அண்டப் புழுகையும் அழ வைக்கும் பாஜக

அண்மையில் சமூக ஊடகங்களை கலக்கிக் கொண்டிருக்கும் படம் இது. மதுரையில் மோடி கட்டியிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையும், வைகை நதியில் மோடி கட்டியிருக்கும் நீருக்கடியில் செல்லும் பாலமும். பாஜக என்ற சொல்லுக்கு பொய் என்பது தான் பொருள் என்பது சற்றேறக்குறைய அனைவருக்குமே தெரிந்த உண்மை தான். ஆனாலும் அதற்காக அவர்கள் வெட்கப்படுவதோ, அல்லது, அப்படி பச்சையாக புழுவதை குறைத்துக் கொள்வதோ கூட இல்லை. அதற்கு காரணம் என்ன என்பதை தான் நாம் சிந்திக்க வேண்டும். காந்தியைக் கொல்ல வந்த … அண்டப் புழுகையும் அழ வைக்கும் பாஜக-ஐ படிப்பதைத் தொடரவும்.

அமெரிக்க ஜனநாயகத்தை வீழ்த்திய வலதுசாரி பயங்கரவாதம்

ஜனநாயகம் என்ற சொல்லின் முழுமை, முதலாளித்துவ ஜனநாயகம் என்பது தான். ஆயினும் அதையும் அரித்துக் கொண்டிருகிறது வலதுசாரி பயங்கரவாதம். இது உலகெங்கும் நடந்து வரும் பாசிசப் போக்கு. ஆனால் இடதுசாரிகளைத் தவிர ஏனைய அனைத்து ‘முதலாளித்துவ அரசியல் கட்சி’களும் (வழக்கம் போல இதை ‘அரசியல் கட்சிகள்’ என்று மட்டுமே மக்கள் புரிந்து கொள்வதற்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்) இவைகளை கட்சிகளுக்கு இடையிலான போட்டி என்பதாக மடைமாற்றிக் கொண்டிருக்கின்றன. கார்ப்பரேட்டுகள் கையிலிருக்கும் ஊடகங்களும் இதற்கு எண்ணெய் ஊற்றுகின்றன. அமெரிக்காவில் நடந்திருப்பதையும் இவ்வாறு … அமெரிக்க ஜனநாயகத்தை வீழ்த்திய வலதுசாரி பயங்கரவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொலைவெறியால் முடிக்க நினைக்கும் காவி பயங்கரவாதிகள்

தில்லியில் மூன்றாவது நாளாக வன்முறை வெறியாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை 17 பேர் கொலை செய்யப்பட்டு விட்டனர். ஆம்புலன்ஸ்கள் கூட விடாமல் தாக்கப்படுகின்றன. காணொளிக் காட்சிகளைப் பார்க்கும் போது மனம் பதறுகிறது என்று தங்களை சாதாரண மக்களாக கருதிக் கொள்வோர் தெரிவிக்கிறார்கள். மீண்டும் மீண்டூம் பிடிவாதமாக இரண்டு தரப்புக்கும் இடையே நடக்கும் கலவரம் என்று ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் உண்மை என்ன? கொலைவெறி ஆட்டம் ஆடுவதொன்றும் காவி பயங்கரவாதிகளுக்கு புதியதல்ல. அதன் விளைவை அரசு, … கொலைவெறியால் முடிக்க நினைக்கும் காவி பயங்கரவாதிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆயிரம் அமுல்யாக்கள் வரட்டும்

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடெங்கும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மத எல்லை கடந்து அனைத்து மக்களும் இந்திய உணர்வோடு போராடும் இந்தப் போராட்டத்தை ஒரு மதப் போராட்டம் போல் சித்தரிக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அது ஒரு பக்கம் இருந்தாலும் நின்று போகாமல் இடையறாது போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக கர்னாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 20ம் தேதி (20.02.2020) ஒவைசி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஒரு போராட்டத்தில் கலந்து … ஆயிரம் அமுல்யாக்கள் வரட்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தாவீந்தர்: நாடாளுமன்ற தாக்குதல் நாடகத்தின் முடிச்சு

அப்சல் குரு கடந்த 12ம் தேதி காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உதவினார் என்பதற்காக காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருக்கும் தாவீந்தர் சிங் என்பவரை கைது செய்தனர். மேலோட்டமாக பார்த்தால் இது சாதாரண செய்தி போல கடந்து போகத் தோன்றும். ஏனென்றால், காஷ்மீரில் இராணுவமும் போலீசும் நடத்தி வரும் வெறியாட்டங்களை அறிந்திருப்பவர்களுக்கு, இது அதிர்ச்சி தரத்தக்க செய்தியாக இருக்காது. அதேநேரம், இந்திய அரசையும், காவி பயங்கரவாதிகளையும் புரிந்திருப்பவர்களுக்கு இதில் முக்கியமான செய்தி இருகிறது. தாவீந்தர் சிங்கை விசாரித்த அதிகாரிகள் கூட, … தாவீந்தர்: நாடாளுமன்ற தாக்குதல் நாடகத்தின் முடிச்சு-ஐ படிப்பதைத் தொடரவும்.

தாக்கியது ABVP தான்

ஞாயிற்றுக் கிழமை இரவில் ஜேஎன்யூ வில் நடத்தப்பட்ட தாக்குதலில், தாக்குதலில் ஈடுபட்டது RSS ன் மாணவர் அமைப்பான ABVP தான் என்று மாணவர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் கூறினார்கள். ஆனால் பிஜேபியினரோ இடதுசாரிகள் தாம் கலகம் நடத்தினார்கள் என்றார்கள். இங்குள்ள நாரவாய் நாராயணனும் அதையே வாந்தியெடுத்தான். நடுநிலை என்ற பெயரில் சிலர் கல்வி வளாகத்தினுள் இப்படி கலகம் செய்வதை கண்டிக்கிறோம் என்று, தாக்குதலை கலகம் என்றார்கள். அமித்ஷா விசாரணை நடத்தப்படும் என நாடகமாடினார். இதோ, இப்போது ABVP … தாக்கியது ABVP தான்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாஜக மெய்யாகவே வென்றதா?

குடியுரிமை திருத்தச் சட்டம் பெரும் விவாதமாகவும், நாடெங்கும் தணியாத போராட்டங்களாகவும் வடிவெடுத்திருக்கும் வேளை. வேறெந்த பிரச்சனைகளையும் விட, பொருளாதார பின்னடைவைக் கூட பின்னுக்குத் தள்ளி குடியிரிமை போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியிருக்கின்றன. இப் போராட்டங்களை தடுக்க வழக்கம் போல காவல்துறை மூலம் வன்முறையை கையிலெடுத்திருக்கிறது. அனைத்தையும் மீறித் தான் போராட்டங்கள் தொடர்கின்றன. ஏனென்றால், பிற எல்லாவற்றையும் விட குடியிரிமை சட்டத் திருத்தம் மக்களைப் பாதிக்கும் முதன்மையான பிரச்சனையாக இருக்கிறது. அந்த போராட்ட நெருப்பை அணையாமல் பாதுகாப்பதும், தொடர்ந்து முன்னெடுத்துச் … பாஜக மெய்யாகவே வென்றதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.