விக்டோரியா கௌரி நியமனத்தை வழக்குரைஞர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? கொலீஜியத்துக்கும் NJAC வுக்கும் இடையிலான முரண்பாட்டின் பின்னணி என்ன? இந்த நியமனத்தின் பின்னிருக்கும் நோக்கம் என்ன? ஜான் சத்யன் ஏன் நியமிக்கப்படவில்லை? விளக்குகிறது இந்தக் காணொளி https://www.youtube.com/watch?v=f6e3ZLyWZ20
குறிச்சொல்: RSS
பாசிசத்தின் இந்திய முகம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய முன்னணி நிலை விரும்பியவாறு இல்லை என்றாலும், திமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து கொண்டிருக்கிறது. இந்திய அளவில் ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில், அஸ்ஸாமை பாஜக தக்கவைக்கிறது என்று புதுச்சேரியில் கூட்டணியுடன் முன்னணிக்கு வருகிறது என்பதும் கவனிக்க வேண்டிய விதயங்கள். குறிப்பாக, புதுச்சேரியில் பாஜக ஆட்சியில் கை நனைப்பது என்பது தமிழ்நாட்டிலும் விரிவதற்கு வழிவகுக்கக் கூடும். போகட்டும். தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்துவது என்பது, அனைத்து இந்திய கட்டமைப்புகளின் … பாசிசத்தின் இந்திய முகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
திமுகவின் வெற்றி இந்தியாவின் தேவை
தமிழ்நாட்டின் 2021 சட்ட்மன்ற தேர்தல், திமுக, அதிமுக வுக்கு இடையே நடக்கும் தேர்தல் அல்ல. இந்திய அளவில் ஓர் இன்றியமையாத திருப்புமுனையைக் கொண்டிருக்கும் தேர்தல். பாஜகவின் இறுதி இலக்கை நோக்கிய பயணம், அதை தடுக்கும் வாய்ப்பில் குறைந்த அளவிலேனும் தகுதியும் ஆற்றலும் கொண்டிருக்கும் அமைப்பு எது? இது தேர்தலுடன் முடிந்து போகும் ஒரு விதயமல்ல போன்ற பலவற்றை விளக்குகிறார் தோழர் மருதையன். ஜீவசகாப்தனின் லிபர்டி தமிழ் யூடியூப் வலையோடைக்கு அளித்த செவ்வி இது. பாருங்கள் .. புரிந்து … திமுகவின் வெற்றி இந்தியாவின் தேவை-ஐ படிப்பதைத் தொடரவும்.
கலவர முயற்சியில் காவிக் குரங்குகள்
கோவை டவுண்ஹால் பகுதியில், பாஜக வானதியை ஆதரித்து பேச வருகிறார் யோகி என்பதை சாக்கிட்டு வானரக் கூட்டம் ஒரு வன்முறை வெறியாட்ட முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. ஈருருளி (இருசக்கர வண்டி) ஊர்வலம் என்ற பெயரில் அந்த விலங்காண்டிகள், கடைகளை மூடச் சொல்லி அடாவடி செய்ததுடன், கேள்வி எழுப்பியவர்களை தாக்கி, கல்லெறிந்து அச்சமூட்டி இருக்கிறது. பள்ளிவாசல்கள் முன்னின்று வெறிக்கூச்சல் இட்டிருக்கிறது. பள்ளிவாசல்களுக்கு முன்பு சாலையில் அமர்ந்து பேயாட்டம் ஆடியிருக்கிறது. இவை எதுவும் புதிய விதயங்கள் அல்ல. ஏற்கனவே வட மாநிலங்களில் … கலவர முயற்சியில் காவிக் குரங்குகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
அண்டப் புழுகையும் அழ வைக்கும் பாஜக
அண்மையில் சமூக ஊடகங்களை கலக்கிக் கொண்டிருக்கும் படம் இது. மதுரையில் மோடி கட்டியிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையும், வைகை நதியில் மோடி கட்டியிருக்கும் நீருக்கடியில் செல்லும் பாலமும். பாஜக என்ற சொல்லுக்கு பொய் என்பது தான் பொருள் என்பது சற்றேறக்குறைய அனைவருக்குமே தெரிந்த உண்மை தான். ஆனாலும் அதற்காக அவர்கள் வெட்கப்படுவதோ, அல்லது, அப்படி பச்சையாக புழுவதை குறைத்துக் கொள்வதோ கூட இல்லை. அதற்கு காரணம் என்ன என்பதை தான் நாம் சிந்திக்க வேண்டும். காந்தியைக் கொல்ல வந்த … அண்டப் புழுகையும் அழ வைக்கும் பாஜக-ஐ படிப்பதைத் தொடரவும்.
