குரான் கூறுவது அறிவியலாகுமா?

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி: 7

இஸ்லாம் என்ற மதத்தின் அடிப்படை கட்டுமானங்களான‌ அல்லாவின் ஆற்றல், குரான், ஹதீஸ்கள் ஆகிய மூன்றும் முஸ்லீம்கள் சொல்லிக்கொள்வதுபோல் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்திலும், முரண்பாடற்றும், ஐயந்திறிபறவும் அமைந்திருக்கவில்லை என்றாலும்; இஸ்லாம் என்பது மதமல்ல அது ஒரு மார்க்கம் எனும் கூற்று முஸ்லீம்களிடம் மட்டுமல்லாது இஸ்லாமை சாராத பிற மதங்களை சார்ந்தவர்களிடமும் குறிப்பிட்ட சிறுஅளவு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. இதற்கு இரண்டு காரணங்களை கூறலாம், ஒன்று மதக்கோட்பாடுகளில் நம்பிக்கைக்கைகளில் பிடிப்புற்று நடந்துகொள்ளும் அல்லது பிடிப்புற்று நடந்துகொள்வதாக காட்டிக்கொள்ளும் முஸ்லீம்களின் இயல்பு. இரண்டு மதக்கோட்பாடுகளுக்கு, வேத வசனங்களுக்கு ஏற்ப வளைக்கப்படும் அறிவியல். எல்லா மதங்களுமே இயல்பில் அறிவியலை மறுத்தாலும் நடைமுறையில் அறிவியலுக்கு தாம் எதிரியல்ல என காட்டிக்கொள்ள முயல்கின்றன. இந்த நடைமுறை தற்கால இஸ்லாமிய மதவாதிகளால், மதப்பரப்புரையாளர்களால் வெகுவாகவும், தொடற்சியாகவும் எடுத்துக்காட்டப்பட்டு; அதையே, ஏனைய மதங்களைப்போல் அறிவியலை அனுசரித்துச்செல்வதில்லை அறிவியலை தன்னுள்ளே அடக்கிக்கொண்டது தான் இஸ்லாம் என்பதற்கான ஆதாரமாகவும் முன்வைக்கின்றனர். இதன் மூலம் இஸ்லாம் என்பது மெய்யான ஒன்றாகவும் அதன் கோட்பாடுகளும், இறையியலும் மட்டும்தான் உலகில் ஈடேற்றம் பெறுவதற்கான ஒரே வழியாகவும் முன்வைக்கின்றனர். அவ்வாறன்றி, இஸ்லாமும் ஏனைய மதங்களைப்போலவே பிற்போக்குத்தனங்களையும், அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துகளையும், முரட்டுத்தனமான கருத்துமுதல் வாதத்தையுமே தன்னுள் கொண்டுள்ளது.

 

இஸ்லாம் மதமல்ல மார்க்கம் அதாவது வாழ்க்கைக்கான வழிகாட்டி எனவே அதை மதம் என்று கூறுவது தவறு என்பவர்கள், ‘இஸ்லாம் வணக்க வழிபாடுகளை மட்டுமே கொண்டிருக்கவில்லை, அது ஒரு மனிதனுக்கு அவன் வாழ் நாளில் அனைத்து கணங்களுக்கும் தேவையான குறிப்புகளை வழங்கி அவனை வழி நடத்துகிறது என்றும் இதில் கட்டாயம் ஒன்றுமில்லை என்றும் ஏனைய மதங்களின் இருப்பையும் ஏற்றுக்கொண்டு அவர்களின் தவறான பாதையை உணர்த்தி அவர்களை அழைக்கவும் செய்வதால் இது மதமல்ல மார்க்கம் என்கிறார்கள். சரியோ தவறோ தனக்கென ஒரு வாழ்முறையை அல்லது வாழ்க்கைக்கான வழிமுறையை சொல்லாத மதம் எது? பார்ப்பனீய இந்து மதத்தில் சாதிய்ய படிமுறைகள் வாழ்முறையாக இருக்கிறது. பௌத்தத்தில் ஆசையை துறப்பது வழிமுறையாக இருக்கிறது. கன்பூசியத்தில் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வது வாழ்முறையாக இருக்கிறது. கிருத்தவத்தில் சகித்துக்கொள்வது வாழ்முறையாகவும், இஸ்லாத்தில் ஓரிறைக்கொள்கையை ஏற்றுக்கொள்வது வாழ்முறையாகவும் இருக்கிறது. இவைகளை அடிப்படையாகக்கொண்ட சட்டங்களின் வாயிலாக தம்மை பின்பற்றுபவர்களின் வாழ்வில் தமக்கிசைந்த கட்டுக்கோப்பை கொண்டுவரவே எல்லா மதங்களும் விரும்புகின்றன. இதில் இஸ்லாத்திற்கு என்ன தனிச்சிறப்பு? எல்லா மதங்களும் தமக்குள் செய்தே ஆக வேண்டுமென்று சிலவற்றையும் சில விதிவிலக்குகளையும் கொண்டிருக்கின்றன. எல்லாமதங்களும் விட்டு வெளியேறுவோரை எச்சரிக்கின்றன இதில் இஸ்லாத்தில் மட்டும் விலக்கிருக்கிறதா என்ன? உலகில் பார்ப்பனீய இந்து மதத்தை தவிர ஏனைய மதங்கள் தங்களின் மதத்திற்கு வருவோரை மகிழ்வுடன் வரவேற்கவே செய்கின்றன. இதில் இஸ்லாமை மட்டும் மார்க்கம் என விளிக்கவேண்டிய தேவை என்ன? மார்க்கம் என்றால் வழி என்று பொருள், வழி என்றானால் அதில் பயணிக்கும் மக்களுக்கு தம் வழியை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வேண்டும். எல்லா மதங்களுமே தம்மை பின்பற்றும் மக்களை மூளை இல்லாத பிறப்பாகவே பார்க்கின்றன. அவர்களின் செயல்கள் ஏற்கனவே தீர்மனிக்கப்பட்டுவிட்டதாக கூறுகின்றன. இதில் எங்கே சுதந்திரம் வருகிறது? மதம் என்பதன் பொருள் என்ன? பரிசீலனைக்கு இடமின்றி ஒரே விதமான சிந்தனையினூடான வெறி என்பது தான். இந்த இலக்கணத்தினின்று இஸ்லாம் மாறுபடுகிறதா என்ன? பின் எப்படி அதை மதம் எனவழைக்காமல் மார்க்கம் என்றழைப்பது?

 

 

பொதுவாக இஸ்லாமிய அறிஞர்கள் அறிவியல் பற்றி பேசும்போது ஒரு கண்ணோட்டத்தை வகுத்துக்கொண்டு அதன்படி பேசுவார்கள். கிமு கிபி என்பது போல் காலத்தை இஸ்லாத்திற்கு முன் இஸ்லாத்திற்கு பின் என்று பிரித்துக்கொண்டு முகம்மதுக்கு முன்னுள்ள காலம் அறியாமைக்காலம் என்ற தொனியிலிருந்துதான் பேசுவார்கள். இந்த அடிப்படையில் இருந்துதான் குரானின் வசனங்கள் அறிவியலை (அதாவது அந்த நேரத்தில் கண்டறியாததாக கருதப்படும் அறிவியலை) மெய்ப்பிப்பதால் இது முகம்மதின் வாக்காக இருக்கமுடியாது. கடவுள் என்ற ஒரு சக்தி இருந்து, அது எல்லாவற்றையும் அறிந்திருந்து கூறியதால் தான் இப்படி சாத்தியமாயிற்று என்ற திசையில் பேசுவார்கள். ஆனால் மெய்யாக இவர்கள் குறிப்பிடுவதுபோல் குறிப்பிட்ட வசனம் அறிவியல் கூறுகளை விளக்குமா? என்றால் இருக்காது சாதாரணமாக அந்த வசனம் வெளிப்பட்ட சூழல் குறித்த, தேவை குறித்த விளக்கமாக இருக்கும், ஆனால் அதை பிரித்து, நுணுகி, யூகம் செய்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியலோடு ஏதாவது விதத்தில் ஒத்துப்போவது போல் பொருள் கொண்டு, ஆஹா குரான் ஆயிரத்து நாநூறு ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது என விதந்து போற்றுவார்கள். இவைகளையும் மீறி குரானின் வசனங்களை அறிவியல் நேரடியாக ம‌றுக்கும் வேளைகளில் அது யூகத்தின் அடிப்படையிலான கோட்ப்பாடுதான் நிரூபிக்கப்பட்ட அறிவியலல்ல என திருப்பிப்போடுவார்கள்.

 

குரானில் மட்டுமல்லாது பண்டைய இலக்கியங்கள், புராணங்கள் பலவற்றில் அறிவியலின் கூறுகள் மறைபொருளாக தலைகாட்டி இருக்கின்றன. “மண்ணின் மேலவன் தேர் சென்ற சுவடெலா மாய்ந்து விண்ணின் ஓங்கியதொரு நிலை” இது கம்பராமாயணத்தில் வருவது. இதனைக்கொண்டு கம்பனுக்கு விமானம் பற்றிய அறிவு இருந்தது என்று கொள்ள முடியுமா? “அது நகர்கிறது, அது நகரவில்லை, அது தூரத்தில் உள்ளது அது அருகேயும் உள்ளது, அது உள்ளே இருக்கிறது, வெளியேயும் இருக்கிறது” ஈசோ உபனிசத்தில் இருக்கும் இதை க்வாண்டம் மெக்கானிசம் பற்றியது என்று எடுத்துக்கொள்ள முடியுமா? “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்” என எழுதிய ஔவையாருக்கு அடர்த்தி பற்றிய கோட்பாடுகள் ஆர்கிமிடீஸுக்கு முன்பே தெரியும் என்று முடிவுக்கு வரலாமா? “சாணிலும் உளன் அனுவை சதகூறிட்ட கோணிலும் உளன்” என்பதில் அணுப்பிளவு பற்றி வருகிறது, திருக்குறளில் நிர்வாகவியல், குறுந்தொகையில் உளவியல், பட்டினப்பாலையில் நகர் நிர்மாணம், சீவக சிந்தாமணியில் தொலைக்காட்சி, திருப்பாவையில் வானியல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். தமிழில் மட்டுமல்ல உலகிலுள்ள பல மொழிகளின் பண்டை இலக்கியங்களில் இதுபோல் பற்பல அறிவியல் கூறுகளை கூறலாம். லூயி கார்ல், ஐன்ஸ்டீனுக்கு முன்பே சார்பியல் கோட்பாட்டை தன்னுடைய கதைகளில் விளக்கியதாக கூறுகிறார்கள். பாராசூட், கருவியல் உட்பட ஏராளமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கு முன்பே படமாக வரைந்து வைத்தவர் லியானர்டோ டாவின்சி. அறிவியல் தெளிவு ஏற்படுவதற்கு முன்பே எப்படி இவைகளை அவர்களால் கூற முடிந்தது? முகம்மதுவுக்கு அல்லா போல வேறு ஏதோ ஒரு கடவுள் அவர்களுக்கு கூறிச்சென்றனரா? இவைகளையெல்லாம் அவர்களின் கற்பனைத்திறனுக்கு சான்றாக கூறமுடியுமேதவிர சம்பந்தப்பட்டவர்களின் தெய்வீகத்தொடர்புகளுக்கு சான்றாக ஆகாது.

டாவின்ஸி வரைந்த படம்

இஸ்லாமியர்களின் அறிவியல் தாகம் எப்படிப்பட்டது? வேத வசனங்களை அறிவியல் வயப்பட்டு பொருள் விளக்குபவ‌ர்கள், அறிவியல் கண்ணோட்டத்தோடு எல்லா வசனங்களையும் அணுகுவார்களா? என்றால் நிச்சயமாக மாட்டார்கள். அணுகியிருந்தால் குரானில் சொல்லப்படும் ஜின்களை எப்படி மெய்ப்பிப்பது எனும் பார்வை அவர்களுக்கு தோன்றியிருக்கும். ஆனால் ஜின்களின் இருப்பை பொருத்தவரை எந்த ஆதாரமோ, அறிவியல் விளக்கங்களோ அவர்களுக்கு தேவையில்லை. அல்லா குரானில் கூறியிருப்பது மட்டுமே போதுமானது, ஜின்கள் எனும் உயிரினங்கள் உலகில் இருக்கின்றன, அதை யாரும் மெய்ப்பிக்கவேண்டிய அவசியமில்லை. இதே போல் ஏனைய வசனங்களையும் எடுத்துக்கொள்ளலாமே, குரான் இன்றைய அறிவியலை மெய்ப்பிப்பதாக நிரூபித்தாக‌ வேண்டிய அவசியமென்ன? பார்ப்பனீய இந்து மதத்தை பொருத்தவரை அது அறிவியலுக்கு எதிரானது என்பது அனைவருக்கும் தெரியும். கிருத்தவமோ கலிலியோ, புருணோ என்று வரலாறுகளை வைத்திருக்கிறது. ஆகவே இஸ்லாம் மட்டுமே இதுபோன்ற மதங்களிலிருந்து வேறுபட்டு அறிவியலை அரவணைத்துச்செல்கிறது எனும் தோற்றத்தை உண்டாக்குவதன் மூலம் எங்கள் மதமே உயர்ந்தது எனவே அதில் வந்து சேர்ந்துகொள்ளுங்கள் என்று ஆள் பிடிக்கும் வேலைதானே தவிர வேறொன்றும் இல்லை. எனவே மதவாதிகளின் கைகளில் அறிவியல் வஞ்சகமாக பயன்படுவதற்கு எதிராக இனி குரானின் வசன‌ங்களை அலசுவோம்.

74 thoughts on “குரான் கூறுவது அறிவியலாகுமா?

 1. ////////எனவே மதவாதிகளின் கைகளில் அறிவியல் வஞ்சகமாக பயன்படுவதற்கு எதிராக இனி குரானின் வசன‌ங்களை அலசுவோம்.///////////////////////////
  நல்லது உங்களுடைய முயற்சி தொடரட்டும்.எல்லோரும் படியுங்கள்……

 2. கோள்கள், துணைக்கோள்கள், நட்சத்திரங்கள் யாவும் நீந்திச் செல்ல அவைகளின் படைப்பாளானால் வடிவமைக்கப்பெற்ற பேரண்டப் பெருவெளியே ஆகாயம். இது பூகோளத்தைப் போன்று பற்பல கோள்களையும், நிலவைப் போன்று பற்பல துணைக் கோள்களையும் கொண்டிருந்தாலும், அவை எவற்றிலும் வாழ்வதற்குரிய வசதியை இதுவரை கண்டறியாத அறிவியல் கண்களுக்கு இப்பூமியில் காணப்படும் வாழ்க்கை வசதி அளப்பறிய வியப்பை அளிக்கிறது. அத்துடன் முந்தைய பகுதிகளில் ஆய்வு செய்த குர்ஆனிய வசனங்களான,

  ‘வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாகவும் அமைத்தோம்’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 21 அல் அன்பியா – வசனம் 32)

  ‘அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியை தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்..’ (அல்- குர்ஆன் அத்தியாயம் 40 ஸுரத்துல் முஃமின் – வசனம் 64),

  ‘அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்..’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 67 ஸுரத்துல் முல்கு – 15வது வசனம்)

  ‘..வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா?..’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 67 ஸுரத்துல் முல்கு – 17வது வசனம்)

  மேற்கண்ட வசனங்களை மெய்ப்பித்து நிற்கிறது.

  ஏனைய கோள்களை, துணைக்கோள்களைப் போல பூகோளத்திலும் வாழ்க்கை வசதி அற்ற சூழ்நிலையும், அச்சூழ்நிலையை அளிப்பதில் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும் காற்று மண்டலக் கூரையும் இல்லாத நிலை நீடித்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக உயிரினம் தோன்றிய பூமியில் மட்டும் அந்த வசதியும், சூழ்நிலையும் ஏற்படுத்தப் பட்டிருப்பதிலிருந்தே பூமியில் உயிரினம் வாழவேண்டும் என்ற நாட்டமும், நோக்கமும் கொண்ட ஏதோ ஒரு சக்தி செயல் பட்டிருக்கிறது எனபதை உணரலாம். அதற்கு இதுவரை கூறப்பட்டவை அசைக்க முடியாத அறிவியல் ஆதாரங்களாகும்.

  அறிவியல் அபிமானிகளே! இவற்றை மறுப்பதற்குரிய அறிவியல் ஆதாரங்கள் எவற்றையேனும் உங்களால் காட்ட முடியமா?.

  மானிடக் கற்பனைகளையே கடை விரித்து வேதங்களாய் அறிமுகப் படுத்தப் பட்டதைக் காலங்காலமாய்க் கண்டு வந்ததால் இறை மறுப்பில் இறுகிப்போன உள்ளங்களே! உங்கள் முன் எடுத்துக் காட்டப்படும் மெய்யான இறை வேதத்தின் தூய வசனங்களுக்கு நவீன அறிவியல் அசைக்க முடியாத சாட்சியாய் தன்னை அர்ப்பணித்து நிற்பதை காண்கிறீர்கள் அல்லவா?. எனினும் நீங்கள் கண்டு வந்த கற்பனைப் புதினங்கள் அறிவியலோடு மோதுவதால், வேதங்கள் என்றாலே இப்படித்தான் என்ற எண்ணத்தில் இறுகிப்போன உங்களில் சிலருக்குப் பரிசுத்த குர்ஆனின் அறிவியல் ஆதாரங்கள் வியப்போடு – வினாவையும் எழுப்புகின்றனவா?. உங்கள் வினாக்குறிகள் யாவற்றையும் அகற்றக் கூடிய ஆதாரங்களை – பரிசுத்த குர்ஆன் இறை வசனங்களே என்பதற்குரிய அறிவியல் சான்றுகளை – ஒவ்வொன்றாக உங்கள் முன் எடுத்துக் காட்டுகிறோம். சிந்திக்கத் தெரிந்தவர்களே! விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு அவைகளைச் சிந்தியுங்கள்.

  நவீன அறிவியல் விண்ணகப் பருப்பொருட்களின் (Clestrial Bodies) சலனங்களை, வானசாஸ்திரத்தைப் (Astronomy) பற்றி என்ன கூறுகிறதோ அதை இம்மியும் பிசகாமல் 1400 வருடங்களுக்கு முன் பரிசுத்த குர்ஆன் கூறி நிற்கும் அதிசயத்தைப் பாருங்கள். பரிசுத்த குர்ஆன் பறை சாற்றுகிறது:

  ‘நிச்சயமாக வானங்களும், பூமியும் (ஒன்றை விட்டு ஒன்று) விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கிறான்: அவை இரண்டும் விலகுமாயின், அதற்கு பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது..'(அல்-குர்ஆன் 35வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபா(த்)திர் 41வது வசனம்).

  இந்த வசனத்தில் வானங்களும், பூமியும் விலகும் வாய்ப்பைக் கொண்டன என்றும், ஆனால் அவை விலகி விடாத ஏற்பாடு ஒன்றை அமைத்து, அவை விலகும் வாய்ப்பைத் தடுத்துக் கொண்டிருப்பதாகவும் இறைவன் கூறுகிறான்.

  இந்த அற்புத வசனம் அறிவியல் வாயிலாக நிரூபிக்கப்பட வேண்டுமாயின் பூமியும், ஆகாயமும் விலகும் வாய்ப்பு இருக்கிறதா? என முதலாவதாக நாம் ஆய்வு செய்ய வேண்டும். நாம் இதைக் கூறும்போது.. என்னய்யா உளறுகிறீர்கள்?. விண்ணும் மண்ணும் விலகக் கூடியதா?. முடியாது எனக் கூறித் தாங்கள் கற்றுணர்ந்ததைக் கூடப் பொருத்திப் பார்க்காத அல்லது பொருத்திப் பார்க்க விரும்பாத கல்விமான்களை இந்த நூற்றாண்டில் கூட நாம் பார்க்கிறோம். நிலமை இவ்வாறிருக்க 1400 ஆண்டுகளுக்கு முந்திய அறியாமை காலத்தில் வாழ்ந்த எந்த மனிதனாவது இந்த அறிவியல் பேருண்மையைக் கற்பனை செய்து பார்த்திருக்க முடியுமா?. இருந்தும் அந்த மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்கிறார் என்றால் இது அவருடைய சொந்த வார்த்தை அல்ல என்றும், விண்ணும் மண்ணும் படைத்து, அவை விலகாமல் இருக்கும் செயல் முறைகளையும் அவைகளில் வடிவமைத்தவன் யாரோ, அவனுடைய வார்த்தைகளே என்றும் ஏற்பதில் தயக்கம் காட்டுவது முறைதானா?.

  விண்ணும், மண்ணும் விலகிப்போகும் வாய்ப்பைக் கொண்டன எனப் பறை சாற்றியதே பரிசுத்தக் குர்ஆன், அதை நிரூபிக்கக் கூடிய அறிவியல் சான்றுகள் எவை?. இதற்கு விடைகாணும் பொருட்டு இந்தப் பரிசுத்த குர்ஆனின் வசனத்திடம் மேலும் சற்று நெருங்கிச் செல்வோம்.

  முதலாவதாக இவ்வசனம் விண்ணும், மண்ணும் விலகி விடாமல் தடுக்கப்படுகிறது எனக் கூறுவதிலிருந்து மண்ணானது (பூகோளம்) ஆகாயத்தில் பொருந்தியே இருக்கிறது. அவைகளுக்கிடையில் எந்த இடைவெளியும் இல்லை எனக் கூறுகிறது. இதை வலியுறுத்தும் ஏனைய ஆதாரங்களுள் மேலும் ஒன்றைக் கவனியுங்கள்.

  ‘ஆகாயத்தில் கிரகங்களுக்கான (கோள்களுக்கான) பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து, பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் – 16வது வசனம்).

  இந்த வசனமும் கோள்களைச் சுற்றி ஏதேனும் இடைவெளி இருப்பதாகவோ, அப்படிப்பட்ட இடைவெளிகளில்தான் கோள்கள் இருப்பதாகவோ கூறவில்லை. மாறாகக் கோள்கள் இருப்பது ஆகாயத்தில்தான் எனக் கூறுகிறது. இதிலிருந்து பூகோளத்திற்கு மேல் போர்த்தப் பட்டுள்ள காற்று மண்டலமும் ஆகாயத்தைச் சார்ந்த பகுதியே என்பது தெளிவாகிறது.

  இந்த இடத்தில் மற்றொரு ஐயமும் எழலாம். ‘ஆகாயத்தை ஒரு கூரையாக ஆக்கினான்’ என்று குர்ஆன் கூறிய (40:64) வசனம், காற்று மண்டலத்தை மிகத் துல்லியமாக பிரதிபலிக்கிறதே. ஆகவே கூரையாக ஆக்கப்பட்ட இப்பகுதியை இதற்கு மேலும் நாம் ஆகாயம் என்று எடுத்துக் கொள்ளலாமா? என்பதே அந்த ஐயமாக இருக்கும். இந்த ஐயத்திற்கும் பரிசுத்த குர்ஆன் பதிலளிக்கிறது.

  ‘இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம்?’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் – 22வது வசனம்).

  இந்த வசனத்தில் மழையை அனுப்புவது ஆகாயத்திலிருந்தே எனக் கூறுகிறது குர்ஆன். மழை புறப்படும் இடம் ஆகாயம் எனக் குர்ஆன் கூறுவதால், மழை புறப்படும் இடமாகிய காற்று மண்டலம் ஆகாயத்திலிருந்து தனிமைப் படுத்தப்பட்ட பகுதியல்ல என்பதையும் பரிசுத்த குர்ஆனே விளக்குகிறது. எனவே ஆகாயம் என்ற சொல் காற்று மண்டலத்தையும் உள்ளடக்கியதே என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

  மேற்கண்ட வசனங்களிலிருந்து பூகோளத்தைப் பொருத்தவரை ஆகாயத்தின் கீழ் எல்லை எது எனத் தெரிந்து விட்டது. பூகோளம் (ஏனையக் கோள்களும்) இடைவெளியின்றி ஆகாயத்தில் பொருந்தியிருப்பதால், பூகோளத்தின் மேற்பரப்பிலிருந்து ஆகாயம் பரவியிருக்கிறது என்பது தெளிவாகிறது.

  ஆகாயத்தின் கீழெல்லையைக் கண்டு விட்டோம். சரி. ஆகாயத்தின் மேலெல்லையைப் பற்றி திருக்குர்ஆன் ஏதேனும் கூறுகிறதா?. நிச்சயமாக கூறுகிறது. ஆகாயத்தின் மேலெல்லையைப் பற்றி அதற்குரிய ஆதாரங்களுடன் அருள்மறை குர்ஆன் கூறவே செய்கிறது.

  ‘நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் ஆகாயத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அலங்கரித்தோம்.’ (அருள்மறை குர்ஆன் 37 வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸாஃப்ஃபாத் 6வது வசனம்)

  ‘ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?. இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.’ (அருள்மறை குர்ஆன் 71வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸாஃப்ஃபாத் 6வது வசனம்).

  மேற்கண்ட வசனங்களிலிருந்து இத்தலைப்புக்குத் தேவையான விபரங்களை மட்டும் பார்ப்போம். ஆகாயங்கள் மொத்தம் ஏழு எனவும், பூமிக்குரிய ஆகாயமே நட்சத்திரங்களின் அழகால் அலங்கரிக்கப் பட்டுள்ளது எனவும் எல்லா ஆகாயங்களிலும் நட்சத்திரங்கள் (சூரியன்), துணைக்கோள்கள் (சந்திரன்) உள்ளடங்கியுள்ளன எனவும் குர்ஆன் கூறுகிறது.

  (குறிப்பு: இவ்வசனத்தில் காணப்படும் ஆகாயத்தின் எண்ணிக்கை ஏழு என்பதை மட்டுமே அறிவியல் இதுவரை புரிந்து கொள்ளாமல் இருக்கிறது. ஏனைய விஷயங்கள் யாவற்றையும் அறிவியல் உண்மை என நிரூபித்துவிட்டது. இன்ஷா அல்லாஹ் அவைகளை நாம் இனிவரும் அதற்குரிய தலைப்புகளில் விவாதிப்போம்.)

  மேற்கண்ட வசனத்தில் ஆகாயங்கள் யாவும் நட்சத்திரங்களை உள்ளடக்கி இருக்கின்றன என கூறுவதிலிருந்து, ஆகாயத்தின் மேலெல்லையும் நட்சத்திரங்களை உள்ளடக்கி நிற்கிறது எனக் காண்கிறோம்.

  ‘நட்சத்திரங்களை உள்ளடக்கி நிற்கிறது’ என்று கூறினால் என்ன பொருள்?. பிரபஞ்சம் முழுவதும் நட்சத்திரங்கள் பரவி, அந்த நட்சத்திரங்களை உள்ளடக்கும் விதத்தில் ஆகாயமும் பரவி எல்லையே இல்லாமல் ஒரே பெருவெளிதானா?. அல்லது பிரபஞ்சத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதி வரை ஆகாயமும், அதிலுள்ள நட்சத்திரங்களும் பரவி, பிரபஞ்சத்திலிருந்து தனிப்பட்ட, தனியொரு பொருளாக ஆகாயம் இருக்கிறதா? என்ற வினா இப்போது எழுகிறது. இந்த வினாவுக்கும் பரிசுத்த குர்ஆனே விடையளிக்கிறது:

  ‘ஜின் (மற்றும்) மனித சமூகத்தினரே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்..’ (அருள்மறை குர்ஆன் அத்தியாயம் 55 ஸுரத்துர் ரஹ்மான் – 33 வது வசனம்)

  மேற்படி வசனம் பிரபஞ்சம் முழுவதுமே ஆகாயமன்று. ஆகாயங்களுக்கும் நிச்சயமாக ஓர்; எல்லை இருக்கிறது. எனவே ஆகாயம் எனத் தனியான ஒரு அமைப்பு இருக்கவே செய்கிறது என்பதை தெளிவாக அறிவிக்கிறது.

  இதுவரை நாம் கண்ட விஷயங்களில் இருந்து பூமியின் மேற்பரப்பிலிருந்து துவங்கிக் கோள்களையும், துணைக் கோள்களையும், நட்சத்திரங்களையும் உள்ளடக்கிய அகன்ற பெருவெளியாய்ப் பரவி, அதே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கும் உட்பட்டு தனிச் சிறப்புடன் விளங்குவதே ஆகாயம் (பேரண்டம்) எனக் கண்டோம்.

  விண்ணகப் பருப்பொருட்கள் யாவற்றையும் உள்ளடக்கி, நெடிதுயர்ந்து பரவிக் கிடக்கும் பேரண்டப் பெருவெளி. அதில் ஏனைய பருப்பொருட்களைப் போல் இடைவெளி ஏதுமின்றி பொருந்தி நிற்கும் பூகோளம். இந்த பூகோளம், அது பொருந்தி நிற்கும் பேரண்டப் பெருவெளியிலிருந்து விலகிச் செல்லும் வாய்ப்பைக் கொண்டதா?. ஆம் எனில் அது விலகிச் செல்கிறதா?. இல்லையெனில் அந்த விலகலைத் தடுக்கும் சக்தி ஒன்று அதற்குள் செயல்படுகிறதா?. இதுவே நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் கருப்பொருள்.

  பரிசுத்த குர்ஆனின் பிரகடனத்தை, அதன் உண்மை நிலையை நமக்குக் கற்றுத்தர, அருள்மறை குர்ஆன் மேலும் கூறுகிறது:

  ‘இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான்: (அவை) யாவும் (அவைகளுக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் செல்கின்றன.’ (அருள்மறை குர்ஆன் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியா – 33வது வசனம்).

  அற்புதம்தான்! நவீன வான சாஸ்திரத்தின் திறவுகோலையும் நமக்களித்து, நாம் தேடிச் செல்லும் கருப்பொருளின் நுழைவாயிலுக்கே நம்மை அழைத்துச் செல்கிறது ஒப்பற்ற இறை வேதத்தின் மெய்யான இந்த பரிசுத்த வசனம்.

  என்ன கூறுகிறது இந்த வசனம்? விண்ணில் காணப்படும் சூரியன், சந்திரன், உள்ளிட்ட பருப்பொருட்கள் யாவும் ஒரே இடத்தில் ஓய்ந்திருக்காமல் அவைகளுக்கென்றே இருக்கும் மண்டலங்களில் அவை ஒவ்வொன்றும் பயணம் செய்கின்றன எனக் கூறுகிறது.

  அற்புதமல்லவா! இது புவி மையக் கோட்பாட்டை (Earth Centre Theory) தகர்த்தெறியவில்லையா?. (இது புவி மையக் கோட்பாட்டை Earth Centre Theory என்றால் என்ன என்பதை இன்ஷா அல்லாஹ் பின்னர் விளக்குவோம்) எங்கிருக்கிறீர்கள் நண்பர்களே!. இதில் எதை நீங்கள் மறுக்கிறீர்கள்?. விண்ணகப் பருப்பொருட்களின் (Celestial Bodies) சலனத்தை மறுக்கிறீர்களா?. அல்லது அவைகளுக்குரிய மண்டலத்தை (Orbit) மறுக்கிறீர்களா?. இல்லை. இரண்டையுமே நீங்கள் ஒப்புக் கொண்டு இந்த வசனம் மெய்யான வசனமே என உங்களை அறிந்தோ – அறியாமலோ அதற்கு சாட்சியாக நிற்கிறீர்கள்.

  பரிசுத்த குர்ஆனை மெய்ப்பிக்க வந்த அறிவியல், இந்த விண்ணகப் பருப்பொருட்களின் சலனத்தைப் பற்றி என்ன கூறுகிறது?.

  சந்திரன் மணிக்கு 3,600 கி.மீ. வேகத்தில் செல்கிறது. பூமியானது மணிக்கு 1,08,000 கி.மீ. வேகத்தில் ஓடுகின்றது. சூரியன் மணிக்கு 9,00,000 கி.மீ. வேகத்தில் பாய்கிறது எனக் கூறுகிறது அறிவியல்.

  சூரியன் மட்டும்தான் ஓடுகின்றதா? ஏனைய நட்சத்திரங்கள் ஓடவில்லையா?. ஏனில்லை?. அனைத்தும் ஓடுகின்றன. வானியல் அறிஞர்கள் நிறமாலை நோக்கிகளின் (Spectroscops) துணை கொண்டு விண்ணை ஆய்வு செய்யக் கற்றுக் கொண்ட பின் விண்ணில் எதுவும் ஓய்ந்திருக்கவில்லை: யாவும் அவைகளுக்குரிய திசைகளிலும், திசை வேகத்திலும் (Orbital Velocity) சென்று கொண்டிருக்கின்றன எனக் கூறிப் பரிசுத்த குர்ஆன் மெய்யான இறைவேதமே என்பதற்கு தன்னையே சாட்சியாக அர்ப்பணித்து நிற்கிறது.

  அறிவியல் அபிமானிகளே! நாம் வசிக்கும் இந்த பூமி ஓரிடத்தில் ஓய்ந்திருக்காமல் அதன் பாட்டுக்கு மணிக்கு 1,08,000 கி. மீ. வேகத்தில் ஓட்டம் பிடித்தால் என்றேனும் ஒரு நாள் இந்த பூகோளம் பேரண்டத்தின் எல்லையை தாண்டுமா, தாண்டாதா?. அதுதான் போகட்டும் – கோடிக்கணக்கான வருடங்களாக இந்த நிகழ்ச்சிப் போக்கு நடந்து கொண்டிருக்கையில் குறைந்த பட்சம் இந்த பூமி அது உள்ளடங்கியிருக்கும் பால்வழி மண்டலத்தையாவது (Milky Way Galaxy) என்றோ தாண்டியிருக்க வேண்டாமா?. தாண்டியே சென்றிருக்க வேண்டும். ஆனால் ஏன் தாண்டவில்லை?.

  ஆகாயத்திற்கு ஓர் எல்லை உண்டு என்று பரிசுத்த குர்ஆன் கூறியதையோ, அல்லது பால்வழி மண்டலம் (அதைப்போன்று பற்பலவும்) உண்டு என அதே பரிசுத்த குர்ஆன் கூறுவதையோ (இதுபற்றிய விபரம் இன்ஷா அல்லாஹ் வேறு தலைப்பில் ஆய்வு செய்வோம்) நீங்கள் மறுக்கிறீர்களா?. இல்லை. நவீன அறிவியலின் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகள் (Telescope) பேரண்டத்தின் எல்லைகளையே நமக்குக் காட்டி, இப்பேரண்டம் ஓர் எல்லைக்குட்பட்டதே என 1400 வருடங்களுக்கு முன்பே அறிவியல் பேருலகில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய பரிசுத்த குர்ஆனை மெய்ப்பித்து நிற்கையில் நீங்கள் குர்ஆனை மறுக்க முடியாது. பேரண்டத்திற்கு ஓர் எல்லை இருப்பதும் உண்மை: அந்தப் பேரண்டத்திற்குள் பூகோளமும், ஏனைய யாவும் விண்ணோட்டம் நிகழ்த்தி கொண்டிருப்பதும் மெய்யே என ஒப்புக் கொண்ட பிறகு, விண்ணோடிக் கொண்டிருக்கும் இப்பொருட்கள் என்றேனும் ஒரு நாள் அதற்குள்ளிலிருந்து விலகிச் செல்லுமா, செல்லாதா என்ற வினா எழுகிறதா இல்லையா?.

  அறிவார்ந்த நண்பர்களே! மேற்கண்ட அதே வினாவை வேறு வார்த்தைகளில் கேட்டால் எப்படிக் கேட்கலாம்?. ஆகாயமும், பூமியும் விலகுவதற்குரிய வாய்ப்பு உண்டா என்று கேட்கலாம். இப்படியொரு கேள்வியைக் கேட்க வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த ஞானக் களஞ்சியமாம் பரிசுத்த குர்ஆன் (அதை மெய்ப்பிக்க வந்த அறிவியலும்) அறைந்தது: விலகாது! விலகவே விலகாது! ஏனெனில் விலகாதவாறு அவைகளைப் படைத்த அதியற்புதப் படைப்பாளனாகிய அதனுடைய படைப்பாளன்தான் அதனைத் தடுத்துக் கொண்டிருக்கிறான் என்று.

  (இந்த இடத்தில் சகோதரர்கள் யாரும் அவசரப் பட வேண்டாம். இவை யாவும் ஒரு குறிப்பிட்ட தவணை (35:45) வரைதான் என்பதை வேறு தலைப்பில் நாம் விவாதிப்போம், இன்ஷா அல்லாஹ்)

  விண்ணும், மண்ணும் விலகாமல் தடுக்கப்படுகிறது என்று கூறுகிறதே பரிசுத்த குர்ஆன். இதிலாவது உங்கள் எவருக்கும் ஐயம் ஏற்படுமா?. அப்படி ஏதேனும் ஐயம் ஏற்படுமேயானால் இரண்டு காரணங்களால் உங்கள் ஐயம் விலகியாக வேண்டும். முதல் காரணம் மெய்யாகவே பூகோளத்தின் விண்ணோட்டம் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டும் இலக்கில் அமைந்திருந்தால் தற்போது நமது பூமி பால்வழி மண்டலத்தில் இருந்திருக்க முடியாது. ஏன்?. ஏனென்றால் பூமியின் திசை வேகம் இம்மண்டலத்தை என்றோ – அதைத் தாண்டச் செய்திருக்கும். எப்படி?.

  எப்படியென்பதைப் பார்ப்போம். பால்வழி மண்டலத்தின் பருமன் 10,000 ஒளியாண்டுகள் ஆகும். ஒளியாண்டு (Light year) என்பது ஒரு மூலப் பொருளிலிருந்த புறப்படும் ஒளி வருடம் முழுவதும் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தால் எவ்வளவு தொலைவை அது கடக்குமோ, அவ்வளவு தொலைவு என்பது அதன் பொருள். ஒளி ஒரு வினாடியில் செல்லும் தொலைவு (தூரம்) 3,00,000 கி. மீ. ஆகும். இதன்படி நிதானமாகக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு மணி நேர ஒளித்தூரம் என்பது 10,000 மணிநேர பூமி பயணத் தூரத்திற்கு சமமாகும். ஆகவே 10,000 ஒளி வருடப் பருமன் கொண்ட பால்வழி மண்டலத்தை பூகோளம் வெறும் 10 கோடி வருடத்திற்குள்ளாகவே கடந்து சென்றிருக்கும். ஆனால் பேரண்டத்தில் பூகோளம் உருவாகி 500 கோடி வருடங்களாக பூகோளத்தின் விண்ணோட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தும் கூட, இந்த பூகோளம் பால்வழி பெருமண்டலத்திலேயேதான் இருந்து வருகிறது. ஆகவே விண்ணும், மண்ணும் விலகாமல் தடுக்கப்படுகிறது என்று கூறும் பரிசுத்தக் குர்ஆனை நம்பித்தான் ஆக வேண்டும் என முதல் காரணத்தில் காணப்படும் அறிவியல் பேருண்மையே நம்மீது நிர்ப்பந்தம் செலுத்துகிறது.

 3. அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்

  “ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்) நூற்கள்: புஹாரி, முஸ்லிம்

  அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.

  சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.

  “இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

  பிற மதத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களுடைய இறைவேதம் என்று கூறிக்கொள்ளும் நூல்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. அவையெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டவை; இந்த காலத்திற்கு ஒத்து வராது என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களின் வேத நூல்களில் கூறப்பட்ட பல விஷயங்கள் தற்கால நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு முரணாக இருப்பதை உணர்ந்தாலும், அவற்றைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. அது போன்றே அவர்கள், திருக்குர்ஆனையும் நினைக்கின்றனர். இதுவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் (Proven Scientific Facts) எவையும் அல்குர்ஆனிற்கு முரணாக இல்லை என ஒவ்வொரு முஸ்லிமும் மார்தட்டிக் கொள்ள முடியும். அதே நேரம், இதனை விளங்காத மக்களுக்கு இவற்றை எடுத்து விளக்க வேண்டிய கடமை முஸ்லிம்கள் மேல் உள்ளது.

  எண்ணற்ற அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் பொதிந்து கிடைக்கின்றன. இயற்பியல், வேதியியல், உயிரியல், கருவியல், வானியல் என திருக்குர்ஆன் தொடாத அறிவியல் பகுதிகளே இல்லை என கூறும் அளவிற்கு கட்டுக் கதைகளாக இல்லாமல், அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றுள் சில:

  ஆழ் கடலில் அலை

  இரு கடல்களுக்கிடையே தடுப்பு

  நிலத்தடி நீர் சேமிக்கப்படும் முறை

  திருப்பித் தரும் வானம்

  பெருவெடிப்புக் கொள்கை

  முகடாக வானம்

  வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி

  விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்

  சூரியனும் கோள்களும் நகர்ந்து நீந்துதல்

  வானத்திலும் பயணம் செய்ய வழிகள்

  முளைகளாக மலைகள்

  பூமியில் மலையின் உயரம் அளவிற்குக் கீழே செல்ல இயலாத நிலை

  பூமி உருண்டை

  பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம்

  ஓரங்களில் குறைந்து வரும் பூமி

  மனிதர்களின் எடைக்கேற்ப பூமியின் எடை குறைதல்

  புவி ஈர்ப்பு சக்தி

  விரல் ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம்

  கலப்பு விந்து

  கர்ப்ப அறையின் தனித்தன்மை

  வேதனையை உணரும் நரம்புகள்

  தேன் உற்பத்தி

  இவையனைத்தையும் விளக்க முற்பட்டால், அதுவே தனி புத்தகமாக ஆகிவிடுமாதலால், விரிவஞ்சி முஸ்லிம்களிடையே அதிகம் அறிமுகம் இல்லாத, அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஓரிரு அறிவியல் உண்மைகளை காண்போம்.

  தராசை நிலை நிறுத்திய அல்லாஹ்:

  அவன் (அல்லாஹ்) வானத்தை உயர்த்தினான்; நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள்! என்று தராசையும் நிறுவினான். நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள்! எடையில் குறைத்து விடாதீர்கள்! (அல்குர்ஆன் 55:7-9)

  balance

  மேற்கண்ட வசனம் இருபெரும் அறிவியல் உண்மைகளை நமக்கு எடுத்தியம்புகின்றது. முதலாவதாக, “அல்லாஹ் வானத்தை உயர்த்தினான்” என்ற வசனம் 20 ஆம் நூற்றாண்டின் அரும்பெரும் கோட்பாடான “பெரு வெடிப்புக் கொள்கை”-யை கூறுகின்றது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பதாக இந்த பேரண்டம் சிறு கேலக்ஸிகளாக மிக நெருக்கத்துடன், நட்சத்திரங்கள் பூமியோடு நெருங்கிய நிலையிலேயே இருந்தது. பேரண்டத்தின் விரிவாக்க சக்தியின் மூலமாகவே வானமும், வானத்தில் உள்ள பொருட்களும் பிரிந்து, உயர்ந்து சென்றுள்ளன. 1400 ஆண்டுகளுக்கு முன்பதாக எழுதப் படிக்கத் தெரியாத நபியான முஹம்மது (சல்) அவர்களால், கண்டிப்பாக இச்செய்தியை கூறியிருக்க முடியாது; மாறாக, இதனையெல்லாம் படைத்து, இயக்கும் ஏக இறைவனால் மட்டுமே இதனைக் கூறியிருக்க முடியும் என்பது தெளிவு.

