பதின்ம வயது தொடங்கி, மரணம் வரை பொதுமை மெய்யியலை உயர்த்திப் பிடித்து, அதற்காகவே இயல்பாக இருந்த வாழ்விலிருந்து விலகி நின்று, திருமணம் உள்ளிட்ட எந்த சட்டகங்களுக்குள்ளும் சிக்காமல், உழைத்த ஒரு தோழரை இழந்திருக்கின்றோம். தோழருடன் நேரடியாக எனக்கு எந்தப் பழக்கமும் இல்லை. சில முறைகளைத் தவிர சந்தித்ததும் இல்லை. இரண்டைத் தவிர மற்ற அனைத்தும் பொதுச் சந்திப்புகள் தாம். வகுப்புகளில், தலைப்புகளில். இரண்டு முறை மட்டுமே தனியாக சந்தித்து உரையாடியிருக்கிறேன். என்ன சொன்னாலும், அதை எப்படிச் சொன்னாலும் … தோழருக்கு செவ்வஞ்சலி-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: வீரவணக்கம்
இதற்குப் பெயர் தான் என்கவுண்டரா?
வட கிழக்கு மாநிலங்களில், காஷ்மீரில், குஜராத்தில் என்று தனித்து குறிப்பிடும்படி இல்லாமல் எல்லா மாநிலங்களிலும் நிறைந்திருக்கிற அரச பயங்கரவாதத்தின் கோர முகம் கடந்த நவம்பர் 27ம் தேதி மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டது. அன்றுதான் தோழர் கிஷன் ஜி கொல்லப்பட்டார். வழக்கம் போல போலீஸை சுட்டார், அதனால் நாங்கள் திருப்பி துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்று கட்டுக் கதைகள் பரப்பிவிடப்பட்டன. ஆனால் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அழைத்து போலீஸ் வெறிநாய்களால் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்பது தற்போது … இதற்குப் பெயர் தான் என்கவுண்டரா?-ஐ படிப்பதைத் தொடரவும்.