குண்டர்களுக்காக மாணவர்களுக்குத் தடை ..?
2017 லிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் முதுகலை ஆங்கில பாடத் திட்டத்தில் இடம்பெற்றிருந்த, அருந்ததி ராய் எழுதிய “Walking with the Comrades” என்ற நூலின் பகுதிகள் தற்போது பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணமாய் இருந்தது ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவ குண்டர் படையான ஏபிவிபி எனும் அமைப்பின் மிரட்டல். இதை கண்காணிக்க வேண்டிய, சரி செய்வதற்காக தலையிட வேண்டிய அதிமுக அரசாங்கமோ மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்த பாடம் நீக்கப்பட்டது … குண்டர்களுக்காக மாணவர்களுக்குத் தடை ..?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஐபிஎஸ் என்றால் ஆர்.எஸ்.எஸ் என்று பொருளா?
செய்தி: பணியில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு உள்ள விதிகளில், அவர்கள் பொது வெளியில் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்கக் கூடாது என்பதும் ஒன்றாகும். மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை பாதுகாப்பதே அவர்களுக்குள்ள கடமை. தமிழக அரசின் கீழ் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வரும் சந்தீப் மிட்டல் தனது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ச்சியாக மத்திய ஆளும் கட்சி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆளும் கட்சி சார்பு இயக்கங்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். … ஐபிஎஸ் என்றால் ஆர்.எஸ்.எஸ் என்று பொருளா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெனிக்ஸ் கொலையின் முடிச்சுகள்
சாத்தான்குளம் தந்தை மகனான ஜெயராஜ் பெனிக்ஸ் படுகொலையில் ஈடுபட்ட காவல் துறையினர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். எதிர்க்கட்சியும், மக்களும், சமூக ஊடகங்களின் பங்களிப்புமே இதை சாத்தியப்படுத்தி இருக்கிறது என்பது மிகையல்ல. என்றாலும் இது மகிழ்வை பகிர்ந்து விட்டு முடித்துக் கொள்ளும் நிலையில் இல்லை. காவலர்களை தவிர இந்தப் படுகொலைகளுக்கு உடந்தையாய் இருந்த மருத்துவர், நீதிமன்ற நடுவர் ஆகியோர் குறித்து எந்த விவாதமும் இல்லாமல், எந்தச் சாட்டும் இல்லாமல், அடக்கப்பட்டிருக்கிறது. இதை நீதி கிடைத்திருக்கிறது என்பதை விட … பெனிக்ஸ் கொலையின் முடிச்சுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தமிழகத்தில் RSS வளர்ந்தது எப்படி?
சைக்கிள் கேப்பில் லாரி ஓட்டுவது என்று கேலியாக பேசிக் கொள்வார்கள். ஆனால் சங்கிகள் விமானத்தையே ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய மோடி அரசாங்கமும், பார்ப்பன மயமாக்கப்பட்டிருக்கும் இந்திய அரசும், அதன் மூலம் கிடைத்திருக்கும் அதிகாரமும், பொருளாதார பலமும் சங்கிகளை எல்லாவித சோதனை முயற்சிகளையும் செய்து பார்க்கத் தூண்டியிருக்கின்றன. எல்லா இடங்களிலும் செய்து பார்க்கத் தூண்டியிருக்கின்றன. ஒப்பீட்டளவில் வட இந்தியாவை விட தெனிந்தியா குறிப்பாக தமிழ்நாடு பார்ப்பனியத்துக்கு எதிராகவே தன்னுடைய கலை, பண்பாட்டு, சமூக விழுமியங்களின் சிந்தனையை கொண்டிருக்கிறது. ஆனால், … தமிழகத்தில் RSS வளர்ந்தது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொலைவெறியால் முடிக்க நினைக்கும் காவி பயங்கரவாதிகள்
தில்லியில் மூன்றாவது நாளாக வன்முறை வெறியாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை 17 பேர் கொலை செய்யப்பட்டு விட்டனர். ஆம்புலன்ஸ்கள் கூட விடாமல் தாக்கப்படுகின்றன. காணொளிக் காட்சிகளைப் பார்க்கும் போது மனம் பதறுகிறது என்று தங்களை சாதாரண மக்களாக கருதிக் கொள்வோர் தெரிவிக்கிறார்கள். மீண்டும் மீண்டூம் பிடிவாதமாக இரண்டு தரப்புக்கும் இடையே நடக்கும் கலவரம் என்று ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் உண்மை என்ன? கொலைவெறி ஆட்டம் ஆடுவதொன்றும் காவி பயங்கரவாதிகளுக்கு புதியதல்ல. அதன் விளைவை அரசு, … கொலைவெறியால் முடிக்க நினைக்கும் காவி பயங்கரவாதிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.