ஊழலில் 19வது இடம்; வெட்கப்படுவது மட்டும் போதாது.

மழைக்காலம் வெயில் காலம் என பருவகாலம் மாறுவதைபோல மக்கள் பேசும் விசயங்களும் ஊடகங்கள் அடியெடுத்துக்கொடுப்பதைக்கொண்டு அவ்வப்போது மாறிக்கொண்டேயிருக்கும். ஒருமுறை வங்கிகள் நிறுவனங்கள் திவால் பேசுபொருளாயிருக்கும், மறுமுறை போராட்டங்களினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாய் விளம்பப்படும், மற்றொரு முறை அரசியல்வாதிகளின் வீரதீர விசாரங்கள் பிரிதொரு முறை வழக்கு விவகாரங்கள், இப்போதோ ஊழல். அண்மையில் ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேசனல் என்ற அமைப்பு அதிக அளவு ஊழல் நடக்கும் நாடுகளின் அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பத்தொன்பதாவது நாடாக இந்தியா இடம்பெற்றுள்ளது. ஊழல் குற்றம் … ஊழலில் 19வது இடம்; வெட்கப்படுவது மட்டும் போதாது.-ஐ படிப்பதைத் தொடரவும்.

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

கிபி ஆறாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் மக்கா என்னும் நகரில் முகம்மது என்ற பெயர் கொண்ட உயர்குல வணிகரால் தொடங்கப்பட்ட மதம் இஸ்லாம். ஆனால் அவரைப்பின்பற்றும் இஸ்லாமியர்கள் அல்லது முஸ்லீம்கள் இதை இப்படி ஏற்றுக்கொள்வதில்லை. அனைத்து ஆற்றல்களையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டுள்ள தங்களின் ஏக இறைவனான அல்லா களிமண்ணிலிருந்து முதல் மனிதனை படைத்தபோது, அந்த முதன் மனிதனிலிருந்து தொடர்ச்சியாக மனித குலத்தை உருவாக்க நினைத்தபோது, அப்படியான மனித குலத்திற்காக இறைவன் உண்டாக்கித்தந்ததுதான் இஸ்லாம் எனும் மதம் என்பது முஸ்லீம்களின் … 1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சீன ஆக்கிரமிப்பு: கம்யூனிச எதிர்ப்பு வாய்களுக்கு அவல்.

ஓரிரு வாரங்களாகவே சீனா இந்தியப்பகுதிகளை ஆக்கிரமிப்பதாகவும், உள் நுழைந்து சிவப்பு மையில் அடையாளமிட்டதாகவும், காஷ்மீர் மட்டுமின்றி, உத்ராஞ்சல், அருணாசல பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் ஊடுருவல் நிகழ்ந்திருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. பாதுகாப்புத்துறை இதை கண்டித்து அரசிடம் அறிக்கை கொடுத்திருக்க, வெளியுறவுத்துறையோ இது ஒன்றும் கவலைப்படத்தக்க நடவடிக்கையில்லை, நாலாயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரமுள்ள எல்லையில் அங்கும் இங்கும் வந்து போவது பெரிய அளவில் எதிர்ப்பை தெரிவிக்கவேண்டிய விசமல்ல என்று தெரிவித்திருக்கிறது. இந்திய அரசின் இரண்டு பெரும் துறைகளுக்குள்ளேயே முரண்பட்ட கருத்துகள் … சீன ஆக்கிரமிப்பு: கம்யூனிச எதிர்ப்பு வாய்களுக்கு அவல்.-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே…..

நுழைவாயில் பொதுவாக மதம் என்பது மக்களிடையே சக்திவாய்ந்த நம்பிக்கையாக இருக்கிறது. மக்கள் தங்களின் உயிர்ப்பிற்கும், மரணத்திற்கும்; சுக துக்கங்களுக்கும்; இன்னும் அனைத்திற்கும் அதுதான் காரணமாக இருக்கிறது என நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையே உலகை சீர்பட நடத்திவருவதாக ஏற்கிறார்கள், தற்போதைய சீர்கேடுகளுக்கு அந்த நம்பிக்கை குறைந்ததே காரணம் என கருதுகிறார்கள். வேறு எந்த நம்பிக்கையை காட்டிலும் மத நம்பிக்கையே, கடவுள் நம்பிக்கையே வீரியம் மிக்கதாய் இருக்கிறது. சிலபோதுகளில் அந்த நம்பிக்கையில் கீரல் விழுந்தாலும் மறு கணமே மனதிலிருந்து ஒரு … இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே…..-ஐ படிப்பதைத் தொடரவும்.

கலைஞரின் சமச்சீர் கல்வி: அசுரப்பசிக்கு அல்வா மிட்டாய்

          இன்றைக்கு கல்வி என்பது மிகவும் இன்றியமையாத ஒரு கருவியாகும். வாழ்க்கை எனும் திசை தெரியாத கடலில், ஊழிக்காற்றின் அலைப்புகளில் கரை காண உதவும் சின்ன விளக்கு. ஆனால் இந்த சின்ன விளக்கை கைக்கொள்வதற்குள் மக்களின் குருதி வற்றிவிடுகிறது. அறிவு, அறிவுக்கான தேடல் எனும் புள்ளியிலிருந்து புறப்பட்ட கல்வி இன்று மக்களை பிழிந்து குடிக்கும் கல்வி வள்ளல்களின்(!) கைகளில் ஒரு கொடு வாளாகவே மாறிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை சிலரால், "அரசுப்பள்ளிகளில் யார் படிப்பது", "மாடு மேய்க்கத்தான் … கலைஞரின் சமச்சீர் கல்வி: அசுரப்பசிக்கு அல்வா மிட்டாய்-ஐ படிப்பதைத் தொடரவும்.