  அடுத்ததாக, நிறுப்பதில் நாம் நீதி தவறக்கூடாது என்பதற்காக, வானத்தை உயர்த்தி, தராசை நிறுவியதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்தை புரிந்து கொள்வதற்கு முன்னதாக, பொருண்மை (Mass), எடை (Weight) இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொருளின் பொருண்மை என்பது அது தன்னகத்தே கொண்டுள்ள பருப்பொருளின் அளவைப் பொருத்தது; எடை என்பது அப்பொருளின் மீது செயல்படும் (புவி) ஈர்ப்பு சக்தியின் அளவாகும். எடுத்துக்காட்டாக, 25 கன சென்டி மீட்டர் கொள்ளளவுள்ள ஒரு ரப்பராலான பொருளையும், அதே கொள்ளளவுள்ள ஒரு இரும்புக்கட்டியையும் தராசின் இரு தட்டுகளில் வைத்தால், இரும்புக்கட்டி வைக்கப்பட்ட தட்டு கீழிறங்கி இருக்கும். ஒரே அளவான பொருட்களாக இருப்பினும், இரும்பின் பொருண்மை, ரப்பரின் பொருண்மையை விட அதிகம் என்பதே இதற்குக் காரணம். ஆனால், இதே தராசை பூமியை விட்டு மேலே 2000 கி.மீ. உயரத்திற்குச் சென்று விண்வெளியில் பிடித்தோமானால், இரு தட்டுகளும் சமமாகவே இருக்கும். பூமியில் வேலை செய்த தராசு விண்வெளியில் வேலை செய்யவில்லையே ஏன்? ஏனெனில், நாம் தராசில் நீதி தவறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணுக்குப் புலனாகாத ஈர்ப்பு சக்தியை அல்லாஹ் ஏற்படுத்தி, அந்த புவியீர்ப்பு விசை மூலம் பொருட்களின் சரியான எடையை நாம் அறிந்து கொள்ளச் செய்திருக்கிறான் என்பது இதிலிருந்து விளங்குகின்றது.

  வானத்தை கூரையாக்கிய அல்லாஹ்:

  வானத்தைப் பாதுகாக்கப்பட்ட கூரையாக்கினோம்; அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்! (அல்குர்ஆன் 21:32)

  பூமியின் ஒரு நாள் கணக்குப்படி, தினமும் சுமார் 800 கோடி விண்கற்கள் விண்வெளியிலிருந்து பூமியைத் தாக்குகின்றன என அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். சூரியக்குடும்பத்தில் நாம் வாழும் பூமியானது மூன்றாவது கோளாகும். இதற்கடுத்து செவ்வாய், வியாழன் என்ற கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவைகளுக்கிடையே, ஆயிரக்கணக்கான சிறு கோள்களும், கோடிக்கணக்கான சிறு விண்கற்களும் சூரியனை அகல வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே இருந்த கோள் வெடித்து சிதறியதனால் தோன்றியவையே இந்த சிறு கோள்களும், விண்கற்களும், வால் நட்சத்திரங்களும் ஆகும். பெரும்பாலான விண்கற்களின் அளவு, நாம் ஹஜ்ஜின் போது சைத்தானுக்கு எறியும் கற்களைவிட சிறிதான கூழாங்கல் அளவிலிருந்து சிறு மண்துகள் அளவு தான். ஆனால், இவற்றின் வேகமோ, விநாடிக்கு ஏறக்குறைய 42 கி.மீ. பூமியானது சூரியனை விநாடிக்கு சற்றேறக்குறைய 30 கீ.மீ வேகத்தில் சுற்றுகின்றது. இந்த விண்கற்கள் சூரியனைச் சுற்றும்போது, சற்றே பாதை விலகினால், புவியின் ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்டு பூமியின் மீது மோதுகின்றன.

  meteorite2

  இவ்வாறாக எதிரெதிர் திசையில், விண்கல் பூமியின் மீது மோதினால் என்ன நிகழும்? விநாடிக்கு 64 கி.மீ. வேகத்தை, சிறு மண்துகள் போன்ற விண்கல் பெற்று விட்டால், ஒரு அங்குலம் தடிமனுள்ள இரும்புத்தகட்டையே துளைத்துச் சென்று விடும் சக்தியை பெற்று விடுவதாக கணக்கிட்டுள்ளனர். இருப்பினும், பூமியைச் சுற்றி, காற்று மண்டலப் போர்வையை அல்லாஹ் ஏற்படுத்தி, நம்மைக் காத்து அருள் புரிந்துள்ளான். கடுமையான வேகத்தில், பூமியின் காற்று மண்டலத்திற்குள் நுழையும் இந்த விண்கற்கள், காற்றில் உராய்ந்து, அதன் காரணமாக சூடாக்கப்பட்டு, உருகி எரிந்து சாம்பலாகி காற்று மண்டலத்தோடு கலந்து விடுகின்றன. இவ்வாறாக இறைவன் காற்றுப் போர்வை மூலம் நம்மையும், நாம் வாழும் பூமியையும் காத்தருளி உள்ளான்.

  இறைவன் வழங்கிய அற்புதமான திருக்குர்ஆனின் அறிவியல் உண்மைகளை கண்டுணர்ந்து, சிந்திக்கக்கூடிய முஸ்லிமல்லாத மக்களுக்கு எத்தி வைப்பதன் மூலம், சத்திய இஸ்லாத்தினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இஸ்லாத்தின் பால் ஈர்க்க முடியும், இன்ஷா அல்லாஹ்.

  ரியாத் ஃபெய்ஸல்

 4. இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள்

  முதுபெரும் இயற்பியல் அறிஞரும், நோபல் பரிசினை வென்றவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார்: மதத்தினை மெய்ப்பிக்காத அறிவியல் முடமானது; அறிவியலை மெய்ப்பிக்காத மதம் குருடானது.

  இஸ்லாத்தினைத் தவிர பிற மதங்கள் அறிவியல் ஆய்வுகளைக் கண்டு கொள்ளுவதில்லை. தங்களுடைய வேதப் புத்தகங்களை தற்கால அறிவியல் உண்மைகளுடன் பொருத்திப் பார்ப்பது இல்லை. அது, அவர்களுக்கு தேவையாகவும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் அல்லாதவர்கள், தங்களுடைய வேதப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் தற்கால அறிவியலுக்கு முரணாக இருப்பதை அறிந்து கொள்ளவும் முற்படுவதுமில்லை. ஆனால், இஸ்லாம் இவைகளுக்கு மாற்றமாக மக்களை நோக்கி சவால் விடுகின்றது.

  வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190) வானங்களும், பூமியும் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்து குர்ஆனோடு பொறுத்திப் பாருங்கள் என்று அறைகூவல் விடுக்கின்றது.

  குர்ஆனில் உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகமான வசனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் கருத்துக்களை உட்பொருளாகக் கொண்டுள்ளன. குர்ஆன் என்பது அறிவியல் புத்தகமல்ல; எனினும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் எவையும் குர் ஆனோடு முரண்படவில்லை என்பதை நடுநிலையான அனைத்து அறிவியலாளர்களும் ஒத்துக் கொள்வர். திருக்குர் ஆனின் உள்ள அறிவியல் உண்மைகள் எதேச்சேயானவை என்று கூறுவதற்கும் வாய்ப்பில்லை அன்ற அளவிற்கு ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன.

  திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிவியல் செய்திகளையும் இக்கட்டுரையில் குறிப்பிட முடியாது எனினும் “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதை கீழ்க்கண்ட இரு செய்திகளின் மூலம் அறியலாம்.

  பெருவெடிப்புக் கொள்கை:

  வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)

  பெருவெடிப்புக் கொள்கை (‘The Big Bang’) மூலமாகவே, இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதில் வானியற்பியல் வல்லுனர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. பெருவெடிப்புக் கொள்கை என்பது,

  1. இந்த முழுப் பிரபஞ்சமும் முன்னதாக மாபெரும் பருப்பொருளாக (Primary Nebula) இருந்தது.

  2. பின்னர், பெரு வெடிப்பு ஏற்பட்டு பிரபஞ்சங்கள் உருவாகின.

  3. அவை பிறகு நட்சத்திரங்கள், கோளங்கள், சூரியன் – சந்திரன்களாக உருவாகின.

  – என்பதாகும்.

  அணு சக்தி ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பு (European Organization for Nuclear Research-CERN), இந்த பெருவெடிப்பை ஆய்வுக்கூடத்தில் நடத்தி அணு ஆற்றல் பருப்பொருளாக எவ்வாறு மாறுகின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக, பிரா‌ன்‌ஸ்-சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 ‌மீட்டர் ஆழ‌த்‌தி‌ல் 27 ‌‌கி.‌மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையைப் போன்ற சோதனைக்கூடத்தில் தான் அணுக்களை உடைத்து நொறுக்கும் இயந்திரம் கடந்த செப்டம்பர் மாதத்தில் உருவாக்கியது.
  protoncollision

  (படம்: புரோட்டான்களின் மோதல் வரைபடம்)

  சுமார் 595 கோடி டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பெருவெடிப்பு சோதனை‌யை துவக்கினர். சுரங்கத்தின் 2 இடங்களில் இரு‌ந்து புரோ‌ட்டா‌ன்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மாற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் எவ்வாறு தோன்றியது என்பதைக் கண்டு‌பிடி‌க்க‌ திட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தை கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனர். ஆனால் பெருவெடிப்பு சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏ‌ற்ப‌ட்டது. கு‌ளிரூ‌ட்டு‌ம் கரு‌வி ஒ‌‌ன்‌றி‌ல் இரு‌ந்து ஒரு ட‌ன்‌னி‌ற்கு‌‌ம் மே‌ற்ப‌ட்ட ‌திரவ ‌நிலை‌யிலான ஹீ‌லிய‌ம் வாயு க‌சி‌ந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்ட ஆய்வுகள் அடுத்தாண்டில் நடக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

  இவ்வளவு சிரமப்பட்டு நடத்தப்படும் ஆய்வு உண்மையை திருக்குர்ஆன் எளிதாக 21:30ல் நமக்குக் கூறுகின்றது.

  படம்: LHC (Large Hydron Collider) எனப்படும் பெருவெடிப்பு ஆய்வுக்கூடம்

  படம்: LHC (Large Hydron Collider) எனப்படும் பெருவெடிப்பு ஆய்வுக்கூடம்

  பூமிக்கும் வானிற்கும் இடைப்பட்ட பகுதி:

  சில காலத்திற்கு முன்பு வரை, பூமிக்கு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் உள்ள விண்வெளியானது வெறும் வெற்றிடம் என்றே அறிவியலாளர்கள் கூறி வந்தனர். ஆனால், தற்போது விண்வெளியானது திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பருப்பொருளான “பிளாஸ்மா” என்ற அயனிய பொருண்மை பாலங்களால் (bridges of matter) ஆனவை என்பது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வானிற்கும், பூமிக்கும் இடைப்பட்ட பரப்பு வெற்றிடமல்ல என்பது தெளிவாகி உள்ளது.

  அவனே (இறைவேனே) வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் படைத்தான். (அல்குர்ஆன் 25:59) என்பதாக அல்லாஹ், தன் இறைவேதத்தில் குறிப்பிடுகின்றான். பூமிக்கும், வானிற்கும் இடைப்பட்ட பகுதி வெற்றிடமாக (vacuum) இருந்தால், இறைவன் பூமியையும், வானங்களையும், “இடைப்பட்ட பகுதியையும்” என்று சேர்த்துக் கூறத் தேவையில்லை.
  இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள்

  படம்: பால்வெளி பகுதியில் அயனிய பொருண்மை வெளி (வெற்றிடம் அல்ல என்பதற்கு சான்று)

  1400 ஆண்டுகளுக்கு முன்னதாக எந்த ஒரு தனி மனிதனின் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட செய்தியை, அறிவியல் உணமையை இஸ்லாம் எடுத்துக்காட்டுகின்றது.

  மேற்கண்ட இரு எடுத்துக்காட்டுகளும், இஸ்லாம் இன்றைய நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு எவ்வாறு ஒத்துள்ளது என்பதை விளக்குகின்றது. தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதையல் போல குர்ஆனை ஆய்வு செய்தால், இஸ்லாம் இவ்வுலகிற்கு வழங்கிய அறிவியல் கொடைகளை அனைவரும் அறிய முடியும்.

  அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக (பூமியின்) பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 41:53)

  ரியாதிலிருந்து ஃபைசல்

 5. இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?

  இரத்த ஓட்டம்உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது.

  இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா? ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம். * மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி? மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

  உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன? எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

  ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன? நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான். இவ்வாறு இரத்த ஓட்டத்தின் மூலம் நம்முடைய உட ற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் படைத்த ரப்புல் ஆலமீன் அழகிய முறையில் படைத்துள்ளான்.

  இப்படிப்பட்ட இந்த இரத்த ஓட்டம் மனிதனின் உடலில் உள்ளது என்பதை முதன் முதல் கண்டுபிடித்தவர் யார் ? உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.

  இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார். வில் யம் ஹார்வி என்ற அறிவியலாளர் பிறந்த ஆண்டு கி.பி. 1578 ஆகும்.

  ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?

  இதோ இறைத்தூதர் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.

  حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ ح حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَعِنْدَهُ أَزْوَاجُهُ فَرُحْنَ فَقَالَ لِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ لَا تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكِ وَكَانَ بَيْتُهَا فِي دَارِ أُسَامَةَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا فَلَقِيَهُ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَنَظَرَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَجَازَا وَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَالَيَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَ فِي أَنْفُسِكُمَا شَيْئًا رواه البخاري 2038

  ஸஃபிய்யா (ர லி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச லில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!” எனக் கூறினார்கள். அவ்விருவரும் ”சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றாரன் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள். நூல் : புகாரி (2038)

  அல்லாஹ்வின் தூதர் படைத்த இறைவனிடம் இருந்து பெற்று அறிவித்த அற்புதத் தகவலைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் கண்டறிந்தார். வில்லியம் ஹார்வியின் ஆய்விற்கு துணைபுரிந்தது இப்னு நஃபிஸ் என்று முஸ்லிம் அறிஞரின் ஆய்வே ஆகும். முஸ்லிம் அறிஞரின் ஆய்விற்கு அடித்தளமாக அமைந்தது அல்லாஹ்வின் தூதரின் இறையறிவிப்பே என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

  وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ هُوَ الْحَقَّ وَيَهْدِي إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ(6)34

  (முஹம்மதே!) ”உமது இறைவனிட மிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை” என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.

  (அல்குர்ஆன் 34 : 6)

 6. விமானம் பறப்பது எப்படி?

  airoplanஇன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்

  பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்

  சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…

  இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது

  ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

  A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

  B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

  C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

  D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag

  ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

  Weight=Lift

  Drag=Thrust

  த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

  டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

  விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்

  விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்

  சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,

  அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

  (பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

  விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

  பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது

  எலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

  உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக

  விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

  விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

  இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது

  காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)

  விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்

  அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்

  இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

  அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது)

  இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது

  விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?

  அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

  ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது

  மனிதனால் பறக்க முடிவும் என்பது பற்றி இறைவன் திருமறையில்…

  மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.டாது)

  அல்குர்அன் 55-33

 7. புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும்

  article_4மரத்தி­ருந்து பழம் தரையில் விழுகின்றது! இது நியூட்டனின் சிந்தனைப் புயலைக் கிளப்புகின்றது! இது எப்படி இவ்வளவு வேகமாக பூமியை நோக்கி விரைகின்றது? என்ற சிந்தனை ஓட்டம் அதன் பின்னே விரைகின்றது. அதனால் விளைந்த அறிவியல் பலன் தான் புவி ஈர்ப்பு சக்தி என்ற கண்டு பிடிப்பு! சுற்றிக் கொண்டிருக்கும் புவியைச் சுற்றி ஒரு போர்வையாக புவி ஈர்ப்பு சக்தி ஒன்று சுற்றிக் கொண்டிருக்கின்றது என்ற பேருண்மை உலகத்திற்குத் தெரிய வருகின்றது. இந்த புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த ஐசக் நியூட்டனின் காலம் கி.பி. 1642-1727.
  ஆனால் சிந்தனைப் புரட்சியின் இந்த சிகரத்தை மனித அறிவு எட்டி விடாத அந்தக் காலத்திலேயே இந்தப் பேருண்மையை அல்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்கள் வாய் வழியாகப் போட்டு உடைக்கின்றது. அதன் மூலம் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதையும், அவர் கொண்டு வந்தது அல்லாஹ்வின் வேதம் தான் என்பதையும் நிரூபித்து நிற்கின்றது. உலகத்தையே ஈர்க்கும் வண்ணம் புவி ஈர்ப்பு சக்தியைப் பற்றி பறை சாற்றிக் கொண்டு நிற்கும் அந்த வசனங்கள் எவை?
  நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 13:2)
  நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான். உங்களைச் சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான். வானி­ருந்து தண்ணீரை இறக்கினோம். அதில் மதிப்பு மிக்க ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்தோம். (அல்குர்ஆன் 31:10)
  இந்த வசனங்கள் மூலம் புவி ஈர்ப்பு சக்தியை எடுத்துக் கூறி ”நான் எல்லாம் வல்ல அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கின்றேன்; என்னுடைய கருத்தை யாரேனும் மறுக்க இயலுமா?” என்று குர்ஆன் கம்பீரத்துடன் கர்ஜித்து நிற்கின்றது.
  பூமிக்கும், வானத்திற்கும் இடையே பார்க்க முடியாத தூண்கள் இருக்கின்றனவா? என்றால் நிச்சயமாக இருக்கின்றன! இந்தப் பிரபஞ்சத்திலுள்ள பூமி உள்ளிட்ட எல்லாக் கோள்களும் அவற்றிற்குரிய இடங்களில் நீந்துவதற்கு அவற்றை குறிப்பிட்ட வேகத்துடன் இழுத்துப் பிடித்திருக்கின்ற ஓர் ஈர்ப்பு விசை எல்லாப் பகுதிகளிலும் பரவியிருப்பது தான் காரணம்.
  இந்த ஈர்ப்பு விசையின் காரணமாகத் தான் ஒவ்வொரு கோளும் அந்தரத்தில் எந்தவிதப் பிடிமானமும் இன்றி தொங்குகின்ற காட்சியைப் பார்க்கின்றோம்.
  எனவே மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் மனிதன் கண்டறிந்த ஈர்ப்பு விசை எனும் கண்டுபிடிப்பை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறுகிறது.
  வானத்திற்கும், பூமிக்கும் எந்தத் தூண்களும் இல்லை என்று தெளிவாகத் தெரியும் போது, முஹம்மது நபியவர்கள் ”பார்க்கின்ற தூண்களின்றி” என்ற வார்த்தையை தேவையில்லாமல் பயன்படுத்தி இருக்க முடியாது.
  இந்த வானங்களையும், பூமியையும் படைத்தவன் பேசுகின்ற வார்த்தையாக இருப்பதால் தான் ”பார்க்கின்ற தூண்களின்றி” என்ற சொல்லைப் பயன்படுத்தி, பார்க்காத தூண்கள் இருக்கின்றன என்ற உண்மையை மறைமுகமாகக் குறிப்பிடுகிறான்.
  திருக்குர்ஆன், முஹம்மது நபியின் கற்பனையல்ல; ஏக இறைவனின் கூற்றுத் தான் என்பதற்குச் சான்றாக இது அமைந்துள்ளது.
  புலனுக்குத் தெரியாத புவி ஈர்ப்பு விசை
  நம்முடைய கண்களுக்குத் தெரியாத வகையில் புவி ஈர்ப்பு விசையொன்று நம்மைச் சுற்றி நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. புவி ஈர்ப்பு விசை நம்மை வாழ வைக்கின்றதா? என்ன கதை விடுகின்றீர்களா? என்று கேட்கலாம். நிச்சயமாக இது கதையல்ல! சத்தியமான அல்குர்ஆனின் அறிவிப்பும் அறிவிய­ன் நிரூபணமும் ஆகும்.
  அல்லாஹ் சொல்வது போல் புவி ஈர்ப்பு சக்தி நம்முடைய பார்வைப் புலன்களுக்குத் தெரியாததால் நமக்கும் அதற்கும் உண்டான தொடர்பு நமக்குத் தெரிவதில்லை. நமக்கும் இந்த புவி ஈர்ப்பு விசைக்கும் உள்ள தொடர்பு சாதாரண தொடர்பல்ல! நம்முடைய நாசித் துவாரத்தில் ஓடி வெளியாகிக் கொண்டிருக்கும் உயிர் மூச்சுத் தொடர்பாகும். புவி ஈர்ப்பு சக்தி என்ற ஒன்றில்லையாயின் நாம் சுவாசிக்கும் காற்று நம்மை விட்டுப் பறந்து போய் விடும். அவ்வாறு பறந்து போய் விடாதவாறு காத்து நிற்கும் கவசம் தான் புவி ஈர்ப்பு விசை!
  சுவாசக் காற்றை காக்கும் கவசம்
  மனிதன் மட்டுமல்ல! புவியில் வாழும் நிலம் மற்றும் நீர் வாழ் அனைத்து உயிரினங்களின் சுவாசக் காற்றை புவி ஈர்ப்பு சக்தி எவ்வாறு காத்து நிற்கின்றது என்பதை இப்போது பார்ப்போம்.
  நாம் வாழும் இந்தப் புவியைச் சுற்றி வளி மண்டலம் என்ற ஒன்று அமைந்துள்ளது. வளி என்றால் காற்று என்று பொருள். உயிரினங்கள் வாழ இந்த வளி மண்டலம் இன்றியமையாத ஒன்றாகும். இந்த வளி மண்டலம் புவியின் மேற்பரப்பி­ருந்து 10,000 கி.மீ. உயரம் வரை காணப்படுகின்றது. இந்த வளி மண்டலத்தில் உள்ள காற்றின் மொத்த அளவில் 97 சதவிகிதம் புவியின் மேற்பரப்பி­ருந்து 29 கி.மீ. உயரத்திற்குள் காணப்படுகின்றது. புவியின் மேற்பரப்பி­ருந்து உயரே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறைந்து கொண்டே செல்கின்றது. புவியின் மேற்பரப்பி­ருந்து 5 கி.மீ. உயரத்திற்கு மேல் காற்றின் அடர்த்தி குறைவதால் நாம் சுவாசிப்பதற்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. அதனால் தான் மலை ஏறுபவர்கள் தங்களுடன் ஆக்ஸிஜன் சி­ண்டர்களை எடுத்துச் செல்கின்றனர்.
  வளி மண்டலத்தில் கலந்திருக்கும் வாயுக்கள்
  வளி மண்டலம் என்பது ஒரு தனிப்பட்ட வாயுவினால் அமைந்ததல்ல! அது பல வாயுக்களின் தொகுப்பு! வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவிகிதமும், ஆக்ஸிஜன் 21 சதவிகிதமும், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 சதவிகிதமும், ஆர்கான் 0.934 சதவிகிதமும், நியான் 0.0018 சதவிகிதமும், ஹீ­யம் 0.00052 சதவிகிதமும், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன.
  அல்லாஹு தஆலா இந்த வாயுக்ககளை வளி மண்டலத்தில் மேற்கண்ட விகிதாச்சாரக் கணக்கில் அமைத்து இப்புவியில் உயிர்ப் பிராணிகளையும் தாவர இனத்தையும் வாழ வைத்திருக்கின்றான். வளி மண்டலத்தில் இரண்டறக் கலந்து நிற்கும் இந்த வாயுக்களில் 78 சதவிகிதம் உள்ள நைட்ரஜனுக்கு நிறம், மணம் எதுவும் கிடையாது. நச்சுத் தன்மை கொண்டதுமல்ல! இது தீயை அணைக்கும் தன்மை கொண்டதாகும். இந்த நைட்ரஜன் உயிரின வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பதை மின்னல் என்ற தலைப்பில் நாம் காணவிருக்கின்றோம்.
  நைட்ரஜனுக்கு அடுத்தபடியாக அதிகம் கலந்திருப்பது ஆக்ஸிஜன்! நைட்ரஜன் நெருப்பை அணைப்பதற்குத் துணை புரிகின்றது என்றால் இது அதை எரிப்பதற்குத் துணை புரிகின்றது. இதற்கும் மணம், சுவை, நிறம் கிடையாது. இது மற்ற மூலங்களுடன் கலந்து ஆக்ஸைடுகளாக மாறும் தன்மை கொண்டது. ஆக்ஸிஜன் இல்லையெனில் மனிதன் முதல் அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ முடியாது. சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜன் அவசியம்!
  கார்பன் டை ஆக்ஸைடு என்பது கனமான வாயுவாகும்.

  அதனால் இது வளி மண்டலத்தின் கீழ்ப் பகுதியிலேயே அதிக அளவு காணப்படுகின்றது. வளி மண்டலத்தின் உயரே செல்லச் செல்ல இதன் அளவு குறைகின்றது. இது மற்ற வாயுக்களைக் காட்டிலும் வெப்பத்தை அதிகம் கிரகிக்கும் தன்மை கொண்டது.. எனவே இது வளி மண்டலத்தில் சூரிய வெப்பத்தைத் தக்க வைக்க உதவுகின்றது.
  இத்தகைய பயன்பாடுகளைக் கொண்ட வாயுக்களைக் கலவையாகக் கொண்டது தான் வளி மண்டலம்! இந்த வளி மண்டலம் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. இந்த ஐந்து அடுக்குகளைப் பற்றி பின்னர் பார்ப்போம். இப்போது நாம் இங்கு கவனிக்க வேண்டிய அம்சம் இந்த வளி மண்டலக் காற்று விண்வெளியில் கலைந்து, கரைந்து போகாமல் காக்கும் கவசம் எது? இந்தப் புவி ஈர்ப்பு விசை தான்.
  பூமி வேகமாகச் சுழன்று கொண்டிருக்கின்றது என்பதை நாம் அறிவோம். இந்தப் புவியானது, தான் மட்டும் சுழலவில்லை; தனது ஈர்ப்பு சக்தியின் காரணமாக தன்னுடன் 10,000 கி.மீ. உயரம் வரை பரவியுள்ள காற்று மண்டலத்தையும் சேர்த்தே சுற்றுகின்றது. இல்லை! சுழற்றுகின்றது. இந்தப் புவி ஈர்ப்பு விசை இல்லாவிட்டால், காற்று மண்டலம் கலைந்து போய் நாம் சுவாசக் காற்று இல்லாத சுருண்டு போன கருவாடுகளாகி விடுவோம்.
  இப்படி நமது சுவாசக் காற்றை கவசமாகக் காத்து நிற்பது புவி ஈர்ப்பு விசையே! அது மட்டுமின்றி உருண்டையான ஒரு பெரிய பந்துக்கு மேல் நாம் நிற்பதாக வைத்துக் கொள்வோம். அந்தப் பந்து உருள ஆரம்பித்தால் என்னவாகும்? நாம் கீழே விழுந்து விடுவோம். ஆனால் அதே சமயம் மணிக்கு ஒரு லட்சத்து எட்டாயிரம் கி.மீ. வேகத்தில் சுழன்று கொண்டிருக்கும் பூமி என்ற பந்தின் மீதுள்ள நாம் கழற்றி எறியப்படாமல் சுழன்று கொண்டிருப்பதற்குக் காரணமும் இந்தப் புவி ஈர்ப்பு விசை தான். அருவியி­ருந்து நீர் விழுந்தாலும் ஆகாயத்தி­ருந்து நீர் விழுந்தாலும் பைப்பி­ருந்து பானையில் நீர் விழுந்தாலும் அத்தனைக்கும் காரணம் புவி ஈர்ப்பு விசை தான்!

 8. மூளைக் காய்ச்சலுக்கு மூல காரணம்

  article_512.09.2000 அன்று பி.பி.சி.யில் வெளியான ஒரு செய்தி: மூளைக் காய்ச்சலுக்கு உத்தர பிரதேசத்தில் 100 பேர் இறந்தனர். 400 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
  இது அரசாங்கம் அறிவிக்கும் அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைத் தாண்டும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  இந்நோய் இப்பகுதியில் 22 வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்டது என்றும், இதன் காரணமாக இது வரை 7000 பேர் இறந்திருக்கிறார்கள் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மிக அதிகமாக இந்நோயின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதற்கு மூல காரணம் பன்றிகள் தான். இந்தப் பன்றிகளைக் கொல்ல வேண்டும். அரசியல் காரணங்களால் பன்றிகள் இன்னும் உலா வந்து கொண்டிருக்கின்றன என்றும் அந்தச் சுகாதார அதிகாரிகள் கூறுகிறார்கள்.
  இவ்வாறு பி.பி.சி.யின் அந்தச் செய்தி கூறுகின்றது.
  26.07.07 அன்று ஹிந்து நாளேட்டில் வெளியான செய்தி:
  இந்த நோயின் தாக்குதலை விட்டும் காப்பதற்காக 11 மில்­யன் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. (முத­ல் பன்றியிடமிருந்தும் பின்னர்) கொசுவின் மூலம் பரவும் இந்த வைரஸ் ஆசியா பசிபிக் பகுதியிலுள்ள 10,000 குழந்தைகளை ஒவ்வொரு வருடமும் ப­ வாங்கியுள்ளது.
  இத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு தப்பியுள்ளனர். ஆனால் அவர்களின் நரம்பு மண்டலங்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
  இது ‘ஹிந்து’ தரும் தகவலாகும்.
  1999ல் இந்நோய் மலேஷியாவில் ஏற்பட்டதும், அந்நாடு 64,000 பன்றிகளைக் கொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டது. மலேஷியாவில் இந்நோய் பரவத் தொடங்கியதும் மக்கள் கிராமம் கிராமமாக வெளியேற ஆரம்பித்து விட்டனர் என்று 19.03.1999 அன்று பி.பி.சி. குறிப்பிட்டுள்ளது.
  அனுபவமும் அறிவியலும் உணர்த்தும் பாடம்
  மூளைக் காய்ச்சல் ஏற்படுவதற்கு மூல காரணம் பன்றிகள் தான். அனுபவப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் இதை மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். சாக்கடையில் குளியல் நடத்தும் பன்றியிடம் உட்கார்ந்து இரத்தத்தை உறிஞ்சிய கொசு நம் வீட்டுக் குழந்தைகள் மீது வந்து உட்கார்ந்து விட்டால் போதும்; குழந்தைக்கு மூளைக் காய்ச்சல் வந்து விடும் என்று வானொ­யில் அடிக்கடி ஒ­பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
  இந்த அளவுக்கு அறிவியல் ரீதியாக உணர்த்தப்படும் இந்நோய்க்குப் பெயர் ஜப்பானீஸ் என்ஸபலைடிஸ் என்பதாகும். இந்நோய் 1871ல் ஜப்பானில் அடையாளம் காணப்பட்டதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. என்ஸபலைடிஸ் என்றால் மூளையில் எரிச்சல் ஏற்பட்டு செய­ழப்பதாகும். இந்த நோயின் வைரஸ் ஃப்லாவிவிரிடியா என்ற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இந்த வைரஸ் வந்து தங்கி வளர்வதும், வாழ்வதும் சாட்சாத் பன்றிகளிடம் தான். அவற்றிடமிருந்து கொசுக்கள் மனிதர்களிடம் அந்நோயைத் தொற்றச் செய்கின்றன.
  உலகில் இஸ்லாம் தான் பன்றியின் இறைச்சியைத் தடை செய்கின்றது.
  தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வ­யச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
  அல்குர்ஆன் 2:173
  தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டி­ருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக் கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) ப­ பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும்.
  அல்குர்ஆன் 5:3
  தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான்.
  அல்குர்ஆன் 16:115
  இந்த வசனங்கள் அனைத்தும் பன்றியின் இறைச்சியை உண்பதைத் தடை செய்கின்றன.
  நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, ”நிச்சயமாக மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்துள்ளனர்!” என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே அதைப் பற்றிக் கூறுங்கள்!” எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”கூடாது! அது ஹராம்!” எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, ”அல்லாஹ் யூதர்களை தனது கருணையி­ருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கிய போது அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள்!” என்று கூறினார்கள்.
  அறிவிப்பவர்: ஜாபிர் (ர­)
  நூல்: புகாரி 2236
  இதன் மூலம் பன்றியை விற்பனை செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டார்கள்.
  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! மர்யமின் புதல்வர் (ஈசா) உங்களிடம் நேர்மையான நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை உடைப்பார்! பன்றியைக் கொல்வார்! காப்பு வரியை (ஜிஸ்யா) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்.
  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­)
  நூல்: புகாரி 2222
  பன்றி என்பது கொல்லப்பட வேண்டிய பிராணி என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.
  ”நர்தஷீர் எனும் விளையாட்டை விளையாடுபவர் தனது கையை பன்றியின் இறைச்சியிலும், இரத்தத்திலும் தோய்த்தவர் போன்றவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
  அறிவிப்பவர்: புரைதா (ர­)
  நூல்: முஸ்­ம் 4194
  பன்றியின் இறைச்சியிலும், இரத்தத்திலும் கை வைப்பது கூட அருவருக்கத்தக்க செயல் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.
  பன்றியினால் ஏற்படும் தீமை களை உணர்ந்து தான் இஸ்லாமிய மார்க்கம் இப்படியொரு கடுமையான நிலைபாட்டை எடுக்கின்றது. ஆனால் உலகம் பன்றியின் தீமையை உணர்ந்தபாடில்லை.
  ஆந்திர மாநிலத்தில் 1999ம் ஆண்டு நவம்பர் மாதம் மூளைக் காய்ச்சல் நோய் தாக்கி 100 குழந்தைகள் இறந்தனர்; 500 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்போது முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு, உடனே பன்றி வளர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். அதற்கு அதிகாரிகள், ”பத்து லட்சம் பேர் பன்றி வளர்ப்புத் தொழி­ல் ஈடுபடுகின்றனர்; அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யுங்கள்” என்று பதிலளித்தனர்.
  மக்களின் உயிருடன் விளையாடுகின்ற எந்த ஒரு தொழிலையும் ஒழித்துக் கட்டும் இயற்கை மார்க்கமான இஸ்லாமிய ஆட்சியின் அவசியத்தை இங்கு உணர வேண்டும்.

 9. இவ்வுலக வாழ்க்கைக்கு பகுத்தறிவு அவசியமா?
  பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு! –

  தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.

  அவர்களின் பிரதான அடிப்படைக் கொள்கை மனிதனும் எண்ணற்ற பிராணிகளைப் போல் ஒரு பிராணி என்பதேயாகும். மனிதப் பிராணி அல்லாத இதர அனைத்துப் பிராணிகளுக்கும் இருப்பது ஐயறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் விசேஷமாக ஆறாவது அறிவான பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஓரிறை மறுப்பாளர்களான பகுத்தறிவு நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.

  முதலில் இந்த பகுத்தறிவு என்றால் என்ன? என்பதை ஆய்வு செய்துவிட்டுப் பின்னர் விசயத்திற்கு வருவோம். இதர பிராணிகளுக்க இருப்பது போல் பார்த்து அறிவது, கேட்டு அறிவது, முகர்ந்து அறிவது, ருசித்து அறிவது, தொட்டு அறிவது என இந்த ஐயறிவுகளும் (ஐம்புலன்களும்) மனிதனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஐயறிவு துணையுடன் ஆய்ந்தறியும் திறனான பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இற்த பகுத்தறிவு மேலே குறிப்பிட்டுள்ள ஐயறிவுகளின் உதவி கொண்டு மட்டுமே செயல் படமுடியும். இந்த ஐயறிவுகள் வராத – கட்டுப்படாத பல பேருண்மைகளை மறுக்கும் நிலையில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் இருக்கின்றனர். அந்த பேருண்மைகளை பின்னர் ஆய்வுக்கு எடுப்போம்.

  இப்போது நாம் எடுத்துக் கொண்ட விஷயம் பகுத்தறிவாளர்கள் சொல்வது போல் மனித வாழ்க்கை அற்பமான இவ்வுலகோடு முற்றுப் பெறுவதாக இருந்தால், அப்படிப்பட்ட மனிதப் பிராணிக்கு பகுத்தறிவு தேவையா? என்பது தான். இன்று உலகில் கோடானுகோடி ஐயறிவு பிராணிகளைப் பார்க்கிறோம். அவை ஆறறிவு மனிதனை விட மிகமிக மகிழ்ச்சியாக, சந்தோசமாக, களிப்புடன் வாழ்ந்து வருகின்றன. விரும்பியதை விரும்பிய அளவு உண்டு மகிழ்கின்றன. குடித்து மகிழ்கின்றன. தங்களின் ஜோடிகளோடு இணைந்து சந்ததிகளை தாராளமாகப் பல்கிப் பெருகச் செய்கின்றன. அவற்றிற்கு ஏதாவது இடையூறுகள் வருவதாக இருந்தால் அவை ஆறறிவு படைத்த மனிதனால் மட்டுமே ஏற்படுவதேயாகும். மற்றபடி அவற்றிற்கு கட்டுப்பாடோ விதிமுறைகளோ எதுவுமே இல்லை.

  மானத்தை மறைப்பதற்கென்று அவற்றிற்கு விதவிதமான ஆடைகள் தேவையில்லை. ஒண்ட வீடுகள் தேவையில்லை. இன்ன ஆணுடன் தான் இணைய வேண்டும்; இன்ன பெண்ணுடன் தான் இணைய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை; அப்படி மாறி மாறி இணைவதால் எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோயும் அவற்றிற்கு ஏற்படுவதில்லை. இன்னாருடைய மகன் இன்னார் என்ற வாரிசுப் பிரச்சினையும் இல்லை. உண்டு, பழித்து, ஜோடியுடன் கலந்து அனுபவித்து, மாண்டு மண்ணோடு மண்ணாகப் போகும் நிலை. நாளைக்கு நமது நிலை என்ன? சாப்பாட்டு பிரச்சினை என்ன? மனைவிப் பிரச்சினை என்ன? மக்கள் பிரச்சினை என்ன? அந்தப் பிரச்சினை என்ன? இந்தப் பிரச்சினை என்ன? என பல்வேறு பிரச்சினைகளால் அல்லும் பகலும் அவதியுற்று அல்லல்படும் நிலை ஐயறிவு பிராணிகளுக்கு இல்லை. ஆறறிவு மனிதப் பிராணியை விட ஐயறிவு பிராணிகள் மகிழ்ச்சிகரமாக, எவ்வித கெளரவ பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து மடிகின்றன என்பதை பகுத்தறிவாளார்கள் மறுக்க முடியுமா?

  சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிராதயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைகள் , குண்டு கலாச்சாரம் இவற்றில் எதனையும் ஐயறிவு பிராணிகளிடையே பார்க்க முடிகிறதா? இல்லையே! நாளை நடப்பதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து மடிகின்றன. சொத்து, சுகங்களையோ, உணவு வகைகளையோ அவை சேர்த்து வைக்காவிட்டாலும் அதனால் அவை துன்பப்பட்டதுண்டா? உணவில்லாமல் பட்டினியால் மடிந்ததுண்டா?

  பகுத்தறிவாளர்களே! சிறிது உங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்திப் பாருங்கள். இவ்வுலகோடு மனித வாழ்க்கை முற்றுப் பெறுவதாக இருந்தால், மனிதனுக்கும் மற்ற ஐயறிவு பிராணிகள் போல் பகுத்தறிவு கொடுக்கப்படாமல் இருந்தால், மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக, மகிழ்ச்சிகரமாக, கவலையோ, துக்கமோ இல்லாமல், சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைச் செயல்கள், வெடிகுண்டு, அணுகுண்டு கலாச்சாரங்கள், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் இவை எவையுமே இல்லாமல் மிக, மிக நிம்மதியாக வாழ்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகலாம். அப்படியானால் ஐயறிவு மிருகங்களுக்குக் கொடுக்கப்படாத இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையே இல்லாத பிரத்தியேக பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் ஏன் கொடுக்கப்ட்டுள்ளது? முறையாக நடுநிலையோடு உங்களின் பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்தினால், இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கை – பரீட்சை வாழ்க்கை என்பதை உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்.

  இன்று அனைத்து நாடுகளிலும் நீக்கமறக் காணப்படும் இனவெறி, மதவெறி, மொழி வெறி, ஜாதி வெறி, நிறவெறி என பல்வேறு வெறிகளால் இந்த மனித இனம் கூறு போடப்பட்டு நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இந்த ஆறாவது அறிவான பகுத்தறிவுதான் காரணம் என்பதை பகுத்தறிவாளர்களால் மறுக்க முடியுமா? மதங்களின் பெயரால் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து மதப்புரோகிதர்கள் செய்து வரும் அட்டூழியங்கள், ஈவிரகமற்ற கொடூர செயல்கள், கொலை பாதகச் செயல்கள், மதப்புரோகிதர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என மார்தட்டிக் கொண்டு, மதப்புரோகிதர்களின் அனைத்து வகை ஈனச்செயல்கள், அட்டூழியங்கள் , அக்கிரமங்கள், வன்முறைச் செயல்கள் அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து செய்து வரும் அரசியல்வாதிகள் என்ற அரசியல் புரோகிதர்கள் (தொண்டைத் தொழிலாக்கி தொப்பையை நிரப்புகிறவர்கள் அனைவரும் இடைத்தரகர்களே – புரோகிதர்களே), ஏழைகளின் வயிற்றில் அடித்து, அவர்களின் உரிமைகளைப் பறித்து, மதப்புரோகிதர்களையும், ஆட்சியாளர்களையும், அரசியல் வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு குறுக்கு வழிகளில் பல நூறு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துக் குவிக்கும் கோடீஸ்வரர்கள், இப்படி அனைவரின் மனச்சாட்சிக்கும் விரோதமான அநியாய, அக்கிரம, அட்டூழிய செயல்களுக்கு இந்தப் பாழும் பகுத்தறிவு தானே காரணம்? இவ்வுலக வாழ்க்கையில் மனிதனுக்கு பகுத்தறிவு மட்டும் இல்லாவிடில், மற்ற பிராணிகளைப் போல், ஐயறிவுடன் மட்டும் வாழ்ந்தால் இந்தப் படுபாதகச் செயல்கள், அட்டூழியங்கள், அநியாயங்கள் இடம் பெறுமா? மனித அமைதி கெடுமா?

  கடவுள்களின் பெயரால் மதங்களை கற்பனை செய்து பலவித அநியாயங்கள் நடக்கின்றன என காரணம் கூறி, மனிதப் பகுத்தறிவைக் கொண்டு கற்பனை செய்யப்பட்ட பொய்க் கடவுள்களோடு, அகில உலகையும் மனிதனையும் படைத்து நிர்வகித்து வரும் ஒரே கடவுளை மறுக்கத் துணிந்த பகுத்தறிவாளர்கள், கடவுளின் பெயரால் வெறியூட்டும் மதங்கள், அரசியலின் பெயரால் அட்டூழியங்கள், கோடீஸ்வர குபேரர்களின் தில்லுமுல்லுகள் என அனைத்திற்கும் காரணமான இந்தப் பகுத்தறிவை அழித்தொழிக்க முற்படுவதில்லையே! ஏன்? மனித வாழ்க்கை இவ்வுலகுடன் முடிவுக்கு வருகிறதென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத பகுத்தறிவு ஏன்? ஏன்?? ஏன்??? தாங்களும் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொள்வதாலா? தாங்களும் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருப்பதலா? பகுத்தறிவை நியாயப்படுத்துகிறீர்கள்? விடை தாருங்கள் பகுத்தறிவாளர்களே!

  பகுத்தறிவு மனிதனுக்கு இயற்கையிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது; அதனை அழிக்க முடியாது என்பது பகுத்தறிவாளர்களின் பதிலாக இருந்தால், பகுத்தறிவில்லா ஐயறிவு பிராணிகள் போல் மனிதனும் ஒரு பிராணியே! இவ்வுலகில் வாழ்ந்து மடிவதோடு அவனது முடிவு ஏற்பட்டு விடுகிறது என்று எந்தப் பகுத்தறிவின் அடிப்படையில் கூறுகிறீர்கள்? பகுத்தறிவின் மூலம் மனிதப்படைப்பு ஐயறிவு மிருகப் படைப்பிலிருந்து வித்தியாசப்படுகிறது என்பதை உங்களால் பகுத்தறிய முடியவில்லையா?

  இவ்வுலக வாழ்ககைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத, அதே சமயம் இவ்வுலக மனித மற்றும் படைப்புகளின் நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கைக்கு பல வகையிலும் இடையூறு விளைவிக்கும் இந்தப் பகுத்தறிவு ஓர் உன்னத நோக்கத்தோடுதான் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உங்களால் உய்த்துணர முடியவில்லையா?

