின் கூற்றுப்படி தில்லியிலிருந்து விமானம் மூலமும் பின்னர் எழுவூர்தி மூலம் பெரோஸ்பூருக்கும் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலையினால் … மோடியும் வக்கிர எண்ணமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: விவசாயிகள்
இன்று கருப்பு நாள்
வேளாண் மசோதாக்கள் என்ற பெயரில் மூன்று கருப்புச் சட்டங்களைக் கொண்டு வந்த மோடி அரசாங்கம் இன்று ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அந்த கருப்புச் சட்டங்களை எதிர்த்து தில்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் இன்று ஆறு மாதங்களை நிறைவு செய்கிறார்கள். இந்த இரண்டையும் இணைத்து போராடும் விவசாயிகளும், விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பவர்களும், பொது மக்களும் இந்த நாளை கருப்பு நாளாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று மக்களுக்கு காட்டுவதற்காகவும், தங்கள் ஒற்றுமையை அடையாளப்படுத்தவும் … இன்று கருப்பு நாள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஜெர்மானியர்கள் மத்தியில் அரசு அமைதல் 2
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 28 நமக்குக் கிடைத்திருக்கும் செய்திகளில் மிகப் பெரும்பான்மை கோல் பற்றியவையே. அங்கே கொலோன்களுக்குப் பக்கத்திலேயே சுதந்திரமுள்ள சிறு விவசாயிகளும் இன்னும் இருந்தார்கள். அதிகாரிகள், நீதிபதிகள், கந்துவட்டிக்காரர்கள் ஆகியவர்களின் கொடுமையான கட்டாய வசூல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் அதிகாரத்திலிருந்த நபர்களின் பாதுகாப்பிலும் ஆதரவிலும் பெரும்பாலும் ஒட்டிக் கொண்டனர். அவர்கள் தனித்தனியாக மட்டுமல்ல, முழு கூட்டுச் சமூகங்களாக இப்படி செய்தார்கள். 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சக்கரவர்த்திகள் இந்தச் செயலைத் தடை … ஜெர்மானியர்கள் மத்தியில் அரசு அமைதல் 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
கேள்விக்கென்ன பதில்?
செய்தி: ஜனவரி 27 ஆம் தேதி இரவு டெல்லி-சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்ட் கிசான் மோர்ச்சாவின் செய்தியாளர் கூட்டத்தில் மூத்த பஞ்சாப் விவசாயிகள் சங்க தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் பேசினார். “ஒப்புக் கொள்ளப்பட்ட அணிவகுப்பு வழியிலிருந்து விலகி செங்கோட்டையை நோக்கி செல்ல விவசாயிகளை தொழிற்சங்கத் தலைவர்கள் தூண்டியதாக டெல்லி போலீஸார் கூறுவது தவறு. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய மற்றும் அணிவகுப்புகளுக்கான நிபந்தனைகளைப் பின்பற்றுவதாக உறுதியளித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பல விவசாய … கேள்விக்கென்ன பதில்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குடியரசு .. .. .. (!)
நீதிமன்றம் அனுமதி தந்த போராட்டம் என்றாலும் தடுப்போம். ஏனென்றால் நாங்கள் குடியரசு .. .. .. (!) போராடும் விவசாயிகளை அடித்துத் துவைப்பது எங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. ஏனென்றால் நாங்கள் குடியரசு .. .. .. (!) கண்டெய்னரை வைத்துக் கூட நாங்கள் தடுப்போம். ஏனென்றால் நாங்கள் குடியரசு .. .. .. (!) நடப்பவர்களின் மாடிப்பாதையில் நின்று கண்ணீர்புகை குண்டுகளை வீசுவோம். ஏனென்றால் நாங்கள் குடியரசு .. .. .. (!) போராட்டத்தை தடுக்க … குடியரசு .. .. .. (!)-ஐ படிப்பதைத் தொடரவும்.
