கொரோனா: வைரசா? லாபவெறியா?

கொரோனா குறித்து வதந்தி பரப்பியவர்கள் என்று பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மரபு வழி மருத்துவர்கள் சிலர் தங்களிடம் கொரோனாவுக்கு மருந்து இருப்பதாக கூறியிருந்தார்கள் (அது ஏற்புடையதா இல்லையா என்பது வேறு விதயம்) அவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சில நிகழ்வுகளில் கொரோனா காலத்தில் அரசுகளின் செயல்பாடு சரியில்லை என விமர்சித்தவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 20 லட்சம் கோடி அறிவிப்புக்குப் பின் அரசு குறித்தான அரசியல் புரிதல் இல்லாதவர்கள் கூட அரசு ஏன் இப்படி செயல்படுகிறது எனும் கேள்வி கொண்டவர்களாகி … கொரோனா: வைரசா? லாபவெறியா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஈரான்: அமெரிக்காவின் அடாவடிகள்

கடந்த ஜனவரி 3ம் தேதி ஈரானின் இராணுவத் தளபதியான காசிம் சுலைமானி அமெரிக்க தாக்குதலால் கொல்லப்பட்டார். இதை அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவர் ஒரு பயங்கரவாதி, அமைதிக்கு எதிரானவர், முன்பே கொல்லப்பட்டிருக்க வேண்டியவர். எனவே, என்னுடைய உத்தரவின் பேரில் அமெரிக்க வீரர்கள் அவரை கொன்றனர் என்று தெரிவித்தார். அதாவது, அமெரிக்காவுக்கு அவரை பிடிக்கவில்லை அல்லது அமெரிக்காவுக்கு எதிராக அவர் செயல்பட்டார், அதனால் நாங்கள் அவரைக் கொன்றோம் இது தான் அமெரிக்கா சொல்வது. இதையே வேறொரு நாடு … ஈரான்: அமெரிக்காவின் அடாவடிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.