  பகுத்தறிவாளர்களே! நீங்கள் பகுத்தறிவு, பகுத்தறிவு என பீற்றிக் கொள்வது உங்களுக்கிருக்கும் ஐயறிவைக் கொண்டு, அவை கொடுக்கும் ஆதாரங்களை மட்டும் வைத்து விளங்கிக் கொள்ளும் அற்ப விஷயங்கள் மட்டுமே. மற்றபடி உங்களது ஐம்புலன்களுக்கு எட்டாத, கட்டுப்படாத நுட்பமான உண்மைகளை கண்டறியும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை; அதாவது மதப்புரோகிதர்கள் கற்பனையில் உருவான கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுக்கும், பகுத்தறிவாளர்களாகிய உங்களையும், என்னையும் அகில உலக மக்களையும், அகிலங்களையும் சோதனைக்காக – பரீட்சைக்காக படைத்து சுதந்திரமாக நம்மை செயல்படவிட்டிருக்கும் ஒரேயொரு உண்மைக் கடவுளுக்குமுள்ள வேறுபாட்டை உங்களால் பகுத்தறிய முடியவில்லை. உண்மைக் கடவுளை உய்த்துணரும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை, சாந்தி மார்க்கத்தின் உறுதி மொழியின் ஆரம்ப பாதியை மட்டும் கூறி, அரைக்கிணறு தாண்டி கிணற்றின் உள்ளே விழும் மிகமிக ஆபத்தான, அபாயகரமான நிலையில் நுண்ணறிவில்லா பகுத்தறிவாளர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என குற்றப் படுத்துகிறோம்; முறையாக நுண்ணறிவுடன் பகுத்தறிய வேண்டுகிறோம்.

  (நபியே?!) நீர் கூறுவீராக: இறைவன் அவன் ஒருவனே. இறைவன் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை, (எவராலும்)பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. – திருக்குர்ஆன் – 112:1-4

 10. குரானைத்தாண்டி இவர்களுக்கு சிந்திக்கவே தெரியாதா?

  எல்லாம் தெரிந்த இவர்கள், இன்றைய அறிவியலால் கண்டுபிடிக்கப்பட்ட எதையுமே கண்டுபிடிக்கவில்லையே ஏன்? இவர்கள் பயன்படுத்தும் இண்டர்னெட்,விமானம் எல்லாம் நரகத்துக்குச் செல்லும் கூட்டம் கண்டுபிடித்தது, இவற்றை உபயோகிக்கும்போது இவர்களுக்கு கூசாதா?

  வாழ்க இஸ்லாமிய நரகம்.

 11. மதவாதிகளுக்கு அவர்கல் மதம் சார்ந்த நம்பிக்கைகளை கப்பாறற்ற அவசியம் உள்ள்து இல்லவிட்டால் அவர்கள் பிழைப்பு அழிந்து விடும்.தொடரட்டும் விமர்சனம்.குரானினல் ஷியா ,அஹமதியவை ஒன்றாக்க முடியவில்லை.முதலில் அதை செய்யட்டும் பிரகு விஞ்ஞானம் பற்றி பேசலம் பெசலம்.

 12. பீஸ் சொன்னது,
  //////////குரானைத்தாண்டி இவர்களுக்கு சிந்திக்கவே தெரியாதா?

  எல்லாம் தெரிந்த இவர்கள், இன்றைய அறிவியலால் கண்டுபிடிக்கப்பட்ட எதையுமே கண்டுபிடிக்கவில்லையே ஏன்? இவர்கள் பயன்படுத்தும் இண்டர்னெட்,விமானம் எல்லாம் நரகத்துக்குச் செல்லும் கூட்டம் கண்டுபிடித்தது, இவற்றை உபயோகிக்கும்போது இவர்களுக்கு கூசாதா?

  வாழ்க இஸ்லாமிய நரகம்///////////

  8-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டை “GOLDEN AGE OF ISLAM” என்று சொல்லுவார்கள்.இந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த முஸ்லிம்கள்தான் அதிகமானதை கண்டுபிடித்து சாதனைகளை படைத்து உலகத்தையே திருப்பி போட்டார்கள் என்பதை இந்த வலைப்பதிவை சற்று பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்
  http://www.independent.co.uk/news/science/how-islamic-inventors-changed-the-world-469452.html

  santhanam சொன்னது,
  ////////மதவாதிகளுக்கு அவர்கல் மதம் சார்ந்த நம்பிக்கைகளை கப்பாறற்ற அவசியம் உள்ள்து இல்லவிட்டால் அவர்கள் பிழைப்பு அழிந்து விடும்.தொடரட்டும் விமர்சனம்.குரானினல் ஷியா ,அஹமதியவை ஒன்றாக்க முடியவில்லை.முதலில் அதை செய்யட்டும் பிரகு விஞ்ஞானம் பற்றி பேசலம் பெசலம்.////////////

  கடைசி வரையில் நீங்கள் எல்லோரும் குர்ஆனுக்கு வெளியில்தான் குறைகளை தேடி பிடிக்கிறீர்கள்.குர்ஆனிலிருந்து உங்களால் எதுவும் கண்டு பிடிக்கமுடியவில்லை.
  மனிதர்கள் என்ற முறையில் எல்லோரிடமும் தவறிருப்பது சகஜம் தான்.தயவுசெய்து குர்ஆனை படியுங்கள் முடிந்தால் அதில் குறைகளிருந்தால்(?) கண்டுபிடியுங்கள்.
  “அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா?இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்”
  (அல் குர்ஆன் 4:82)
  குர்ஆன் விட்ட அறைகூவலைப்போன்று வேறு எந்த வேதமாவது இது போன்ற அறைகூவலை விட்டிருக்கிறதா?

 13. http://www.independent.co.uk/news/science/how-islamic-inventors-changed-the-world-469452.html//

  A comment there

  Islamic inventions
  muswatchdog wrote:
  Wednesday, 5 August 2009 at 10:44 pm (UTC)
  Yeah right from this article it looks like everything came from the islamic world. What a bunch of lies!! how come nothing is coming now? What it was is how it is now. The free western world keeps inventing stuff as they always have like the computer & internet for example & muslims use it for posting lies!!

  //
  மேலே உள்ளதுதான் என் கேள்வியும் பதிலும். இன்னும் ஒன்னும் குறையவில்லை. இன்னும் காபிர்களால் கண்டுபிடிக்காதவைகலை இன்றே குரானைப்படித்து அறிவியல் பூர்வமாக ஏழு வானம் போன்றவைகளை உடனே நிரூபித்து வெற்றிபெற வாழ்த்துக்கள்.

 14. அன்பின் செங்கொடி,

  கிபி 8ஆம் நூற்றாண்டிலிருந்து 10ஆம் நூற்றாண்டுவரை இஸ்லாமிய நாடுகளில் அறிவியல் சிறந்து விளங்கியது. அதன் காரணம் அல்குரான் அல்ல. அதற்கு காரணம் முட்டாஸிலி
  http://en.wikipedia.org/wiki/Mu%27tazili

  human reason is more reliable than the revelation. என்பதே முட்டாஸீலியின் தாரக மந்திரம்.

  இந்த தத்துவம் இஸ்லாமிய நாடுகளில் பரவலாக கொள்கையாக இருந்தது. அதாவது அல்குரான் சொல்வதற்கும் மனித மூளை சொல்வதற்கும் வித்தியாசம் இருந்தால், மனித மூளை, பகுத்தறிவு சொல்வதையே எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற கருத்துதான் முட்டாஸில். இதனால், முட்டாஸிலி தத்துவ சார்புடைய அறிஞர்கள் அரசுப்பதவி வகித்தனர். காலிபாக்களின் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். காலிபாக்களும் முட்டாஸிலி அறிஞர்களை போற்றி பாதுகாத்தனர்.
  இதனால், அறிவியல் சிறந்து விளங்கியது. உலகம் தட்டை என்று அல்குரான் சொல்வதற்கு மாறாக உலகம் உருண்டை என்று சொல்ல இந்த அறிஞர்களுக்கு அதிகாரம் இருந்தது. இது பழங்காலத்திய முல்லாக்களுக்கு பெருத்த மனவருத்ததை தந்தது. 10 ஆம் நூற்றாண்டில் இறுதியில் முல்லாகளின் ஆட்சி மேலோங்கியது. காலிபாக்கள் முல்லாக்களின் பேச்சை கேட்டுக்கொண்டு பகுத்தறிவை விட அல்குரானே முக்கியம், அதனையே பின்பற்ற வேண்டும் என்ற கருத்துக்கு அரசாங்க ஆதரவு கிடைத்ததும் முடாஸிலி அறிஞர்கள் கொல்லப்பட்டார்கள். அத்தோடு “இஸ்லாமிய அறிவியலும்” காலியானது.

  ஆனால், இன்று முஸ்லீம்கள் ‘இஸ்லாமிய அறிவியல்” இவ்வளவு கண்டுபிடித்திருக்கிறது பார் என்று பீற்றுவது முடாஸிலி பகுத்தறிவாளர்கள் கண்டுபிடித்தவற்றைத்தான்! இதுதான் வரலாற்றின் முரண்நகை!

 15. எல்லா மதங்களிலும் சில அறிவியல் கருத்துக்கள் இருக்கின்றன.அதற்காக அறிவியலார் கண்டுபிடிக்கும் முன்பே இது குரான் கண்டுபிடித்தது என்று சொல்வது அவர்களை கேவலப்படுத்தும் செயலே…மதங்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள் ஆள் சேர்க்கத்தான் உதவுமே தவிர மக்களுக்கு பயன்படாது. மதங்களில் அறிவியலை தேடுவது மலத்தில் அரிசி பொறுக்குவதற்கு சமம் ஆகும் – பெரியார்.

 16. பன்றிகள் எல்லாம் கொல்லப்பட வேண்டுபவையானால் பிறகு எதற்கு பன்றியை இறைவன் படைத்தானாம் …!? காமெடி பீஸ் களே ..!

 17. “மேலே உள்ளதுதான் என் கேள்வியும் பதிலும். இன்னும் ஒன்னும் குறையவில்லை. இன்னும் காபிர்களால் கண்டுபிடிக்காதவைகலை இன்றே குரானைப்படித்து அறிவியல் பூர்வமாக ஏழு வானம் போன்றவைகளை உடனே நிரூபித்து வெற்றிபெற வாழ்த்துக்கள்”
  நண்பர்களே இதுபோன்ற கேள்விகளை பலமுறை இஸ்லாமியர்களிடம் கேட்டாகிவிட்டது. அவர்களிடமிருந்து இதற்கு எவ்விதமான பதிலும் இல்லை.

 18. தொற்று நோய் கிடையாது. பறவைகளைக் கொண்டு சகுனம் பார்ப்பதும் கிடையாது.ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. ஸபர் மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளிடமிருந்து வெருண்டோடு.
  அப்போது கிராமவாசி ஒருவர், ‘அல்லாஹ்வின் தூதரே! என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றுக்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலை என்ன?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் முதல் ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?’ என்று திருப்பிக் கேட்டார்கள். அறிப்பவர்: அபூஹூரைரா. ஆதாரம்: புஹாரி.

  தொற்றுநோய் கிடையாது,இறைவனே நோயை கொடுப்பதாக விஞ்ஞானி முகம்மது கூறியிருக்கிறார். பிறகு பன்றி இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன!

 19. //////உலகம் தட்டை என்று அல்குரான் சொல்வதற்கு/////////
  எந்த இடத்தில் குர்ஆன் பூமியை தட்டையென குறிப்பிடுகிறது என்பதை தெரியபடுத்த முடியுமா?

 20. மதங்களின் புனித நூல்கள் அந்த அந்த காலத்தின் நிகழ்வை கொண்டே புனையப்பட்டது. உதாரனத்திற்க்கு குர்ஆனில், எதிரிகளை கண்ட இடங்களில் வெட்டுங்கள் ,- இப்போ யார் கத்தி வைத்து கொண்டு சண்டை போடுகிறார்கள் ..? துப்பாக்கியை வைத்து சுட சொல்ல வேண்டியதானே..? ஏன் என்றால் அப்போது கத்திதான் இருந்தது. சொர்க்கத்தில் மது பானம் வழங்கப்படும் , ஏன் இங்கு தடுக்கப்பட்டது அங்கு கொடுக்க படுகிறது..அங்கு செய்தால் தவறு இல்லையா..? நியண்டர்தால், ஹோமோசேபியன்ஸ் போன்ற இடைப்பட்ட இனங்களை பற்றி ஏன் குர்ஆனில் இல்லை ..? பன்றிகள் போன்ற பிராணியை இறைவன் படைக்க வேண்டிய அவசியம் என்ன..பிறகு ஏன் அதை தடுக்க வேண்டும் கொல்லவேண்டும் …?

 21. நண்பர் அப்துல்லாஹ், கீழ்காணும் வசனங்கள் போமி தட்டை என்பதை உறுதி செய்கின்றன.
  31:10.வானங்களை தூணின்றியே அவன் படைத்துள்ளான்.அவற்றை நீங்களும் காணுகிறீர்கள். இன்னும் பூமியில்‍‍ உங்களைக்கொண்டு அது அசைந்துவிடாமலிருக்க உயர்ந்த மலைகளையும் அமைத்தான்.
  21:31.
  இன்னும் பூமியில் உறுதியான மலைகளை அவர்களைக் கொண்டு அது ஆடாமலிருப்பதற்காக நாம் அமைத்தோம்.

 22. தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது.

  இனி அவரது சொந்த நடையில்…

  “நான் தாலிபான்களால் சிறைப் பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.

  செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக் கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன். தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப் பட்டு, கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன். அதனால் அவர்கள் என்னை ஒரு ‘கெட்டப் பெண்’ என்று அழைத்தார்கள். ஆனால் நான் குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு என்னை விடுதலை செய்து விட்டார்கள். (உண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையானபோது யார் மகிழ்ந்தார்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை – நானா? அல்லது அவர்களா?).

  எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன். நான் படிக்கப் படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. குர்ஆனில் நான் மனைவிமார்களை எப்படி அடிப்பது என்றும், மகள்களை எப்படி அடக்கி ஒடுக்கி துன்புறுத்துவது என்றும் ஆண்களுக்கு உபதேசிக்கும் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன். எனது கைதுக்குப் பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து நான் இஸ்லாமை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டேன். எனது இந்த மாற்றம் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திகைப்பு, ஏமாற்றம், உற்சாகம் போன்ற உணர்வுகளின் கலவையான நிலைமையை உண்டு பண்ணியது. இன்று! மத நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்டிரா விமர்சனம் செய்திருப்பது என்னை ஏமாற்றமும், அச்சமும் கொள்ள வைக்கிறது. இவருக்கு பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேர், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மற்றும் இத்தாலியப் பிரதமர் ரெமானோ ப்ரோடி ஆகியோர் வேறு அதரவளிக்கின்றனர் என்பதுதான் வேடிக்கையான வேதனை.

  புர்காவுக்கு வெளியேயும், உள்ளேயும் இரண்டு மாறுபட்ட வாழ்க்கை முறையை உணர்ந்த ஒரு பெண் என்ற அடிப்படையில் சொல்கிறேன்: இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் அடக்குமுறையைப் பற்றி ஆரவாரமாக கவலைப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து மேற்கத்திய அரசியல்வாதிகளும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இஸ்லாத்தைப் பற்றியும், அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

  ஹிஜாபைப் பற்றியும், பருவமடையாத மணப்பெண்கள் பற்றியும், பெண்கள் கத்னாவைப் பற்றியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும், கட்டாயத் திருமணங்கள் பற்றியும் இவர்கள் சகட்டுமேனிக்கு எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்த வன்கொடுமைகள் அத்தனைக்கும் இவர்கள் இஸ்லாத்தைக் குற்றவாளி ஆக்குகின்றார்கள். இவர்களது இந்த வெறித்தனமானப் போக்கு இவர்களது அறியாமையைத்தான் பறைசாற்றுகின்றது.

  மேற்கண்ட வெறுக்கத்தக்க விஷயங்கள் கலாச்சாரம் மற்றும் சமூக சடங்கு சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவை. இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. திருக்குர்ஆனை கருத்தூன்றிப் படித்தால் ஒர் உண்மை விளங்கும். மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை சரிவர வளர்க்கும் பெண்மணி பெரும் பாக்கியம் நிறைந்தவளாகக் கருதப் படுகின்றாள்.

  இவ்வாறு இஸ்லாம் பெண்ணினத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கி மேன்மைப்படுத்தி இருக்கும்போது, இந்த மேற்கத்திய ஆண்கள் ஏன் முஸ்லிம் பெண்களின் ஆடை விஷயத்தில் மட்டும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்? பிரிட்டிஷ் அரசின் அமைச்சர்களான கோர்டன் பிரவுன் மற்றும் ஜான் ரீட் ஆகியோர் முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவருமே ஆண்கள் கூட பாவாடை அணியும் ஸ்காட்லாந்து நாட்டு எல்லையோரத்தைச் சேர்ந்தவர்கள்.

  நான் இஸ்லாத்திற்கு மாறி முக்காடு அணியத் துவங்கியபோது மிகப்பெரிய அளவில் விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்ததெல்லாம் எனது தலையையும், தலைமுடியையும் மூடிக் கொண்டேன், அவ்வளவுதான். ஆனால் உடனே நான் இரண்டாந்தர குடிமகளாக்கப்பட்டேன். ஏதோ கொஞ்சம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் இந்தளவிற்கு இனவெறியை நான் எதிர்பார்க்கவில்லை. ‘வாடகைக்கு’ என்ற வாசகத்தடன் என்னைக் கடந்து சென்று நின்ற டாக்ஸியிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண் இறங்கினாள். நான் அந்த டாக்ஸியில் ஏறுவதற்காக எத்தனித்தேன். ஆனால் என்னைக் கூர்ந்து கவனித்த டிரைவர் என்னை நிராகரித்து விட்டு விருட்டென்று காரை ஒட்டிச் சென்று விட்டான். மற்றொரு டாக்ஸி டிரைவரோ என்னிடம் “பின் ஸீட்டில் வெடிகுண்டு எதையும் வைத்து விட்டுப் போய்விடாதே’ என்றும் “பின்லேடன் எங்கே ஒளிந்து இருக்கிறான் தெரியுமா?’ என்றும் கமெண்ட் அடித்தான்.

  ஆம்! பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்பது ஒர் இஸ்லாமியக் கடமை. நான் அறிந்தவரை பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் – அதாவது முகம் மட்டும் வெளியில் தெரியும் வண்ணம் உடை அணிகின்றனர். வெகு சிலரே முகத்தையும் மறைக்கும் நிகாப் எனும் முகத்திரை அணிந்து வெளியில் வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லிம் பெண் கண்ணியத்திற்காக ஹிஜாப் அணிகிறாள், அவளுக்கு அந்த கண்ணியத்தைக் கொடுத்து விட்டுப் போங்களேன்! வால் ஸ்டிரீட்டில் இயங்குகின்ற ஒரு வங்கியின் அதிகாரி தன்னை ஒரு சீரியஸான பிஸினஸ்மேனாக பிறர் கருத வேண்டும் என்பதற்காகத்தானே கோட் சூட் அணிகிறார்! – அதுபோலத்தான் இதுவும்.

  நான் ஒரு நேரத்தில் மேற்கத்திய பெண்ணிய வாதியாகத்தான் இருந்தேன். ஆனால் பிறகுதான் உணர்ந்தேன். முஸ்லிம் பெண்ணியவாதிகள் பிறரைவிட மிகத் தீவிரமாக பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்கள் என்று! அநாகரீகமான அழகிப் போட்டிகளை நாம் வெறுக்கின்றோம். ஆனால் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக 2003-ல் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிய பெண் ஒருத்தி நீச்சல் உடையில் பங்கேற்ற நிகழ்ச்சியை அந்தப் போட்டியின் நடுவர்கள் இஸ்லாமியப் பெண்களின் விடுதலைக்கான ஆரம்பம் இது என்று வர்ணித்தனர்.

  ஹிஜாப் அணிவது சமூக உறவைப் பேணுவதற்கு மிகவும் தடையாக இருக்கிறது என்று இத்தாலியப் பிரதமர் ப்ரோடி கூறியிருக்கிறார். இந்த முட்டாள்தனமான வாதத்தைக் கேட்கும்போது எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா? என்று தெரியவில்லை. இவர் சொல்வது சரியென்றால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செல்போன், சாதா போன், பேக்ஸ், எஸ்.எம். எஸ். தகவல்கள் மற்றும் ரேடியோ ஆகியவை அர்த்தமற்றவையாகி விடும். இந்த உபகரணங்களை தொடர்பில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டா நாம் உபயோகிக்கிறோம்?

  இஸ்லாத்தின் கீழ் நான் மதிக்கப்படுகின்றேன். எனக்குத் திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாவிட்டாலும் எனக்கு கல்வி கற்க உரிமை உண்டு என்றும், கல்வியைத் தேடிப்பெற வேண்டியது எனது கடமை என்றும் இஸ்லாம் எனக்கு சொல்லித் தருகின்றது. இஸ்லாத்தின் இந்த கட்டமைப்பிலும் பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற சேவகங்கள் செய்துதர வேண்டும் என்று கட்டளையிடப்படவே இல்லை.

  இன்னும் சொல்லப் போனால், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ அல்லது தேசத்தையோ சார்ந்தது அல்ல. இது மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து பெண்ணினத்தை பாதித்து வரும் ஒர் உலகளாவிய பிரச்சினையாகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்… National Domestic Violence Survey நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் 12 மாத கால அளவில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் மட்டும் 3 பெண்கள் தங்களது காதலன் அல்லது கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.

  ஆண்கள் தங்கள் மனைவிமார்களை கைநீட்டி அடிக்க அனுமதிக்கிறது இஸ்லாம் என்ற கூற்றை எடுத்துக் கொண்டால் – இது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி குர்ஆன் வசனங்களையும், நபிமொழி குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகின்றனர். ஆனால் அந்த வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் உள்ளர்த்தங்களை தவறாக விளங்கிக் கொள்வதால் எற்படும் விளைவுதான் இது. ஒர் ஆண் தனது மனைவியை அடிக்கத்தான் வேண்டுமாயின், அவளது உடலில் எவ்விதக் காயமோ அடையாளமோ இல்லாமல்தான் அடிக்க வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது. இது குர்ஆனுக்கே உரிய தனித்துவமிக்க சொல்லாளுமையாகும். இதன் உள்ளர்த்தத்தை நெருக்கமாகச் சொல்லப் போனால்… முட்டாளே! உனது மனைவியை அடிக்காதே!! என்பதுதான்.

  இதற்கு மேலும் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கிறது என்று வாதிடுவோர்களின் கவனத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்: அமெரிக்காவின் ஆன்மீகக் குரு ரெவரண்ட் பேட் ராபெர்ட்ஸன் 1992-ல் கூறிய கருத்து இதோ: “பெண் விடுதலை என்பது சமூக சீர்கேட்டை உருவாக்கி, குடும்ப பாரம்பரியத்தை சீர்குலைத்து, கணவர்களை விட்டு ஒடுகின்ற, தங்கள் குழந்தைகளைக் கொல்கின்ற, ஒரினச் சேர்க்கையில் பெண்களை ஈடுபடுத்துகின்ற ஓர் இயக்கமாகும்”. இப்போது சொல்லுங்கள்! யார் நாகரீகமானவர்கள்? யார் நாகரீகமற்றவர்கள்? என்று.”

  (சகோதரி யுவான் ரிட்லி லண்டனில் இயங்கும் இஸ்லாம் சேனல் தொலைக் காட்சியின் அரசியல் எடிட்டர் மற்றும் ‘In the Hands of Taliban: Her Extra ordinary Story’ என்ற நூலின் இணையாசிரியர் ஆவார். இந்த நூலாசிரியரை hermosh at aol dot com என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 2001-ம் வருடம் இவர் தாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொள்ள வைத்த சுவையான சம்பவம் குறித்து இவரது நேரடி பேட்டி அப்போது ‘நியூஸ் வீக்’ பத்திரிக்கையில் பரபரப்பாக வெளியாகி இருந்தது)

  தமிழாக்கம்: அப்துல் அலீம் சித்தீக்
  நன்றி: மக்கள் உரிமை

 23. அல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்

  டாக்டர் கீத் மூர் (Dr.Keith More) உலகப் பிரசித்திபெற்ற ஒரு முளையவியற்துறைப் பேராசிரியர். இவர் கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தில் உடற்கூற்று மற்றும் முளையவியற்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஒருமுறை அரபு மாணவர்கள் சிலர் இவரிடம் முளையவியல் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களைத் திரட்டி அவற்றை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து அவரிடம் கொடுத்துவிட்டு அவை பற்றிய தெளிவை ஆய்வுமூலம் விளக்குமாறு அவரிடம் வேண்டிக்கொண்டனர்.

  மருத்துவ விஞ்ஞானம் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக மார்தட்டிக்கொண்டாலும் மனித உடலில் விடைகாண முடியாத, கண்டறியப்படாத அபூர்வ அம்சங்கள் பல இருக்கின்றன என்பதை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர்.

  அந்தவகையில் அன்றைய மருத்துவ விஞ்ஞானம் கண்டறியாத கருவியல் தொடர்பான உண்மைகளைக் கூறும் முக்கியமானதொரு அல்குர்ஆனிய வசனம் Dr.கீத்மூரது கண்களில் பட்டது. ஆழமாகப் படித்தார். “படைப்பினங்கைளப் படைத்த உமதிரட்சகனின் பெயரைக்கொண்டு ஓதுவிராக! அவன் எத்தகையவனென்றால் அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து மனிதனைப் படைத்தான்.”

  Dr.கீத்மூருக்கு இவ்வசனம் பெரும் வியப்பையூட்டியது. “அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும்” என்ற இவ்விடயத்தை ஆய்வுசெய்ய முடிவுசெய்த அவர் ஆய்வுகூடத்தை அடைந்து அதி சக்திவாய்ந்த நுணுக்குக்காட்டி மூலம் ஒரு கருவின் ஆரம்பப்படிநிலை வளர்ச்சியை ஆய்வுசெய்யளானார். அக்கருவின் படத்தை ஒரு அட்டைப் பூச்சியின் படத்துடன் ஒப்பு நோக்கினார். என்ன அற்புதம். கருவின் ஆரம்பத்தோற்றமும் அதன் செயற்பாடுகளும் அட்டைப்பூச்சியின் தோற்றமும் அதன் தொழிற்பாடுகளும் ஒரேவிதமாக இருந்தன. ஆரம்ப நிலைக்கரு அட்டைப் பூச்சிபோன்றதென இதற்குமுன் Dr.கீத்மூர் அறிந்திருக்கவில்லை. ஆதனை அல்குர்ஆனிய வசனம் அச்சொட்டாகக் கூறியதைப் பார்த்து வியந்தார். இது இத்துறையில் அவரை மேலும் ஆயுவுகள் செய்யத் தூண்டியது.

  அதனைத் தொடர்ந்து “உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களில் வைத்து அவனே உங்களைப் படைத்தான்.” என்ற வசனத்தை ஆய்வுக்குட்படுத்தினார். எவ்வித மருத்துவத் தொழிநுட்பமோ நவீன கருவிகளோ அற்ற 1400 ஆண்டுகளுக்கு முன்பு கருவரையின் படிமுறைச் செயற்பாடுகளைக் கூறியிருக்கும் இவ்வற்புத வசனத்தைக் கண்டு அவர் ஆச்சரியத்திலாழ்ந்தார். அவரது நீண்ட ஆய்வுக்குப்பின் அம்மூன்று இருள்களின் விளக்கம் என்ன என்பதுபற்றி இவ்வாறு விளக்கிக்காட்டினார்.

  1) தாயின் அடிவயிறு (Abdominal wall)

  2) கருப்பையின் சுவர் (Uterine wall)

  3) குழந்தையைச் சுற்றியிருக்கும் சவ்வுப்படலம்
  (Amniotic Membrane)

  இதன்பின்பும் அவர் பல அல்குர்ஆனிய வசனங்களை ஆய்வுசெய்து அற்புதத் தகவல்களை மருத்துவ உலகுக்கு வழங்கினார். இவ்வாய்வுகளில் அவர் ஈடுபட முன்பு “The Developing Human – மனித வளர்ச்சி” என்ற ஒரு நூலை எழுதியிருந்தார். எனினும் அல்குர்ஆனின் முளையவியல் பற்றிய இவ்வசனங்களை ஆய்வுசெய்து பெற்றுக்கொண்ட உறுதியான முடிவுகளைவைத்து அந்த நூலை மீள்பரிசீலனை செய்து 1982ம் ஆண்டு மறுபதிப்பாக வெளியிட்டார். ஒரு தனிநபரால் வெளியிடப்பட்ட சிறந்த மருத்துவ நூல் என்றவகையில் அதற்கு உயர் விருதும் வழங்கப்பட்டது. அந்நூல் பல்வேறு மொழிகளுக்கும் மாற்றப்பட்டு முளையவியல் கற்கையில் முக்கிய பாடநூலாக அங்கீகரிக்கப்பட்டது.

  ஆய்வுகள் முடிந்து நூலாக வெளிவரமுன்பு 1981ம் ஆண்டு சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் நடைபெற்ற ஏழாவது மருத்துவ மாநாட்டில் Dr.கீத்மூர் கலந்து உரைநிகழ்த்துகையில் பகிரங்கமாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  “It has been a great pleasure for me to help clarify statements in the Qur’an about human development. It’s clear to me that these statements must have come to Muhammad from god because almost all of this knowledge was not discovered until many centauries. Late this proves to me that Muhammad must have been a messenger of the god.”

  (Dr. Keith more)

  “அல்குர்ஆனில் உள்ள மனித கருவளர்ச்சி பற்றிய தகவல்களை ஆய்வுசெய்து அதனை விள்கிக்கூற என்னால் உதவ முடிந்ததையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள இந்தத் தகவல்கள் யாவும் இறைவனி (அல்லாஹ்வி)டமிருந்துதான் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு வந்திருக்க முடியும் என்று எனக்குத் தெளிவாகியுள்ளது. ஏனென்றால் கருவியல்பற்றிய அறிவார்ந்த ஆய்வு முடிவுகளில் பெரும்பாலனவை பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே கண்டுபிடிக்கப்பட்டன. அந்த ஆராய்ச்சியே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இறைவனி (அல்லாஹ்வி)ன் தூதர் என்பதை நிரூபித்துவிட்டுள்ளது.” என்றார்.

  நிச்சயமாக அல்குர்ஆன் தெய்வீகத் தன்மைபொறுந்திய வேத வெளிப்பாடு என்பதை என்றும் உணர்த்தி நிற்கும்.

  ………..ஹிதாயத்துல்லாஹ்

 24. நண்பர் சித்தீக் அவர்களே நீங்கள் குர்ஆனிலிருந்து எடுத்து காட்டிய வசனத்தை கொஞ்சம் நன்றாக கவனியுங்கள்.
  /////////31:10.வானங்களை தூணின்றியே அவன் படைத்துள்ளான்.அவற்றை நீங்களும் காணுகிறீர்கள். இன்னும் பூமியில்‍‍ உங்களைக்கொண்டு அது அசைந்துவிடாமலிருக்க உயர்ந்த மலைகளையும் அமைத்தான்.////////////

  விளக்கம்:
  “பூமி அசைந்துவிடாமலிருக்க” என்றுமட்டும் வந்திருந்தால் பூமி தட்டை என குர்ஆன் சொல்கிறது என்கின்ற உங்களுடைய வாதம் சரியாகியிருக்கும்.ஆனால் “உங்களைக்கொண்டு அது அசைந்துவிடாமலிருக்க” இந்த வரியை நன்றாக கவனியுங்கள் இதனுடைய அர்த்தம் புரியும்.

  இந்த பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது.மேல் அடுக்குகள் எடை குறைந்தவையாகவும்,உள் அடுக்குகள் கனத்த எடை உடையவையாகவும் உள்ளன. வேகமாக பூமி சுழலும்போது உள்ளடுக்கிலுள்ள கனமான பொருட்களும் மேலடுகிலுள்ள எடை குறைவாக உள்ள பொருட்களும் ஒரே வேகத்தில் சுற்ற இயலாது.”இந்த நிலை ஏற்ப்பட்டால் மேல் அடுக்கிலுள்ள மனிதர்கள் தூக்கி எறியப்படுவார்கள்” கட்டிடங்களெல்லாம் நொறுங்கிவிடும்.இதை தடுக்க வேண்டுமானால் கனமான அடுக்குகளையும் கனம் குறைந்த அடுக்குகளையும் இணைக்கும் விதமாக முளைகள்(ஒரு பொருள் இன்னொரு பொருளை விட்டும் பிரிந்து விடாதிருப்பதற்க்காக அறையப்படுவதே முளைகளாகும்)நாட்டப்படவேண்டும்.அந்த வேலையைத்தான் மலைகள் செய்கின்றன.
  ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள மலைகள் காரணமாக மேல் அடுக்குகளும் கீழ் அடுக்குகளும் ஒன்றையொன்று பிரிந்து விடாத வகையில் சுழல முடிகிறது.
  மேலும் பூமி உருண்டைதான் என்பதை உணர்த்தும் மற்ற வசனங்கள.
  “(அவன்) வானங்கள்,பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கும் இறைவன்.கிழக்குகளுக்கும் இறைவன்”.
  அல் குர்ஆன் 37:5
  “(அவ்ன்) இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன்.இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன்”.
  அல் குர்ஆன் 55:17
  “கிழக்குகளுக்கும்,மேற்குகளுக்குமுரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன்……..
  அல் குர்ஆன் 70:40
  பூமி தட்டையாக இருந்தால் ஒரு இடத்தில் உதித்து மறு இடத்தில் மறைந்துவிடும்.பூமி உருண்டையாக இருந்தால் பூமியுடைய ஒவ்வொரு புள்ளியிலும் உதிக்கும் பல திசைகள் உருவாகின்றன.மறையும் திசைகளும் இவ்வாறே இருக்கின்றன.
  பல உதிக்கும் திசைகள்,பல மறையும் திசைகள் என்ற சொல் மூலம் பூமி உருண்டையானது என்பதை குர்ஆன் வலியுறுத்துகின்றது

 25. பீஸ் சொன்னது,
  /////இன்றே குரானைப்படித்து அறிவியல் பூர்வமாக ஏழு வானம் போன்றவைகளை உடனே நிரூபித்து வெற்றிபெற வாழ்த்துக்கள்.////////////////
  இந்த வலைத்தளத்திலுள்ள வீடியோவை பார்க்குமாறு கேட்டுகொள்கிறேன்.
  http://www.archive.org/details/SevenLayersOfTheSky

 26. அல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்

  Inbox X

  Reply

  |
  Abdul Lathif
  to Thurap, me, jafa.2010, nazar.ali, mashaa54, mohamedyousuf, abdul, Abdul

  show details 2:14 PM (8 hours ago)

  Images are not displayed.
  Display images below – Always display images from shafalathif@gmail.com

  அல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்

  டாக்டர் கீத் மூர் (Dr.Keith More) உலகப் பிரசித்திபெற்ற ஒரு முளையவியற்துறைப் பேராசிரியர். இவர் கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தில் உடற்கூற்று மற்றும் முளையவியற்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஒருமுறை அரபு மாணவர்கள் சிலர் இவரிடம் முளையவியல் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களைத் திரட்டி அவற்றை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து அவரிடம் கொடுத்துவிட்டு அவை பற்றிய தெளிவை ஆய்வுமூலம் விளக்குமாறு அவரிடம் வேண்டிக்கொண்டனர்.

  மருத்துவ விஞ்ஞானம் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக மார்தட்டிக்கொண்டாலும் மனித உடலில் விடைகாண முடியாத, கண்டறியப்படாத அபூர்வ அம்சங்கள் பல இருக்கின்றன என்பதை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர்.

  அந்தவகையில் அன்றைய மருத்துவ விஞ்ஞானம் கண்டறியாத கருவியல் தொடர்பான உண்மைகளைக் கூறும் முக்கியமானதொரு அல்குர்ஆனிய வசனம் Dr.கீத்மூரது கண்களில் பட்டது. ஆழமாகப் படித்தார். “படைப்பினங்கைளப் படைத்த உமதிரட்சகனின் பெயரைக்கொண்டு ஓதுவிராக! அவன் எத்தகையவனென்றால் அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து மனிதனைப் படைத்தான்.”

  Dr.கீத்மூருக்கு இவ்வசனம் பெரும் வியப்பையூட்டியது. “அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும்” என்ற இவ்விடயத்தை ஆய்வுசெய்ய முடிவுசெய்த அவர் ஆய்வுகூடத்தை அடைந்து அதி சக்திவாய்ந்த நுணுக்குக்காட்டி மூலம் ஒரு கருவின் ஆரம்பப்படிநிலை வளர்ச்சியை ஆய்வுசெய்யளானார். அக்கருவின் படத்தை ஒரு அட்டைப் பூச்சியின் படத்துடன் ஒப்பு நோக்கினார். என்ன அற்புதம். கருவின் ஆரம்பத்தோற்றமும் அதன் செயற்பாடுகளும் அட்டைப்பூச்சியின் தோற்றமும் அதன் தொழிற்பாடுகளும் ஒரேவிதமாக இருந்தன. ஆரம்ப நிலைக்கரு அட்டைப் பூச்சிபோன்றதென இதற்குமுன் Dr.கீத்மூர் அறிந்திருக்கவில்லை. ஆதனை அல்குர்ஆனிய வசனம் அச்சொட்டாகக் கூறியதைப் பார்த்து வியந்தார். இது இத்துறையில் அவரை மேலும் ஆயுவுகள் செய்யத் தூண்டியது.

  அதனைத் தொடர்ந்து “உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களில் வைத்து அவனே உங்களைப் படைத்தான்.” என்ற வசனத்தை ஆய்வுக்குட்படுத்தினார். எவ்வித மருத்துவத் தொழிநுட்பமோ நவீன கருவிகளோ அற்ற 1400 ஆண்டுகளுக்கு முன்பு கருவரையின் படிமுறைச் செயற்பாடுகளைக் கூறியிருக்கும் இவ்வற்புத வசனத்தைக் கண்டு அவர் ஆச்சரியத்திலாழ்ந்தார். அவரது நீண்ட ஆய்வுக்குப்பின் அம்மூன்று இருள்களின் விளக்கம் என்ன என்பதுபற்றி இவ்வாறு விளக்கிக்காட்டினார்.

  1) தாயின் அடிவயிறு (Abdominal wall)

  2) கருப்பையின் சுவர் (Uterine wall)

  3) குழந்தையைச் சுற்றியிருக்கும் சவ்வுப்படலம்
  (Amniotic Membrane)

  இதன்பின்பும் அவர் பல அல்குர்ஆனிய வசனங்களை ஆய்வுசெய்து அற்புதத் தகவல்களை மருத்துவ உலகுக்கு வழங்கினார். இவ்வாய்வுகளில் அவர் ஈடுபட முன்பு “The Developing Human – மனித வளர்ச்சி” என்ற ஒரு நூலை எழுதியிருந்தார். எனினும் அல்குர்ஆனின் முளையவியல் பற்றிய இவ்வசனங்களை ஆய்வுசெய்து பெற்றுக்கொண்ட உறுதியான முடிவுகளைவைத்து அந்த நூலை மீள்பரிசீலனை செய்து 1982ம் ஆண்டு மறுபதிப்பாக வெளியிட்டார். ஒரு தனிநபரால் வெளியிடப்பட்ட சிறந்த மருத்துவ நூல் என்றவகையில் அதற்கு உயர் விருதும் வழங்கப்பட்டது. அந்நூல் பல்வேறு மொழிகளுக்கும் மாற்றப்பட்டு முளையவியல் கற்கையில் முக்கிய பாடநூலாக அங்கீகரிக்கப்பட்டது.

  ஆய்வுகள் முடிந்து நூலாக வெளிவரமுன்பு 1981ம் ஆண்டு சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் நடைபெற்ற ஏழாவது மருத்துவ மாநாட்டில் Dr.கீத்மூர் கலந்து உரைநிகழ்த்துகையில் பகிரங்கமாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  “It has been a great pleasure for me to help clarify statements in the Qur’an about human development. It’s clear to me that these statements must have come to Muhammad from god because almost all of this knowledge was not discovered until many centauries. Late this proves to me that Muhammad must have been a messenger of the god.”

  (Dr. Keith more)

  “அல்குர்ஆனில் உள்ள மனித கருவளர்ச்சி பற்றிய தகவல்களை ஆய்வுசெய்து அதனை விள்கிக்கூற என்னால் உதவ முடிந்ததையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள இந்தத் தகவல்கள் யாவும் இறைவனி (அல்லாஹ்வி)டமிருந்துதான் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு வந்திருக்க முடியும் என்று எனக்குத் தெளிவாகியுள்ளது. ஏனென்றால் கருவியல்பற்றிய அறிவார்ந்த ஆய்வு முடிவுகளில் பெரும்பாலனவை பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே கண்டுபிடிக்கப்பட்டன. அந்த ஆராய்ச்சியே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இறைவனி (அல்லாஹ்வி)ன் தூதர் என்பதை நிரூபித்துவிட்டுள்ளது.” என்றார்.

  நிச்சயமாக அல்குர்ஆன் தெய்வீகத் தன்மைபொறுந்திய வேத வெளிப்பாடு என்பதை என்றும் உணர்த்தி நிற்கும்.

 27. அல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்ட

  Peer Mohamed
  Dam mam

  அல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்

  டாக்டர் கீத் மூர் (Dr.Keith More) உலகப் பிரசித்திபெற்ற ஒரு முளையவியற்துறைப் பேராசிரியர். இவர் கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தில் உடற்கூற்று மற்றும் முளையவியற்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஒருமுறை அரபு மாணவர்கள் சிலர் இவரிடம் முளையவியல் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களைத் திரட்டி அவற்றை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து அவரிடம் கொடுத்துவிட்டு அவை பற்றிய தெளிவை ஆய்வுமூலம் விளக்குமாறு அவரிடம் வேண்டிக்கொண்டனர்.

  மருத்துவ விஞ்ஞானம் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக மார்தட்டிக்கொண்டாலும் மனித உடலில் விடைகாண முடியாத, கண்டறியப்படாத அபூர்வ அம்சங்கள் பல இருக்கின்றன என்பதை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர்.

  அந்தவகையில் அன்றைய மருத்துவ விஞ்ஞானம் கண்டறியாத கருவியல் தொடர்பான உண்மைகளைக் கூறும் முக்கியமானதொரு அல்குர்ஆனிய வசனம் Dr.கீத்மூரது கண்களில் பட்டது. ஆழமாகப் படித்தார். “படைப்பினங்கைளப் படைத்த உமதிரட்சகனின் பெயரைக்கொண்டு ஓதுவிராக! அவன் எத்தகையவனென்றால் அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து மனிதனைப் படைத்தான்.”

  Dr.கீத்மூருக்கு இவ்வசனம் பெரும் வியப்பையூட்டியது. “அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும்” என்ற இவ்விடயத்தை ஆய்வுசெய்ய முடிவுசெய்த அவர் ஆய்வுகூடத்தை அடைந்து அதி சக்திவாய்ந்த நுணுக்குக்காட்டி மூலம் ஒரு கருவின் ஆரம்பப்படிநிலை வளர்ச்சியை ஆய்வுசெய்யளானார். அக்கருவின் படத்தை ஒரு அட்டைப் பூச்சியின் படத்துடன் ஒப்பு நோக்கினார். என்ன அற்புதம். கருவின் ஆரம்பத்தோற்றமும் அதன் செயற்பாடுகளும் அட்டைப்பூச்சியின் தோற்றமும் அதன் தொழிற்பாடுகளும் ஒரேவிதமாக இருந்தன. ஆரம்ப நிலைக்கரு அட்டைப் பூச்சிபோன்றதென இதற்குமுன் Dr.கீத்மூர் அறிந்திருக்கவில்லை. ஆதனை அல்குர்ஆனிய வசனம் அச்சொட்டாகக் கூறியதைப் பார்த்து வியந்தார். இது இத்துறையில் அவரை மேலும் ஆயுவுகள் செய்யத் தூண்டியது.

