தேவையற்றவனின் அடிமையே வா

சில நாடகளுக்கு முன் முகநூலில் ஒரு பதிவைப் பார்த்தேன். எந்தவித தயக்கமோ கூச்சமோ இல்லாமல் நாத்திக கோமாளிகள் என தொடக்கத்திலேயே விளித்திருந்தார் அந்த பதிவர். அந்த சொல்லினால் உந்தப்பட்டு அவருக்கு பதிலளித்தேன். அது ஒரு விவாதமாக நீண்டது. ஒரு கட்டத்துக்குப் பிறகு வழக்கம் போல பதில் வரவில்லை. அதையே ஒரு பதிவாக்கி முகநூலில் பகிர்ந்தேன். அவரைக் குறித்த பதிவுக்கு அவருக்கு தெரிவிக்காமல் இருப்பது சரியல்ல எனும் எண்ணத்தில் அதில் அவரையும் கோர்த்திருந்தேன். அதற்கு அவர் வினையாற்றி இருந்தார். … தேவையற்றவனின் அடிமையே வா-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடவுள் என்பதும் மூடநம்பிக்கையே

அண்மைக்காலமாக முகநூலில் இஸ்லாமிய பரப்புரைப் பதிவுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நாத்திகர்களை எதிர்கொள்வதாக எண்ணிக் கொண்டு அவர்கள் இடும் பதிவுகள் நகைப்பை வரவழைக்கின்றன. எடுத்துக்காட்டாக புர்கா கலாச்சாரத்தை எதிர்க்கிறோம் என்றால் பெண்களை ஆடையில்லாமல் அலையச் சொல்கிறோம் என்று அவர்களாகவே பொருள் கொண்டு அதற்கு விளக்கம் அளித்து புளகமடைந்து கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒரு முகநூல் பக்கத்தை இப்படி தொடங்கி இருக்கிறார்கள்.  “நாத்திகர்கள் இஸ்லாத்தை நோக்கி பல கேள்விகளையும் அவதூறுகளையும் முன்வைப்பர். முஸ்லிம்கள் பதில்களை மட்டுமே அளிப்பர். இங்கு … கடவுள் என்பதும் மூடநம்பிக்கையே-ஐ படிப்பதைத் தொடரவும்.

மீண்டும் ஒரு விவாதம்

கடவுள் யார்? அணமையில் நண்பர் ஒருவர் ’இஸ்லாம் vs நாத்திகம் தத்துவார்த்த உரையாடல்’ என்ற முகநூல் பக்கத்துக்கான இணைப்பை அனுப்பி இந்த பக்கத்தை சென்று பாருங்கள். அதன் பதிவுகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனடிப்படையில் சென்று பார்த்த போது கிடைத்த முதல் பதிவு தான் ’கடவுள் யார்?’ எனும் இந்தப் பதிவு. கடவுள் இல்லை என்பவர்கள் கடவுள் என்றால் என்ன, எந்தக் கடவுள் இல்லை என்று சொல்ல வேண்டும். சிவன் இல்லை என்பதா, … மீண்டும் ஒரு விவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாபெரும் விவாதம்

இந்தியாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையில் சித்தாந்தப் போராட்டங்கள், தத்துவ விவதங்கள் பெரிய அளவில் நடந்ததில்லை. நடக்கவே இல்லை என்பது இதன் பொருளல்ல. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் எண்ணிக்கையையும் அவை கடந்து வந்த நீண்ட காலத்தையும் சிந்தையில் கொண்டால், நடந்திருக்கும் சித்தாந்தப் போராட்டங்கள் மிகமிகக் குறைவே. நடந்திருக்கும் சித்தாந்தப் போராட்டங்களில் கூட, சரிப்படுத்தும் நோக்கிலான விமர்சனங்கள் என்பதைக் கடந்து, குற்றம் சாட்டும் வாதச் சண்டைகளாக முடிந்தவையே அதிகம். அண்மையில் தமிழ்நாட்டில் SOC உடைதல்களுக்குப் பிறகு இந்த வாதச் சண்டைகள், … மாபெரும் விவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

SOC: சில கேள்விகள்

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே SOC க்குள் நடக்கும் குழப்பங்கள், தங்கராசு முறைகேட்டுக்குப் பிறகு வெளிப்படையாகவே விவாதிக்கப்படுகின்றன. செயலர் பக்கமும், அதற்கு எதிர்ப் பக்கமும் தங்கள் தன்னிலை விளக்கங்களை அறிக்கைகள் எனும் பெயரில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் புரட்சிகர இயக்கங்களுள் தனி(!) என நம்பப்படும் SOCயில் இவ்வாறான நேர்வுகள் நிகழ்வது கண்டு, பொதுவான சமூக செயற்பாட்டாளர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்திருக்கலாம். ஆனால், இவை அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரியனவல்ல. SOCயின் தொடக்க காலத்திலிருந்தே விலகல்களும், விலக்கல்களும், பிளவுகளும் இருந்தே வந்திருக்கின்றன. … SOC: சில கேள்விகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