விவசாயிகளை அப்புறப்படுத்த சதி நடக்கிறது
தில்லியில் ஒன்றரை மாதத்துக்கும் மேலாக, கடுங்குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகளும், விவசாய அமைப்பினரும், இன்னும் பலரும் போராடி வருகிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களையும் நீக்குவதை தவிர வேறெதையும் ஏற்க முடியாது என்று உறுதியுடன் போராடி வருகிறார்கள். அரசு நடத்தும் பேச்சுவார்த்தை நாடகங்கள் எடுபடாமல் போய்க் கொண்டிருக்கின்றன. விவசாயிகளின் போராட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று அரசு சிந்திப்பதன் அடுத்த கட்டமாக நீதி மன்றம் களத்தில் குதித்திருக்கிறது. போராடும் மக்களை நேரடியாக மிரட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் நீதி … விவசாயிகளை அப்புறப்படுத்த சதி நடக்கிறது-ஐ படிப்பதைத் தொடரவும்.
நாட்டாம தீர்ப்ப (மாத்தி) சொல்ல வேண்டாம், கம்முனு இருந்தா போதும்.
செய்தி; உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாய சட்டங்களுக்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை, இன்று (ஜனவரி 11) தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள் போப்பண்ணா, ராமசுப்ரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “மூன்று வேளாண் சட்டங்கள் மீதான விவசாயிகளின் ஆட்சேபம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தக் குழு அமைக்கப்படும்வரை, வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால், அதை நாங்கள் நிறுத்த வேண்டியிருக்கும். இவ்விவகாரத்தை மத்திய அரசு கையாண்ட விதம் ஏமாற்றத்தைத் தருகிறது. ஏனென்றால் … நாட்டாம தீர்ப்ப (மாத்தி) சொல்ல வேண்டாம், கம்முனு இருந்தா போதும்.-ஐ படிப்பதைத் தொடரவும்.
போராடுவோருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?
விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் என்ன நடந்தது? இது பற்றி இன்று வெவ்வேறு நாளிதழ்களும் வெளியிட்டிருக்கும் தலைப்புகள், உண்மையில் நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களைப் பிரதிபலிப்பனவாக இல்லை. காலிஸ்தானி, மாவோயிஸ்டு, காங்கிரஸ், பாக்-சீனா தூண்டுதல்… என்று சங்கிகள் செய்த எந்த அவதூறும் எடுபடாத நிலையில், அவர்கள் உச்ச நீதிமன்றத்தைச் சரண் புகுந்திருக்கிறார்கள். National Capital Territory ஐச் சேர்ந்த 20 லட்சம் குடிமக்கள், குறிப்பாக நொய்டா – குர்கான் பகுதிகளைச் சேர்ந்த மிடில் … போராடுவோருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுப்போம்
அடாவடியாக, எந்த பாராளுமன்ற மரபுகளையும் மதிக்காமல், விவாதம் நடத்தாமல் நிறைவேற்றப்பட்ட, விவசயிகளுக்கு மட்டுமன்றி, மக்கள் அனைவருக்கும் எதிரான, வேளாண் சட்டங்களை நீக்கு எனும் கோரிக்கையோடு பத்து நாட்களைக் கடந்தும் தில்லி முற்றுகைப் போராட்டம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. சற்றேறக் குறைய 500க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் இப் போராட்டத்தில் ஒருங்கிணைந்து இருக்கின்றன, ஒருங்கிணைத்து வருகின்றன. போராட்டக் களத்திலிருந்து கிடைக்கும் செய்திகளெல்லாம் பெரும் உவகையை தருகின்றன. ஒரு லட்சத்துக்கு பக்கத்தில் உழவு வண்டிகள், இரண்டு மாதங்களுக்கு போதுமான உணவுப் … விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
விவசாயியா?(நம்பியார் ஸ்டைலில் உச்சரிக்கவும்)
செய்தி: வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் பீகாரில் உரையாற்றிய பிரதமர், “பல்வேறு தடைகளில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்கு இந்தச் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. தங்கள் விளைப்பொருட்களை எந்த ஊரில் உள்ள, எந்த ஒரு நபருக்கும் விவசாயி நிர்ணயிக்கும் விலைக்கு விற்பதில் அவர்களுக்கு இனி எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்காது” “அதிக லாபம் கிடைக்கும் இடத்தில் விவசாயி தனது விளை பொருளை விற்க முடியும்” குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை … விவசாயியா?(நம்பியார் ஸ்டைலில் உச்சரிக்கவும்)-ஐ படிப்பதைத் தொடரவும்.