  அதனைத் தொடர்ந்து “உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களில் வைத்து அவனே உங்களைப் படைத்தான்.” என்ற வசனத்தை ஆய்வுக்குட்படுத்தினார். எவ்வித மருத்துவத் தொழிநுட்பமோ நவீன கருவிகளோ அற்ற 1400 ஆண்டுகளுக்கு முன்பு கருவரையின் படிமுறைச் செயற்பாடுகளைக் கூறியிருக்கும் இவ்வற்புத வசனத்தைக் கண்டு அவர் ஆச்சரியத்திலாழ்ந்தார். அவரது நீண்ட ஆய்வுக்குப்பின் அம்மூன்று இருள்களின் விளக்கம் என்ன என்பதுபற்றி இவ்வாறு விளக்கிக்காட்டினார்.

  1) தாயின் அடிவயிறு (Abdominal wall)

  2) கருப்பையின் சுவர் (Uterine wall)

  3) குழந்தையைச் சுற்றியிருக்கும் சவ்வுப்படலம்
  (Amniotic Membrane)

  இதன்பின்பும் அவர் பல அல்குர்ஆனிய வசனங்களை ஆய்வுசெய்து அற்புதத் தகவல்களை மருத்துவ உலகுக்கு வழங்கினார். இவ்வாய்வுகளில் அவர் ஈடுபட முன்பு “The Developing Human – மனித வளர்ச்சி” என்ற ஒரு நூலை எழுதியிருந்தார். எனினும் அல்குர்ஆனின் முளையவியல் பற்றிய இவ்வசனங்களை ஆய்வுசெய்து பெற்றுக்கொண்ட உறுதியான முடிவுகளைவைத்து அந்த நூலை மீள்பரிசீலனை செய்து 1982ம் ஆண்டு மறுபதிப்பாக வெளியிட்டார். ஒரு தனிநபரால் வெளியிடப்பட்ட சிறந்த மருத்துவ நூல் என்றவகையில் அதற்கு உயர் விருதும் வழங்கப்பட்டது. அந்நூல் பல்வேறு மொழிகளுக்கும் மாற்றப்பட்டு முளையவியல் கற்கையில் முக்கிய பாடநூலாக அங்கீகரிக்கப்பட்டது.

  ஆய்வுகள் முடிந்து நூலாக வெளிவரமுன்பு 1981ம் ஆண்டு சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் நடைபெற்ற ஏழாவது மருத்துவ மாநாட்டில் Dr.கீத்மூர் கலந்து உரைநிகழ்த்துகையில் பகிரங்கமாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  “It has been a great pleasure for me to help clarify statements in the Qur’an about human development. It’s clear to me that these statements must have come to Muhammad from god because almost all of this knowledge was not discovered until many centuries. Late this proves to me that Muhammad must have been a messenger of the god.”

  (Dr. Keith more)

  “அல்குர்ஆனில் உள்ள மனித கருவளர்ச்சி பற்றிய தகவல்களை ஆய்வுசெய்து அதனை விள்கிக்கூற என்னால் உதவ முடிந்ததையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள இந்தத் தகவல்கள் யாவும் இறைவனி (அல்லாஹ்வி)டமிருந்துதான் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு வந்திருக்க முடியும் என்று எனக்குத் தெளிவாகியுள்ளது. ஏனென்றால் கருவியல்பற்றிய அறிவார்ந்த ஆய்வு முடிவுகளில் பெரும்பாலனவை பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே கண்டுபிடிக்கப்பட்டன. அந்த ஆராய்ச்சியே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இறைவனி (அல்லாஹ்வி)ன் தூதர் என்பதை நிரூபித்துவிட்டுள்ளது.” என்றார்.

  நிச்சயமாக அல்குர்ஆன் தெய்வீகத் தன்மைபொறுந்திய வேத வெளிப்பாடு என்பதை என்றும் உணர்த்தி நிற்கும்.

 28. அல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர் அல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்

  டாக்டர் கீத் மூர் (Dr.Keith More) உலகப் பிரசித்திபெற்ற ஒரு முளையவியற்துறைப் பேராசிரியர். இவர் கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தில் உடற்கூற்று மற்றும் முளையவியற்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஒருமுறை அரபு மாணவர்கள் சிலர் இவரிடம் முளையவியல் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களைத் திரட்டி அவற்றை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து அவரிடம் கொடுத்துவிட்டு அவை பற்றிய தெளிவை ஆய்வுமூலம் விளக்குமாறு அவரிடம் வேண்டிக்கொண்டனர்.

  மருத்துவ விஞ்ஞானம் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக மார்தட்டிக்கொண்டாலும் மனித உடலில் விடைகாண முடியாத, கண்டறியப்படாத அபூர்வ அம்சங்கள் பல இருக்கின்றன என்பதை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர்.

  அந்தவகையில் அன்றைய மருத்துவ விஞ்ஞானம் கண்டறியாத கருவியல் தொடர்பான உண்மைகளைக் கூறும் முக்கியமானதொரு அல்குர்ஆனிய வசனம் Dr.கீத்மூரது கண்களில் பட்டது. ஆழமாகப் படித்தார். “படைப்பினங்கைளப் படைத்த உமதிரட்சகனின் பெயரைக்கொண்டு ஓதுவிராக! அவன் எத்தகையவனென்றால் அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து மனிதனைப் படைத்தான்.”

  Dr.கீத்மூருக்கு இவ்வசனம் பெரும் வியப்பையூட்டியது. “அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும்” என்ற இவ்விடயத்தை ஆய்வுசெய்ய முடிவுசெய்த அவர் ஆய்வுகூடத்தை அடைந்து அதி சக்திவாய்ந்த நுணுக்குக்காட்டி மூலம் ஒரு கருவின் ஆரம்பப்படிநிலை வளர்ச்சியை ஆய்வுசெய்யளானார். அக்கருவின் படத்தை ஒரு அட்டைப் பூச்சியின் படத்துடன் ஒப்பு நோக்கினார். என்ன அற்புதம். கருவின் ஆரம்பத்தோற்றமும் அதன் செயற்பாடுகளும் அட்டைப்பூச்சியின் தோற்றமும் அதன் தொழிற்பாடுகளும் ஒரேவிதமாக இருந்தன. ஆரம்ப நிலைக்கரு அட்டைப் பூச்சிபோன்றதென இதற்குமுன் Dr.கீத்மூர் அறிந்திருக்கவில்லை. ஆதனை அல்குர்ஆனிய வசனம் அச்சொட்டாகக் கூறியதைப் பார்த்து வியந்தார். இது இத்துறையில் அவரை மேலும் ஆயுவுகள் செய்யத் தூண்டியது.

  அதனைத் தொடர்ந்து “உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களில் வைத்து அவனே உங்களைப் படைத்தான்.” என்ற வசனத்தை ஆய்வுக்குட்படுத்தினார். எவ்வித மருத்துவத் தொழிநுட்பமோ நவீன கருவிகளோ அற்ற 1400 ஆண்டுகளுக்கு முன்பு கருவரையின் படிமுறைச் செயற்பாடுகளைக் கூறியிருக்கும் இவ்வற்புத வசனத்தைக் கண்டு அவர் ஆச்சரியத்திலாழ்ந்தார். அவரது நீண்ட ஆய்வுக்குப்பின் அம்மூன்று இருள்களின் விளக்கம் என்ன என்பதுபற்றி இவ்வாறு விளக்கிக்காட்டினார்.

  1) தாயின் அடிவயிறு (Abdominal wall)

  2) கருப்பையின் சுவர் (Uterine wall)

  3) குழந்தையைச் சுற்றியிருக்கும் சவ்வுப்படலம்
  (Amniotic Membrane)

  இதன்பின்பும் அவர் பல அல்குர்ஆனிய வசனங்களை ஆய்வுசெய்து அற்புதத் தகவல்களை மருத்துவ உலகுக்கு வழங்கினார். இவ்வாய்வுகளில் அவர் ஈடுபட முன்பு “The Developing Human – மனித வளர்ச்சி” என்ற ஒரு நூலை எழுதியிருந்தார். எனினும் அல்குர்ஆனின் முளையவியல் பற்றிய இவ்வசனங்களை ஆய்வுசெய்து பெற்றுக்கொண்ட உறுதியான முடிவுகளைவைத்து அந்த நூலை மீள்பரிசீலனை செய்து 1982ம் ஆண்டு மறுபதிப்பாக வெளியிட்டார். ஒரு தனிநபரால் வெளியிடப்பட்ட சிறந்த மருத்துவ நூல் என்றவகையில் அதற்கு உயர் விருதும் வழங்கப்பட்டது. அந்நூல் பல்வேறு மொழிகளுக்கும் மாற்றப்பட்டு முளையவியல் கற்கையில் முக்கிய பாடநூலாக அங்கீகரிக்கப்பட்டது.

  ஆய்வுகள் முடிந்து நூலாக வெளிவரமுன்பு 1981ம் ஆண்டு சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் நடைபெற்ற ஏழாவது மருத்துவ மாநாட்டில் Dr.கீத்மூர் கலந்து உரைநிகழ்த்துகையில் பகிரங்கமாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  “It has been a great pleasure for me to help clarify statements in the Qur’an about human development. It’s clear to me that these statements must have come to Muhammad from god because almost all of this knowledge was not discovered until many centauries. Late this proves to me that Muhammad must have been a messenger of the god.”

  (Dr. Keith more)

  “அல்குர்ஆனில் உள்ள மனித கருவளர்ச்சி பற்றிய தகவல்களை ஆய்வுசெய்து அதனை விள்கிக்கூற என்னால் உதவ முடிந்ததையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள இந்தத் தகவல்கள் யாவும் இறைவனி (அல்லாஹ்வி)டமிருந்துதான் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு வந்திருக்க முடியும் என்று எனக்குத் தெளிவாகியுள்ளது. ஏனென்றால் கருவியல்பற்றிய அறிவார்ந்த ஆய்வு முடிவுகளில் பெரும்பாலனவை பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே கண்டுபிடிக்கப்பட்டன. அந்த ஆராய்ச்சியே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இறைவனி (அல்லாஹ்வி)ன் தூதர் என்பதை நிரூபித்துவிட்டுள்ளது.” என்றார்.

  நிச்சயமாக அல்குர்ஆன் தெய்வீகத் தன்மைபொறுந்திய வேத வெளிப்பாடு என்பதை என்றும் உணர்த்தி நிற்கும்.

 29. பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு:

  மனித வாழ்வு இவ்வுலகோடு முடிவு பெற்றால்!

  பகுத்தறிவற்ற எண்ணற்ற பிராணிகளைப்போல், பகுத்தறிவுள்ள மனிதனும் ஒரு பிராணியே. சிலர் சொல்லுவது போல் அவனுக்கு மறுமை வாழ்க்கை என்று ஒன்றில்லை. மனிதன் மரணிப்பதோடு அவனது வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. மற்ற பிராணிகளைப் போல் அவனும் வாழந்து மடிந்து மண்ணாகிப் போவதே அவனது இறுதி முடிவு என்பது நாத்திக நண்பர்களின் உறுதியான முடிவு.

  இந்த அவர்களின் முடிவின் அடிப்படையில் எமக்குச் சில ஐயங்கள் எழுகின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பது அவர்களின் கடமையாகும்.

  நாத்திகர்கள் தாங்கள் தான் அசலான பகுத்தறிவாளர்கள் என்று பறைசாற்றிக் கொள்வது ஊர் அறிந்த உண்மை. எனவே எமது சில பகுத்தறிவுக் கேள்விகளுக்கு விடை தருவது அவர்கள் மீதுள்ள பொறுப்பாகும். அவர்கள் தரும் பதில்களிலிருந்து அவர்கள் பகுத்தறிவுப் பாசறையிலுள்ளவர்களா? அல்லது ஐயறிவு பாசறையிலுள்ளவர்களா? என்பதை எம்போன்றவர்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

  உலகில் காணப்படும் கோடான கோடி ஜீவராசிகளைப் போல் அதாவது புழு பூச்சிகளைப் போல் மனிதனும் ஒரு புழு -பூச்சியே – ஒரு பிராணியே ஜீவராசியே! அனைத்து உயிரினங்களும் மடிந்து மண்ணணாகிப் போவது போல் மனிதனும் மடிந்து மண்ணாகி போகின்றவன்தான். மற்றபடி அவனுக்கொரு ஆத்மாவோ, மறுமை வாழ்க்கையோ இல்லை என்பதே நாத்திகர்களின் பகுத்தறிவு வாதம். அதாவது உலக வாழ்வோடு மனித வாழ்வு முற்றுப் பெற்று விடுகிறது. அதன் பின் ஒரு தொடர்ச்சியும் இல்லை என்பதே அவர்களின் வாதம். இப்போது அவர்களின் வாதத்தில் நமக்கு ஏற்படும் ஐயங்கள் இவைதான்.

  மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு சராசரி படைப்பினமே மனிதன் எனும் போது மற்ற படைப்பினங்களுக்குரிய சட்டங்களே மனிதனுக்கும் பொருந்த வேண்டும். மற்ற படைப்பினங்களைப் பொருத்தமட்டிலும் “வல்லனவற்றின் வாழ்வு வளம்” (Survival of the fittest) என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே அவற்றின் வாழ்வு அமைந்துள்ளது. அதாவது வலிமையுள்ளவை வலிமையற்றவற்றை வீழ்த்தி, அல்லது அழித்து தம்மை வளப்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக பெரிய மீன்கள் சிறிய மீன்களைக் கொன்று தமக்கிரையாக்கி கொள்கின்றன. சிங்கம், புலி போன்றவை மான், மாடு போன்றவற்றைக் கொன்று தமக்கிரையாக்கிக் கொள்கின்றன. இந்த “வல்லனவற்றின் வாழ்வு வளம்” புழு, பூச்சியிலிருந்து, ஊர்வனவற்றிலிருந்து, நாலு கால் பிராணிகள் வரை பொருந்தும், தரையிலுள்ள பிராணிகளுக்கும் பொருந்தும். இந்த சித்தாந்தத்தை நாத்திக பகுத்தறிவாளர்கள் அநீதி என்று தீர்ப்பு அளிப்பதில்லை.

  அபபடியானால், அந்த ஜீவராசிகளைப் போன்றதொரு புழு, பூச்சி-மிருகம் போன்ற ஜீவராசிதான் மனிதன் என்று நாத்திக பகுத்தறிவாளர்கள் கூறும் போது, அதே “வல்லனவற்றின் வாழ்வு வளம்” (Survival of the Fittest) என்ற சித்தாந்தம் மனிதனுக்கும் பொருந்திப் போக வேண்டுமல்லவா? மனிதர்களிலும் வலியவர்கள் வலிமை அற்றவர்களை வீழ்த்தி தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதை அநீதி என்று கூற முடியுமா? இல்லை; இது அநீதி என்று நாத்திகர்கள் கூறுவார்களேயானால், எந்த அடிப்படையில் அநீதி என்று கூறுகிறார்கள்? மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு, மண்ணோடு மண்ணாகிப் போகும் ஒரு படைப்புத்தானே – புழு பூச்சிதானே, மிருகம் போன்றவன்தானே மனிதனும் நாத்திகர்களின் கூற்றுப்படி அப்படியானால் மற்றப் படைப்பினங்களுக்குப் பொருந்திப் போகும் வல்லனவற்றின் வாழ்வு வளம் (Survival of the fittest) என்ற கோட்பாடு மனிதனுக்கு மட்டும் ஏன் பொருந்திப் போகாது? இதற்குரிய சரியான விளக்கத்தை பகுத்தறிவு அடிப்படையில் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள் நாத்திகர்கள். அது மட்டுமல்ல; மற்ற படைப்பினங்கள் விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் மட்டுமே அது அநீதியாகும் என்று பிரித்துச் சட்டம் சொன்ன அதிகாரம் பெற்ற சக்தி எது? இதற்கு பகுத்தறிவு ரீதியாக விளக்கம் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

  நீதிக்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்பவர்களில் பெரும்பாலோர் வறுமையிலும், துன்பங்களிலும் சதா உழன்று மடிகிறாாகள். அவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும் உட்பட்டு வாழ்ந்ததற்குரிய நற்பலனை இவ்வுலகில் அனுபவிக்கவில்லையே! அப்படியானால் எங்கே பெறுவார்கள்?

  அடுத்து வலுவில்லாதவர்கள் வலுவானவர்களை அடக்கி ஒடுக்கி தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வது அநீதியே என்ற பகுத்தறிவு ரீதியாகவும் மனச்சாட்சியின் படியும் அப்பட்டமாக ஒப்புக் கொண்டிருக்கும் நாத்திகர்களில் பலர், இன்று அதற்கு மாறாக மக்களையும் அரசையும் அதிகாரிகளையும் ஏமாற்றி அல்லது லஞ்சம் கொடுத்து கோடி, கோடியாகக் கொள்ளை அடித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சொத்துக்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்களே? இதற்குக் காரணம் என்ன? அவர்கள் அநீதி என்று ஒப்புக் கொண்டுள்ளதற்கு மாற்றமாக – மக்களிடம் அநீதி என்று அப்பட்டமாக அறிவிப்பதற்கு மாற்றமாக அந்த அநீதியான கொள்ளை அடிக்கும் செயலை செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது? அவர்களது பகுத்தறிவும், மனச்சாட்சியும் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று ஒப்புக்கொள்ளும் குடி, விபச்சாரம், சூது போன்ற தீய காரியங்களில் அவர்களில் பலர் மூழ்கி இருக்கிறார்களே? இத்தீய செயல்களைச் செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது?

  இறைவனையும், மறுமையையும் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களோ மனிதனின் உடம்பில் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் அவனது பகிரங்கப் பகைவனான ஷைத்தான் ஓடிக்கொண்டு மனிதனை வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளி அதை நிரப்ப கங்கணம் கட்டிச் செயல்படுகிறான். அவனது வலையில் சிக்கியே மனிதன், தானே பாவம், அநீதி, அக்கிரமம், ஓழுக்கமற்ற செயல் என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் துர்ச்செயல்களைச் செய்து பாவியாக நேரிடுகிறது என்று கூறிவிடுவார்கள். நிச்சயமாக நாத்திகர்கள் இறைவனையும், மறுமையையும், ஷைத்தானையும் மறுப்பதால் இந்தக் காரணத்தை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள்; சொல்லவும் மாட்டார்கள். அப்படியானால் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று மனிதனே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டு, அடுத்த கனமே அவற்றைச் செய்வதற்குரிய காரணம் என்ன? பகுத்தறிவு செய்வதற்குரிய காரணம் என்ன? பகுத்தறிவு பாதையில் பயிற்சி பெற்ற நாத்திகர்கள் அதற்குரிய காரணம் கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

  அடுத்து அவர்களே பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு விட்டு அதற்கு மாறாக அந்த பாவமான செயல்களை, அநீதியான செயல்களை, அக்கிரமமான, ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்து கோடி, கோடியாக கொள்ளை அடித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குவித்து வைத்துள்ளனர். அவர்களுக்கு இன்று மக்களுக்கு மத்தியில் பெருஞ்செல்வாக்கு ஆள், அம்பு, பட்டம், பதவி, பலவித அதிகாரஆதிக்கம், அரசியல் செல்வாக்கு என்று மன்னாதி மன்னர்கள் போல் உல்லாசபுரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வுலகில் வாழ்நாள் பூராவும் அவர்கள் கொள்ளை அடித்து சேர்த்த சொத்துக்கள் அவர்களுக்கு இவ்வுலகை சுவர்க்கப்பூமியாக ஆக்கித் தருகிறது. அவர்கள் செய்த அநீதி, அக்கிரமம், பாவச் செயல்கள், கொலை, கொள்ளைகள் இவை காரணமாக இவ்வுலகில் எவ்வித தண்டனையோ, கஷ்டமோ, துன்பமோ அனுபவிக்காமல் சுவர்க்கவாசிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பாடையில் வைத்து மண்ணறையில் கொண்டு தள்ளும் வரை அல்லது தீயிலிட்டுப் பொசுக்கும் வரை இன்பமே இன்பம்; மற்றபடி துன்பத்தின் சாயல் கூட படாதபடி வாழ்ந்து மடிகிறார்கள். பகுத்தறிவு நாத்திகர்கள் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்ட செயல்களைச் செய்தே அவர்கள் இவ்வுலகில் குபேர வாழ்க்கையை- சொர்க்கலோக வாழ்க்கையை அடைந்தார்கள்.

  ஆனால் அவர்கள் செய்து முடித்த எந்த பாவமான செயலுக்கும், அநீதியான செயலுக்கும், அக்கிரமமான செயலுக்கும், ஒழுக்கமற்ற செயலுக்கும் அணுவத்தனை கூட தண்டனையோ துன்பமோ அனுபவிக்கவில்லை. மரணத்திற்குப் பின் மனிதனுக்கு வாழ்வு உண்டு என்று உறுதியாக நம்பும் முஸ்லிம்களோ நிச்சயமாக அப்படிப்பட்டவர்கள் இவ்வுலகளில் மக்களையும், அரசுகளையும், அதிகாரிகளையும் ஏமாற்றித் தப்பிக் கொண்டாலும் இறைவனுடைய தர்பாரில் தப்பவே முடியாது. அங்கு வசமாக மாட்டிக் கொள்வார்கள். கடுமையான தண்டனைகள் அவர்களது குற்றச் செயல்களுக்குக் காத்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லி விடுவார்கள். ஆனால் இறைவனையும், மறுமையையும் மறுக்கும் நாத்திகர்கள் இப்படிச் சொல்ல முடியாது. அப்படியாயின் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைப்படி இப்படிப்பட்ட பாவமான, அநீதியான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்து வளமான வாழ்வை அமைத்துக் கொண்ட கொடியவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவிப்பது எப்போது? பகுத்தறிவு ரீதியாக விடை தரக்கடமைப் பட்டிருக்கிறார்கள். ஒன்று புழு, பூச்சி, மிருகம் போன்ற படைப்பினங்களைப் போல், மனிதனும் “வல்லனவற்றின் வாழ்வு வளம்” (Survival of the fittest) என்ற கோட்பாட்டின்படி வாழக் கடமைப்பட்டவன் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லை அது பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று சொன்னால் இந்த சட்டத்தை வகுத்தளித்த சக்தி எது என்பதையாவது தெளிவு படுத்த வேண்டும்.

  மேலும் அவர்களே அவர்களது மனட்சாட்சிப்படி பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று அப்பட்டமாக ஒப்புக் கொண்டுவிட்டு மறைமுகமாக அவற்றைச் செய்யத் தூண்டும் சக்தி எது என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இப்படி மனட்சாட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டு சொத்துக்களை குவித்து உலகில் குபேர வாழ்க்கை, சொர்க்கலோக வாழ்க்கை வாழ்ந்து மடியும் சண்டாளர்கள் தங்களின் குற்றங்களுக்குரிய தண்டனைகளை அனுபவிப்பது எப்போது? எங்கே? என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இந்த எமது சந்தேகங்களுக்கெல்லாம் பகுத்தறிவு ரீதியான விளக்கங்களை அவர்கள் தரவேண்டும், அப்படியானால் மட்டுமே அவர்களைப் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்றவர்களாக உலகம் ஒப்புக் கொள்ளும். இல்லை என்றால் புறக்கண்ணால் பார்த்தே கடவுளை, மறுமையை ஏற்பேன் என்ற ஐயறிவு வாதத்தையே அவர்கள் முன் வைக்கிறார்கள் என்ற முடிவுக்கே முறையான பகுத்தறிறவை- நுண்ணறிவை உடையவர்கள் வர நேரிடும். பாவமான, அநீதமான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்கிறவனின் மனச்சாட்சியே அவனைக் கொள்ளாமல் கொன்று கொண்டிருக்கும்; அதுவே அவனுக்குரிய தண்டனையாகும் என்ற பிதற்றலான, மழுப்பலான, நழுவலான பதிலை அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கவில்லை. காரணம் இந்த வாதம் உண்மையானால், இவ்வுலகிலும் அதே வாதப்படி அக்குற்றச் செயல்களுக்கு அரசுகளும் எவ்விதத் தண்டனையும் அளிக்கக் கூடாது. அவர்களின் மனட்சாட்சியே அக்கயவர்களை கொல்லாமல் கொள்வதே போதுமானதாகும் என்பதையும் நாத்திகர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்? எதைச் சரிகாணப்போகிறார்கள் நாத்திகர்கள்?

 30. பகுத்தறிவாளர்களே! பகுத்தறிவை பகுத்துப் பார்த்தீர்களா?

  அளக்கு முன் அளக்கும் கருவியையும், நிறுப்பதற்கு முன் நிறுக்கும் கருவியையும் சரி பார்த்து கொள்வது அறிவாளிகளின் கடமையாகும். எந்த ஒரு முயற்சியிலும் இறங்கு முன் அதற்குரிய அடிப்படைத் தகுதிகளைச் சரி பார்த்து உறுதி செய்து கொண்ட பின்னரே அந்த முயற்சியில் இறங்கினால் அதற்குரிய பலனை சரியான அடைய முடியும். உதாரணமாக நிறுத்தக் கூடிய ஒரு கருவி – தராசு சரியாக இருக்கிறதா? எவ்வளவு எடைவரை அதில் நிறுத்துப் பார்க்க முடியும் என்பதை முறையாக முழுமையாக அறிந்த பின் அந்த எடைக்குள் உள்ள பொருளை மட்டுமே அதில் நிறுக்க வேண்டும். அந்தத் தராசில் நிறுக்கக் கூடிய அளவுக்கு அதிகமாக அதில் நிறுத்தால் அது தப்பான எடையைத்தான் காட்டும். அது தராசின் குற்றமல்ல; அந்த தராசின் தகுதியை சரி பார்த்து உறுதிப்படுத்தாத மனிதனே அத்தவறுக்குப் பொறுப்பாளி ஆகிறான்.

  இந்த நியதி பொதுவாக அனைத்து அம்சங்களுக்கும் பொருந்தும் என்பதை பகுத்தறிவாளர்களும் மறுக்க முடியாது.

  இந்த நியதியின் அடிப்படையில் விஷயங்களை பகுத்து ஆராயுமுன்னர் பகுத்தறிவின் தகுதியை, அதன் ஆற்றலை (Power of mind) அறிந்து கொள்வது மிகமிக அவசியமாகும். காரணம் பகுத்தறிவின் ஆற்றலை – தகுதியை அறிந்து கொள்ளாமல், அதற்கு மீறிய ஒன்றைப் பற்றிப் பகுத்தறிய முற்பட்டால் அது பெருத்த கேடாகவே முடியும் என்பதை அறிஞர்கள் மறுக்க முடியாது. எனவே மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஆறாவது அறிவான பகுத்தறிவின் ஆற்றலை அந்தப் பகுத்தறிவு கொண்டே பகுத்துப் பார்ப்போம்.

  ஐம்புலன்கள் கொண்டு கிடைக்கும் தகவல்களைக் கொண்டு மட்டுமே பகுத்தறிவு செயல்பட முடியும். இந்த ஐம்புலன்களுக்குள் அடைபடாத ஒன்றை இந்தப் பகுத்தறிவால் விளங்க முடியாது; ஏற்க முடியாது. அதனால் தான் கோவூர் போன்றவர்கள் கடவுளைக் காட்டுங்கள்; கண்ணால் பார்த்து ஏற்றுக் கொள்கிறோம் என்ற அறிவற்ற வாதத்தை வைத்தனர்.

  கண்ணால் பார்ப்பது என்றால் அந்த பொருளுக்கு ஒரு தோற்றம் இருக்க வேண்டும்; அந்தப் பொருளில் வெளிச்சம் பட வேண்டும்; அந்தப் பொருளுக்கும் பார்க்கும் மனிதனுக்கும் இடையில் மறைக்கும் திரை எதுவும் இருக்கக் கூடாது. இந்த நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேறினால்தான் குறிப்பிட்ட அந்தப் பொருளைக் கண்ணால் பார்க்க முடியும். இப்படிப்பட்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்ட நிலையில் நாம் பார்க்கும் ஒன்று நமது அறிவை மயங்கச் செய்தாலும் அது கடவுள் சக்தியாக இருக்க முடியாது என்பதை விளங்காதவர்கள் தான் சில போலி ஆன்மீகவாதிகள் காட்டும் கண்கட்டி வித்தைகளை – மந்திர தந்திர காட்சிகளைக் கண்ணால் கண்டு அவர்கள் தெய்வாம்சம் பொருந்திய மஹான்களாக ஏற்று வழிகெட்டுச் செல்கின்றனர். எனவே கடவுளை கண்ணால் கண்டு தான் ஏற்பேன் என்று அடம் பிடிப்பவர்கள் பகுத்தறிவை முறைப்படி விளங்காத மூடர்களாக மட்டுமே இருக்க முடியும். காரணம் மனிதனின் ஐம்புலன்களுக்குள் கட்டுப்படும் ஒன்று கடவுளாக ஒருபோதும் இருக்க முடியாது. ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டவன், ஐம்புலன்களின் துணையுடன் செயல்படும் பகுத்தறிறவுக்கும் அப்பாற்பட்டவன் மட்டுமே மனிதனையும் மற்றும் அனைத்தையும் படைத்த ஒரே இறைவனாக இருக்க முடியும்.

  தங்களை பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவு பாசறையில் பயிற்சி எடுத்து பக்குவப்பட்டவர்கள் என பெருமைபட பேசிக்கொள்ளும் பகுத்தறிவாளர்களிடம் சில வினாக்களைத் தொடுக்கிறோம். அவற்றிற்கு முறையான – சரியான பதில்களை தருமாறு கேட்டுக் கொள்கிறோம். ஒவ்வொரு பகுத்தறிவாளருக்கும் ஒரு தாயும், தந்தையும் நிச்சயம் உண்டு. தாயும், தந்தையும் இல்லாமல் நான் இந்த உலகிற்கு வந்து விட்டேன் என்று எந்த பகுத்தறிவாளரும் சொல்ல மாட்டார். நாம் இப்போது அவர்களிடம் கேட்பது பகுத்தறிவாளர்களாகிய நீங்கள் உங்கள் தாயையும், தந்தையையும் அவர்கள் உங்களைப் பெற்றெடுக்கும்போது உங்கள் கண்ணால் பார்த்து பகுத்தறிந்துதான் ஏற்றக்கொண்டீர்களா? நிச்சயமாக இல்லை என்ற பதிலைத்தான் உங்களால் தர முடியும். அப்படியானால் உங்கள் தாயையும், தந்தையையும் எந்தப் பகுத்தறிவின் ஆய்வைக் கொண்டு ஏற்றீர்கள்? சொல்லுங்கள். எங்களுக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும்போது தாயென்றும் தகப்பனென்றும் தெரிய வந்ததை நம்பித்தான் தாயையும், தந்தையையும் ஏற்றுக்கொண்டோம் என்று மட்டுமே சொல்ல முடியும்.

  தங்களை மாபெரும் பகுத்தறிவாளர்கள் என பீற்றிக் கொள்ளும் ஒரு சிலர் அதிகப் பிரசிங்கித்தனமாக மரபணு சோதனை மூலமாக எங்களின் தாயையும் தந்தையையும் பகுத்தறிந்து கொள்வோம் என பீற்றலாம். இங்கும் அவர்கள் தாயாக, தந்தையாக நம்பி ஏற்றிருப்பவர்கள் உண்மையில் தங்களின் தாய்தானா? தந்தைதானா? என்று மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இதுகாலம் வரை தங்களின் தாயாக, தந்தையாக நம்பி ஏற்றிருந்தவர்கள், தங்களின் தாயுமல்ல, தந்தையுமல்ல என மரபணு சோதனையின் மூலம் அறிந்து கொண்ட பின்னர், அதே மரபணு சோதனை மூலம் தங்களை உண்மையிலேயே பெற்றெடுத்த தாயையும், தந்தையும் அறிய முடியுமா? ஒரு போதும் முடியாது. அதாவது இவ்வுலகிலுள்ள குறைந்தது தங்கள் ஊரிலுள்ள அனைவரையும் மரபணு சோதனைக்கு உட்படுத்த முடியுமா? சாத்தியமா? சுருக்கம் தங்களின் பெற்ற தாயையும் தந்தையையும் தங்களின் பகுத்தறிவின் மூலம் ஒரு போதும் அறிந்து கொள்ள முடியாது. ஊரை நம்பி தாயையும், தாயை நம்பி தந்தையும் ஏற்றுக் கொள்ளும் பரிதாப நிலையிலேயே மனிதனின் அற்பமான பகுத்தறிவு இருக்கிறது.

  பெற்ற தாயையும், தந்தையையும் தான் பகுத்தறிவினால் பகுத்தறிய முடியவில்லை. தாயின் கர்ப்பப்பை உலகிலிருந்து இவ்வுலகிற்கு வந்த பின்னர் தங்களின் மழலைப்பருவத்தில் தாங்கள் செய்த அசிங்கமான செயல்களையாவது பகுத்தறிவு கொண்டு அறிய முடிகிறதா? அதாவது அந்தக் குழந்தைப் பருவத்தில் பெற்றதாய் சிறிது கவனமில்லாதிருக்கும் போது, ஒன்றிற்கும் இரண்டிற்கும் போய் அவற்றைக் கைகளால் பிசைத்து அதை வாயில் வைத்து சப்பியதையெல்லாம் தங்களின் பகுத்தறிவால் பகுத்தறிய முடிகிறதா? அதுதான் போகட்டும். சிறு பிராயத்தில் தாங்கள் செய்த சில பல செயல்பாடுகளைத் தங்களின் பகுத்தறிவால் பகுத்தறிய முடிகிறதா? தாய் , பாட்டி என்று சிலர் சொல்லித்தான் அவற்றை அறிய முடிகிறது.

  தாயின் கர்ப்பப்பையில் இருந்ததையோ, சிறு பிராயத்தில் செய்தவைகளையோ, போய் வந்த ஊர்களையோ, பகுத்தறிவால் பகுத்தறிய முடிகிறதா? உதாரணமாக விபரம் தெரிந்த பின்னர் லண்டனுக்கோ, அமெரிக்காவுக்கோ போய் சிறிது காலம் தங்கிவிட்டு வந்தால் அந்த ஊர்களைப் பற்றிய விபரங்களை, அனுபவங்களை பகுத்தறிவால் பகுத்தறிய முடிகிறது. தான் இதுவரை போகாத சைனா, சிங்கப்பூர் பற்றிய விபரங்களை, அனுபவங்களை பகுத்தறிய முடியுமா? கேவலம் இந்த உலகிலேயே தான் போய்வராத ஊர்களைப் பற்றி பகுத்தறிய முடியாத அற்ப பகுத்தறிவு கொண்டு, மரணத்தின் பின் உள்ள வாழ்வு பற்றி பகுத்தறிய முற்பட்டால் அது விவேகமான செயலாக முடியுமா?

  தாயின் கர்ப்பப்பையில் பத்து மாதம் இருக்கும் காலகட்டத்தில், இங்கு நீ இருப்பது நிரந்தரமல்ல, உனது உடலின் அனைத்து பாகங்களும் இங்கு தயாரானாலும் இங்கு உபபோயமில்லை. இந்த பையூரிலிருந்து. இதைவிட பிரமாண்டமான ஒரு பேரூருக்கு நீ செல்ல வேண்டும். அங்குதான் இங்கு தயாரான உனது பாகங்கள் செயல்பாட்டுக்கு வரும். குறிப்பிட்ட காலத்திற்குப்பின் நீ விரும்பினாலும் இங்கிருக்க முடியாது. இங்கிருந்து வெளியேறியே ஆக வேண்டும் என்று கூறப்பட்டால் அக்குழந்தை ஏற்குமா? அங்கு தாயிடமிருந்து தொப்புள்குழாய் வழியாகக் கிடைத்த இரத்தம் அதற்கு அமுதம்; இவ்வுலகிற்கு வர விரும்பியே இருக்காது. ஆனால் குறித்த தவணையில் அந்தப் பையூரிலிருந்து இவ்வூருக்கு வந்து விவரம் தெரிந்து பின்னரே தனது உடலுறுப்புகளின் அவசியத்தையும், இருந்து வந்த பையூரிலிருந்து இவ்வூருக்கு வந்து விவரம் தெரிந்த பின்னரே தனது உடலுறுப்புகளின் அவசியத்தையும், இருந்து வந்த பையூருடன் இவ்வூரை ஒப்பிடும் போது இதன் விசாலத்தையும் அறிய முடிகிறது.

  அந்தப் பையூரிலிருக்கும் போது இவ்வூரை மறுத்து பின்னர் பையூரிலிருந்து இவ்வூருக்கு வந்தது என்ற அளவு உண்மை என்பதை மனிதன் இங்கு வந்த பின் எப்படி ஒப்புக்கொள்கிறானோ, அது போல்தான் இவ்வூரிலிருந்து இதைவிட மிகமிக பிரமாண்டமான மறுமை ஊருக்குச் சென்ற பின்னரே அந்த உண்மையை ஒப்புக்கொள்ளும் நிலையில் இருப்பான். ஆனால் உடல் ஊனமுடன் பையூரிலிருந்து இவ்வூருக்கு வந்த குழந்தை வளர்ந்து ஆளானாலும் ஊனத்தின் காரணமாக அனைத்துத் துன்பங்களையும் அனுபவிக்க நேரிடுமோ, அதேபோல் மனித நேயத்தை மதித்து மனிதனாக வாழ்ந்து, தன்னைப் படைத்து உணவளித்து பாதுகாத்து வரும் இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு தனது ஆன்மாவின் அனைத்து உறுப்புக்களையும் முறையாகச் செம்மைப்படுத்தி முழுமைப்படுத்தாத நிலையில் இவ்வூரிலிருந்து மறுமை ஊருக்குச் சென்ற பின்னரே அழுது வருந்துவான். ஆனால் அவனது எந்த தந்திரமும் அவனுக்குப் பலன் தராது. ஆக தாயின் பையூரிலிருந்து இந்த ஊருக்கு வந்ததும், அங்கு தயாரான உடல் இவ்வூரில் மட்டுமே உபயோகத்தில் வருவது போல், இவ்வூரிலிருக்கும் பகுத்தறிவாளர்கள், இவ்வூரிலிருந்து மறுமை ஊருக்கு செல்வதையும், இங்கு தயாராகும் ஆன்மாவின் உறுப்புகள் நாளை மறுமையில் மட்டுமே உபயோகத்திற்கு வரும் என்பதையும் முறையாக முழுமையாக நுண்ணறிவுடன் பகுத்தறிய முடியாதவர்கள் எப்படித் தங்களை பகுத்தறிவாளர்கள் என மெச்சிக் கொள்கிறார்கள்?

  இந்த பகுத்தறிவாளர்கள் தங்களின் பகுத்தறிவைக் கொண்டு தங்களைப் பெற்றெடுத்த தாயையும் தந்தையும் மட்டுமா பகுத்தறிய முடியாமல் தடுமாறுகிறார்கள். இதுபோல் எண்ணற்ற விஷயங்களை பகுத்தறிய முடியாமல் அவற்றில் அறிவீனர்களாகவே இருக்கிறார்கள். மரத்தையும் பார்க்கிறார்கள். மரத்தின் விதையையும் பார்க்கிறார்கள். விதையிலிருந்து மரமா? மரத்திலிருந்து விதையா? என்பதை பகுத்தறிந்திருக்கிறார்களா? முட்டையையும் பார்க்கிறார்கள். கோழியையும் பார்க்கிறார்கள். முட்டையிலிருந்து கோழியா? கோழியிலிருந்து முட்டையா? பகுத்தறிந்து உண்மையை கண்டறிந்துவிட்டார்களா? இப்படி இவ்வுலகிலேயே இவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் பலவற்றின் உண்மை நிலையை – எதார்த்த நிலையை பகுத்தறிந்து, அவற்றின் உண்மை நிலையை பகுத்தறிந்து, அவற்றின் உண்மை நிலையை பகுத்தறிந்து கண்டுபிடிக்க முடியாத அற்பமான அறிவை உடையவர்கள் விண்ணையும், மண்ணையும் இன்னும் எண்ணற்ற கோள்களையும் படைத்து அதிசயிக்கத்தக்க வகையில் அவற்றை அவற்றின் ஓடுபாதைகளில் ஒரு வினாடி முன்பின் ஆகாமல் பல்லாயிரம் கோடி ஆண்டுகள் எவ்வித இடையூறுமில்லாமல் சுழல வைத்திருக்கும் அந்த ஒரே இறைவன் இவர்களின் பகுத்தறிவில் அடைபடவில்லை என்பதால் அந்த இறைவனை மறுப்பவர்கள் எந்த அளவு அறிவீனர்களாக இருக்க முடியும்?

  மேலே நாம் மனித பகுத்தறிவுக்குள் அடைபடாத, பகுத்தறிவுக்கு எட்டாத பலவற்றில் ஒரு சிலவற்றை தான் குறிப்பிட்டிருக்கிறோம். இவற்றுக்கு விடை காணாத நிலையில் ஓரிறைவனின் உள்ளமை பற்றி பகுத்தறிய முற்படுவது, அ…ம்…மா என்ற மூன்று எழுத்துக்களைக் கூட்டி அம்மா என்று சொல்லத் தெரியாத ஒரு மூடன் திருக்குறளைப் படித்து விளக்கம் சொல்ல முற்பட்ட கதைதான் – அறியாத ஓர் அறிவிலி 3100

  என்ற பெருங்கணக்கிற்கு விடைகாண முற்பட்ட கதைதான்.

  எனவே உண்மையிலேயே தாங்கள் பகுத்தறிவாளர்கள்தான் என்று நம்புகிறவர்கள் அவர்களது கூற்றில் உண்மையாளர்கள் என்றால், முதலில் தங்களைப் பெற்றெடுத்த தாயையும் தந்தையையும் தங்களின் பகுத்தறிவால் பகுத்தறிந்து சொல்லட்டும்; விதையிலிருந்து மரமா? மரத்திலிருந்து விதையா? என்பதைச் சொல்லட்டும்; கோழியிலிருந்து முட்டையா? முட்டையிலிருந்து கோழியா? என்பதையெல்லாம் பகுத்தறிந்து விடை கண்டுவிட்டு அதன் பின்னர் அனைத்தையும் படைத்து, உணவளித்து, நிர்வகித்து வரும் இறைவனைப் பற்றி பகுத்தறிய முற்படட்டும். அதுவே நுண்ணறிவுடன் கூடிய பகுத்தறிவாகும்.

 31. நாத்திகத்தின் தோற்றம்

  பொதுவான ஒரு நிலை என்னவென்றால் எந்த ஒன்றைப் பற்றியும் உண்டு என்ற நிலைக்குப் பிறகுதான் இல்லை என்ற நிலை தோன்ற முடியும். இல்லாத ஒன்றை இல்லை என்று கற்பனை செய்ய முடியாது. அரிசி தமிழக மக்களின் பிரதான உணவு; அத்தியாவசியத் தேவை, அதனால் தான் மனித நேயமற்ற அரக்க குணம் கொண்ட வியாபாரிகள் அதில் கல்லைக் கலந்து கல்லைம் அரிசியாக்குகின்றனர். மக்களுக்குத் தேவையில்லாத ஒன்றை கலப்படம் செய்து ஆதாயம் அடைய முடியாது. மக்களுக்குத் தேவையானவற்றில் தான் கலப்படம் நடக்கிறது. அரிசியில் மனிதனின் சமூக வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதனால் தான் மனித நேயமற்ற அரக்க குணம் கொண்ட அரசியல்வாதிகள் மதத்தின் பேராலும் ஜாதியின் பேராலும், மாநிலத்தின் பேராலும், மொழியின் பேராலும் மக்களுடைய உள்ளங்களில் நஞ்சைக் கலந்து மனித அமைதியைக் கெடுக்கிறார்கள். இதுவே எதார்த்த நிலை.

