மக்களின் வாழ்வு தலைகுப்புற புரட்டிப் போட்டது போலிருக்கிறது. எதிர்ப்படும் அனைத்து முகங்களிலும் ஏனைய அனைத்து உணர்ச்சிக் குறிகளையும் விட என்ன செய்வது எனும் கவலையே மேலோங்கித் தெரிகிறது. ரூபாய்தாள்கள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு எல்லாம் முடங்கிக் கிடக்கிறது. மக்களின் அவலங்கள் அன்றாடச் செய்திகளாய் சுருங்கி, கடந்து போய்க் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இன்று என்ன அறிவிப்பு புதிதாய் வரப்போகிறது? அதைக் கொண்டு எப்படி தங்களின் அடிவருடித்தனத்தை புதுப்பித்துக் கொள்வது என்று ஊடகங்கள் அலைகின்றன. பொதுவாக ஊடகங்களும் … 500, 1000: இனி செய்ய வேண்டியது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: 500
500, 1000 செல்லாது: மோடியை கழுவி ஊற்றிய மக்கள்
நேற்று (08/11/2016) மாலையில் திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடியால் அறிவிக்கப்பட்டது. இரவு 12 மணிக்குள் மாற்றாவிட்டால் வைத்திருக்கும் பணம் ஒன்றுமில்லாமல் காற்றில் கரைந்து விடுமோ எனும் பரிதவிப்பில் மக்கள் அலைந்ததை பார்க்கையில் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. தமிழில் இதுவரை செவியுற்றிருக்காத சொற்களை உருவாக்கி மக்கள் மோடியை அர்ச்சித்துக் கொண்டிருந்தார்கள். மக்களே! பதட்டம் வேண்டாம். ஓரிரு நாட்களில் வங்கிகள் இயங்க தொடங்கியதும் உங்கள் கையிலிருக்கும் பழைய 500, 1000 ரூபாய் தாள்களை … 500, 1000 செல்லாது: மோடியை கழுவி ஊற்றிய மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.