போர் தொடங்கி விட்டது

இனி எந்த ஒளிவு மறைவும் இல்லை. பிற வட மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் இந்தப் போர் தொடங்குவதில் சிக்கல் இருப்பதான தோற்றம் இருந்தது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எதையும், எதையும், .. எதையும் செய்யத் துணிந்த அந்தக் கூட்டம், தற்போது தமிழ்நாட்டில் தன் போரை மக்கள் மீது வெளிப்படையாக தொடுத்து விட்டது. மோடி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அச்சு, காட்சி ஊடகங்கள் எவ்வாறெல்லாம் முனைந்து வேலை செய்தன என்பது நாம் அறிந்தது தான். பொய் அது … போர் தொடங்கி விட்டது-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாம்: விவாத நேர்மை

விந்து குறித்த குரானின் விந்தைகள் என்ற என்னுடைய பழைய பதிவில் யாஸீன் என்பவருடன் கடந்த சில நாட்களாக நடந்த விவாதம் இது. இது அந்தப் பதிவின் மேலதிக விளக்கமாக இருக்கும் என்பதாலும், விவாதம் என்று வருகிற மதவாதிகளின் விவாத நேர்மை என்பது எந்த அளவுக்கு மட்டமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது என்பதாலும் இதை தனிப்பதிவாக வெளியிடுகிறேன். விந்து வெளிப்படும் இடம் குறித்து குர்ஆன் கூறினால், அது ஏன் உற்பத்தியாகும் இடம் குறித்து கூறவில்லை என … இஸ்லாம்: விவாத நேர்மை-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 4

  கடவுள் எனும் மீப்பெரும் ஆற்றலின் இருப்புக்கான நோக்கம், மனிதனின் தினப்படி வாழ்வில் குறுக்கீடு செய்து அவனுக்கு வழிகாட்டுவது என்பதாகும். இது தான் பொதுவான, பெரும்பாலான மக்களின் கடவுள் மீதான  நம்பிக்கையாக, ஆன்மீகமாக இருக்கிறது. ஆனால், இதுவல்லாத மாற்றொரு முறையில் கடவுள் நம்பிக்கையை விவரிக்கிறார் நண்பர் விவேக். இது ஒன்றும் புதிதான ஒன்றல்ல, சங்கரர் அருளிய மாயை தத்துவத்திலிருந்து கொண்டு தான் நண்பர் விவேக் உரையாடிக் கொண்டிருக்கிறார். இதற்கு எளிமையாக சங்கரர் காலத்திலேயே பதிலும் அளித்திருக்கிறார்கள். நண்பர் … கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 4-ஐ படிப்பதைத் தொடரவும்.

திமுக வை ஆதரிக்கிறதா பு.ஜ?

தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் சமப்படுத்துபவர்களின் நோக்கமென்ன? என்றொரு கட்டுரை புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2016 இதழில் வெளிவந்திருக்கிறது. பாராளுமன்ற தேர்தல் முறையை புறக்கணிக்கிறோம் என்பதால் அதில் இருக்கும் ஓட்டுக் கட்சிகளை ஒரே தட்டில் வைத்து சமமாகப் பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை என விளக்கப்பட்டிருக்கிறது. உடனே, தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு கட்டுரை தேவையா எனத் தொடங்கி இது திமுக வுக்கு ஆதரவான கட்டுரை என்பதினூடாக இதற்கு ஐ சப்போர்ட் திமுக என்று எழுதியிருக்கலாமே என்பது வரை பல்வேறான … திமுக வை ஆதரிக்கிறதா பு.ஜ?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடையநல்லூர் பிரச்சனை குறித்த விவாதம்: அனைத்து முஸ்லீம்களுக்குமான அழைப்பு

  கடந்த ஒரு மாதமாக செங்கொடி, நல்லூர் முழக்கம் ஆகிய இரண்டு தளங்களும் பொதுப் பார்வைக்கு தடுக்கப்பட்டிருந்தன. இதை முன்னிட்டு பலர் தங்கள் அதிர்ச்சியையும், கடவச்சொல் கோரிக்கையையும் வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் நான் யாருக்கும் பதிலோ, அவை குறித்த தகவலோ அளிக்கவில்லை. காரணம் மீண்டும் இயங்கச் செய்யும் போது தடுத்திருந்ததற்கான காரணத்தை விவாதப் பொருளாக மாற்ற வேண்டும் என எண்ணியதால் தான். எனவே, முடக்கத்திற்கு பிறகான முதல் இடுகையாக இந்த விவாதம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு … கடையநல்லூர் பிரச்சனை குறித்த விவாதம்: அனைத்து முஸ்லீம்களுக்குமான அழைப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.