  இதுப் போலவே கடவுள் நம்பிக்கை மனித வர்க்கத்திற்கு அத்தியாவசியத் தேவையாக இருப்பதால் தான், கடவுளின் பெயரால் வயிறு வளர்ப்பவர்கள், புரோகிதத்தைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்கள், அந்தக் கடவுளின் பெயரால் துணைக் கடவுள்களையும், பொய்க் கடவுள்களையும், மூட நம்பிக்கைகளையும், வெற்றுச் சடங்கு சம்பிரதாயங்களையும் இன்னும் இவைப் போல் மனித சமுதாயத்தை வழிகேட்டிலும் அழிவுப் பாதையிலும் இட்டுச் செல்லும் பல தீய செயல்களையும் நாளோரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அரங்கேற்றி வருகிறார்கள். இந்தப் படுபாதகச் செயல்ளைப் பார்த்து வயிறு எரியும் சிந்தனையாளர்கள், போதிய ஆய்வுக் குறைவால் உண்மையான அந்த ஒரிறைவனையும் மறுக்கத் துணிகிறார்கள். நாத்திகர்களின் இச்செயல் எதுப் போல் இருக்கிறது என்றால், அரசியல் என்று ஒன்று இருக்கப்போய்த் தானே அரசியலின் பெயரால், மக்களை சுரண்டிப் பிழைக்கும் அரசியல் தரகர்கள் தோன்றுகிறார்கள். எனவே அரசியலே வேண்டாம் என்று சொல்வதுப் போல் இருக்கிறது. மக்களின் உணவாக அரிசி இருக்கப் போய்த் தானே மனித நேயமற்ற அரக்க குணம் கொண்ட வியாபாரிகள் அரசியில் கல்லைக் கலக்கிறார்கள்; எனவே மக்கள் அரிசியை உணவாகக் கொள்ளக் கூடாது என்று சொல்வதுப் போல் இருக்கிறது.

  அரசியலில் அயோக்கியர்கள் நுழைவதைத் தடுப்பதற்கு திறமையில்லாதவர்கள், அரசியலில் கல்லைக் கலக்கும் அயோக்கியர்களை ஒழித்துக் கட்ட வகைத் தெரியாதவர்கள் அரசியலே வேண்டாம்; அரிசியே வேண்டாம் என்று பிதற்றுவதுப் போன்ற ஒரு பிதற்றலைத் தான் ஒரேக் கடவுளைப் பற்றி நாத்திகர்கள் பிதற்றுகிறார்கள். கடவுளின் பெயரால் புரோகித அயோக்கியர்கள் புரிந்து வரும் அயோக்கியத்தனங்களை ஒழித்துக்கட்ட வழித்தெரியாத நாத்திகர்கள், படைத்த அந்த இணை, துணை இல்லாத ஒரே இறைவனை ஒழித்துக் கட்ட முற்படுகிறார்கள்.

  அரசியலை இஸ்லாமாக்குவது எப்படி சாத்தியமில்லையோ, அரிசியை உணவாகக் கொள்வதைத் தடுப்பது எப்படி சாத்தியமில்லையோ அதேப் போல் அகில உலகங்களையும் படைத்து, அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து மனிதனையும் படைத்து, உணவளித்து நிர்வகித்து வரும் இணை துணை இல்லாத அந்த ஏகன்-ஒரே இறைவனையும் இல்லை என்று ஒரு போதும் நிலைநாட்ட முடியாது; அதுமட்டுமல்ல நாத்திகர்களின் இந்தத் தவறான எண்ணத்தால், முயற்சியால் மனிதக் கற்பனையில் உருவான எண்ணற்றப் பொய் கடவுள்களையும், அந்தக் கடவுள்களின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைத்து வரும் புரோகிதர்களையும் ஒருபோதும் ஒழிக்க முடியாது. காரணம் சத்தியத்தால் அசத்தியத்தை ஒழித்துக் கட்ட வாய்ப்பு உண்டு. ஆனால் அசத்தியத்தால் சத்தியத்தை ஒழித்துக் கட்ட முடியாது. பெரியாரின் கொள்கைகளையேப் பின்பற்றுகிறோம் என்று மேடையில் முழக்கமிடுவோரின் செயல்பாடுகளே இதற்கு போதிய ஆதாரமாகும்.

  ஆரம்பத்தில் ஒரே இறைவன் தான்-ஒரேக் கடவுள் தான். அவன் படைத்து ஒரே மனித சமுதாயம் தான். இதை தான் தமிழக அறிவுசால் முன்னோர்கள் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று மக்களுக்கு உணர்த்தினார்கள். ஆனால் மனிதவர்க்கத்தினருக்குப் போட்டியான படைப்பி(ஜின்)லுள்ள ஷைத்தான்-ஷாத்தான் மனித இனத்தை வழிக்கெடுத்து அழிவுப் பாதையில் இட்டுச் சென்று நரகில் தள்ளுவேன் என்று சபதம் ஏற்றிருக்கிறான். அவனது வலையில் சிக்குபவர்களை நரகில் தள்ளுவேன். என்று இறைவனும் வாக்களித்திருக்கிறான்.

  நாத்திகர்கள் இந்த இடத்தில் ஆழ்ந்து சிந்தித்து விளங்க வேண்டும். அவர்கள் மேடைகளில் மக்கள் மன்றத்தில் நீதி, நேர்மை, சத்தியம், உண்மை என்று முழங்கும் பல காரியங்களில் அவர்கள் பகுத்தறிவு ஏற்று ஒப்புக் கொண்டு சரிகண்டு மேடைகளில் மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தப்படி அந்த நீதியை நேர்மையை சத்தியத்தை-உண்மையை தங்களின் அந்தரங்க தனிமனித வாழ்க்கையில் கடைப்பிடிக்கீறீர்களா? கடைப்பிடிக்க முடிகிறதா? என்று அவர்கள் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுப் பார்க்க வேண்டும். அப்போது எத்தனைக் காரியங்களில் அவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்படுகிறவர்கள் என்பதை அவர்களே உணர்ந்துக் கொள்ள முடியும். அப்படியானால் அவர்கள் சரி கண்டுள்ள விஷயங்களில், அவர்களின் மனசாட்சிக்கே மாறாக அவர்களைச் செயல்பட வைக்கும் சக்தி எது? அந்தச் சக்தியைத் தான் ஷைத்தான்-சாத்தான் என்கிறோம்.

  இந்த ஷைத்தானுக்கு-சாத்தானுக்கு அடிமைப்பட்டுத் தான் இறைவனின் பல நேரடிக் கட்டளைகளுக்கு மாறாக மத குருமார்கள், புரோகிதத்தைத் தொழிலாகக் கொண்டு-வயிற்றுப்பிழைப்பாகக் கொண்டு- ஷைத்தானின் நேரடி ஏஜன்டுகளாக செயல்படுகிறார்கள். மனிதர்களிலும் மிகப் பெரும்பான்மையினர் அந்த ஷைததானுக்கு அடிமைப்பட்டு இந்த புரோகிதர்களின் பின்னால் வழிகேட்டில் செல்கிறார்கள். இந்த நிலை என்று மனிதன் படைக்கப்பட்டு இவ்வுலகில் வாழ ஆரம்பித்தானோ அன்றே ஆரம்பித்து விட்டது ஆதி மனிதனுக்குப் பிறந்த முதல் மகனே இறைக் கட்டளையை மீறி தனது தம்பியைக் கொலை செய்துவிட்டு, அந்த பிரேதத்தை மறைக்க வழித் தெரியாது தடுமாறியதை இறுதி வழிகாட்டல் நூல் அறிவிக்கின்றது. எனவே ஒரே சமுதாயமாக இருந்த மனித சமுதாயம் பல மதங்களாக, பல பிளவுகளாகப் பிரிந்து ஒவ்வொரு மதத்தின் புரோகிதர்களை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்கள் பின்னால் செல்கிறார்கள்.

  மதங்கள் அனைத்தும் மனிதர்களால், குறிப்பாக மதப்புரோகிதர்களால், அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக கற்பனை செய்யப்பட்டவையே அல்லாமல் அந்த ஒரே இறைவன் கொடுத்தவை அல்ல. இறைவனால் மனிதனுக்கென்றுக் கொடுக்கப்பட்டது. தூய வாழ்க்கை நெறி-நேர்வழி-ஒரே வழி. கோணல் வழிகள்- மதங்கள் இறைவன் கொடுத்தவை அல்ல. ஆக உலகிலுள்ள இன்றைய மனித சமுதாயத்தின் 99 விழுக்காட்டினர் இந்தப் புரோகிதர்கள் பின்னால் பல மாதங்களில்-பல கோணல் வழிகளில் சென்று கொண்டிருக்கின்றனர்.

  இந்தப் பரிதாப நிலையை ஓரளவு சிந்திக்கும் திறன் படைத்தவர்கள் பார்த்து மனம் கலங்குகிறார்கள். மனித சமுதாயத்தின் பரிதாபகரமான ஏற்றத்தாழ்வு நிறைந்த சுரண்டல்கள் நிறைந்த-ஜாதிக் கொடுமைகள் நிறைந்த -மனிதனே சக மனிதனை அடிமைப்படுத்தும் நிலை மனிதனே இன்னொரு மனிதனை மனித மலத்தைத் தின்ன வைக்கும் கொடுமை இவற்றை எல்லாம் பார்த்து பதைபதைக்கிறார்கள்.

  ஜோதிடம், நல்ல நேரம்-கெட்ட நேரம், எண் ஜோதிடம், வாஸ்து சாத்திரம், கிரகபலன், பெயர் மாற்றம், ரெகை சாத்திரம், கிளி ஜோசியம், எலி ஜோசியம் இன்னும் பலவகை ஜோசியங்கள், ராசி பலன்கள், கற்கள் ராசி, சகுனம் பார்த்தல் இத்தியாதி இத்தியாதி-மூட நம்பிக்கைகளில் மக்களை ஏமாற்றிச் சுரண்டும் கொடூர நிலைகளைக் கண்டும் மதங்களின் பெயரால் கர்மாதி, ததி, 3-ம்,7-ம்,40-ம் பாத்திஹா தேர், சப்ரம், கூடு, என இறந்தவர்களின் பெயரால் பொய்க் கடவுளர்களின் பெயரால் சடங்கு சம்பிரதாயங்கள், சிலை வழிபாடு, சமாதி வழிபாடு யானை, எலி, பாம்பு என பல பிராணிகளின் வழிபாடு, அறிவுக்கே பொருந்தாத கற்பனை கட்டுக் கதைகள், இன்னும் இவைப் போல் ஏட்டில் அடங்கா, எழுதி மாளாத மூடச் சடங்கு சம்பிரதாயங்களில் மக்கள் ஏமாற்றப்படுவதை, அவர்களின் பொருளாதாரம் சுரண்டப்படுவதை கண்டு சகிக்காத பகுத்தறிவாளர்கள், கடவுள்களின் பெயரால் தானே அறிவுக்கே பொருந்தாத இப்படிப்பட்ட அட்டூழிங்கள் அரங்கேறுகின்றன. கடவுளே இல்லை என்று சாதித்து விட்டால் இவை அனைத்தும் ஒழிந்துவிடும் என்று இவர்களாக கற்பனை செய்துக் கொண்டு ஒரெயொரு உண்மையான கடவுள் மறுப்புக் கொள்கையையும் பிரசாரம் செய்கிறார்கள்.

  ஆக உண்மையான ஒரேக் கடவுளின் பெயரால் இந்தப் புரோகித வர்க்கத்தினர் எண்ணற்ற கடவுள்களை கற்பனை செய்துவிட்டதால், அந்த எண்ணற்ற பொய்க் கடவுள்களுடன் உண்மையான ஒரேக் கடவுள்களையும், ஒழித்துக் கட்டலாம் எனப் பகல்கனவுக் காண்கிறார்கள். பகுத்தறிவு பேசும் நுண்ணறிவு இல்லாதவர்கள். உண்மையில் இன்று உலகில் என்ன நடைபெறுகிறது என்றால், பல கடவுள் கொள்கையுடைய புரோகிதர்கள் மக்களை ஒரு பக்கம் வழிக்கெடுக்கிறார்கள்; உண்மைக் கடவுளையும் மறுக்கும் நாத்திகர்கள் மக்களை மறுபக்கம் வழிக் கெடுக்கிறார்கள். ஆக பல கடவுள் கொள்கையுடைய புரோகிதர்களாலும் உலகிற்கு ஆபத்து; ஒரே கடவுளை மறுக்கும் நாத்திகர்களாலும் உலகிற்கு ஆபத்து. உலகம் முழுவதும் இன்று அழிவில் மிதக்கிறது.

  ஆக இரு சாரரும் மனித விரோதிகளேயாவர். இருக்கும் ஒரே கடவுள் புரோகிதர்களின் கற்பனையில் பொய்க்கடவுளர்களாகி அதன் பின்னரே நாத்திகர்களின் கற்பனையில் ஒரேக் கடவுளையும் மறுக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

  உண்மைக் கடவுளை மறுப்பதற்கு இன்னொரு நியாயமான காரணத்தையும் இந்த மதப் புரோகிதர்கள் உருவாக்கி விட்டார்கள். பெரும் புரோகிதர்கள் உருவாக்கிவிட்டார்கள். பெரும்பாலான மக்கள் இந்தப் புரோகிதர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார்கள். மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் விஞ்ஞான வளர்ச்சி, மனித அறிவு முதிர்ச்சி காரணமாக பல உண்மைகள் வெளிப்பட்டு வருகின்றன. இவை இதுக் காலம் வரை இந்தப் புரோகிதர்களால் கற்பனையாக சொல்லப்பட்ட மூட நம்பிக்கைகளைத் தகர்த்து எறிவனவாக இருக்கின்றன. இதை இந்தப் புரோகிதர்களால், அவர்களின் தலைமைப் பீடங்களால் சகிக்க முடியவில்லை.

  எனவே அந்த உண்மைகளை வெளிப்படுத்தும் அறிஞர்களை-விஞ்ஞானிகளைக் கொடுமைப்படுத்திக் கொல்லவும் செய்தார்கள். அறிஞர் சாக்ரட்டீஸ், கலிலியோ, இன்னும் இவர்கள் போல் பல அறிஞர்கள், விஞ்ஞானிகள் உண்மைகளைச் சொன்னக் காரணத்தால் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்; கொலை செய்யப்பட்டார்கள். விஞ்ஞான ஆய்வில் கோளாறு இருந்தால் அது தவறாக இருக்கலாம். ஆனால் சரியான ஆய்வில் முறையாக கண்டுப்பிடிக்கப்படும் உண்மைகள் இறைவனுடைய கூற்றுக்கு முரணாக ஒருபோதும் இருக்காது. காரணம் இறை அறிவிப்புகள் இறைவனது சொல்; நிருபிக்கப்பட்ட விஞ்ஞானம் இறைவனது செயல்; எனவே இறைவனது சொல்லும் செயலும் ஒருபோதும் முரண்பட முடியாது. குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான். என்ற டார்வின் தத்துவம் ஒரு தவறான ஆய்வு-தத்துவம் என இன்று நிரூபிக்கப்பட்டது. மரபணு (TNA) ஆய்வு முலம் உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மூலம் வந்தவர்களே என்ற குர்ஆன் கூறும் உண்மை இன்று விஞ்ஞானம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

  இறைத்தூதர் மூஸாவுக்கு, இறைத்தூதர் ஈஸாவுக்கு அருளப்பட்ட தவ்றாத்தும், இன்ஜீரும் னிதக் கரம் பட்டு கலப்படமாகி பல மூடநம்பிக்கைகள் அவற்றுள் நுழைந்து விட்டன. அவற்றிலுள்ள உண்மையான இறை அறிவிப்புகள் ஒருபோதும் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்திற்கு முரண்படாது. இடையில் இந்த யூத கிறித்துவ புரோகிதர்களால் நுழைக்கப்பட்ட மனிதக் கருத்துக்கள் விஞ்ஞானத்திற்கு முரண்படுவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இந்த மதப்புரோகிதர்கள் இறை அறிவிப்புகளை விட மனிதக் கற்பனைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். காரணம் அவையே அவர்களின் பிழைப்புக்குரிய வாழ்வு ஆதாரங்களாகும்.

  இறைவனால் இறுதியாக அருளப்பட்ட அல்குர்ஆன் இன்று சுமார் 1425 ஆண்டுகளாகியும் அதில் ஒருப்புள்ளிக் கூட மாறுபடாமல் அதன் அசல் நிலை மாறாமல் இருக்கிறது. முஸ்லிம் அல்லாத பல அறிஞர்கள், விஞ்ஞானிகள் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளுக்கு முரணாக ஒரேயொரு ஆதாரமாவாது அல்குர்ஆனில் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் அல்குர்ஆனில் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் ஆராய்ந்தும், இறுதியில் தோல்வியையே தழுவினர். அவர்களில் சிலர் இஸ்லாத்தை நேர்வழி எனக் கண்டு அதில் இணைந்மது விட்டனர். அவர்களில் ஒருவர் மருத்துவர் மாரிஸ் புகைல் என்ற பிரெஞ்சு டாக்டர். அவர் “விஞ்ஞான ஒளியில் அல்குர்ஆனும் பைபிளும் என்று ஒரு நூலே எழுதியுள்ளார். அதில் 19, 20ம் நூற்றாண்டுகளில் கண்டுப்பிடிக்கப்பட்ட உண்மைகளை 6-ம் நூற்றாண்டிலேயே அல்குர்ஆன் எடுத்துரைக்கும் அர்ப்புதத்தை விளக்கியுள்ளார். அதே சமயம் பைபிளில் எண்ணற்ற முரண்பாடுகள் இருப்பதையும் கண்டறிந்தார். முறையாக பகுத்தறிபவர்களுக்கு இந்த நூல் ஒரு அறிய வழிகாட்டியாகும்.

  மருத்துவர் மாரிஸ் புகைஸ் போல் பல அறிஞர்களும் மனிதகுலம் அனைத்திற்கும் நேர்வழிக்காட்டி நூல்-நெறி நூல் அல்குர்ஆனை ஆய்வு செய்து அசந்துபோயிருக்கிறார்கள். ஆச்சரியப்பட்டு போயிருக்கிறார்கள். அவர்களில் சிலர் அல்குர்ஆனில் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளுக்கு முரணான கருத்து இருக்கிறது என்று நிலைநாட்டிவிட வேண்டும் என்ற வெறியோடு அல்குர்ஆனை வரிவிடாமல், ஆழ்ந்து ஆராய்ந்தவர்கள். ஆனால் அவர்களது முயற்சியில் தோல்வியுற்றனர். அவர்களில் சிலர் இஸ்லாத்தையும் அல்குர்ஆனையும் இழிவுப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு ஆய்வில் ஈடுபட்டவர்கள். அல்குர்ஆன் வெளிப்படுத்தும் விஞ்ஞதான உண்மைகளைக் கண்டு, இது உண்மையில் 6-ம் நூற்றாண்டில் தனி ஒரு மனிதரோ, அல்லது ஒரு குழுவினரோ முயற்சிகள் செய்து எழுதிய நூல் அல்லவே அல்ல; இது மனித சக்திக்கு மீறிய ஒரு சக்தியால் மட்டுமே வெளிப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். “அல்குர்ஆன் தனி ஒரு மனிதனாலோ, ஒரு குழுவினராலோ எழுதப்பட்டது என்று கூறுகிறவர்கள், இறைவனைத் தவிர மற்றவர்கள் அனைவரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு முழுக் குர்ஆன் அல்ல அதிலுள்ள ஒரு அத்தியாயம் போல் பிரிதொரு அத்தியாயத்தை எழுதிக் காட்டட்டுமே பார்க்கலாம்” என்று அல்குர்ஆன் சவால் விட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 1429 ஆண்டுகளாக அந்த சவாலை மனிதர்களால் முறியடிக்க முடியவில்லை. அல்குர்ஆன் அன்று மனிதனால் எழுதப்பட்டது என்று கூறுகிறவர்கள், அதில் அறிவுக்குப் பொருந்தாத கருத்துக்கள் இருக்கின்றன என்று கூறுகிறவர்கள், ஒன்றில் ஆத்திரத்தோடு, வெறுப்போடு காழ்ப்புணர்வுடன் அல்குர்ஆனை ஆய்வு செய்தவர்களாக இருக்க வேண்டும்; அல்லது அவசரஅவசரமாக நுனிப்புல் மேய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே நடுநிலையோடு, ஆழ்ந்து அல்குர்ஆனை ஆராய்ந்தவர்களின் ஒட்டுமொத்தக் கருத்தாக இருக்கிறது.

  எனவே நாத்திக பகுத்தறிவுச் சகோதரர்கள், இருக்கும் ஒரேக் கடவுளே சுயநலப் புரோகிதர்களின் கற்பனையில் பல பொய்க் கடவுளர்களாகி அதிலிருந்து பிறந்ததுத்தான் நாத்திகவாதம் என்பதை அறிந்துக் கொள்வார்களாக. நடுநிலையோடு தங்களின் உள்ளத்தில் நிறைந்திருக்கும் கருத்துக்களை சில நாட்கள் ஒதுக்கி வைத்துவிட்டு ஆத்திரமோ அனுதாபமோ இல்லாமல், விருப்போ வெறுப்போ இல்லாமல் இறைவனின் இறுதி வழிகாட்டல் நூலினை ஆழ்ந்து ஆய்வு செய்தால் அற்புதமான விளக்கங்கள் அவர்களுக்கு கிடைக்கும்.

 32. 1. ,];yhkpa khh;f;fj;jpw;Fk; – gpw kjq;fSf;Fk; cs;s kpfg; nghpa tpj;jpahrk;:

  vy;yh kjq;fSk; ey;yijNar; nra;a Ntz;Lk; – ey;yijNag; gpd; gw;w Ntz;Lk; vd;W nrhy;fpd;wd. Mdhy; ,];yhkpa

  நண்பர் அந்நஜாத்,

  நீங்கள் எங்கிருந்தோ வெட்டி ஒட்டிய மறுமொழி ஒருங்குறியில் அமையாததால் தமிழாக அமையாமல் போயிற்று. இனிமேல் வெட்டி ஒட்டினால் கவனம் கொள்ளவும்

  செங்கொடி

 33. இறைமறைஇன்றைய உலகம் சந்திக்கும் முதன்மையான சிக்கல்கள் யாவை?

  இக்கேள்வியை இன்று யரிடம் கேட்டாலும் – அவர் சமூக ஆர்வலராக இருந்தாலும் சரி, பாமரனாக இருந்தாலும் சரி, அறிவில் சிறந்த சான்றோர்களாய் இருந்தாலும் சரி – பதில் ஒன்று தான்.

  வன்முறை, வறுமை, ஒழுக்கச் சீர்கேடுகள், போதை – இது தான் அந்தப் பதில்.

  இன்று எவ்வகைச் சிக்கல்களானாலும் அவை மூன்று பரிமாணங்களைக் கொண்டுள்ளன:

  1. உளவியல் சார்ந்தது.

  2. சமூகம் சார்ந்தது.

  3. உலகளாவியது.

  அதாவது, தனிமனிதனின் உள்ளம் சார்ந்த பலப் பண்புகள்தாம் இறுதியில் உலகளாவியச் சிக்கல்களாய் வெடிக்கின்றன.

  அதனால்தான் திருக்குர்ஆன் ‘உள்ளம்’ தொடங்கி ‘உலகம்’ வரை நடைமுறைப்படுத்தும் வகையில் தீர்வுகளைத் தருகின்றது.

  எடுத்துக்காட்டாக, மனிதனின் உள்ளத்தில் தோன்றும் பழிவாங்கும் பண்பே இறுதியில் வன்முறையாக – தீவிரவாதமாக உலகைப் பாதிக்கிறது. இது போன்றுதான் இதரச் சிக்கல்களும்!

  1. தீவிரவாதம்: தீர்வு என்ன?

  திருக்குர்ஆன் இந்தச் சிக்கலுக்கான உளவியல் காரணங்களை முதலில் தடுக்கின்றது. அநீதி இழைத்தலும் பழிவாங்குதலும்தான் தீவிரவாதம் தோன்ற அடிப்படைக் காரணங்கள். ஆகவே, திருக்குர்ஆன் நீதியை நிலைநாட்டும்படியும் அநீதி இழைக்காமல் வாழும்படியும் ஆணையிடுகிறது.

  “இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும் நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது” (குர்ஆன் 5:8).

  “நீங்கள் எதைப் பேசும்போதும் நீதியுடன் பேசுங்கள்; உங்களின் நெருங்கிய உறவினர் பற்றிய விவகாரமாயினும் சரியே!” (குர்ஆன் 6:15).

  “திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்தும் படியும் நன்மை செய்யும்படியும் உறவினர்களுக்கு ஈந்துதவும்படியும் கட்டளையிடுகிறான். மேலும், மானக்கேடான, வெறுக்கத்தக்க, அக்கிரமமான செயல்களை விலக்குகிறான்..” (குர்ஆன் 16:90).

  நீதி செலுத்துவதைக் கடமையாகக் கூறும் குர்ஆன், அநீதி இழைக்கப் பட்டவனுடைய நியாயமான உணர்வுகளுக்கும் மருந்திடுகிறது.

  பொதுவாக அநீதி இழைக்கப் பட்டவனுக்கு நீதி கிடைக்காதபோது அவனுள் பழிவாங்கும் உணர்வு எழுவது இயற்கை. ஆனால் தண்டனை அளிக்கும் அதிகாரத்தை இஸ்லாம் அரசுக்குத்தான் அளித்துள்ளது. தனிமனிதன் பழிவாங்குவதை -அதாவது சட்டத்தைக் கையில் எடுப்பதை- இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தனிமனிதன் பழிவாங்குவதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. மாறாக, மன்னிக்கும் பண்பை ஏவுகிறது.

  “..அவர்கள் கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான்” (குர்ஆன் 3:134).

  “நன்மையும் தீமையும் சமமாக மாட்டா. நீர் நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்ளும். அவ்வாறாயின் உம்முடைய கொடிய பகைவனும் உற்ற நண்பனாய் மாறி விடுவான்” (குர்ஆன் 41:34).

  இன்று பயங்கரவாதம் உருவாவதற்கு முதன்மைக் காரணம் குற்றங்களுக்குத் தண்டனை கிடைக்காததே ஆகும். இஸ்லாமிய அரசு தண்டனைச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கண்டிப்பாக இருக்கும்.

  “…இறைநம்பிக்கையாளர்களே, கொலைக்குப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது” (குர்ஆன் 2:178). இது அரசுக்கு குர்ஆன் இடும் கட்டளை.

  “எவர்கள் தம்மீது கொடுமை இழைக்கப் பட்டபின் பழி வாங்குகிறார்களோ அவர்கள் மீது ஆட்சேபணை கூற இயலாது” (குர்ஆன் 42:41).

  எனவே அநீதி இழைக்கப்பட்டவன் அரசை அணுகித் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஏற்ற அளவு பழி தீர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கிறது குர்ஆன். இதனால் அவன் உள்ளத்தில் பழிவாங்கும் எண்ணம் அழிந்து விடுகிறது. அதே சமயம் தீங்கிழைத்தவனை மன்னிக்கும் அதிகாரத்தையும அவனுக்குத் திருக்குர்ஆன் வழங்குகிறது.

  “கொலை செய்தவனுக்கு அவனுடைய சகோதரனால் (அதாவது கொல்லப்பட்ட உறவினரால்) சலுகை அளிக்கப்பட்டால் பிறகு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் உயிரீட்டுத் தொகையை நேர்மையான முறையில் அவன் வழங்கிட வேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும்” (குர்ஆன் 2:178).

  “ஆயினும் யார் பொறுமையை மேற்கொண்டு மன்னித்து விடுகிறார்களோ அவர்களின் இந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயலைச் சேர்ந்ததாகும்” (குர்ஆன் 42:43).

  மன்னிப்பது தான் வீரமிக்கது என்று குர்ஆன் கூறுகிறது.

  இவ்வாறு அநீதிக்கு நீதமான முறையில் தீர்வு கண்டு விட்டால் வன்முறை எனும் எண்ணமே அடியோடு நீங்கி விடும் அல்லவா?

  2. வறுமை: தீர்வு என்ன?

  நவநாகரீக உலகில் வறுமையா? தொலைக்காட்சிப் பெட்டியின்முன் வெட்டியாய்ப் பொழுதைக் கழிக்கும் நமக்கு வறுமை பற்றிய சிந்தனையா? ஆயினும் உலகில் பெரும்பகுதி இன்று வறுமையில் வாடுகிறது என்பது உண்மை. ஏன், வளர்ந்த நாடு என்று அழைக்கப்படும் அமெரிக்காவில்கூட வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  வறுமைக்கான காரணங்களாகத் திருக்குர்ஆன் இரண்டு முக்கிய விஷயங்களைக் கூறுகிறது:

  அ) தவறான பொருள் பங்கீடு

  ஆ) வட்டியும் பதுக்கலும்.

  அ) செல்வம் உங்களிலுள்ள செல்வர்களிடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது (59:7).

  ஆனால் இன்று வளர்ந்த நாடுகள் செல்வர்களை மேலும் செல்வர்களாக்கிக் கொண்டிருக்கின்றன. ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்கிக் கொண்டிருக்கின்றன. அண்மைக்காலப் புள்ளி விவரங்கள் இதனை மெய்ப்பிக்கின்றன. உலகின் 0.13 விழுக்காடு மக்கள் 25 விழுக்காடு உலக வளங்களை அனுபவிக்கின்றனர் (பார்க்க: குளோபல் இஷ்யு -2004).

  ஆ. வட்டி: இன்று உலக நாடுகளின் கடன் சுமையை ஆண்டுதோறும் அதிகரிக்கச் செய்வதில் வட்டியின் பங்கு முதன்மையானதாகும். வட்டிக் கொடுமையைப் பற்றி நாம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. அனைவரும் அறிந்ததே.

  “இறைவன் வணிகத்தை ஆகுமானதாக்கி வட்டியைத் தடுத்து (ஹராமாக்கி) விட்டான்” (குர்ஆன் 2:215).

  “மக்களுடைய பொருள்களுடன் கலந்து பெருக வேண்டும் என்பதற்காக நீங்கள் வட்டிக்கு விடும் பணம் அல்லாஹ்விடத்தில் பெருகுவதில்லை” (குர்ஆன் 30:39).

  “உங்களில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்” (குர்ஆன் 2:188).

  மேற்கூறிய வசனங்களைப் பொருளாதார விதிகளாக மனிதர்களுக்குக் குர்ஆன் வழங்குகிறது. மேலும் செல்வம் என்பது இறைவன் வழங்கிய அமானிதம் எனும் அடிப்படையை இஸ்லாம் வலியுறுத்துகிறது. எனவே இறைவன் கூறியவாறு செல்வத்தைச் செலவு செய்யப் பணிக்கிறது.

  * “உங்கள் செல்வத்திலிருந்து வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் பங்கு உண்டு” (குர்ஆன் 9:60).

  * ஒவ்வோர் ஆண்டும் செல்வர்கள் தங்களின் செல்வத்திலிருந்து 2.5 விழுக்காடு தொகையை ஜகாத்தாக (கட்டாய அறமாக) ஏழை எளியோருக்கு வழங்க வேண்டும் என்று குர்ஆன் விதித்துள்ளது. இஸ்லாமிய நெறியின் ஐந்து அடிப்படைக் கடமைகளில் இதுவும் ஒன்று.

  * கடன் கொடுக்கல் – வாங்கல் முறைகளையும் அவற்றின் ஒழுங்குகளையும் குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.

  இவ்வாறு குர்ஆன் படிப்படியாக சமுதாயத்திலிருந்து இல்லாமையைப் போக்கி விடுகிறது. இத்தகைய சமுதாயத்தில் வாழும் ஒரு மனிதனிடம் பிறர் பொருளை அபகரித்தல் எனும் எண்ணம் ஏற்பட வாய்ப்பே இல்லை. அதையும் மீறி ஒருவன் அடுத்தவனின் பொருளைத் திருடுவானேயானால் அதற்கான தண்டனையையும் குர்ஆன் கூறுகிறது:

  “திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, அவர்களுடைய கைகளைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைக்கான கூலியாகும். மேலும் அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையாகும்” (குர்ஆன் 5:38).

  நல்லுரை, இறையச்சம், தண்டனை ஆகிய இம்மூன்றும் சமூகத்தில் பொருளியல் சிக்கல்களைத் தீர்த்து விடும் என்பது திண்ணம்.

  3. ஒழுக்கக்கேடுகளும் புதிய நோய்களும்

  இன்று புதிது புதிதாக உருவாகும் நோய்களுக்கு ஒழுக்கச் சீர்கேடுகளும் விபச்சாரமும்தான் முதன்மைக் காரணங்கள். “விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்” என்று குர்ஆன் கட்டளையிடுவதுடன் “அது மானக்கேடான செயலாகவும் தீய வழியாகவும் இருக்கிறது” (17:32) என்றும் எச்சரிக்கிறது.

  ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பைக் காத்துக் கொள்ளுமாறு கூறுகிறது.

  “(நபியே) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும்” (குர்ஆன் 24:30).

  “மேலும் (நபியே) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பாதுகாக்கட்டும்” (குர்ஆன் 24:31).

  இறுதியாக, கற்பைப் பாதுகாத்துக் கொள்ள மிகச் சிறந்த வழியாகத் திருமணத்தை முன்னிறுத்துகிறது.

  “உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்குத் திருமணம் செய்து வையுங்கள்” (குர்ஆன் 24:32).

  இன்று மேலை நாடுகளில், “தவறே இல்லை; இயற்கையானது” என்று விவாதிக்கப்படும் ஓரினத் திருமணங்களையும் ஓரினச் சேர்க்கையையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது (குர்ஆன் 26:165).

  4. சுற்றுச் சூழல் பாதிப்பு

  இந்தச் சிக்கல் இன்று உலகைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறது. நிலநடுக்கங்கள், ஆழிப்பேரலை (சுனாமி), புயல், வெள்ளம், வறட்சி என அனைத்திற்கும் மனிதனின் செயல்கள்தாம் காரணம். அறிவியல் முன்னேற்றங்களும் தொழில் மயமாக்கலும் கால நிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

  திருக்குர்ஆன் இது குறித்தும் கவலை தெரிவிக்கிறது. பூமியிலும் கடலிலும் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். இதனால் முன் சென்ற சமூகங்கள் அழிந்தன என எச்சரிக்கிறது.

  “மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ அதன் காரணமாகத் தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றி விட்டிருக்கின்றன. அவர்கள் செய்த சில செயல்களின் விளைவை அவர்கள் சுவைப்பதற்காக” (குர்ஆன் 30:41).

  18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாவீரன் நெப்போலியன் கூறுகிறார்:

  “நான் உலகிலுள்ள அறிவாளிகளை அழைத்து குர்ஆனின் அடிப்படையிலான சமநீதிமிக்க அரசை அமைக்க எண்ணுகிறேன். அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. ஏனெனில் குர்ஆன் மட்டுமே உண்மை. குர்ஆனால் மட்டுமே மனிதர்களுக்கு மகிழ்ச்சியைத் தர முடியும்.(பார்க்க: Bonaparte et I’Islam Paris, France PP 105-125)

  சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த அறிவாளி எனக் கருதப்படும் ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறுகிறார்:

  “முஹம்மத் அவர்களின் மார்க்கம் எதிர்காலத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும். ஏனெனில் ஐரோப்பியர் அதனை இப்பொழுதே ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டார்கள்…..முஹம்மத் அவர்களைப் போன்ற ஒரு மனிதர் இப்பூமியின் அதிகாரியாகப் பொறுப்பேற்பாரானால் புதிய உலகின் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து அமைதியும் மகிழ்ச்சியும் மலரும்.”(A collection of writings of some of the eminent scholars – 1935 ed P. 77)

  நன்றி : மருத்துவர் ஜே. முகைதீன் (சமரசம், 16-22 பிப்ரவரி 2009).

 34. மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது வெளிவந்துள்ளன. “இவ்வாறு இஸ்லாத்தில் இணைந்துள்ளவர்களில் பல பிரபலங்கள் இருப்பது, முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனும் பொய்ப் பிரச்சரத்திற்கும் அவதூறுக்கும் ஆளாகி அச்சமுற்ற நிலையில் வாழும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஊட்டச் சக்தியாகத் திகழ்கிறது” என்று முஸ்லிம் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  உண்மையான இஸ்லாத்தை பிரிட்டிஷ் வெள்ளையர்களுக்கு விளக்கிச் சொல்லும் பெரு முயற்சியில் உள்ள பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்ஸில், பிரிட்டனின் முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் அஹ்மத் டோப்ஸன் என்பாரைத் தமது புதிய குழுவின் தலைவராக நியமித்துள்ளது.

  முன்னாள் பிபிசி இயக்குனர் யஹ்யா பிரிட் (ஜொனாதன் பிரிட்), கிருத்துவத்தில் இருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள் பற்றிய தமது தொடர் ஆய்வுகள் மூலம் இஸ்லாத்தைத் தழுவிய புதிய முஸ்லிம்கள் எண்ணிக்கை மொத்தம் 14,200 என்று தீர்மானித்துள்ளார். இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்கள் பற்றிக் சென்ற வாரம் குறிப்பிடுகையில், “அமெரிக்காவில் மால்கம் எக்ஸ் (Malcom X) இஸ்லாத்தில் இணைந்து அமெரிக்கக் கருப்பினத்தவர்களுக்கு நலன் சேர்த்தார். மேலும், இஸ்லாத்தைத் தற்போது இங்குப் பார்க்கப் படும் அந்நியத் தன்மை போலல்லாமல், ஒரு தேசிய அளவிலான மார்க்கமாக அங்கு மாற்றியிருந்தார். அதுமட்டுமின்றி, இஸ்லாத்தின் சமநிலையான சீரமைப்பு, உறுதியான நம்பிக்கை, அதன் அழுத்தமான ஆன்மீகம் ஆகியன தமக்கு எவ்வாறு மனநிறைவைத் தந்தன என்பதையும் அவர் விளக்கிச் சொன்னார். பிரிட்டனிலுள்ள வெள்ளையர்களை இஸ்லாத்தின்பால் இலகுவாகக் கொண்டுவர அவரைப் போன்ற ஒரு தலைவர் இங்குத் தேவை” எனும் கருத்தை பிரிட் வலியுறுத்தினார்.

  ஹெர்பர்ட் ஹென்ரியின் கொள்ளுப் பேத்தியான எம்மா கிளார்க்கும் இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். முன்பு வேல்ஸ் இளவரசரின் தோட்டங்களின் வடிவமைப்புப் பொறுப்பில் இருந்த இவர், தற்போது ஒரு பள்ளிவாசல் தோட்டத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் உரையாடும்போது, “நான் இஸ்லாத்தை ஏற்றது சந்தேகத்தின் பிடியில் சிக்கியிருந்த மேற்கத்தியக் கலாச்சர நெறிமுறைகளில் இருந்து மிகவும் வெறுப்புற்றதாலும் அதனைச் சுற்றியுள்ள அசிங்கங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே” என்று குறிப்பிட்டார். இவருடைய பாட்டனார் ஹெர்பர்ட் 1908 முதல் 1916 வரை பிரிட்டனுடைய பிரதமராக இருந்து, முதல் உலகப் போரில் பிரிட்டனுடைய வெற்றி வாகைக்குத் தலைமை வகித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

  இஸ்லாத்தைத் தழுவியவர்களில் பெரும்பாலோர் சார்ல்ஸ் ஈஸ்டன் எழுதிய ‘Islam and the Destiny of Man’ (இஸ்லாமும் மனித விதியும்) எனும் புத்தகத்தினால் மிகவும் ஈர்க்கப் பட்டவர்கள் ஆவர். “எனக்கு வரும் ஆயிரக்கணக்கான கடிதங்களில், மனிதர்களின் மனோஇச்சைகளைப் பின்பற்றிடும் சமகாலக் கிருத்துவத்தின் நடைமுறையில் நம்பிக்கையிழந்து விட்ட நிலையில், அதுவல்லாத இதைப் போன்ற ஓர் உண்மை மார்க்கத்தைத்தான் தேடினோம் என்ற கருத்து பரவலாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது” என்று ஈஸ்டன் கூறுகிறார்.

  இஸ்லாத்தைத் தழுவிய The earl of Yarbrough (எர்ல் ஆஃப் யார்ப்ரௌஹ்) எனும் லின்கன்ஷைரிலுள்ள 28000 ஏக்கர் நிலச்சுவான்தார் ஒருவர் பத்திரி்கையாளர்களிடம் பேசும்போது, “நான் எனது பெயரை அப்துல் மத்தீன் என்று மாற்றியுள்ளேன். இஸ்லாத்தை ஆய்வு செய்யுங்கள்; அதன் அழகிய தன்மையை நீங்கள் உணர்வீர்கள் என்பதே நான் உங்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தியாகும்” என்று கூறினார். மாண்புமிகு அரசியவர்கள் பக்கிங்கம் ( Buckingham Palace) அரண்மனையில் வேலை செய்பவர்களுக்கு வெள்ளிக்கிழமைத் தொழுகையை நிறைவேற்றிட நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் என்பது மகிழ்வளிக்கும் தகவலாகும்!.

  இங்குக் குறிப்பிடப் பட்டுள்ளவர்கள் பிரிட்டன் அரசாங்கத்தின் நேரடித் தொடர்பில் உயர்பதவிகளும் அந்தஸ்துகளும் தலைமைத்துவமும் அதிகாரமும் பெற்று நாடாளுமன்ற ஆட்சி அவைகளில் அமர்ந்திருந்த செல்வந்த மூதாதையரின் வழிவந்தவர்கள் ஆவார்கள். அவர்களது நாடு எப்போதும் வேறு யாராலும் ஆட்சி செய்யப் படாத ஒரு நாடு. அப்படிப் பட்டவர்களின் வழித்தோன்றல்களுக்கு என்னதான் நேர்ந்தது? அவர்களை அதிகாரம் மூலம் பலவந்தமாக இஸ்லாத்தைத் தழுவிட எவரும் நிர்ப்பந்திக்க வில்லை!

  “எங்களுடைய உள்ளங்களுக்குக் கிடைக்கப்பெற்ற விவரிக்க இயலாத மன நிறைவின் வெளிபாட்டின் விளைவே எங்களது இஸ்லாத்தின் தேர்வாகும். இவ்வளவுக்கும் பின்னர் வெட்கம், பச்சாதாபம், தாழ்வு மனப்பான்மை போன்ற காரணங்களோ பிறர் என்ன நினைப்பார்கள் என்ற அச்ச உணர்வோ எனது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விடும் என்ற எண்ணமோ என்னை சக ஊழியர்களுக்கு மத்தியில் ஜும்மா தொழுகை நிறைவேற்றிடாமல் தடுத்திட முடியாது – அதுவும் அரசாங்கத் தலைமையகமாகிய பக்கிங்கம் பாலஸில் எனக்குத் தொழுகின்ற வசதி செய்து கொடுக்கப் பட்டு இருக்கின்றது எனும் நிலையில்” எனக் கூறுகின்றார் அரண்மனை ஊழியர்களில் ஒருவர்.

  கள ஆய்வு : முஹம்மத் மாலிக் முஹம்மத் ஆரிஃப்

  தமிழாக்கம் : இபுனு ஹனீஃப்

 35. குரானில் வடக்கு தெற்கு பற்றி சொல்லிருக்காங்களா?

  உலகத்தில் பாதி பேர் உண்ணும் அரிசி என்ற சொல் இருக்கிறதா?

  இவைகளெல்லாம் கண்டிப்பாக எனக்குத்தெரியாது, தெரிந்தால் சொல்லுங்கள்.

 36. அன்பு மிகு வெட்டி ஒட்டி வீரர்களுக்கு,

  நீங்கள் நினைவுபடுத்தவிரும்பும் கட்டுரைகளுக்கு சுட்டிகளை இணைத்தால் போதாதா? ஏன் இவ்வளவுக்கு வெட்டி ஒட்டி சிரமப்பட வேண்டும்.
  எழுதப்பட்டிருக்கும் கட்டுரை குறித்த எந்தக்கருத்தையும் முன்வைக்காமல் தொடர்பில்லாமல் இப்படி வெட்டி ஒட்டுவதன் பயன் என்ன? உங்களின் கேள்விகளை கேழுங்கள் பதில் சொல்கிறேன். அல்லது அப்படியான கேள்வியை எழுப்பும் பகுதியாகவாவது நீங்கள் வெட்டி ஒட்டுவது இருக்கவேண்டாமா?
  இதை உங்களின் வெறுப்பின் வெளிப்பாடு எனக்கொள்ளலாமா? கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் முஸ்லீம்களாக பிறந்ததைத்தவிர இஸ்லாத்திற்கும் உங்களுக்குமான தொடர்பு என்ன? இஸ்லாத்தில் எந்ந்தளவுக்கு நீங்கள் ஆழ்ந்திருக்கிறீர்கள்?

