குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

  கடந்த 25ம் தேதி சென்னை சேலையூர் ஜீயோன் மெட்ரிகுலேசன் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படித்த சுருதி என்ற சிறுமி, பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியே சாலையில் தவறி விழுந்து, பயணித்த பேருந்தின் சக்கரத்திலேயே மாட்டிக் கொண்டு துடிக்கத் துடிக்க உயிரிழந்தாள். காட்சி ஊடகங்கள் இதை தங்களின் வியாபாரத்திற்காக பயன்படுத்தும் விதத்தில் பரபரபரப்பான செய்தியாக மாற்ற, தமிழகம் பற்றிக் கொண்டது. பார்த்த கணத்திலேயே பதற வைக்கும் செய்தி என்பதால் சலை மறியல், கண்ணீர் அஞ்சலிக் கூட்டங்கள், … குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஏழாம் அறிவா? ஏய்க்கும் அறிவா?

இன்றைய பொழுதுகளில் ஒரு திரைப்படத்தின் முதன்மையான கணம், அதற்கு செலவு செய்யப்படும் தொகையும், அது மடைமாற்றித் தரப்போகும் தொகையும் தான். கலை, சமூக விழிப்புணர்வு, பொழுதுபோக்கு உள்ளிட்ட ஏனைய பிறவெல்லாம் பின்னர் தான். இந்த வகையில் எல்லாவற்றையும் விட ஒரு திரைப்படத்திற்கு பார்வையாளர்களை ஈர்ப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இதற்கு பலவாறான உத்திகள் ஒவ்வொரு திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏழாம் அறிவில் இதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் உத்தி தமிழர் பெருமை, தமிழ் தேசியம்.   கிபி ஆறாம் நூற்றாண்டில் … ஏழாம் அறிவா? ஏய்க்கும் அறிவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.