  வெட்டி வீம்பு உடல் நலத்திற்கு கேடு

  தோழமையுடன்
  செங்கொடி

 37. நண்பர்களே தீவிரவாதத்திற்கு தீர்வைச் சொல்கிறார் ஜனாப்.ஜபருல்லாஹ்,கேட்டுக்கொள்ளுங்கள். ரதயாத்திரை மூலமும்,மும்பை படுகொலையாலும்,குஜராத் படுகொலையாலும் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை கொன்ற கிரிமினல் RSSன் கூட்டுக்கும்பலான‌ இந்திய அரசிடம் அக்குற்றவாளிகளை தண்டிக்கக்கோரி மனு கொடுக்கவேண்டுமாம். இவன்(அரசு) தண்டிக்கவில்லை, தண்டிக்கமாட்டான் என்பதினாலேயே முஸ்லீம்களின் எதிர்வினை. உலகமயத்தினால் மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாடும் ஏகாதிப்பத்தியங்களும் அவற்றின் காலை நக்கும் ஏகாதிபத்திய அடிவருடிகளும் முஸ்லீம் தீவிரவாதம் என்பதை ஒரு கருவியாக பயன்படுத்தி மக்களின் போரட்டங்களை திசைதிருப்ப எத்தனிக்கின்றன. அவற்றிற்கு எதிராக போராட அறைகூவாமல் அதனிடமே நீதி கோரச் சொல்கிறார் ஜனாப்.ஜபருல்லா. இதைத்தான் இஸ்லாம் கோருகிரதென்றால் அத்தகைய (எதிரிடம் சரணடையச் சொல்லும்) இஸ்லாம் எங்களுக்குத் தேவையில்லை.

 38. அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?

  அப்துல் அஸீஸ்

  இந்த‌ நூற்றாண்டில் இஸ்லாமில் ஒரு பெரும் மாறுத‌லை உருவாக்கிய‌ புத்த‌க‌ம் என்று சொன்னால், அது மாரிஸ் புக்காயீல் எழுதிய‌ குர்ஆன் அண்ட் ச‌யின்ஸ் என்ற‌ புத்த‌க‌த்தை கூற‌லாம்.

  இந்த‌ புத்த‌க‌த்தில் ச‌வுதி ம‌ன்ன‌ரின் ம‌ருத்துவ‌ராக‌ ப‌ணி புரிந்த‌ மாரிஸ் புக்காயீல் அல் குர்ஆனில் ந‌வீன‌ ம‌ருத்துவ‌த்துக்கு எதிரான‌ எந்த‌ க‌ருத்துக்க‌ளும் இல்லை என்றும் இதுவே அல் குர்ஆன் அல்லாஹ்விட‌மிருந்து அருள‌ப்ப‌ட்ட‌த‌ற்கு ஆதார‌ம் என்றும் கூறியிருக்கிறார்.

  ச‌வுதி ம‌ன்ன‌ர் எத‌ற்காக‌ இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு புத்த‌க‌த்தை எழுத‌ மாரிஸ் புக்காயிலை ப‌ணித்தார் என்று தெரிய‌வில்லை என்றாலும், ப‌ல‌ ஹேஷ்ய‌ங்க‌ள உல‌வுகின்ற‌ன‌. ஒன்று ந‌வீன‌ ம‌ருத்துவத்தில் பரிணாமவியல் சொல்லித்தரப்படுவதாகவும், அதன் படி அல்லாஹ் மனிதனை படைக்கவில்லை என்றும், குரங்குகளே மாறி மாறி மனிதனாக ஆகிவிட்டன என்றும் கூறப்படுவதாக ச‌வுதி இமாம்கள் கருதினர். இதனால், நவீன மேலை நாட்டு மருத்துவர்களை கொன்டு சவுதி மன்னர் தனக்கு வைத்தியம் பார்த்துக்கொள்ளக்கூடாது என்றும் கருதினர். உடல் ந‌ல‌ம் குன்றியிருந்த‌ ச‌வுதி ம‌ன்ன‌ர் இப்ப‌டி ந‌வீன‌ ம‌ருத்துவ‌த்தை ம‌றுக்க‌ விரும்ப‌வில்லை. ஆக‌வே இப்ப‌டி ஒரு புத்த‌க‌த்தை எழுதி ச‌வுதி இமாம்க‌ளை திருப்தி ப‌டுத்த‌ விரும்பினார் என்றும் க‌ருத‌ இட‌முண்டு.

  இந்த புத்தகம் வெளிவந்ததும் இது பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அல் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதே என்பதை ஆணித்தரமாக நிறுவ உபயோகப்படுத்தப்பட்டது.

  இதே வேளையில் அல் குர் ஆனும் பல்வேறு மொழிகளில் புதிய மொழிபெயர்ப்பாக வெளிவரத்தொடங்கியது. இதற்கு ஆதாரமாக சவுதி அரசாங்கத்தின் இஸ்லாமிய பிரச்சார பிரிவு உலகின் பல நாடுகளில் இஸ்லாமிய பிரச்சாரத்துக்கும், அரபி மொழி பரவலுக்கும் ஏராளமாக செலவழித்தது. இதனால், அரபி மொழி கற்றவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் தோன்றினர்.

  அரபி மொழி அறிவும், மாரிஸ் புக்காயீலின் புத்த‌க‌மும் ஒரு புதிய‌ பாதையை இஸ்லாமில் உருவாக்கியுள்ள‌து என்றால் அது மிகையாகாது.

  அறிவிய‌ல் ரீதியில் அல் குர்ஆனுக்கு த‌ஃப்ஸீர் எழுதுவ‌தை இது தொட‌ங்கி வைத்துள்ள‌து.

  ஜ‌க‌ல்லூல் எல் ந‌க்க‌ர் என்ற‌ எகிப்திய‌ விஞ்ஞானி, புவியியலில் தற்போது கண்டறியப்பட்டுள்ள விஷயங்களை அல் குர் ஆன் எப்படி அன்றே சொல்லியுள்ளது என்று ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

  இவர் Committee of Scientific

  Notions in the Glorious Qur’an. Supreme Council of Islamic Affairs என்ற எகிப்து அரசாங்க அமைப்பில் சேர்மனாக இருக்கிறார்.

  குரானுக்கு தஃப்ஸீர்கள் (விளக்கங்கள்) எழுதுவது என்பது நான்கு அடிப்படை விஷயங்கள் மூலமாகவே நடைபெற வேண்டும்.

  முதலாவது ஒரு அல்குரான் வசனங்களை பிறிதொரு அல் குர்ஆன் வசனங்கள் மூலம் விளக்குவது. இதுவே உயர்ந்த தஃப்ஸீராகும்.

  இரண்டாவது அல் குர்ஆனின் வசனங்களை நபிகள் பெருமானாரே (ஸல்) ஹதீஸ்களில் விளக்கியிருக்கும் இடங்களை வைத்து விளக்குவதாகும்.

  மூன்றாவது சஹாபாக்கள் (நபிகள் பெருமானாரின்(ஸல்) தோழர்கள்) அல்குரானை விளக்கி போதித்ததை கூறும் ஹதீஸ்கள் மூலமாக விளக்குவதாகும்.

  நான்காவது சஹாபாக்களின் போதனையின் கீழ் கற்றுக்கொண்ட மற்றவர்கள் விளக்குவதை வைத்து விளக்குவதாகும்.

  ஆனால், இந்த நான்கு தஃப்ஸீர்களையும் உதறித்தள்ளிவிட்டு, தற்போது தான் தோன்றித்தனமாக அறிவியல் புத்தகங்களை வைத்து அல்குரானின் வசனங்களை விளக்க முற்பட்டுள்ளார்கள் இந்த புதிய தலைமுறையினர். இவர்களில் இந்திய அளவில் ஜாகிர் நாயக் அவர்களும் அவரை பின் தொடர்ந்து தமிழ்நாட்டு முஸ்லீம்களில் பலரும் இது போல அறிவியல் புத்தகங்களை முன்னே வைத்துகொண்டு அல் குர்ஆனுக்கு விளக்கவுரை எழுத முற்பட்டுள்ளார்கள்.

  இது ஆபத்தான போக்கு மட்டுமல்ல, இது இஸ்லாமிய பாரம்பரியத்துக்கு அடுக்காத போக்குமாகும்.

  இது குறித்து என் நண்பர்களுடன் நீண்ட விவாதம் புரிந்துள்ளேன். முதலில் என்னுடைய வாதத்தினை கேலியாக பார்த்த பலரும் என்னுடைய விவாதத்தில் உள்ள உள்ளக்கிடக்கையை உணர்ந்துள்ளனர். இதனை திண்ணை வாசகர்களுக்கும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

  சமீபத்தில் இணையத்தில் ஒரு சகோதரருடன் நடந்த விவாதத்தினையும் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

  அல் குர்ஆன் மீண்டும் மீண்டும் (11:1, 41:3, 41:44, 54:17, 54:22, 54:32, 54:40 இன்னும் பல வசனங்களில்) தன்னை தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளதாக இயம்புகிறது. ஆகவே இதற்கு நேரிடையாக அரபியில் அர்த்தம் என்னவோ அதனையே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இவர்களோ அல் குர்ஆன் கூறுவதை மறுத்து, அது குழப்பமாகவும், மறைபொருளாகவும் கூறப்பட்டுள்ளதாக நினைத்துக்கொண்டு தலையைச் சுற்றி விளக்கம் கூற முற்படுகிறார்கள்.

  எவனொருவன் அல் குர்ஆனுக்கு தன்னுடைய சொந்தக்கருத்தை கூறி அதுவே சரியென்று இயம்புகிறானோ அவன் தவறு செய்கிறான் என்று நபிபெருமானார்(ஸல்) இயம்பியுள்ளார்கள்.

  இப்படிப்பட்ட தவறான தஃப்ஸீர்கள் மூன்று வழியை சேர்ந்தவை. முதலாவது தத்துவ ரீதியாக விளக்குவது. அதாவது கம்யூனிஸ்டு ஒருவர் அல் குர்ஆனில் கம்யூனிஸ்ட் தத்துவங்கள்தான் இருக்கின்றன என்றும் அதன் வசனங்களை திரித்து கம்யூனிஸ கொள்கைக்கு தகுந்தாற்போல மாற்றி விளக்கம் கூறுவதாகும். ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்கு முன்னர் பலர் இதுபோல கம்யூனிஸ பார்வையில் அல் குர்ஆனை பார்த்து விளக்கம் கூறியுள்ளன. நல்லவேளையாக ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் இது போன்ற தவறான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளன என்று கருதலாம்.

  இது போன்ற இன்னொரு முயற்சியே சூஃபி வழியாகும். அதாவது அல் குர்ஆனின் வசனங்கள் மறைபொருள் கொண்டவை என்று கருதிக்கொண்டு அதற்கு ஒவ்வொரு சூஃபியும் ஒரு விளக்கம் கொடுப்பதாகும். ஒவ்வொரு அல் குர்ஆன் வசனத்துக்கும் ஒன்றின் உள்ளே ஒன்றாக ஏழு அடுக்காக மறைபொருள் உண்டு என்று இவர்களாக எழுதிக்கொண்டனர். ஆனால், இதுவும் தவறானதொன்றே என்பது வெளிப்படை.

  அடுத்ததாக வந்துள்ள தவறான தஃப்ஸீரே விஞ்ஞானப்பூர்வமாக அல் குர்ஆனை விளக்கும் முறையாகும். இதுவும் நபிபெருமானார்(ஸல்) அவர்களின் நேரடியான கண்டிப்பையும் உதாசீனம் செய்து மனம் போன போக்கில் அல் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கொடுக்கும் முயற்சியாகும்.

  உதாரணமாக கீழ்க்கண்ட வசனங்களை உலகம் உருண்டை என்று அல் குர்ஆன் சொல்வதாக கற்பனை செய்துகொள்கின்றனர் அறிவியல் தஃப்ஸீர்காரர்கள்.

  37:5 வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்! கீழ்திசைகளின் இறைவன்.

  37:6 நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.

  55:17 இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே! இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.

  70:40 எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.

  மேற்கண்ட வசனங்களிலிருந்து உலகம் உருண்டை என்று அல் குர்ஆன் சொல்கிறது என்று கண்டுபிடிக்க, கீழ்வருமாறு கூறுகின்றனர்.

  “உங்கள் தட்டையான உலக வரைபடைத்தின் மேல் வடக்கு பாத்து நின்று கொண்டு கிழ்க்கு திசை நோக்கி ஒரு கையும் மேற்கு திசை நோக்கி ஒரு கையும் நீட்டுங்கள். ஒரு கிழக்கு; ஒரு மேற்கு. அந்த வரைபடத்தின் மேல் பலர், நிங்கள் நிற்கும் அதே பாணியில் பல இடங்களில் பலர் நின்றால் பல கிழக்கு வராது. பல மேற்கு வராது. ஒரே கிழக்கும் ஒரே மேற்கும் தான் வரும்.

  ஆனால், இவர்கள் அனைவரும் ஒரு கோல வடிவ ‘குளோபில்’ இதேபோல் ஏறி நின்று கைகளை விரித்தால், விரிக்கும் திசைகள் பல காட்டும். இருவர் நின்றால் இரு கிழக்கும் இரு மேற்கும், பலர் நின்றால் பல கிழக்கும் பல மேற்கும் காட்டும். இதிலிருந்து புவி –ன்பது உருண்டை என இவ்வசனத்திலிருந்து விளக்கம் கிடைக்கவில்லையா”

  அல் குர்ஆன் இறங்கிய காலத்தில் ஒரே ஒரு கிழக்குதான், ஒரே ஒரு மேற்குதான் அறியப்பட்டிருந்தது என்றால், இந்த வசனம் பெரும் பிரச்னையை கிளப்பியிருக்கும் என்பது நிச்சயம் இல்லையா? எந்த ஒரு ஹதீஸிலும் இது பற்றிய கேள்வியை காணமுடியாது. ஏன் அந்த காலத்திய அரபியர் யாரும் பல கிழக்கு திசைகளை பற்றியும் பல மேற்கு திசைகளை பற்றியும் நபி(ஸல்) அவர்களிடம் கேட்கவில்லை?

  சூரியன் பனிக்காலத்தில் ஒரு கீழ்த்திசையிலும் கோடைக்காலத்தில் ஒரு கீழ்த்திசையிலும் தோன்றுமாறு அல்லாவால் பணிக்கப்படுகிறான். அதே போல கோடைக்காலத்தில் ஒரு மேற்கு திசையிலும் குளிர்காலத்தில் ஒரு மேற்கு திசையிலும் மறையுமாறு பணிக்கப்படுகிறான். இதனாலே இரண்டு கீழ்த்திசைகளுக்கும் இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவனாக அல்லாஹ் உள்ளான். அதுமட்டுமல்ல இரண்டு எல்லை கிழக்குகளுக்கும் இடையே இருப்பது பல கிழக்குகள், இரண்டு எல்லை மேற்குகளுக்கு இடையே இருப்பது பல மேற்குகள். அதனால்தான் பன்மையில் கிழக்குகளும் மேற்குகளும் குறிப்பிடப்படுகின்றன.

  அப்போது பல கிழக்குகளும் பல மேற்குகளும் இருப்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான். இஸ்மயீல் இப்னு கதீர் அவர்கள் 700 ஆண்டுகளுக்கு முன்னரே, இந்த வசனங்களுக்கு தஃப்ஸீர் எழுதும்போது பனிக்காலத்தில் ஒரு கிழக்கில் சூரியன் உதிக்கிறான், ஒரு மேற்கில் மறைகிறான். கோடைக்காலத்தில் ஒரு கிழக்கில் சூரியன் உதிக்கிறான், ஒரு மேற்கில் சூரியன் மறைகிறான் என்று தஃப்ஸீர் எழுதியுள்ளார். சூரியன் கடுங்குளிர் காலத்தில் ஒரு கிழக்கில் உதிப்பவன் கோடைக்காலம் வர வர கிழக்கு திசை மாறிக்கொண்டே செல்கிறது. பன்னெடுங்காலமாக இந்த இரண்டு கிழக்குகளுக்கு இடையே சூரியன் உதிக்கும் திசை மாறுகிறான் என்பதை மக்கள் அறிந்தே வந்துள்ளார்கள்.

  ஆனால், இந்த வசனங்கள் மறைபொருள் கொண்டவை என்று இவர்களாக கற்பனை செய்துகொண்டு, பல கிழக்கு திசைகள் என்பதே கிடையாது, பல கிழக்கு திசைகள் இருக்கவேண்டுமென்றால் அது கோளமாகத்தான் இருக்கவேண்டும் என்று அல் குர்ஆன் சொல்கிறது என்று கேட்காத கேள்விக்கு தஃப்ஸீர் எழுதுகிறார்கள்.

  27:61 இல் இந்த பூமியை ஆடாத இடமாக ஆக்கியிருக்கிறேன் என்று வசனத்தை இறக்கியுள்ளான். தமிழில் அதனை வசிக்கத்தக்க இடமாக என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆடாத இடம் என்றால், நகராத இடம். ஆனால், கிறிஸ்துவர்களிடமும் காபிர்களிடமும் கேட்டால் பூமி நகர்கிறது என்றுதான் சொல்வார்கள்.

  இதே போல ஹதீஸ்களுக்கும் தஃப்ஸீர் எழுத ஆரம்பித்துள்ளார்கள்.

  உதாரணமாக கீழ்க்கண்ட ஹதீஸை பார்ப்போம்

  Bukhari பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3199அபூ தர்(ரலி) அறிவித்தார்.நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும், என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்றார்கள். இதைத் தான், ‘சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்” என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது” என்றார்கள்.

  அல்குரான் வசனத்திற்கு நபி (ஸல்) அவர்களே விளக்கம் கொடுக்கும் இந்த ஹதீஸ் மிக முக்கியமான ஹதீஸாகும்.

  பூமியை சுற்றி வந்த சூரியன் மறையும்போது “செல்கிறது” என்ற வார்த்தை என்ன சொல்கிறது. அது மறையும்போது அதன் இயக்கத்தையே குறிக்கிறது. காபிர் விஞ்ஞானிகள் சூரியன் மறைவதன் காரணம் பூமி எதிர்த்திசையில் சுற்றுவதால் என்று சொல்கிறார்கள். ஆனால், இங்கே தெளிவாக நபி(ஸல்) அவர்கள் மறையும்போது “செல்கிறது” என்று அதன் இயக்கத்தை குறித்துள்ளார். இதிலே எங்கே பூமி எதிர்த்திசையில் சுற்றுகிறது என்ற வரி இருக்கிறது? அது உண்மையாக இருந்தால், நபி(ஸல்) அவர்கள் அதனை குறித்திருப்பார்களே!

  ஒவ்வொருநாளும் சூரியன் மறையும்போது அல்லாஹ்விடம் அனுமதி கேட்கிறது. உடனே அது அளிக்கப்படுகிறது. அதனாலேயே அது பூமியைச் சுற்றி வருகிறது என்று நபி (ஸல்) அறிவுறுத்துகிறார். 36:38க்கு நபி(ஸல்) அவர்களே விளக்கம் அளித்துவிட்டார்கள். அல்லாவின் அர்ஷுக்கு கீழே ஸஜ்தா செய்யவே ஒவ்வொருநாளும் அது செல்கிறது.

  ஆனால், அல் குர்ஆனை நம்பாத விஞ்ஞானிகள் பூமியை சூரியன் சுற்றுகிறது என்று கூறுவார்களா? பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்றுதானே தவறாக கூறி வருகிறார்கள்?

  ஆனால், இந்த ஹதீஸுக்கும் விளக்கம் கொடுக்க முனைந்த ஒரு சகோதரர் இது நபி (ஸல்) அவர்கள் பேச்சுவழக்கில் கூறிய தவறான விஷயம் என்று விளக்கம் அளிக்கிறார். ரயிலில் பயணம் செய்யும்போது “விழுப்புரம்” போய்டிச்சா என்று கேட்பது போன்றது இது என்று விளக்கம் அளிக்கிறார். விழுப்புரம் போகவில்லை, ரயில்தான் போகிறது என்று ரயிலில் உள்ள அனைவரும் அறிந்த விஷயம். ஆகவே பேச்சுவழக்கில் சூரியன் செல்கிறது என்று நபி(ஸல்) கூறுகிறார். ஆனால், சூரியன் செல்லவில்லை, பூமிதான் எதிர்திசையில் சுற்றுகிறது என்பது அவருக்கு தெரியும் என்று ஒரு சகோதரர் கூறுகிறார்.

  ரயிலில் உள்ள அனைவருக்கும் விழுப்புரம் போகவில்லை, ரயில்தான் போகிறது என்று தெரியும். ஆனால், நபிகள் பெருமானார்(ஸல்) எந்த இடத்திலாவது சூரியன் மறையவில்லை, பூமிதான் எதிர்த்திசையில் சுற்றுகிறது என்று கூறியுள்ளாரா என்று சகோதரர் காட்டவேண்டும். அதே போல, ரயில் உட்கார்ந்திருக்கும் மற்றவர்கள் போல, அந்தகாலத்திய அரபுகள் அனைவரும் சூரியன் மறையவில்லை, பூமிதான் எதிர்திசையில் சுற்றுகிறது என்று அறிந்திருந்தார்கள் என்று காட்டவேண்டும்.

  மேலும், நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பேச்சுவழக்கில் உபயோகப்படுத்தும் தவறான தகவல்கள் பலவற்றை கூறியிருக்கிறார் என்றும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சகோதரர் ஒத்துக்கொள்வாரா?

  குரானும் ஹதீஸும் பேச்சுவழக்கில் உபயோகப்படுத்தும் ஏராளமான தவறான புழக்கங்களை கொண்டுள்ளது என்று இவர்கள் எழுதிவிடலாம். இன்னும் இவர்களது நிலைப்பாடு தெளிவாகிவிடும். ஒவ்வொரு சொல்லும் அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் முக்கியம். ஒரு சொல் எப்படி உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை வைத்தே பெரிய சழக்குகளை இமாம்கள் தீர்த்து வைத்துள்ளார்கள். இவர்களோ, அல் குர்ஆனும் ஹதீஸும் பேச்சுவழக்குமாதிரி. ஏராளமான தவறுகள் இருக்கும் என்று சொல்கிறார்கள். எங்கே போய் முட்டிக்கொள்வ‌து என்று தெரிய‌வில்லை.

  ஒவ்வொருநாளும் சூரியன் மறையும்போது அர்ஷுக்குக் கீழே சஸ்தா செய்வதற்காக செல்கிறது என்று நபி(ஸல்) தெரிவிக்கிறார்கள். பின்னால், அல்லாவிடம் அனுமதி கேட்கும் என்று இருக்கிறது. தரையானது உருண்டையாக இருந்தால், எந்த இடத்தில் அனுமதி கேட்கிறது என்று கூறமுடியுமா? அரேபியாவில் மறைந்த பின்னாலா? அல்லது இந்தியாவில் மறைந்த பின்னாலா? அல்லது அமெரிக்காவில் ம்றைந்த பின்னாலா? இதனை “பேசசுவழக்கில்” எப்படி புரிந்துகொள்வீர்கள்? உங்களது உலகம்தான் உருண்டையாயிற்றே? எந்த இடத்தில் மறைந்த பின்னால் அனுமதி கேட்கும் என்று சொல்லுங்களேன். உருண்டையான‌ உல‌க‌த்தில் சூரியன் எங்குமே மறைவதில்லையே! சூரியன் மறையவே மறையாதபோது எப்படி மறைந்த பின்னர் அல்லாவை சஜ்தா செய்வதோ, அல்லது அனுமதி கேட்பதோ நடக்கும்?

  ஒவ்வொரு நாளும் சூரிய‌ன் ச‌ஜ்தா செய்ய‌ செல்வ‌தை ந‌பி(ஸ‌ல்) குறிப்பிட்டு சூரிய‌ன் தின‌ந்தோறும் ச‌ஜ்தா செய்ய அர்ஷை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிற‌து என்று குறிப்பிட்டுள்ளார். தினந்தோறும் ஓடுவதை குறிப்பிட்டு சொன்னதை கியாமத் நாளை நோக்கி ஓடுவதாக இட்டுக்கட்டி கூறுகிறார்கள். இவர்களே சற்று ஹதீஸை படித்து பார்க்க அழைக்கிறேன். எந்த அளவுக்கு அதன் மீது இட்டுக்கட்டுகிறார்கள் என்பதை சிந்தித்து பார்க்கவேண்டுகிறேன்.

  மேலும் தரை உருண்டை என்று இவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அல்லாஹ் இறக்கிய வசனங்களோ திரும்பத்திரும்ப தரை என்பது தட்டை என்றே கூறுகின்றன.

  இவர்களை அல்குர்ஆனை படித்து பார்க்குமாறு அன்புடன் அழைக்கிறேன். எந்த இடத்தில் உலகம் உருண்டை என்று அல்குர்ஆனில் அல்லாஹ் இறக்கியுள்ளான் என்று காட்டினால் ந‌ல்ல‌து. உல‌க‌ம் த‌ட்டை என்று அல்குர்ஆனில் எங்கும் இல்லை இவர்கள் கூறுவது வியப்புக்குரியது.

  2.22 firaashaw

  2:22 அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான் (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.

  13.3 Madda

  13:3 மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்! இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்! அவனே இரவைப் பகலால் மூடுகிறான் நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

  15.19 madadnaahaa

  15:19 பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்¢ ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.

  20.53 mahdan

  20:53 ‘(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான் இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்¢ மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான் இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்).

  43.10 mahdan

  43:10 அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பிய இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான்.

  50.7 madadnaahaa

  50:7 மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம். மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண், பெண் வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.

  51.48 farashnaahaa

  51:48 இன்னும், பூமியை – நாம் அதனை விரித்தோம்¢ எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.

  71.19 bisaaTaa

  71:19 ‘அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.

  78.6 mihaadaa

  78:6 நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?

  79:30 dahaahaa

  79:30 இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான்.

  88.20 suTiHat

  88:20 இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)

  91:6 tahaha

  91:6 பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-

  ஃபிராஷா, மத்த, மதத்னாஹா, மஹ்தன், தஹாஹா, ஸுடிஹட், மிஹாதா, பிஸாடா ,ஃப‌ரஷ்னாஹா அர‌பி மொழியில் த‌ட்டை என்ற‌ பொருளில் எத்தனை வார்த்தைக‌ள் உண்டோ அத்த‌னை வார்த்தைக‌ளையும் உபயோகித்து அல்லாஹ் அல்குர்ஆன் வ‌ச‌ன‌ங்க‌ளை இற‌க்கியுள்ளான்.

  அல்குர்ஆன் அஹதீஸில் இல்லாத க‌ருத்துக்கள் யார் கூறினாலும் நிராகரிக்கப் பட வேண்டிய ஒன்று என்பது இஸ்லாத்தின் அடிப்படை.

  ஆனால், பதிலுக்கு இவர்களோ, “கோளத்தின் மீது எதையும் விரிக்க முடியாதா?” என்று கேட்கிறார்கள்.

  இவரிடம் கேட்கிறேன். கோள‌த்தின் மீது விரிப்ப‌தாக‌ எங்கே அல்லாஹ் இற‌க்கியிருக்கிறான்? நீங்க‌ள் சொல்லும் கோள‌த்தையே அவ‌ன் விரிப்பு, ப‌டுக்கை, த‌ட்டையாக‌ ஆக்கியிருப்ப‌தாக‌ கூறுகிறான். நீங்க‌ள் என்ன‌டாவென்றால், கோள‌த்தின் மீது விரித்திருப்ப‌தாக‌ இட்டுக்க‌ட்டுகிறீர்க‌ள். கோள‌ம் என்ற‌ வார்த்தை எங்கே இருக்கிற‌து? அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாத‌ சொல்லை இட்டுக்க‌ட்டுவ‌து யார்? நானா நீங்க‌ளா?

  ஆனால், புவி உருண்டை என்று புரிந்து கொள்ள மறைமுக ஆயத்துகளும் அதனை

  நிருபிக்க பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நேரடி ஆதாரங்களாய் உள்ளன. . என்றும் உலகம் உருண்டை என்று அல்லாஹ் நேரடியாக சொல்லவில்லை என்றும் கூறுகிறார்கள்.

  அல்லாஹ் எதற்கு எதையும் மறைமுகமாக சொல்லவேண்டும் என்று இவர்களே கேட்டுக்கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தை அல்லாஹ் கூறவேண்டுமென்றால், அவன் யாருக்கும் அஞ்ச வேண்டிய தேவை இல்லை. கோளத்தின் மீது விரித்திருக்கிறோம் என்று அவன் தெளிவாக இறக்கியிருந்திருப்பான். நேரடியாகவே சொல்லியிருந்திருப்பான். இந்த உலகத்தையும் மனிதர்களையும் உருவாக்கிய அல்லாஹ், இந்த மனிதர்களுக்காக பயந்துகொண்டு மறைமுகமாக சொல்லியிருக்கிறான் என்றல்லவா இவர்கள் கற்பனை செய்துகொள்கிறார்கள்?

  பிறகு பதில் கூறிய சகோதரர் ”நீங்கள் லைப்ரரிக்கு சென்று பல அறிவியல் நுல்களை படித்தபின் அல் குர்ஆனை சிந்தியுங்கள். அது உங்களை சரியான பாதையில் இன்ஷா அல்லாஹ் சிந்திக்க வைக்கும்” என்று அறிவுரை கூறுகிறார்

  இவர்கள் இதனைத்தான் செய்கிறார்கள் போலிருக்கிறது. முதலில் அறிவிய‌ல் நூல்க‌ளை ப‌டித்துவிட்டு அத‌ற்கு த‌குந்தாற்போல‌ அல் குர்ஆனை சிந்திப்ப‌து ச‌ரியான‌தா என்று சிந்திக்க‌ வேண்டுகிறேன். இன்று த‌க்காளி ந‌ல்லது என்று அறிவிய‌ல் சொல்லும். நாளை த‌க்காளி கெட்ட‌து என்று அறிவிய‌ல் சொல்லும். அத‌ற்கு ஏற்றாற்போல‌ அல் குர்ஆனை ப‌டிக்க‌ வேண்டுமா? அல் குர்ஆன் அப்படிப்பட்ட தினத்துக்கு ஒருமுறை மாறும் புத்தகமா?

  அல் குர்ஆனோ அல்லது ஹதீஸோ உங்கள் இஷ்டப்படி எல்லாம் வளைத்து பொருள் கூற

  முடியாது. பொருள் கூறக்கூடாது.

  இவர்களின் வாதத்தின் படி அல் குர்ஆனின் சில ஆயத்துக்களின் பொருளை சிந்தித்து பூரணமாய் விளங்க உலகின் அனைத்து துறைகளிலும் தேற்சி பெற்றிருக்கவேண்டும் என்கிறார்கள்! இப்போது அல் குர்ஆன் தப்சீர்கள் பல, ஒரு நபரால் மட்டுமே எழுதப்படுகிறது. அப்போது, அவர் எத்துறையில் வல்லுனராய் உள்ளாரோ அத்துறையில் மட்டுமே செம்மையாக சிந்தித்து சரியான பொருளை தர முடியும். அதே நேரம் பல துறையை சார்ந்த விற்பன்னர்கள் ஒன்றுகூடி எழுதினால் அது கிட்டத்தட்ட முழுமையான தப்சீராய் அமையும் என்பது இவர்களது வாதம். இது நேராக நபி(ஸல்) அவர்களது எச்சரிக்கைக்கும் கண்டிப்புக்கும் ஆட்பட்டது என்பதி நாம் கூறித்தெரியவேண்டியதில்லை.

  இவரது செய்தியின் படி, ”சமீபத்தில், அதிராம்பட்டினம், காதிர் முஹைதீன் கல்லூரி பேராசிரியர் டி.ஏ.எம். ஹபீப் முஹம்மது அவர்கள் எழுதி இவ்வருட ஆரம்பத்தில் வெளியிட்ட, “அறிவியல் வழிகாட்டி அல் குர் ஆன்” என்ற புத்தகம் படித்தேன். அதில் அவர் விலங்கியல் பேராசிரியர் என்பதால் அந்த அறிவினூடேயே பல ஆயத்துகளை அறிவியல் விளக்கொளியில் சிந்தித்து இருந்தார். அதன்பயனாய், பல புதிய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. உதாரணமாய், முதஷாபிஹாத் (இறைவன் மட்டுமே பொருள் அறிந்துள்ள)வசனங்கள் என்று இதுகாறும் கூறப்பட்ட, “55:6 – செடிகளும் மரங்களும் ஸுஜூது செய்கின்றன” வசனத்திற்கு அவரின் விளக்கம்: எந்த உயிர்க்கும் வாய் எங்குள்ளதோ அதுதான் தலை. தலையை பூமியில் வைப்பதே சஜ்தா. தாவரங்களுக்கு தலை வேர்ப்பகுதி. ஆகவே, அதனை தரையில் வைத்து அவை எப்போதும் சுஜூது செய்கின்றன என்கிறார்!”

  டி.ஏ.எம். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து ஆகிய‌ இட்டுக்க‌ட்டுப‌வ‌ர்க‌ள், அறிவிய‌லை வைத்துக்கொண்டு அல் குர்ஆனை நிரூபிக்க‌ முனைகிறார்க‌ள். அல் குர்ஆன் யார‌து நிரூப‌ண‌த்துக்கும் காத்திருக்க‌வில்லை. இப்ப‌டியெல்லாம் நிரூபிக்க‌ முனைவ‌து மேலும் கேலிக்கும் கிண்ட‌லுக்கும்தான் இப்படிப்பட்ட இட்டுக்கட்டுபவர்களை ஆட்ப‌டுத்தும்.

  உதாரணத்துக்கு செடிகளும் மரங்களும் ஸுஜூது செய்கின்றன என்ற வசனத்துக்கு ஹபீப் முஹம்மது சொல்லும் விளக்கத்தை பார்க்கலாம். எந்த உயிருக்கும் வாய் எங்குள்ளதோ அதுதான் தலை என்று இவராக ஒன்று சொல்கிறார். அல்லது பல செடி கொடிகள் வேர்களே இல்லாமல் வேறு மரங்களில் வளர்கின்றன. அவற்றின் வாய் மேலே இருக்கிறது. சில செடிகள் பூச்சிகளை பிடித்து தின்கின்றன. அவற்றின் வாய் எங்கே இருக்கிறது? அவைகள் எப்படி ஸுஜூது செய்யும்? செடிகளும் மரக்களும் ஸுஜூது செய்கின்றன என்று சொல்லிவிட்டு அதன நம்பி சென்றுவிடுவதுதான் சரியானது. எப்படி ஸுஜூது செய்கின்றன, விளக்குங்கள் என்று யாரேனும் கேட்டார்களா? ஏன் கேட்காத கேள்விக்கு முழ‌நீள‌ம் விள‌க்க‌ம்? இதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என்று இவர்களாக ஒரு வாய்-தலை வியாக்கியானம், அதற்கு இன்னொரு விளக்கம் என்று இவர்களே அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுத கிளம்பி விடுகிறார்கள்.

  குரங்கிலிருந்து மனிதன் வந்ததாக சொல்லும் பரிணாமவியல் எப்படி அல் குர் ஆனில் இருக்கிறது என்று விலங்கியல் பேராசிரியர்கள் தப்ஸீர் எழுதிவிட்டார்களா? அப்படி எழுதவில்லை என்றால், ஏன் எழுதவில்லை?

  ஒவ்வொரு துறை பேராசிரியர்களும் அவரவர் துறைக்கு தகுந்த ஆயத்துகளுக்கு தப்சீர் போடலாம் என்று இவர்களாக விஞ்ஞானிகளிடம் தஃப்ஸீர் எழுத அழைப்பு விடுக்கிறார்கள்.

  அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் அல் குர்ஆன் மூலமாகவும், ஹதீஸ் மூலமாகவும்தான். அறிவியல் புத்தகங்கள் மூலமாக அல்ல.

  நாளை அறிவியல் புத்தகங்கள் மாறினால், இன்னொரு தஃப்ஸீர் எழுதுவார்களா அல்லது அல் குர்ஆன் தவறு என்று எழுதுவார்களா? இன்று வரும் விஞ்ஞானிகள் நேற்று வந்த விஞ்ஞானிகளை தவறு என்று சொல்கிறார்கள். நாளை வரும் விஞ்ஞானிகள் இன்று வந்த விஞ்ஞானிகளை தவறு என்று சொல்வார்கள். இதுதான் விஞ்ஞானத்தை வைத்து தஃப்ஸீர் எழுதுவதில் உள்ள பெரிய தவறு.

  10:60 அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை நாளைப்பற்றி

  என்ன நினைக்கிறார்கள்?

  அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்

  வஸ்ஸலாம்

 39. 1) எந்த இடத்திலாவது நேரடியாக, சூரியன் தரையை சுற்றவில்லை, தரைதான் சூரியனை சுற்றுகிறது என்று அல்லாஹ் இறக்கியுள்ளானா?

  2) தரை சமதளம் அல்ல, விரிப்பு அல்ல, அது உருண்டை என்று இறக்கியுள்ளானா?

  3) நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தினந்தோறும் அர்ஷுக்கு கீழ் சென்று அல்லாஹ்விடம் அனுமதி பெற்று அடுத்த நாள் உதயமாவதாக அறிவித்துள்ளார்கள். உருண்டை தரையில், சூரியன் மறையுமா? அப்போது நபிகள் நாயகம் (ஸல்) சொன்னது தவறா? அப்படி நபிகள் நாயகம் கூறியது தவறு எனில் அல்லாஹ் உடனே வஹி மூலமாக அதனை திருத்தியிருப்பான். சிந்தித்துப்பாருங்கள்.

 40. அஸீஸின் கேள்விகள் சிக்கலான கேள்விகள்தான்.
  1) எந்த இடத்திலும் சூரியன் பூமியை சுற்றவில்லை. பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று அல்லாஹ் இறக்கவில்லை.
  2) பூமி சமதளம் அல்ல அது உருண்டை என்று நேரடியாக அல்லாஹ் இறக்கவில்லை
  3) நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்ததும் அல்லாஹ்வின் அர்ஷுக்கு கீழ் சென்று ஸஜ்தா செய்வதாக கூறியுள்ளது பிரச்னையான ஒன்றுதான்.

  சூரியன் மறைவதே இல்லை என்பது உண்மைதான். இப்போது நம் முன் இருப்பது, அல்லாஹ் குரானில் இறக்கியுள்ளபடி சூரியனும் சந்திரனும் பூமியை சுற்றுகிறது என்று நம்புவதா அல்லது காபிர் விஞ்ஞானிகள் சொல்வது படி சூரியனை பூமி சுற்றுகிறது ஆனால் சந்திரன பூமியை சுற்றுகிறது என்று நம்புவதா என்றுதான் கேள்வி.

  நாம் முஸ்லீம்கள். ஆகையால் குரான் ஹதீஸ் சொல்வது படி பூமியை சூரியன் சுற்றிவருகிறது, பூமி சமதளம் என்று நம்புவதுதான் சரியானது.

  இல்லையென்றால் நாம் இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று ஆராயவேண்டும்.

  அல்லாஹ் பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று அல்குரானில் இறக்கினார் ஆனால் உத்மான்(ரலி) அதனை அல்குரானில் இல்லாதமாதிரி புதிய குரானை உருவாக்கிவிட்டார் என்று சொல்லலாமா?

  அதுவும் பிரச்னை. அப்புறம் அல்லாஹ் குரானை பாதுகாக்கிறார் என்று அல்குரானிலேயே சொல்வதை என்ன செய்வது? அதுவும் சரிப்படாது.

  சரி அல்லாஹ் அல்குரானை இறக்கும்போது உலகம் தட்டையாகத்தான் இருந்தது. நடுவே உலகத்தை அல்லாஹ் உருண்டையாக ஆக்கிவிட்டார் என்று சொல்லலாமா? இது ஓரளவு பரவாயில்லை. இருந்தாலும் உதைக்கிறது. அல்லாஹ் அல்குரானை முழுமைப்படுத்திவிட்டதாக சொல்கிறான். ஆகையால், உலகத்தை உருண்டையாக்கிய பின்னால் இந்த மாற்றத்தை அறிவிக்க இன்னொரு நபியை அனுப்பவேண்டிவரும். இந்த சமாளிப்பும் சரியாக தெரியவில்லை.

  அல்லாஹ் நேரடியாக இப்படி உலகம்தான் சூரியனை சுற்றுகிறது என்று சொன்னால், அந்த கால அரபியர்கள் முழு முட்டாளாக இருபப்தால், நபிகள் நாயகத்தை மதிக்க மாட்டார்கள். கேலி செய்துவிட்டு ஓடிவிடுவார்கள் என்று பயப்பட்டிருப்பார். அதனால் இறக்கவில்லை என்று சொல்லலாமா? இது ஓரளவுக்கு பரவாயில்லை. ஆனால், அதற்கு முன்னாலேயே அரிஸ்டாட்டில் உலகம் உருண்டை என்று சொல்லிவிட்டார். ஆர்யபட்டா உலகம் உருண்டை அது சூரியனை சுற்றுகிறது என்று எழுதிய புத்தகத்தை அரபியில் கிபி 500இலேயே மொழிபெயர்த்துவிட்டார்கள். இருந்தும், இப்படி அல்லாஹ் சொல்லியிருக்கிறார் என்றால் பிரச்னைதான். சரி எப்படி சமாளிப்பது என்று சிந்திப்போம்.

  செங்கொடி,
  ஒரு முஸ்லீம் அல்குரானில் இருக்கும் இந்த பிரச்னைகளை எப்படி சமாளிப்பது, அல்லாஹ்வையும் நபிகள நாயகத்தையும் எப்படி கேலியிலிருந்து காப்பாற்றுவது என்றுதான் சிந்திக்கவேண்டுமே அன்றி, இப்படி அல்குரான் தவறாக இருக்கிறது என்று சொல்லக்கூடாது.

  இதற்காகத்தான் அல்லாஹ் “சிந்திக்கமாட்டீர்களா?” என்று மூஃமீன்களை கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறான்.

 41. Iதோழர் செங்கொடி,
  எனக்கு கம்யுனிசம் பற்றி அறிய ஆசை. அது பற்றிய செய்தி எந்த ஒரு கம்யுனிச வெப்தளத்திலும் காணக்கிடைப்பதில்லையே? ஏன் தோழர்? மேலும், நான், காரல் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்களின் போதனை போன்றவற்றை அறிய ஆவல். இவையும் எந்த ஒரு தமிழ் கம்யுனிச தளத்திலும் போடுவது இல்லை. ஏன் தோழர்? பொதுவாக பிற கொள்கைக்காரர்கள் அவர்களின் கொள்கைக்கு ஆதாரமான புத்தகங்களை மொழிபெயர்த்து தத்தமது தளங்களில் போட்டுள்ளனர். நமது தளங்களில் மட்டும் நம் சித்தாந்தங்களுக்கும் நம் தலைவர்களின் போதனைகளிக்கும் மதிப்பு மருவாதியே இல்லையே? ஏன் தோழர்? நாமே அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் வேறு யார்தான் கொடுப்பார்கள்? நமது தோழர் வினவு, தன் தளம் ஆரம்பித்து ஒன்றரை வருடம் ஆகியும் கம்யுனிச கொள்கைகள் பற்றின ‘கம்யுனிச கல்வி’, ‘கேள்வி-பதில்’, ‘செவ்வியல்’, ‘அறிவுரை’ போன்றன இன்னும் காலியாகத்தானே கிடக்கிறது? இங்கே அதுகூட இல்லையே தோழர்? ஏன்? இப்படி நாமே, நமது கொள்கைகளை மக்களுக்கு தெரிவிக்காமல் இருட்டடிப்பு செய்துவிட்டால், வருங்காலத்தில் வரும் சந்ததியினர் ” காரல் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ” – இவர்கள் அனைவரும் கற்பனை பாத்திரங்களா (?!?!?), அல்லது உயிருடன் வாழ்ந்தவர்களா என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது? அல்லது கம்யுநிசமே தெரியாமல் போய் செத்துவிடாதா? இல்லாவிட்டால், ஒருவேளை அப்படியெல்லாம் போட நம் கம்யுனிசத்தில் தகவல் ஒன்றும் இல்லையா? காரல் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ எதுவும் சொல்லவில்லையா? அல்லது அவர்கள் சொன்னதெல்லாம் நடப்பு வாழ்க்கைக்கு பொருந்தாத காலாவதியான சட்டங்கள் மற்றும் கொள்கைகளா? ஏன் கேட்கிறேன் என்றால் நம்மை பார்த்து நாலு பேர் ‘இவர்கள் தமக்கென்று எந்த சொந்த கொள்கையும் இல்லாதவர்கள்’ என்று சொல்லிடக்கூடாதில்லையா? நான் கேட்பது ஒன்றும் தப்பில்லே, தோழர்? இப்படி கேட்பதற்கு கம்யுனிசத்தில் உரிமை உண்டல்லவா தோழர்? எனக்கு, கம்யுனிசம் என்றால் என்னவென்றே தெரியாமல் தோழர்ராக விருப்பமில்லை தோழர். அதனால்தான் கேட்கிறேன் தோழர். நாம், நமது விஷயங்களை கற்பதற்கு பதில் தேவை இல்லாத விஷயங்களில் எல்லாம் ஆராய்ச்சி பண்ணுவது போல் தோனுகிறது தோழர். எம்மைபோன்றவரை தேத்துவதற்குரிய வழியை பாருங்கள் தோழர்.

  தோழமையுடன்,
  எங்கல்ஸ்.

 42. செங்கொடியின் பதில் என்ன?

  http://athikkadayan.blogspot.com/search/label/ம.க.இ.க‌
  என்ற தளத்திலிருந்து

  இணையத்தில் அதிகமான வாசகர்களை எப்படியும் பெற்று விட வேண்டும் என்ற ஓர் உயரிய இலக்கோடு புரட்சி செய்ய வந்திருக்கும் “வினவு” தளத்தில் வந்த பொய்மைகளை பொசுக்கும் வண்ணம் அந்த தளத்திற்கும் அதனுடைய இயக்கமாக இருக்கின்ற ம.க.இ.க விற்கும் ஓர் அறைகூவலை இந்த வலைப்பூவின் வழியாக விடுத்திருந்தேன்.” வினவின் பிழைப்புவாத பிதற்றல்கள்” .

  ஆனால் நாங்களெல்லாம் புரட்சி செய்ய மட்டுமே வந்திருக்கின்றோம். நேரடி விவாதம் எல்லாம் செய்ய மாட்டோம் என்று சொல்லாமல் சொல்லும் வண்ணம் ம.க.இ.க வோ அல்லது வினவு குழுவோ நேரடி விவாதத்தை பற்றி வாய் திறக்க மறுக்கின்றது. நேரடி விவாதத்தில் கலந்து கொள்வதில் என்ன பயம் ம.க.இ.க குழுவினருக்கு என்று எமக்கு தெரியவில்லை. ஆனால் எம்முடைய அறைகூவலுக்கு ம.க.இ.க விடம் மூளையை அடகு வைத்த செங்கொடி ஒரு பின்னூட்டம் அனுப்பியிருந்தார்.
  —————————————————————————————————————————
  நண்பர் ஷேக் தாவூது,

  முதலில் நீங்கள் வினவு தளத்தில் இடப்பட்ட பதிவையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் படித்தீர்களா என்பதே ஐயமாக இருக்கிறது. உங்கள் சகோதரர்கள் எழுப்பிய கேள்விகளை நான் உட்பட தோழர்கள் தெளிவாக விளக்கிய பின்னரும், நேரடி விவாதத்திற்கு தாயாரா என வாய்ச்சவடால் அடிக்கிறீர்கள். பல ஆதாரங்களுடன், பலவித கோணங்களில் தோழர்கள் தெளிவான மறுப்பை பதிவு செய்திருந்தும் அதற்கு பதிலளிக்கும் தெளிவில்லாமல் முஸ்லீம்களின் தவறு இஸ்லாத்தை பாதிக்காது என்பதையே திரும்பத்திரும்ப கூறிக்கொண்டிருக்கின்றனர். வினவின் பிழைப்புவாதத்தைப்பற்றி எழுதும் நீங்கள் நேர்மையானவராக இருந்தால், வினவு இப்படி ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறது அது இந்த விதத்தில் தவறானது அதை நாங்கள் இப்படி விளக்கியிருக்கிறோம், இருந்தாலும் அவர்கள் இதற்கு பதில் கூறாமல் மவுனம் சாதிக்கிறார்கள் என பட்டியலிட்டிருக்கலாமே. அதை செய்யாத நீங்கள் எல்லாவித விளக்கங்களும் ஆதாரங்களும் தந்த பின்னரும் உங்கள் தளத்தில் ஓடி வந்து இப்படி ஒரு பதிவை இடவேண்டிய அவசியமென்ன? எது பிழைப்புவாதம்? அதே வினவு தளத்தில் அஹமதியாக்களை பற்றிய கட்டுரையில் உங்களோடு நான் உரையாடிய தொகுப்பை என்னுடைய செங்கொடி தலத்தில் பதிவாக இட்டிருந்தேன் அதில் உங்கள் பின்னூட்டத்தையும் அதற்கு என்னுடைய பதிலையும் சேர்த்து தந்திருந்தேன். அதைப்போன்றதொரு இடுகையை இடமுடியாமல் உங்கள் நேர்மையை தடுத்தது எது?

  சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும்போது அவர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் அடித்துக்கொள்வார்கள். பின் தோற்றவன் கொஞ்சம் தொலைவில் சென்று நின்றுகொண்டு கூறுவான் என்னையா அடிச்சே, எங்க வீட்டுப்பக்கம் வா உன்னை கவனித்துக்கொள்கிறேன் என்பான் அதேபோல் தான் நீங்களும் சரக்கு தீர்ந்தவுடன் நேரடி விவாதத்திற்கு வா கவனித்துக்கொள்கிறேன் என்கிறீர்கள். நேரடி விவாதம் என்றதும் நாங்கள் அஞ்சிவிடுவாதாக உங்களுக்கு நீங்களே நினைத்துக்கொண்டு சவடால் அடித்துக்கொள்கிறீர்கள் அப்படியல்ல. வினவு தளத்தில் பின்னூட்டமிட்ட நான் உட்பட பல தோழர்கள் பல்வேறு நாடுகளில் இருந்துகொண்டு எழுதுபவர்கள். பல தோழர்கள் வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அப்படியானதொரு வாய்ப்பில் நேரடி விவாதத்திலும் உங்களின் மூட நம்பிக்கைகளை கிழித்து உங்களுக்கே அடையாளம் காட்டுவோம். அதுவரை பொறுத்திருங்கள். அல்லது முடித்தால் எழுத்து விவாதத்தில் பங்குபற்றி உங்களின் கருத்துக்களை கூறுங்கள். நிச்சயமாக தோழர்களின் தளங்களில் பின்னூட்டங்கள் நீக்கப்படுவதில்லை.

  உளுத்துப்போன கம்யூனிசம் என்ற சொல்லாடலுக்கும், “இரும்புத் திரை போட்டு இலட்சக்கணகான மக்களை இரஷ்யாவில் கொன்றழித்தவர்களின்” என்ற சொற்றொடருக்கும் தகுந்த மறுப்பையும் விளக்கத்தையும் உங்களுக்கு தந்திருந்தும் (அஹமதியாக்களை பற்றிய கட்டுரையில்) இன்றுவரை அதற்கொரு பதிலை கூற முடியாமல் இருக்கும் நீங்கள் மீண்டும் அதே பழைய பல்லவியை பாடியிருப்பது தான் உங்களுடைய நேர்மையா?

  இந்த பின்னூட்டத்தை நீங்கள் வெளியிடுவீர்களா என்பது ஐயத்திற்கிடமானது தான். அப்படி நீங்கள் வெளியிடாது போனால் வினவு தளத்தில் தொடர்புடைய பதிவில் இது பின்னூட்டமாக இடப்படும்

  தோழமையுடன்
  செங்கொடி
  ———————————————————————————————————————–
  அவருக்கு நான் கொடுத்த மறுமொழி

  சகோதரர் செங்கொடி,
  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ,

  உங்களின் பின்னூட்டத்தை வெளியிடாமல் மறைக்கின்ற அளவிற்கு நான் ஒன்றும் கோழை அல்ல என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். நேரடி விவாதத்திற்கு உங்கள் குழுவினரை அழைக்கின்ற அளவிற்கு இறைவன் எமக்கு போதிய அறிவையும் ஆற்றலையும் தந்திருக்கின்றான். உங்களின் மருதையன் தலைமையிலான ம.க.இ.க வினவு குழுவினர் போல விவாதத்தை கண்டு அஞ்சி நடுங்கி ஒளிந்து கொள்பவனல்ல.

  /* முதலில் நீங்கள் வினவு தளத்தில் இடப்பட்ட பதிவையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் படித்தீர்களா என்பதே ஐயமாக இருக்கிறது.*/ எந்த ஒன்றையும் படிக்காமல் பின்னூட்டமிட நான் ஒன்றும் மூளையை அடகு வைத்த கம்யூனிஸ்ட் அல்ல சகோதரரே. எந்த ஒன்றையும் சிந்தித்து பார்த்து ஏற்றுக் கொள்ள சொல்கிறது இறைவேதமான திருக்குர்ஆன். முழுமையாக அந்த பதிவை படித்து அதன் பின்னூட்டங்களையும் படித்த பின்னரே இந்த பதிவை எழுதினேன்.

  /* உங்கள் சகோதரர்கள் எழுப்பிய கேள்விகளை நான் உட்பட தோழர்கள் தெளிவாக விளக்கிய பின்னரும் */ அங்கே இஸ்லாமிய சகோதரர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது என்ற ஓர் பெரும் பொய்யை எவ்வாறு வாய் கூசாமல் சொல்லுகின்றீர்கள் செங்கொடி? முஸ்லிம்கள் தவறு செய்தால் அதற்குப் பொறுப்பு இஸ்லாம் தான் என்றால் கம்யூனிஸ்ட்டுகள் செய்கின்ற தவறுகளுக்கு கம்யூனிசம் தானே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற தொனியில் நெத்தியடி முஹம்மத், ஷாஜஹான் மேலூர் போன்றவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வினவு தளமோ அல்லது உங்களின் தோழர்களோ எங்கு பதில் சொல்லி இருக்கின்றீர்கள்? அதாவது இஸ்லாமியர்களின் தவறுகளுக்காக “பார்ப்பனீயத்திடம் சரணடைந்த இஸ்லாம்” என்று வினவு எழுதும் போது கம்யூனிஸ்ட்டுகளிடம் இருக்கின்ற தவறுகளுக்காக “கார்ப்பறேட்டுகளின் காலில் சரணடைந்த கம்யூனிசம்” என்ற பதிவை ஏன் வினவு எழுதவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார்களே? அதற்கு உங்கள் வினவு தளம் எந்த பதிலை சொல்லியது. நீங்கள் எழுப்பிய அதே கேள்வியை உங்களை நோக்கியே நான் எழுப்புகின்றேன். அந்த புரட்டுக்கார முரட்டு தளத்தில் வந்த பின்னூட்டங்களை முழுவதும் படித்தீர்களா செங்கொடி?

  இஸ்லாம் என்றால் ஒரு நீதி. கம்யூனிசம் என்றால் ஒரு நீதி என்பது அப்பட்டமான பிழைப்புவாதம் அன்றி வேறென்ன? என்ற தொனியிலும் அங்கு கேள்விகளை எமது சகோதரர்கள் எழுப்பியிருக்கின்றனரே? என்ன பதிலை உங்களின் அபிமான வினவு தளம் கொடுத்தது செங்கொடி? நீங்கள் முழு பூசணிக்காயை (உங்களுக்கு பிடித்த எள்ளல் தொனியில் சொன்னால் ஒரு டைனோசரை) சோற்றில் மறைக்க பார்க்காதீர்கள். இந்த கேள்விகளுக்கு சுற்றி வளைக்காமல் உங்களின் வினவு தளத்தை நேரடியாக பதில் கொடுக்க சொல்லுங்கள்.

  அஹமதியாக்களைப் பற்றிய பதிவில் பேசுபொருளை விட்டு (மனிதநேயமற்றவர்கள் முஸ்லிம்கள் என்று பு.ஜ , வினவு வைத்த குற்றச்சாட்டு) விவாதத்தை தந்திரமாக திசைமாற்றியது நீங்களா அல்லது நானா? இஸ்லாமியர்களின் மனிதநேயம் மற்ற எல்லோர்களுடைய மனிதநேயத்தை விட குறிப்பாக ம.க.இ.க வினருடைய மனிதநேயத்தை விட சற்றும் குறைந்ததல்ல அதற்கு ஒருபடி மேல் தான் இஸ்லாமியர்களின் மனிதநேயம் என்ற பதிலை உங்களுக்கு நான் அங்கேயே அளித்திருக்கின்றேன். அதற்கு பதில் சொல்லாமல் நீங்கள் விவாதத்தையே திசைமாற்றி கொண்டு சென்றீர்களா இல்லையா? நீங்கள் செய்த தவற்றை என்மேல் சுமத்துவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா செங்கொடி?

  /* நேரடி விவாதம் என்றதும் நாங்கள் அஞ்சிவிடுவாதாக உங்களுக்கு நீங்களே நினைத்துக்கொண்டு சவடால் அடித்துக்கொள்கிறீர்கள் அப்படியல்ல. வினவு தளத்தில் பின்னூட்டமிட்ட நான் உட்பட பல தோழர்கள் பல்வேறு நாடுகளில் இருந்துகொண்டு எழுதுபவர்கள். பல தோழர்கள் வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்
  றனர். அப்படியானதொரு வாய்ப்பில் நேரடி விவாதத்திலும் உங்களின் மூட நம்பிக்கைகளை கிழித்து உங்களுக்கே அடையாளம் காட்டுவோம். அதுவரை பொறுத்திருங்கள். அல்லது முடித்தால் எழுத்து விவாதத்தில் பங்குபற்றி உங்களின் கருத்துக்களை கூறுங்கள். */ எழுத்து விவாதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. அது சங்கிலித் தொடராக நீளுமேயன்றி எந்த ஒரு உருப்படியான தீர்வையும் தராது. எனவே தான் உங்களை நேரடி விவாதத்திற்கு அழைக்கின்றோம். நெஞ்சில் நேர்மையும் கொள்கையில் உறுதியும் இருந்தால் கண்டிப்பாக உங்களுடைய இயக்கத்தினர் (ம.க.இ.க) நேரடி விவாதத்திற்கு வர வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்களேன் செங்கொடி. நீங்கள் தான் விவாதத்திற்கு வர வேண்டும் என்பதில்லை. உங்களின் சார்பாக உங்கள் இயக்கத்தினர் பங்கு பெறலாமே. இல்லை ஒரு வேளை தமிழ்நாட்டில் இருக்கும் எங்கள் இயக்கத்தினர்கள் எல்லாம் முட்டாள்கள் (மருதையன் உட்பட). அவர்களுக்கு விவாதம் பண்ண தெரியாது. அந்த அளவிற்கு அவர்களுக்கு அறிவும் இல்லை என்ற சொல்ல வருகின்றீர்களா? எனவே வெளிநாட்டில் இருக்கும் நாங்கள் தான் அறிவாளிகள். நாங்கள் வந்து தான் விவாதம் செய்வோம் என்று சொல்ல வருகின்றீர்களா? உங்களின் கருத்து இந்த தொனியில் தான் இருக்கின்றது.

  நண்பர் செங்கொடி அவர்களே நேரடி விவாதத்திற்கு தயார் என்றால் தெரிவியுங்கள். அதைவிடுத்து எழுத்து விவாதம் எங்கள் தளத்தில் விவாதம் என்பதெல்லாம் தீர்வை தர முடியாத கால நேரத்தை வீணடிக்கும் செயல்களே. முடிந்தால் உங்கள் அமைப்பை விவாதத்திற்கு அழைத்து வரும் வழியை பாருங்கள். இல்லையென்றால் எழுத்துப்பூர்வமான வெட்டி விவாதத்தை நீங்களே செய்து கொள்ளுங்கள். அதில் நாம் கலந்து கொள்ள மாட்டோம். ஏனெனில் எமக்கு கால நேரத்தை வீணடித்தல் அவ்வளவு சாதரணமான ஒன்றல்ல. ஆக்கப்பூர்வமான் பணிகள் பல எமக்கிருக்கின்றது. நேரடி விவாதம் என்றால் தொடர்பு கொள்க செங்கொடி.
  —————————————————————————————————————–
  செங்கொடியின் பின்னூட்டத்தையும் அதற்கான எமது மறுமொழியையும் எனது தளத்தில் பின்னூட்டமாக வைத்திருந்தேன். ஆனால் செங்கொடியின் பின்னூட்டமும் அதற்கான எமது மறுமொழி மட்டும் பதிவில் இருந்து காணாமல் போயிருக்கின்றது. ஆச்சர்யமாகவும் அதேசமயம் அதிர்ச்சியாகவும் இருக்கின்றது. என்னுடைய வலைப்பூவில் எனக்கு தெரியாமலேயே இவை நடந்திருக்கின்றன. ஆனால் ஒன்றை மட்டும் இந்த கருத்து திருடர்களுக்கு சொல்லுகின்றேன். இத்தகைய திருட்டுத்தனங்கள் மூலம் எம்மை முடக்கி விடலாம் என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம். நண்பர் செங்கொடி அவர்களுக்கு நான் சொல்லுவது ஒன்று தான். நேருக்கு நேர் விவாதிக்க வரவேண்டுமேயன்றி கோழைப் போன்று ஒளிந்து கொள்ள கூடாது செங்கொடி. நீங்கள் சவூதியில் இருக்கின்றீர்கள் என்பது எமக்கு தெரியும். உங்களால் வர இயலாதெனில் உங்கள் அமைப்பினர்களை நேரடி விவாதத்திற்கு வர சொல்லுங்கள். அவை தான் உங்களின் நேர்மையை பறை சாற்றும். இல்லையெனில் வாய்ச்சொல் வீரரடி கம்யூனிஸ்ட்டுகளும் என்று சவூதியின் ஒட்டகங்களும் கவிபாடும் செங்கொடி.

  http://athikkadayan.blogspot.com/search/label/ம.க.இ.க‌
  என்ற தளத்திலிருந்து

 43. நண்பர் ஷேக் தாவூது,

  எப்படி எப்படி…. உங்கள் தளத்தில் இட்ட பின்னூட்டங்கள் உங்களுக்கு தெரியாமல் காணாமல் போய்விட்டதா? காதில் பூச்சுற்றுவதை செவியுற்றிருக்கிறேன், பூக்கூடையை கவிழ்ப்பதை கூட யூகிக்கமுடியும். எப்படி பூந்தோட்டமே வைக்கிறீர்கள்? கேப்பையில் நெய் வடிகிறதென்று எதற்கோ சொல்வார்கள்.

  என்னுடைய முதல் பின்னூட்டத்தில் வினவு தளத்திலும் இதை இடுவேன் எனக்கூறியதால் வேறு வழியில்லாமல் வெளியிட்டுவிட்டு அதற்கு பதில் என்று ஒன்றை கூறிவிட்டு மீண்டும் நான் வரமாட்டேன் (வரக்கூடாது) என்றெண்ணி அவைகளை நீக்கிவிட்டீர்கள். மறு மொழிவதற்காக நான் உங்கள் தளத்திற்கு வந்தபோது இரண்டையும் காணவில்லை. பரவாயில்லை என்று மறு மொழியை ஏற்றினால் அது ஏறாமல் அடம்பிடித்தது, சரிதான் ஏதோ தொழில்நுட்ப கோளாறு போல என்றெண்ணி மீண்டும் வினவு தளத்தில் அந்த மறு மொழியை பதித்தேன். அதைப்பார்த்ததும் ஓடி வந்து உங்கள் தளத்தில் நான் ஏதோ கோளாறு செய்துவிட்டதைப்போல் புலம்பியிருக்கிறீர்கள். இது போன்ற ஈனத்தனத்தில் ஈடுபடுவதில்லை நாங்கள் அது உங்களைப்போன்றவர்களின் வேலை. என்னுடைய செங்கொடி தளத்தை உங்கள் ஆட்கள் முடக்க முயன்றார்கள், நடக்கவில்லை. இல்லையென்று மறுத்தால் ஆதாரம் தருகிறேன். உங்கள் பூந்தோட்ட வேலையை வேறு எங்காவது வைத்துக்கொள்ளுங்கள்.

  தோழமையுடன்

  செங்கொடி

  வினவு தளத்தில் நான் இட்ட மறு மொழி

  செங்கொடி
  says:
  November 25, 2009 at 12:09 am

  நண்பர் ஷாஜஹான்,

  என்னுடைய பின்னூட்டத்திற்கான மறுமொழியை இங்கு பதிந்ததற்கு நன்றி. ஆனால் அதற்கு பதிலளிக்கவேண்டும் என்று அங்கு சென்றால் என்னுடைய பின்னூட்டத்தையும், இந்த மறுமொழியையும் காணவில்லை. கண்டுபிடித்துத்தறுமாறு கேட்டுக்கொள்வதோடு காரணத்தையும் அன்னாரிடம் கேட்டுச்சொல்லுங்கள்.

  நண்பர் ஷேக் தாவூது,

  ஆத்திரம் உங்கள் கண்களை மறைப்பதற்கு அனுமதிக்காதீர்கள். முஸ்லீம்கள் தவறுக்கு இஸ்லாம் பொறுப்பேற்காது என்பதற்கு பின்னூட்டம் எண் 15 ல் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தையும் கம்யூனிசத்தையும் ஒப்பிடுவது அடிப்படையிலேயே தவறானது என திருப்பதியானை கைது செய்த பதிவிலேயே பின்னூட்டம் எண் 37ல் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலும் விளக்கமாக 37.1.2 லும் விளக்கப்பட்டுள்ளது, அதுவும் நீங்கள் குறிப்பிடும் நெத்தியடி முகம்மதுவுக்குத்தான். விளக்கம் கொடுத்தபின் ஒன்று அது தவறு என மறுக்கவேண்டும் அல்லது அந்தக்கேள்வியை விலக்கவேண்டும் இரண்டுமின்றி ஒவ்வொறு பதிவிலும் அதையே கேட்டுக்கொண்டிருந்தால், நாங்கள் ஒன்றும் உங்கலைப்போல் பொழுதுபோக்குவதற்காக எழுதுபவர்களல்ல.

  யாருக்கு வெட்கமில்லை நண்பர் ஷேக் தாவூது அவர்களே, உங்கள் மனித நேயத்தை சொல்லும் சாக்கில் அஹ்மதியா பதிவில் உளுத்துப்போன கம்யூனிசம் என்று பதிவுக்கு தொடர்பின்றி விமர்சித்தது யார்? உங்களின் கேள்விக்கு பதில் கூறியதைத்தவிர வேறு என்ன எழுதப்பட்டிருந்தது என்னுடைய மறுமொழியில் கூறமுடியுமா? அப்போது கள்ள மௌனம் சாதித்துவிட்டு இன்று மீண்டும் அதே போல் உளுத்துப்போன கம்யூனிசம் என்று எழுதுவதற்கு கேவலமாக இல்லையா உங்களுக்கு? பதிலும் சொல்லமாட்டீர்கள் ஆனால் மீண்டும் பழைய கிழவி கதவை திறடி என்று பல்லவி பாடுவீர்கள். இதற்கு யார் வெட்கப்படவேண்டும்? வெத்து வீராப்பு உதவாது நண்பரே

  நேரடி விவாதத்திற்கு நாங்கள் அஞ்சுகிறோம் என்று மீண்டும் மீண்டும் புலம்புவதில் அர்த்தமில்லை. தினமும் நேரடி விவாதங்களில் பலரிடம் அவர்களின் ஆன்மீகம் சமூகம் சார்ந்த மூட நம்பிக்கைகளை அவர்களிடமே அம்பலப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறேன். இதற்காக பதில் சொல்லமுடியாத கோழைகள் சிலரால் தனிப்பட்ட இழப்புக்கும் ஆளாகியிருக்கிறேன். ஆனால் நீங்களோ நேரடி விவாதம் என்றால் குறிப்பிட்ட ஒருவருடன் செய்வதுதான் என்று அடம்பிடிக்கிறீர்கள் அதற்கும் தயாராகத்தான் இருக்கிறேன். வாய்ப்புக்கு காத்திருக்கிறேன். அப்போது நிச்சயம் உங்களிடம் தகவல் சொல்கிறேன். அமைப்பினருடன் தொடர்புகொள்ள வெண்டுமென்றால் தொலைபேசி இலக்கத்தை வெளிப்படையாக அறிவித்திருக்கிறோம். தொடர்புகொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு சவடால் அடித்துக்கொண்டு திரியாதீர்கள்.

  தோழமையுடன்
  செங்கொடி

 44. “செங்கொடியின் பின்னூட்டத்தையும் அதற்கான எமது மறுமொழியையும் எனது தளத்தில் பின்னூட்டமாக வைத்திருந்தேன். ஆனால் செங்கொடியின் பின்னூட்டமும் அதற்கான எமது மறுமொழி மட்டும் பதிவில் இருந்து காணாமல் போயிருக்கின்றது. ஆச்சர்யமாகவும் அதேசமயம் அதிர்ச்சியாகவும் இருக்கின்றது. என்னுடைய வலைப்பூவில் எனக்கு தெரியாமலேயே இவை நடந்திருக்கின்றன.”

  இப்லீஸ் வேலையா இருந்தாலும் இருக்கும் ஷேக் தாவூத். எதற்கும் அல்பலக் சூராவை ஓதி ஊதிக்கொள்ளுங்கள்.

  “முஸ்லிம்கள் தவறு செய்தால் அதற்குப் பொறுப்பு இஸ்லாம் தான் என்றால் கம்யூனிஸ்ட்டுகள் செய்கின்ற தவறுகளுக்கு கம்யூனிசம் தானே பொறுப்பு ஏற்க வேண்டும்”

  மகஇக வில் தவறு செய்தால் அவர்களை உடனடியாக அமைப்பிலிருந்து நீக்கிவிடுவார்கள். மேலும் காம்யூனிஸ்டு என்று பெயர் தாங்கி கம்யூனிசத்திற்கு மாற்றாக நடப்பவர்களை போலிகள் என்றே அழைக்கிறார்கள். நீங்களும் அதுபோல் செய்வீர்களா,ஷேக்தாவூத்? இதை வினவுதளத்திலே கேட்டாகிவிட்டது. உங்கள் சகோதரர்கள்தான் அரைச்ச மாவையே அரைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 45. முல்லாக்களின் அல்லது குரானின் ஆதிக்கம் பரவும் வரை அரபியாவில் புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இருந்துதான் இருக்கின்றன் ,

  இந்த முட்டாள் புத்தகம்தான் அனைத்தையும் இருளில் தள்ளியது

 46. அன்பான நண்பர் திரு செங்கொடி,

  குரான் கூறியது அறிவியலாகுமா?? நல்ல கேள்வி? அதுவும் மாவோவின் துதிபாடிகளும் ஸ்டாலினின் ஜால்ராக்களும் கேட்கவேண்டிய நல்ல கேள்வி!
  ஆனால், something is missing இல்ல? அதனால், நான் உங்களைக்கேட்கிறேன், ஸ்டாலினிசமும் மாவோயிசமும் அறிவியலாகுமா?

  இதற்க்கு நீங்க முதலில் பதில் சொல்லவேண்டும்! ஏனென்றால், இஸ்லாமின் வயது சுமார் ஆயிரத்தி நானூறு. இன்றைய கணக்கில் இன்னமும் பல கோடி மக்களால் பின்பற்றப்பட்டு அழியாமல் இருக்கிறது! Comparitively, உங்கள் அறிவியல் மதமான மாவோயிசம் என்ற ஒரு வகையான கம்முநிசத்திர்க்கு வயது நூற்றி ஐம்பது மட்டுமே, அதுவும் 1917’இல் முழு மதமாக ஜனித்து எழுபது வயதிற்குள்ளேயே ஏறக்குறைய அழிந்து, கிட்டத்தட்ட ICU இல் இருக்கும் உங்கள் so called அறிவியல் மதம் மிக மிக மிக இளமையான ஒன்று! அனுபவமுள்ள, அதுவும் வாழந்து காட்டிய ஒரு வழிமுறையே உங்கள் இளமையான அதுவும் அறிவியல் மயமான ஒரு மதத்தை முதல் கேள்விகேட்க தகுதி பெற்றது!

  OK. அதை விடுங்கள். அறிவியலா இல்லையா என்று முடிவெடுக்க எதற்கு இவ்வளவு ஆராய்ச்சி ஒரு சின்ன point போதுமே!

  இந்த இந்திய திருநாட்டை அழிக்க நினைத்த, பல பகுதிகளை களவாட நினைத்த ஒருவரின் பெயரையும் படத்தையும் போட்டுக்கொண்டு நாங்கள் அவர் வழி செல்வோம் அவர் சொன்னதே எங்கள் மதம் என்று வெறியை தூண்டிவிடும் உங்கள் மதம் அறிவியல் மயமானதா, இல்லை இருக்கும் நாட்டிற்கு விசுவாசமாக இரு என்று கூறும் ஒரு மார்க்கம் அரிவியல்மயமானதா?

  பதில் சொல்லுங்கள்!

  மொத்தத்தில் அறிவியலுக்குள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த மதம் சொல்லவருவது இருக்கும் நாட்டுக்கு விசுவாசமாக இரு என்பதைத்தான்!
  இதை சொன்னதே போதும், இதற்க்கு மேல் எந்த so called அறிவியலும் வேண்டவே வேண்டாம். This is the first thing that ought to be there!.
  அதே உங்கள் மதத்தை எடுத்துக்கொண்டால், சொல்ல நா கூசுகிறது, இந்தியாவை அழி, சீனாவை துதி என்பதுதானே முதல் அந்தாதி! இதைத்தான் நீங்கள் அறிவியல் என்று சொல்லும்பொழுது , இப்பேர்ப்பட்ட அறிவியல் இஸ்லாமிற்கு மட்டும் அல்ல, எந்த ஒரு மதத்திற்கும் வேண்டாம்! நீங்களே இந்த மாதிரி நவீன அறிவியலை வைத்து கொண்டாடுங்கள்!

  கடைசியாக ஒரே கேள்வி:

  உங்களின் படி அறிவியல் இல்லாத, ஒன்றுமே இல்லாத ஆனால் இந்திய திரு நாட்டிற்க்கு நல்ல பிரஜைகள் பல கோடி தந்த இஸ்லாம் மார்க்கம் அறிவியல் இல்லாத மதமா அல்லது நாட்டை துண்டாடத்துடிக்கும் உங்களின் அறிவியலால்லான மாவோயிச மதம் அறிவியல் மதமா????????

  இந்த சின்ன உண்மையை மறந்து அல்லது மறைத்து, அறிவியலைப்பற்றி பேசவந்து விட்டீர்கள் நீங்கள்! நல்ல காமடி சார்!
  போங்க சார், போயி மாவோவையும் மற்ற கொடுங்கோல் சர்வாதிகாரிகளையும் துதித்து பூஜை செய்யுங்கள், முடிந்தால் அவர்களை வைத்து புது அறிவியல் ஏதாவது கண்டு பிடியுங்கள்!

  நன்றி

 47. \\\\\\\\\\\\\\\\\\\\\\\\முஸ்லீம்கள் தவறுக்கு இஸ்லாம் பொறுப்பேற்காது என்பதற்கு பின்னூட்டம் எண் 15 ல் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தையும் கம்யூனிசத்தையும் ஒப்பிடுவது அடிப்படையிலேயே தவறானது என திருப்பதியானை கைது செய்த பதிவிலேயே பின்னூட்டம் எண் 37ல் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலும் விளக்கமாக 37.1.2 லும் விளக்கப்பட்டுள்ளது, அதுவும் நீங்கள் குறிப்பிடும் நெத்தியடி முகம்மதுவுக்குத்தான். விளக்கம் கொடுத்தபின் ஒன்று அது தவறு என மறுக்கவேண்டும் அல்லது அந்தக்கேள்வியை விலக்கவேண்டும் இரண்டுமின்றி ஒவ்வொறு பதிவிலும் அதையே கேட்டுக்கொண்டிருந்தால், நாங்கள் ஒன்றும் உங்கலைப்போல் பொழுதுபோக்குவதற்காக எழுதுபவர்களல்ல////////////////////////

  நண்பர் செங்கொடி,

  என்னுடைய வேறு எந்த கேள்விக்குகும் பதில் இல்லை என்று தெரிகிறது. சரி, உங்களின் புளித்த மாவில் மீண்டும் ஒருமுறை தோசை சுடுவோம். வாருங்கள்.

  உங்களுக்கு உள்ள ஒரே பிரச்சனை இதுதான்: ஒவ்வொவொரு மனிதனும் நினைப்பது இறைவனுக்கு தெரியும். எனவே, அவன் செய்வது இறைவன் செய்வதே. – இதுதானே?.

  பலமுறை நான் உட்பட பலர் விளக்கியும் விளங்கிக்கொள்ள உங்களால் முடியவில்லை. ஏற்கனே எழுதிவைக்கப்பட்ட விதிப்பதிவேடு இருக்கிறது என்பதால், மனிதனால் சுயமாக சிந்திக்கவே முடியாது என்பது தவறு. குரானையும் ஹதீசையும் முழுசாக படித்து விட்டு வந்து விவாதிக்கவும்.இறைவன் தம்மை சுயமாக சிந்திக்க விட்டிருக்கிறான் என்பது, முஸ்லிம்கலுக்கு இது நன்றாக தெரியும், அட உங்களுக்கும்தானுங்க. நீங்க மனுஷன் இல்லையா?

  தங்கள் முன்னே இருப்பவற்றில் எது நல்லவை எது கெட்டவை என்று தெரிந்தெடுக்கும் சுய என்ன ஓட்டத்தை இறைவன் தந்திருக்கிறான்.

  எழுதப்பட்ட விதிப்பதிவேட்டை நம்புதல் என்பது:
  1) இறைவனுக்கு அனைத்தும் – முக்காலமும் தெரியும்.
  2) இறைவன் தன் பதிவேட்டில் முக்காலத்தையும் பதிவு செய்து வைத்திருக்கிறான்.
  3) இறைவன் நினைத்ததுதான் நடக்கும். நடக்கிறது. நடந்தது. அவன் நாடாதது நடக்காது, நடக்கவில்லை, நடந்ததில்லை.

  நம்மை படைத்ததே, நாம் இறைவனுக்கு வணங்கி வழிபடத்தான்.(Quran 51:56)

  இப்ப ஒரு கதை படிப்போமா?
  நீங்கள் ஒரு போலிஸ். உங்களிடம், அரசு, ஒரு துப்பாக்கியும் ஆறு தோட்டாக்களும் கொடுத்துள்ளது, ஓர் உடன்படிக்கையுடன். உங்கள் உயிருக்கு ஆபத்து வரும்போது, ஷூட்டிங் ஆர்டர் குற்றவாளி தப்பிக்கும் போது, கண்ணீர்புகை குண்டு போட்டபின்னும் கட்டுப்படாத கொலைவெறி கும்பலை கலைக்க முட்டிக்களுக்கு கிழே சுட என சில அனுமதிகள். மற்ற சமையங்களில் குறிப்பாக உங்கள் சொந்த பகை போன்றவற்றிற்கு இதை பயன்படுத்தக்கூடாது என்று நல்லது/கெட்டது இரண்டையும் பிரித்தரிவித்து விட்டு துப்பாக்கியை தோட்டா நிரப்பி உங்கள் கையில் கொடுக்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால் வினவுக்கு எதிராய் பேசும் என்னை சுட்டுவிடுகிரீர்கள். அரசு உங்களை கைது செய்ய வந்தால், “இது அரசு துப்பாக்கி ,இவை அரசு தோட்டா, எனக்கும் இந்த கொலைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்கிறீர்கள், போய் அரசை கைது செய்யுங்கள்”என்கிறீர்கள். இப்போது, நீங்கள் இப்படி கேட்பீர்கள். “அரசும் இறைவனும் ஒன்றா? நான் தவறான எண்ணத்துடன் சுடப்போவது இறைவனுக்கு தெரியுமே, பின்னர் என் உடனே தடுக்கவில்லை?” என்றால்,…..

  நாம் இங்கே இருப்பது ஒரு பரீட்சை அறையில், பரீட்சை எழுதிக்கொண்டுள்ளோம். ஒரு ஆசிரியர், தனக்கிட்ட பாடத்திட்டப்படி எல்லா பாடங்களையும் நடத்தி எப்படி தேர்வெழுத வேண்டும் எப்படி எழுதக்கூடாது என்று மாணவர்களுக்கு, நல்லது-தீயது இரண்டையும் பிரித்தரிவித்துவிட்டு சென்றுவிடுகிறார். அடுத்து பரீட்சை ஆரம்பம். எதற்கு? நீங்கள் சொல்லிக்கொடுத்தப்படி பரீட்சை சரியாக எழுதுகிறீர்களா, அல்லது சொல்லிக்கொடுத்ததுக்கு எதிராய் தவறாக எழுதுகிறீர்களா என்று சோதிப்பதற்காகவே. என்ன? சோதிப்பதற்காகவே…! அப்போதுதானே யார் நல்லா படித்தார், யார் நல்லா படிக்கவில்லை என்பது தெரியும்.? அப்போது நீங்கள் தவறாக எழுதுகிறீர்கள். கண்காணிக்கும் ஆசிரியருக்கு தெரிகிறது, நீங்கள் தவறாக எழுதுவது. உடனே அவர், “உங்களை திருத்தி இப்படி சரியாக எழுது” என்றால் இது பரீட்சை அறையா? வகுப்பறையா? அதனால்தான், ஆசிரியர் நீங்கள் தவறாக எழுதுவது தெரிந்தும் கண்டுக்கவில்லை. பரீட்சை முடிந்தவுடன் விபரம் அறிந்த நீங்கள் “அப்போதே திருத்தி இருக்கலாமே?” என்கிறீர்கள். “இது அநீதி” என்கிறீர்கள். அல்ல, செங்கொடி. இதுதான் நீதி. எப்படி என்றால், நீங்கள் உங்களை மட்டுமே நினைக்கிறீர்கள். ஆசிரியரோ அனைத்து மாணவர்களும் சமம் அவருக்கு. உங்களுக்கு உதவி செய்வது, கஷ்டப்பட்டு படித்துவிட்டு வந்து நியாபகம் வைத்து சரியாக எழுதும் மற்ற மாணவர்களுக்கு எதிரான அநீதி அன்றோ?

  இந்த பரீட்சை, பரீட்சை அறை , ஆசிரியர், அரசு, போலிஸ், அநியாயக்கொலை, எதிலுமே நம்பிக்கை இல்லை என்றால், இன்னொன்றும் சொல்கிறேன்.
  நீங்கள் ‘ஒன்றை’ நாடுவீர்கள். எப்பாடுபட்டாவது அதனை அடைந்துவிட வேண்டும் என்று எல்லா முயற்சியும் சரியாக எடுத்து ஓடுவீர்கள். அனால், கிடைக்காது. ஏன்? நீங்கள் நாடினீர்கள். இறைவன் நாடவில்லை. மற்றொரு சந்தர்பத்தில், நீங்கள் எந்த முயற்சியும் எடுக்க மாட்டீர்கள். நேரமும், சந்தர்ப்பமும், பிற மனிதர்கள் வடிவில் உங்களை வேறு வழியே இல்லாமல் முயற்சி எடுக்க வைத்து ‘அதை’ பெற்றுத்தரும். உங்களுக்கு அந்த ‘பெற்றுதான் தீர வேண்டும்’ என்ற எண்ணமே இருக்காது. இருந்தும் உங்களை அது வந்தடைந்துவிடும். இதற்கு யார் காரணம்?

  ரிமோட் கார் செரியுமா செங்கொடி? குழந்தைகள் விளையாடுவார்களே? அதில் ரிமோட் யார் கையில் இருக்குமோ அவர் மட்டுமே இயக்குவார். ஆனால், இந்த ரிமோட் காரில் சிறு மாற்றம். இதில், ரிமோட் கார் தன் இஷ்டப்படி செல்லவும் ஒரு ஆப்ஷன் உண்டு. அதே நேரம் ரிமோட் படியும் இயக்கப்படும். ரிமோட் பவர்தான் கார் ஸெல்ப் டெசிஷன் பவரை விட சக்தி வாய்ந்தது. இப்படி, தன் இஷ்ட ஆப்ஷனை கொடுக்கும் போது, காருக்கு, எப்படி, எந்த நேரத்தில், எவ்வாறு, எங்கு, ஏன், எதற்காக, எவ்வகையில் உபயோகப்படுத்தவேண்டும் என்றும் அதனால் ஏற்படும் நன்மை-தீமை தெளிவாக அறிவுறுத்தப்பட்டும் விட்டது, பின்னர், சொல்லிக்கொடுக்கப்பட்ட அறிவுரை எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது என்று சோதனை செய்யப்படுகிறது. அதில் அந்த கார் செல்லும் சரியான அல்லது தவறான வழிகளுக்கு அதுதான் பொறுப்பு. சோதனை செய்வதே தன் வேலையாக இருக்கும்போது ரிமோட்டை குறை சொல்ல முடியாது. அதேநேரம், அதை செயலிழக்க செய்ய மெயின் ரிமோட்டால் எப்போதும் முடியும் என்றும் தெரிகிறது. அதாவது, தசாவதாரம் கிளைமேக்ஸ் சுனாமி காட்சிபோல.

  மேலும் சொல்கிறேன். உங்கள், உடலில் circulatory system, nervous system, respiratory system, digestive system, excretory system இப்படி எல்லாமும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அதது அதுவாக இயங்குகிறது. உடலுக்குள்ளே இயங்கும் ஒவ்வொரு உறுப்பும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அதேபோல வெளி உறுப்புகள், கை, கால் முதலியன ‘உங்களால்’ இயக்க முடியும் எனில், அந்த ‘உங்கள்’ யார்? ‘மூளை’. அந்த மூளைக்கு இதை செய்ய வேண்டும் இதை செய்யக்கூடாது என்று தெளிவான அறிவுரை கூறப்பட்டிருக்கும் போது, அது எப்படி இயங்குகிறது என்று சோதனை செய்யப்படும் வேளையில், அந்த மூளை தன் இஷ்டப்படி, தனக்கு காட்டப்பட்ட வழிகாட்டலை மீறி நடந்தால், தவறா….சரியா? அந்த மூளை மற்ற வெளி உறுப்புகளுக்கு தன் இஷடப்படி, தான் இருக்கும் உடலுக்கோ, மற்றவரின் உடலுக்கோ தீங்கு நேரும் வண்ணம் கட்டளை போடுகிறது எனில் அந்த மூளை தண்டிக்கப்பட வேண்டியதுவா, இல்லையா?

  நீங்கள், இனியும் சோதனை செய்து கொண்டிருப்பவனை குற்றம் சொல்லி பயன் இல்லை, செங்கொடி.

  ஏற்கனவே நான் சொன்ன பதில்:

  குரான் :-
  மனிதன் தனது வழிகேட்டுக்கு தானே பொறுப்பாளி.
  # 10:108–( “மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உண்மை(இறைவாக்கு-குரான்) வந்துவிட்டது. (இதன் மூலம்)நேர்வழி நடப்பவர் தனக்காகவே நேர்வழி நடக்கிறார். (தன் மன இச்சையின் படி)வழிகெட்டவர் தனக்கு எதிராகவே வழி கெடுகிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்லன்” என்று (முஹம்மதே) கூறுவீராக)

  17:15–( நேர்வழி நடப்பவர் தனக்காகவே நேர்வழி நடக்கிறார். வழிதவறுபவர் தனக்கு எதிராகவே வழி தவறுகிறார்…..)

  39:41–(மனிதர்களுக்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை (குரான்) நாம் உமக்கு அருளினோம். நேர்வழி பெற்றவர் தனக்காகவே நேர்வழி பெறுகிறார். வழிகெடுபவர் தனக்கு எதிராகவே வழி கெடுகிறார். (முஹம்மதே) நீர் அவர்களுக்கு பொறுப்பாளன் அல்ல)

  மனிதனே தனது செயலுக்கு பொறுப்பாளி # 2:57, 2:79, 2:90, 2:134, 2:141, 2:225, 2:281,286, 3:25, 3:108, 3:117, 3:161, 3:182, 4:62, 5:80, 5:105, 6:70, 6:116, 6:119,120, 6:129, 7:96, 8:51, 9:70, 9:82, 9:95, 10:8, 10:44, 10:108, 11:101, 13:11, 14:27, 14:51, 15:84, 16:33, 16:118, 17:15, 17:19, 17:18, 18:29, 18:57, 22:10, 27:92, 28:47, 29:40, 30:9, 30:36, 30:41, 31:6, 34:50, 39:7, 39:41,50,51, 40:17, 40:31, 41:17, 42:20,30, 42:48, 43:76, 45:14, 45:22, 59:18, 62:7, 73:19, 74:37,38, 74:55, 76:29, 78:39,40, 80:12, 81:28, 83:14,

  அதற்கு நீங்கள் எடுத்துவைத்த குரான் வசங்கள்.:

  //எதுவும் என்னை மீறி நடந்துவிட முடியாது என கூறுவதும் அவன் தான் இதோ வசனங்கள் 6:59; 10:61; 13:11; 35:11; 57:22; 74:56; 2:142; 2:213; 7:30…… //

  இதுவும் உண்மைதான். ஏற்கணவே எழுதப்பட்டுவிட்ட பதிவேட்டில் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. இதே இறைவன்தான், நம்மை தன்னிடம் துவா கேட்கச்சொல்கிறான்-இறைஞ்ச சொல்கிறான்..எதற்காக வேண்டவேண்டும்?. உங்கள், நற்செயல்களின் படி, உங்களின் வேண்டுதல் அமைந்தால், உங்கள்மீது எழுதப்பட்டவற்றை மாற்றுவது இறைவனுக்கு எளிதான காரியம்தானே.?

  பதிவேட்டில் எழுதப்பட்ட விதியை இறைவன் தான் நாடியதை தேவை ஏற்படின் தான் நாடுவோர்க்கு மாற்றி அமைப்பான். (குரான் 13 :39.)

  ஆகையால், திரு செங்கொடி, இறைவன் உங்களுக்கு-உங்கள் மூளைக்கு கொடுத்த சுதந்திரத்தின் அடிப்படையில் தீயவையை விளக்கி நல்லதை தேர்ந்தேடுக்க சொன்னதற்கு ஏற்ப “ஒன்றை” தேர்ந்தேடுத்துக்கொண்டீர்கள். அது நல்லதா தீயதா என்பது பரீட்சை அறையில் தெரியாது….!. ரிசல்ட் வருமே…..! அப்போதுதான் தெரியும். அந்த நாள், இறுதி தீர்ப்பு நாள் வரும் பொது தெரியும்…! யார் செய்தது சரி, யார் செய்தது தவறென்று.

  நான், என் நாட்டில், அரசு அனுமதித்திருந்தும், சிகரெட் பிடிப்பதில்லை. மது குடிப்பது இல்லை, பாண் பராக் போதை எடுப்பதில்லை, சூதாடுவது இல்லை, குதிரை ரேசில் கலந்துகொள்வதில்லை, வட்டித்தொழில் செய்வதில்லை, விபச்சாரம் செய்வதில்லை, லாட்டரி வாங்குவதில்லை, அடல்ட்ஸ் ஒன்லி படம் பார்ப்பதில்லை, இன்டர்நெட்டில் கெட்ட சைட் போவதில்லை, சைட் அடிப்பதில்லை, எங்கள் வீட்டு பெண்கள் மூட வேண்டிய பாகங்களை மூடிக்கொள்கிறார்கள், நானும் மூட வேண்டிய பாகங்களை மூடிக்கொள்கிறேன்…..இப்படியே நிறைய சொல்லலாம், எனக்கு அரசு அனுமதி இருந்தும் சட்டப்படி தவறில்லை என்று இருந்தும் ஏனிப்படி நான் செய்ய வேண்டும்.? சிந்தியுங்கள், செங்கொடி.

  உங்கள் கூற்றுப்படி மத வாதிகள் தாங்கள் செய்யும் தவறுக்கு மதமே பொறுப்பு என்றால், கீழ்காணும் கோங்களைப்போட நீங்கள் முதலில் தயாரா?

  ——பாபர் மசூதி இடிப்புக்கு அத்வானி, ஜோஷி, உமாபாரதி பொறுப்பில்லை. ராமனை கைதுசெய்து சிறையிலடை..!

  —–மும்பை கலவரத்துக்கு -முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுக்கு சிவசேனா தாக்கரே காரணம் இல்லை, ஹிந்து மதத்தை தூக்கிலிடு.

  —-கோவை குண்டுவெடிப்பில் தூக்குதம்டனை கொடுக்கப்பட்டவர்களை விடுதலை செய். இஸ்லாமை தூக்கில் போடு.

  —–குஜராத்தில் மூவாயிரம் முஸ்லிம்களை கொன்ற மோடியை குற்றம் சொல்லமாட்டோம். ஹிந்து மதத்தை தூக்கில் போடு.

  ——அப்பாவி தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்சே வாழ்க. அவர்களின் கடவுளான புத்தரை சுட்டுக்கொல்.

  ——உலகம் முழுவதும் பலவேறு நாடுகளை அடக்கி மிரட்டி அதன் வளங்களை கொள்ளை கொண்டு, அதன் மக்களை அழித்துவரும், கொலைகார கொள்ளைக்கார, அமெரிக்காவின் ஏகாதிபத்திய அக்கிரம அதிபர்களை இனி யாரும் எதிர்க்கக்கூடாது…! அவர்களின் மதமான, கிருத்துவத்தி கழிவிலேர்ரி கொள்ளுங்கள்..!

  இருடி….இப்பத்தாண்டி ஆப்பு….

  —–நக்சலைட்டுகளின் அராஜக அக்கிரம கொலை கொள்ளைகளுக்கு மத நம்பிக்கை இல்லாத நக்சலைட்டு மற்றும் மாவோயிஸ்டு கம்யூனிஸ்டுகளான அவர்கள் தான் பொறுப்பு. அவர்கள் அனைவரையும் பிடித்து தூக்கில் போடு. அல்லது கண்டவுடன் சுட்டுக்கொல், அரசே…!
  உடனடியாக இதனை செய்…!

  ஹலோ..! என்ன பேச்சையே காணோம்? கோஷங்கள் எல்லாம் சரிதானே?

 48. “””மகஇக வில் தவறு செய்தால் அவர்களை உடனடியாக அமைப்பிலிருந்து நீக்கிவிடுவார்கள். மேலும் காம்யூனிஸ்டு என்று பெயர் தாங்கி கம்யூனிசத்திற்கு மாற்றாக நடப்பவர்களை போலிகள் என்றே அழைக்கிறார்கள்.””””””

  இப்படி நீக்கி வைக்கப்பட்டவர்கள்தான் பிற்காலத்தில் நாங்கள்தான் உண்மையான(கம்யூனிஸ்ட்,காங்கிரஸ்,தி.க,etc) கொள்கையில் இருக்கிறோம் என்று தம்பட்டம் அடித்துகொண்டு தங்களுக்கென ஒரு கூட்டத்தையும் ஏற்படுத்திகொள்கிறார்கள்.ஆனால் இவர்களின் செயல்பாடோ வேறு விதமாக இருக்கும்.ஆனால் பெயரை மட்டும் தாங்கள் முன்பு பின்பற்றி வந்தவொன்றோடு ஒன்றியிருக்கும்.ஆனால் கொள்கை?
  இதுபோலதான் இஸ்லாமிலிருந்து நீக்கிவைக்கப்பட்டவர்களும்,தனி பிரிவாய் போனவர்களையும் நாங்கள் அவர்களை பெயர்தாங்கிகளென்றும்,போலிகளென்றும்தான் அழைக்கிறோம்.

 49. நெத்தியடி முஹம்மத்

  உங்களது உளறலுக்கு எவராலும் பதில் சொல்ல முடியாது.

  இருப்பினும் என்னால் முடிந்த அளவுக்கு உங்களுக்கு பிரச்னையை புரிய வைக்க முயல்கிறேன்.

  அல்லாஹ் சுவனத்தில் ஆதாம் ஏவாளை உருவாக்கினார். பிறகு மரத்தை வைத்து அந்த கனியை சாப்பிடக்கூடாது என்று சொன்னார். சாத்தான் சாப்பிட சொன்னான்.

  ஆதாமும் ஏவாளும் சாப்பிட்டார்கள்.

  சரி இப்போது கேள்விக்கு வருவோம்.

  ஆதாமும் ஏவாளும் சாப்பிடுவார்கள் என்பது மரத்தை வைக்கும்போதே அல்லாஹ்வுக்கு தெரியுமா தெரியாதா?

  தெரிந்திருக்கவேண்டும் இல்லையா? ஏனெனில் அல்லாஹ் முக்காலமும் உணர்ந்தவர் இல்லையா?

  ஆகவே மரத்தை வைக்கும்போதே ஆதாமும் ஏவாளும் இதனை சாப்பிடப்போகிறார்கள் என்று தெரிந்திருந்தும் ஏன் மரத்தை வைத்தார்?

  நீங்கள் சொல்கிறீர்கள், அல்லாஹ் பரிசோதிக்கிறான் என்று.

  அல்லாஹ் அந்த மரத்தின் கனியை சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்தினார். ஆனால், அல்லாஹ்வுக்கு ஏற்கெனவே அந்த மரத்தின் கனியை அவர்கள் சாப்பிடப்போகிறார்கள் என்று தெரியும். இல்லையா? பிறகேன் மரத்தை வைக்கவேண்டும்?

  சரி, அந்த மரத்தின் கனியை ஆதாம் சாப்பிடவில்லை என்று வைத்துக்கொள்வோம். அது அல்லாஹ் ஏற்கெனவே நிச்சயம் செய்து வைத்திருந்த “ஆதாம் அந்த கனியை சாப்பிடுவார்” என்ற எதிர்காலத்தை உடைக்கிறது. அல்லாஹ் ஏற்கெனவே நிச்சயம் செய்து வைத்திருக்கும் எதிர்காலத்தை ஆதாமால் உடைக்க முடியுமா? முடியாது. ஆகவே வேறு வழியின்றி ஆதாம் அந்த கனியை சாப்பிடுகிறார். ஆதாம் சுயமாகவே சென்று அந்த கனியை சாப்பிடுவதாக நினைக்கிறார். ஆனால், ஏற்கெனவே அல்லாஹ் எதிர்காலத்தை நிச்சயம் செய்துவிட்டதால், அவர் கனியை சாப்பிடுகிறார்.

  ஆதாமால் கனியை சாப்பிடாமல் இருக்கமுடியாது. ஏனெனில் அதுதான் அல்லாஹ் நிச்சயம் செய்துவைத்த எதிர்காலம். ஆகவே ஆதாமின் சுய விருப்பம் என்று ஒன்றும் இல்லை.


  இந்த பிரச்னையுடன் பள்லிக்கூடம், போலிஸ் ஆகியவற்றை ஒப்பிடமுடியாது. ஏனெனில், பள்ளிக்கூட வாத்தியார் பரிட்சை வைப்பது போன்றதல்ல அல்லாஹ் வைக்கும் பரிட்சை.
  பள்ளிக்கூட வாத்தியாருக்கு ஒரு மாணாக்கன் என்ன மதிப்பெண் வாங்குவான் என்று தெரியாது. ஆனால், அல்லாவுக்கு ஏற்கெனவே இந்த மாணாக்கன் இந்த மதிப்பெண் தான் வாங்குவான் என்று தெரியும்.

  இந்த மாணாக்கன் இந்த மதிப்பெண் தான் வாங்குவான் என்பது முன்பே தெரிந்தால் பரிட்சையே தேவையில்லை.

  இரண்டாவது ரிமோட் கார் பிரச்னைக்கு வருவோம்.

  ரிமோட் கார் தானாகவே ஓடும்படியும் சில நேரங்களில் விடப்படுகிறது சில நேரங்களில் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது என்று சொல்கிறீர்கள். அது போலத்தான் சில நேரங்களில் மட்டுமே அல்லாஹ் இடையூறு செய்கிறான் என்று சொல்கிறீர்கள்.

  இதில் இருக்கும் பிரச்னையும் பழைய பிரச்னைதான். சில நேரங்களில் நம்மிடமே விட்டுவிடும் சமயங்களில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்று அல்லாஹ்வுக்கு தெரியுமா? அபப்டி நாம் என்ன செய்யப்போகிறோம் என்று ஏற்கெனவே அல்லாவுக்கு தெரியும்போது நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதும் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டது என்று பொருள். அப்படியானால், நம்மால் அதனை மீறி வேறு சாய்ஸை எடுக்க முடியுமா?

  பாபர் மசூதி இடிப்பை எடுத்துக்கொள்வோம்.
  பாபரி மசூதி இடிப்பை அல்லாஹ் விரும்பவில்லையா? அப்படி அல்லாஹ் விரும்பாத ஒரு விஷயம் நடக்கமுடியுமா? ஆகவே இன்ஷா அல்லாஹ்தானே அல்லாவின் விருப்பப்படிதானே அது நடந்தது? அப்படி அல்லாவின் விருப்பப்படி நடந்ததை நீங்கள் எதிர்க்கலாமா?

  ஆகவே பாபரி மசூதி இடிப்புக்கு தூக்கிலிட வேண்டியது அல்லாதான்!

 50. //பதிவேட்டில் எழுதப்பட்ட விதியை இறைவன் தான் நாடியதை தேவை ஏற்படின் தான் நாடுவோர்க்கு மாற்றி அமைப்பான். (குரான் 13 :39.)//

  இந்த வரியில் உள்ள முட்டாள்த்தனத்தை அலசுவோம்

  தான் நாடுவோருக்கு தகுந்தாற்போல பதிவேட்டில் எழுதுவதை மாற்றியமைப்பது என்பதுஅல்லாஹ்வின் பாரபட்சத்தை காட்டுகிறது.

  பாரபட்சத்தையும் விட்டுவிடுவோம்.

  தான் எதிர்காலத்தில் இப்படி பதிவேட்டை மாற்றப்போகிறோம் என்று அல்லாஹ்வுக்கு தெரியுமா தெரியாதா?

  முக்காலும் உணர்ந்த அல்லாஹ் அதனையும் அறிந்தே இருக்கவேண்டும், இல்லையா?

  பதிவேட்டை மாற்றப்போகிறோம் என்று தெரிந்த அல்லாஹ் ஏன் ஏற்கெனவே தவறான பதிவேட்டை எழுதவேண்டும்?

  முழு குரானும் சுத்த உளறல்தான்.

 51. நண்பர் நெத்தியடி முகம்மது,

  உங்களின் எந்த‌க்கேள்வியையும் நிராகரித்ததாய் நினைவில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் நினைவு படுத்துங்கள், கூடவே நீங்களும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

  எடுத்துக்காட்டுகளையே அடுக்கிக்கொண்டிருக்கும் நீங்கள் உண்மைப்பிரச்சனையை சிந்திக்க மறுக்கிறீர்கள். சிந்தனை என்பது என்ன? ஒருவன் அந்தக்கணத்தில் இருக்கும் சூழல்களின் அடிப்படையில் ஒன்றை தெரிவு செய்வது. ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டது என்பது எந்த சூழலிலும், என்ன தேவையெனினும், குறிப்பிட்ட அந்த ஒன்றை மட்டுமே செய்வது. இந்த இரண்டும் எப்போதும் இணங்கிச்செல்ல இயலாதவை. நீங்கள் இதுவரை கூறிய இனியும் கூறவிருக்கும் அனைத்து எடுத்துக்காட்டுகளும் இந்த அடிப்படையில் இருக்கின்றனவா என்பதை நீங்களே சீர்தூக்கிப்பார்த்துக்கொள்ளுங்கள். இறைவன் மனிதனுக்கு சிந்திக்கும் திறனை வழங்கியிருக்கிறான் என்பதில் நீங்கள் உறுதியுடனிருந்தால், அதை நீங்கள் நிரூபிக்கவேண்டும். எப்படி? நீங்கள் சுயமாக சிந்தித்து இந்த ஒன்றைச்செய்தேன் என்று கூறும் போது அந்த ஒன்று இறைவன் எழுதிவைக்காததாக இருக்கவேண்டும். ஆனால் இறைவன் இப்படி எழுதிவைத்திருக்கிறான் என்று அறிந்து கொள்ள முடியாது என்பதால், நீங்களாகவே அதை அறிவிக்க வேண்டியதிருக்கும், இது நானாகவே சுயமாக சிந்தித்து செய்தது என்று. இப்படி உங்களாலும் அறிவிக்க முடியாது, அப்படி அறிவிப்பதை உங்கள் மதமும் ஏற்றுக்கொள்ளாது. எடுத்துக்காட்டுகளில்லாமல் நேரடியாக சிந்தனையும் எழுதிவைக்கப்பட்டதுகளும் எப்படி ஒருங்கிணைகின்றன என்பதை விளக்கிவிடுங்களேன்.

  உங்கள் முதல் எடுத்துக்காட்டில், வினவு தோழர்களை எதிர்த்துப்பேசும் உங்களை நான் சுடவேண்டும் என்றால் நான் சூழலை உள்வாங்கியிருக்கவேண்டும் அடுத்து நான் சிந்திக்கவேண்டும் நான் சுடவேண்டுமா? அல்லது இன்னும் இரண்டு மூன்று பின்னூட்டங்கள் எழுதிப்பார்க்கலாமா? என ஆலோசித்து அதன் பிறகுதான்ஒன்றை தேர்ந்தெடுத்து சுட முடியும். ஆனால் உங்கள் இலக்கணப்படி, இரண்டில் எதை செய்தாலும் அது நீங்கள் தீர்மானித்ததல்ல ஏற்கனவே இறைவனால் தீர்மானிக்கப்பட்டது.

  உங்களின் இரண்டாவது எடுத்துக்காட்டில், ஆசிரியரின் நிலையும் இறைவனின் நிலையும் ஒன்றல்ல. மாணவனின் திறமை குறித்து சோதனை செய்து பார்க்கும் கட்டாயத்திலிருப்பவர் ஆசிரியர், ஆனால் இறைவனுக்கு அப்படியான சோதனைகளின் அவசியமில்லை. ஆசிரியரின் சொற்படிதான் மானவர்கள் நடப்பார்கள் என்பது நிச்சயமில்லை ஆனால் இறைவனின் சொற்படி நடக்காமலிருப்பது மனிதனுக்கு சாத்தியமில்லை. இவைகளை விலக்கிவிட்டால் தேர்வு அறையான இந்த உலகில் இறைவன் தண்டித்ததற்கான சான்றுகள், வெகுமதி வழங்கியதற்கான சான்றுகள் குரானில் உண்டு, முன்னர் இறைவன் தண்டித்ததன் காரணத்தை விட கொடூரமான குற்றங்கள் நடந்திருந்தும் இப்போது இறைவன் தண்டிக்காதது ஏன்?

  உங்களின் மூன்றாவது எடுத்துக்காட்டில், ஒருவனுக்கு ஒன்று கிடைப்பதும் கிடைக்காததும் அவனின் முயற்சியில் மட்டுமே அல்ல, காரணம் அவன் தனி மனிதனல்ல. சமூகத்தின் ஒரு உறுப்பு. சமூகத்தை மீறி ஒருவனுக்கு ஒன்று கிடைப்பதும், மறுக்கப்படுவதும் முதலாளித்துவ சேவையின் அளவுகோல்களைப்பொருத்தது. ஒரு தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களுமே கடுமையாக உழைத்தாலும் பதவி உயர்வு ஓரிருவருக்கே வழங்கப்படும். யாருக்கு கொடுத்தால் தொழிலாளர்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்த முடியும் என்பதைப்பொருத்து. உழைக்காதவர்கள் பதவி உயர்வு பெருவதும் இதே அடிப்படையில் தான். எல்லாரும் உழைத்தார்கள் அனைவருக்கும் கிடைக்காமல் ஒருவருக்குத்தான் கிடைத்தது, அது தான் இறைவனின் நாட்டம் என்பது முதலாளியத்தின் கொடூரத்தை மறைக்கும் திரை. இதுதான் மதத்தின் இருப்பிற்கான அடிப்படை. தனிமனித ஒழுக்கத்தை வலியிறுத்தினாலும், நான் நாடியவர்களை தண்டிப்பேன், நாடியவர்களை மன்னிப்பேன் என்பதன் பின்னணியும் அதுதான். காலத்திற்கேற்ப இதை வலியுறுத்தாத மதங்கள் வழக்கொழிந்துவிடும்.

  உங்களின் நான்காவது எடுத்துக்காட்டு ஏற்கனவே நண்பர் ரஜின் என்பவரால் பின்னூட்டமிடப்பட்டு அதற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது பார்வையிடுக.

  மூளை குறித்து நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பது தெளிவாகவில்லை. கொஞ்ச‌ம் விரிவாக கூறவும்.

  இந்த உலகில் நான் செய்து கொண்டிருந்தவைகளுக்கு எப்போதன்று தெரியாத எங்கேயென்று தெரியாத ஒரு உலகில் சரிபார்த்தல் என்பதே அநீதியானது, அதுவும் விளக்கம் கோர அனுமதியில்லாத நிலை வேறு. இதை நீங்கள் நியாயத்தீர்ப்பு நாள் என்று போற்றினீர்கள் என்றால் அதை நிராகரிக்கவும் அந்த ஒன்றே போதுமானது. செங்கொடிப்பாதையை தேர்ந்தெடுக்க அனுமதியும் வழங்கிவிட்டு அந்த நாளில் என்னிலையை விளக்க அனுமதி மறுப்பது தான் சோதனை செய்யும் வல்ல இறைவனுக்கு அழகா?

  அரசு தன் சட்டங்கள் மூலம் தரும் அனுமதியும் மறுப்பும் வர்க்கக் கண்ணோட்டம் கொண்டது என்பது ஒருபுறமிருக்க, தனிப்பட்ட முறையில் புகை மது பழக்கங்கள் உங்களிடம் இல்லாததற்கு மதம் தரும் போதனைகள் காரணம் என நீங்கள் நினைத்தால்; அதே மதம் ஒருவனை சொகுசாக வாழ வைப்பதும் இன்னொருவனை ஏழ்மையில் வதைய வைப்பதும் என்னுடைய விருப்பத்தை சார்ந்தது என்று கூறுவதையும் அதற்கான காரணங்களையும் சிந்திக்க வேண்டாமா?

  நண்பரே, நீங்கள் உருவாக்கித்தந்திருக்கும் முழக்கங்களை எங்களால் முழங்க முடியாது. ஏனென்றால் கடவுளின் இருப்பை மறுப்பவர்கள் நாங்கள் ஆகவே நாங்கள் சம்மந்தப்பட்டவர்களை குறிவைக்கிறோம். ஆனால் மதவாதிகள் மனிதனின் செயலுக்கு கடவுள் பொறுப்பு எனக்கூறிக்கொண்டே சம்மந்தப்பட்ட மனிதர்களை குறிவைக்கிறார்கள். எனவே இவை மதவாதிகளின் முழக்கங்கள், உங்களுக்கானவை. பின்னர் நீங்கள் கேட்கலாம் ஏன் பார்ப்பனீயத்தில் சரணடைந்த இஸ்லாம், திருப்பதி ஏழுமலையானை கைது செய் போன்ற தலைப்புகளெல்லாம் என்று. அவைகளை நாங்கள் குறியீடுகளாகவே பயன் படுத்துகிறோம். எங்களைப்பொறுத்தவரை இஸ்லாம் என்பது குரான் ஹதீஸை விட இஸ்லாமியர்களை முதன்மைப்படுத்துவது. ஏழுமலையான் என்பது அவனை அனைத்துமாக நம்பி வணங்குபவர்களை முதன்மைப்படுத்துவது. இஸ்லாமியர்களை தனியே பிரித்தெடுத்து இஸ்லாம் புனிதமானது என்பது பொருளற்றது. உங்களை நோக்கி உங்களின் நம்பிக்கைப்படி என நாங்கள் உங்களை சுட்டினால் அதையே நீங்கள் எங்கள் கூற்றுப்படி என திருப்பிப்போடாதீர்கள்.

  தோழமையுடன்
  செங்கொடி

 52. ஷேக் தாவூத் தளத்திலிருந்து……..

  பொதுவாக பழைய தமிழ்ப் படங்களிலும் இடைப் பட்ட காலங்களில் வந்த படங்களிலும் வில்லனும் அவனுடைய கூட்டாளிகளும் சில முன்னேற்பாடுகளை கனகச்சிதமாக ஏற்பாடு செய்து கதாநாயகனை பலி வாங்குவார்கள். பெரும்பாலும் அவை கேரக்டர் அசாசினேசன் (character assasination ) ஆகவே இருக்கும். இத்தகைய பழைய திட்டங்களை இன்னும் ஒரு சிலர் நம்பிக்கொண்டு அதை செய்து விட்டு அதில் சிறிதளவு வெற்றியும் பெற்று விட்டதாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் இறைவன் ஒருவன் என்பதை இந்த தீய சக்திகள் உணர்ந்து கொள்ள வேண்டும். (குறிப்பு: இங்கு என்னை நான் கதாநாயகன் என்று சொல்லவில்லை. வேறு உதாரணம் சொல்லத் தெரியவில்லை. ஆகவே இந்த சினிமா உதாரணம் சொல்லுகிறேன்)

  வினவு என்னும் பிற்போக்கு தளத்திற்கும் அவர்களுடைய இயக்கமாக இருக்கின்ற ம.க.இ.க விற்கும் இஸ்லாமிய அறிஞர்களுடன் நேரடியாக விவாதிக்க நான் அறைகூவல் விடுத்ததும் ( “வினவின் பிழைப்புவாத பிதற்றல்கள் “) அதை தொடர்ந்து எமது வலைப்பூவில் எனக்கே தெரியாமல் வாசகர்கள் கருத்துக்கள் நீக்கப்பட்டதையும் என்னுடைய கடந்த பதிவில் (“”செங்கொடி”யின் சீற்றம் )” தெரிவித்திருந்தேன். அந்த திருட்டுத் தனத்தை யார் செய்தனர் என்பதும் எமக்கு தெரியவில்லை. நேற்றுவரை யார் மீதும் சந்தேகமும் எழவில்லை. ஆனால் செங்கொடியாரின் இரண்டு பின்னூட்டங்கள் (வினவு தளத்தில் இருக்கின்றது. “…..சரணடைந்த இஸ்லாம்- பின்னூட்டம் என்: 83 .1 , 83 .2 ) எனக்கு சந்தேகத்தை வரவழைக்கின்றன. இது சந்தேகம் மட்டுமே. எவரையும் உறுதியாக குற்றவாளி என்று தெரியாமல் குற்றம் சாட்டுவது பாவமாகும் என்பதே எமக்கு நபிகளார் கற்றுத் தந்த பண்பு.

  மேலும் இவரது மறுமொழியை நான் மறைத்திருப்பேன் என்றும் ஆனால் வினவிலும் இந்த பின்னூட்டத்தை போடுவேன் என்று செங்கொடி சொன்னதால் தான் நான் அவருடைய பின்னூட்டத்தை வெளியிட்டதாகவும் ஒரு கற்பனையான குற்றசாட்டை முன்வைக்கின்றார். என்னுடைய வலைப்பூவில் அறிவு குறைந்தவர்கள் இடும் பின்னூட்டத்தை மட்டுபடுத்துவேன் என்று எங்கும் நான் கூறவில்லையே செங்கொடி? பின்னர் எதற்கு உங்களுடைய பின்னூட்டத்தை நான் மறைக்க வேண்டும்? உங்களுக்கும் உங்கள் இயக்கத்தினர்களுக்கும் பகிரங்க அறைகூவல் விடும் நான் ஏன் உங்களின் பின்னூட்டத்தை மறைக்க வேண்டும்? உங்களுடைய பின்னூட்டத்தை நான் மறைக்க முயற்சிக்கிறேன் என்று சொல்லுவதில் கொஞ்சமாவது லாஜிக் இருக்கிறதா செங்கொடி? சூடு சொரணை இருந்தால் இந்த அறைகூவலை ஏற்று நேரடி விவாதத்திற்கு அல்லவா வந்திருக்க வேண்டும். செங்கொடி சவூதியில் பணிபுரிவதால் அவருடைய இயக்கத்தினர்களை நேரடி விவாதத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் இத்தகைய மானம் சூடு சொரணை எல்லாம் சுத்தமாக ம.க.இ.க.வினர்களுக்கு கிடையாது என்பதை தான் செங்கொடியின் புலம்பல் வெளிப்படுத்துகின்றது.

  உண்மையை அறியும் ஆர்வமிருந்தால் செங்கொடி தம்முடைய இயக்கத்தினர்களை நேரடி விவாதத்திற்கு வரச் செய்யட்டும். அதில் தெரியும் யார் பொய்யர்கள் என்று? நேரடி விவாதத்திற்கு உமது இயக்கத்தினர்களை அனுப்ப தயாரா செங்கொடி?
  ————————————-
  செங்கொடி சும்மா கதை விடாமல் தைரியமா போங்க விவாதத்திற்கு. கம்யூனிசம் கொடியை வேறு இறுதியா உடம்பில் போர்த்தணும் என்றெல்லாம் செண்டிமெண்ட் டைலாக் அடிச்சுருக்கிங்க. ஆனால் அந்த கம்யூனிச கோவணத்தை கந்தலாக்குது இஸ்லாம். இது தான் நல்ல சான்ஸ் நேரடியா போய் உங்க கம்யூனிசம் தான் சிறந்தது என்று நிரூபிக்க. எப்போ போக போறீங்க செங்கொடி?

 53. ஃபசல் அவர்களே,
  வீமானம் பற்றி நீங்கள் pjonline-ல் வந்துள்ளதை கொஞ்சமும் சிந்தித்துப் பார்காமல் அப்படியே காப்பி அடித்துள்ளதுதான் அவர்களின் மோசடி பிரச்சாரத்திற்கு பலம் சேர்கிறது. விமானத்தின் கீழ் இரண்டு புரபல்லர்கள் (propeller) இருப்பதையும், அது கட்டிக்கரணமு அடித்து சாகசம் புரிவதையும் சற்று யோசிக்க வேண்டாமா?.
  அது போகட்டும். காற்றும் அந்த காற்றின் அல்லாவின் ஆற்றலும் இல்லாமல் ராக்கெட்டுகள் விமானத்தினைவிட கடும் வேகத்தில் பறப்பதைக் நீங்கள் பார்க்காமல் இருந்த்து அல்லாவின் கருணைதான் போலும்.

 54. ஐயா, இசுலாமிய வலைத்தளத்தினர்களே. உங்கள் தளங்களில் மறுமொழிகளை உடனுக்குடன் வெளியிடும் வசதியினை தைரியம் இரந்தால் செய்யுங்கள் . வலைத்தளத்தில் வரும் பின்னூட்டங்களுக்கே மட்டறுத்தலில் வெட்டிவிடும் நீங்கள் நேரடி விவாதத்திற்கு வா என்று கூச்சல் போடாதீர்கள். முதலில் உங்கள் தளங்களில் பின்னுட்டஙுகளை நேர்மையாக வெளியிட்டு விவாதியுங்கள்.

 55. கம்யூனிஸத்திற்கு இஸ்லாமியர்களை கண்டால் பிடிக்காதோ என்னவோ.சைனாவில் உய்குர் முஸ்லிம்கள் எத்தைனை பேரை கொன்றொழித்திருக்கிறது என்பதை இநத சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ள தவகல்களை பாருங்கள்.

  —————————————————————-
  ஆஃப்கானிஸ்தானில் எத்தனைபேரை கொன்றிருக்கின்றது என்பதை இந்த சுட்டியை பாருங்கள்.
  http://thamizmani.blogspot.com/2008/01/blog-post_24.html
  இப்ப குரானில் தவறு என்ற பெயரில் கட்டுரைகள் எழுதுவதின் நோக்கம் என்னவாக இருக்கும்?
  எப்ப எப்ப என்னென்ன யுத்திகளை கையாளுவதில் கம்யூனிஸ்ட்டுகள் புத்திசாலிகள்தான்(!) இன்னும் எத்தனை உயிர்கள் கம்யூனிஸ்டுகளால் போக தயாராகி கொண்டிருக்கிறதோ தெரியவில்லை.
  கம்யூனிஸத்தின் கொடி சிகப்பு நிற(இரத்த)மாகவும் ஆயுதமும் இருப்பது எதனால் என்பது புரிகிறதா? ஜாக்கிரதையா இருந்துகொள்ளுங்கள் மக்களே.

 56. i studied this articles and accepted Islam , thanks for this site , you will never achive your aim through this site , Allah is Great ,

 57. உங்கள் கருத்துக்கு பதிலாக onlinepj.com இல் வெளியானது. செங்கோடியே! உங்கள் கொள்கையில் உங்களுக்கு உறுதி இருந்தால் இதற்க்கு பதில் அளிக்கவும்.//////ஏற்கனவே ஒப்பந்தம் செய்து விட்டு அழைப்பது சரியா என்ற அவரது கேள்வி நியாயமானது. ஆனால் எழுத்து வடிவிலான விவாதம் மட்டுமே செய்வேன் என்பது கோழைத்தனமானது. நேரடி விவாதத்தில் தான் உடனுக்குடன் கேள்வி கேட்க முடியும். ஒருவர் சொல்வது தவறா என்பதை உடனே கண்டு பிடிக்க முடியும். எனவே செங்கொடி என்பவரோ அவரைச் சேர்ந்தவர்களோ தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்தால் இதற்குப் பயப்பட வேண்டியதில்ல. அவர்களே மூட நம்பிக்கையின் ஒட்டு மொத்த வடிவமாக இருப்பதால் நேருக்கு நேராக சந்திக்க பயப்படுகிறார்கள். அவர்களுடன் புதிதாக ஒப்பந்தம் செய்து விவாதம் செய்ய நாம் தயார். அடுத்து அவர் விதித்திருக்கும் நிபந்தனை கூட அறியாமையாக உள்ளது. இஸ்லாம் மட்டுமே சரியானது என்ற நிலையை மாற்றிக் கொண்டால் தான் விவாதிப்பேன் என்பது அந்தக் கேலிக் கூத்தான நிபந்தனை. இஸ்லாம் மட்டுமே சரியானது என்று தக்க ஆதாரத்துடன் நாம் நம்புவதால் தான் விவாதத்துக்கே அழைக்கிறோம். பரிசீலனைக்கு உரியது என்ற கருத்து இருந்தால் அதில் விவாதத்துக்கு தேவையே இல்லையே. தனது விவாத்தின் மூலம் அதை அவர் நிரூபிக்க வேண்டுமே தவிர விவாதத்துக்கு முன்பே தோற்று விட்டதாக எழுதிக் கேட்பது மடத்தனமானது இப்படி கூறுவதில் இருந்து இவர்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பது உறுதியாகிறது. இதற்கு எதிர்க் கருத்தாக இஸ்லாம் பரிசீலனைக்கு உரியது அல்ல என்று செங்கொடி அறிவித்தால் தான் விவாதிப்பேன் என்று நான் சொன்னால் அதற்கு அவரது பதில் என்ன? வேண்டுமானால் இஸ்லாம் பரிசீலனைக்கு உரியதா? இவர்களின் கொள்கை பரிசீலனைக்கு உரியதா என்ற தலைப்பில் முதலில் விவாதிக்கலாம். இதற்கு அவர் சம்மதிக்கிறாரா என்று கேட்டு எழுதுங்கள். பகுத்தறிவு என்ற போர்வையில் இவர்கள் செய்யும் மடமையைத் தோலுரிக்க நாம் தாயார்.//////

 58. அல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்

  …ஆலிப் அலி…

  டாக்டர் கீத் மூர் (Dr.Keith More) உலகப் பிரசித்திபெற்ற ஒரு முளையவியற்துறைப் பேராசிரியர். இவர் கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தில் உடற்கூற்று மற்றும் முளையவியற்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஒருமுறை அரபு மாணவர்கள் சிலர் இவரிடம் முளையவியல் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களைத் திரட்டி அவற்றை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து அவரிடம் கொடுத்துவிட்டு அவை பற்றிய தெளிவை ஆய்வுமூலம் விளக்குமாறு அவரிடம் வேண்டிக்கொண்டனர்.

  மருத்துவ விஞ்ஞானம் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக மார்தட்டிக்கொண்டாலும் மனித உடலில் விடைகாண முடியாத, கண்டறியப்படாத அபூர்வ அம்சங்கள் பல இருக்கின்றன என்பதை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர்.

  அந்தவகையில் அன்றைய மருத்துவ விஞ்ஞானம் கண்டறியாத கருவியல் தொடர்பான உண்மைகளைக் கூறும் முக்கியமானதொரு அல்குர்ஆனிய வசனம் Dr.கீத்மூரது கண்களில் பட்டது. ஆழமாகப் படித்தார். “படைப்பினங்கைளப் படைத்த உமதிரட்சகனின் பெயரைக்கொண்டு ஓதுவிராக! அவன் எத்தகையவனென்றால் அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து மனிதனைப் படைத்தான்.”

  Dr.கீத்மூருக்கு இவ்வசனம் பெரும் வியப்பையூட்டியது. “அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும்” என்ற இவ்விடயத்தை ஆய்வுசெய்ய முடிவுசெய்த அவர் ஆய்வுகூடத்தை அடைந்து அதி சக்திவாய்ந்த நுணுக்குக்காட்டி மூலம் ஒரு கருவின் ஆரம்பப்படிநிலை வளர்ச்சியை ஆய்வுசெய்யளானார். அக்கருவின் படத்தை ஒரு அட்டைப் பூச்சியின் படத்துடன் ஒப்பு நோக்கினார். என்ன அற்புதம். கருவின் ஆரம்பத்தோற்றமும் அதன் செயற்பாடுகளும் அட்டைப்பூச்சியின் தோற்றமும் அதன் தொழிற்பாடுகளும் ஒரேவிதமாக இருந்தன. ஆரம்ப நிலைக்கரு அட்டைப் பூச்சிபோன்றதென இதற்குமுன் Dr.கீத்மூர் அறிந்திருக்கவில்லை. ஆதனை அல்குர்ஆனிய வசனம் அச்சொட்டாகக் கூறியதைப் பார்த்து வியந்தார். இது இத்துறையில் அவரை மேலும் ஆயுவுகள் செய்யத் தூண்டியது.

  அதனைத் தொடர்ந்து “உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களில் வைத்து அவனே உங்களைப் படைத்தான்.” என்ற வசனத்தை ஆய்வுக்குட்படுத்தினார். எவ்வித மருத்துவத் தொழிநுட்பமோ நவீன கருவிகளோ அற்ற 1400 ஆண்டுகளுக்கு முன்பு கருவரையின் படிமுறைச் செயற்பாடுகளைக் கூறியிருக்கும் இவ்வற்புத வசனத்தைக் கண்டு அவர் ஆச்சரியத்திலாழ்ந்தார். அவரது நீண்ட ஆய்வுக்குப்பின் அம்மூன்று இருள்களின் விளக்கம் என்ன என்பதுபற்றி இவ்வாறு விளக்கிக்காட்டினார்.

  1) தாயின் அடிவயிறு (Abdominal wall)

  2) கருப்பையின் சுவர் (Uterine wall)

  3) குழந்தையைச் சுற்றியிருக்கும் சவ்வுப்படலம்
  (Amniotic Membrane)

  இதன்பின்பும் அவர் பல அல்குர்ஆனிய வசனங்களை ஆய்வுசெய்து அற்புதத் தகவல்களை மருத்துவ உலகுக்கு வழங்கினார். இவ்வாய்வுகளில் அவர் ஈடுபட முன்பு “The Developing Human – மனித வளர்ச்சி” என்ற ஒரு நூலை எழுதியிருந்தார். எனினும் அல்குர்ஆனின் முளையவியல் பற்றிய இவ்வசனங்களை ஆய்வுசெய்து பெற்றுக்கொண்ட உறுதியான முடிவுகளைவைத்து அந்த நூலை மீள்பரிசீலனை செய்து 1982ம் ஆண்டு மறுபதிப்பாக வெளியிட்டார். ஒரு தனிநபரால் வெளியிடப்பட்ட சிறந்த மருத்துவ நூல் என்றவகையில் அதற்கு உயர் விருதும் வழங்கப்பட்டது. அந்நூல் பல்வேறு மொழிகளுக்கும் மாற்றப்பட்டு முளையவியல் கற்கையில் முக்கிய பாடநூலாக அங்கீகரிக்கப்பட்டது.

  ஆய்வுகள் முடிந்து நூலாக வெளிவரமுன்பு 1981ம் ஆண்டு சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் நடைபெற்ற ஏழாவது மருத்துவ மாநாட்டில் Dr.கீத்மூர் கலந்து உரைநிகழ்த்துகையில் பகிரங்கமாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  “It has been a great pleasure for me to help clarify statements in the Qur’an about human development. It’s clear to me that these statements must have come to Muhammad from god because almost all of this knowledge was not discovered until many centauries. Late this proves to me that Muhammad must have been a messenger of the god.”

  (Dr. Keith more)

  “அல்குர்ஆனில் உள்ள மனித கருவளர்ச்சி பற்றிய தகவல்களை ஆய்வுசெய்து அதனை விள்கிக்கூற என்னால் உதவ முடிந்ததையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள இந்தத் தகவல்கள் யாவும் இறைவனி (அல்லாஹ்வி)டமிருந்துதான் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு வந்திருக்க முடியும் என்று எனக்குத் தெளிவாகியுள்ளது. ஏனென்றால் கருவியல்பற்றிய அறிவார்ந்த ஆய்வு முடிவுகளில் பெரும்பாலனவை பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே கண்டுபிடிக்கப்பட்டன. அந்த ஆராய்ச்சியே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இறைவனி (அல்லாஹ்வி)ன் தூதர் என்பதை நிரூபித்துவிட்டுள்ளது.” என்றார்.

  நிச்சயமாக அல்குர்ஆன் தெய்வீகத் தன்மைபொறுந்திய வேத வெளிப்பாடு என்பதை என்றும் உணர்த்தி நிற்கும்.

  Al Quran -[40:39] “O my people! This life of the present is nothing but (temporary) convenience: It is the Hereafter that is the Home that will last
  பீர் முஹம்மது,தம்மாம்

 59. முட்டால் செங்கொடி, என் சகோதரர்கள் எழுதுவதை முழுசா படிடா நாயே! உங்களைப்போன்றவர்களுக்கு ஒரு வரியில் சொன்னால் புரியாது என்பதால் தான் என் நன்பர்கள் அதிகம் அதிகம் எழுதுகிறார்கள், பேஸ்டும் செய்கிறார்கள். உங்களைப்போன்ற முட்டாள் களின் தளத்திலிருந்து எடுத்தா நாங்கள் எழுதுகிறோம். எங்கள் சகோதர தளத்திலிருந்து எடுக்கிறோம். உங்களுக்கு ஏன் வலிக்கிறது முட்டாள்களா? சிந்திக்கும் திறன் இருந்திருந்தால் எப்போதோ இஸ்லாத்தை ஏற்றுகொண்டிருப்பீர்கள். அது தான் இல்லையே உங்களிடம்.

  எனதன்பு முஸ்லீம் சகோதரர்களே! இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக. உங்களது தளங்கள் இருந்தால் எனது ஈமெயிலுக்கு தரவும். நன்றி.

  tmlmuslim@gmail.com

 60. நான் ஒரு முஸ்லிம். மதவிசுவாசிகளான முஸ்லிம்கள் கருத்துக்களுக்கு பதிலளிப்பதை விட்டு என்ன பண்ணுகிறார்கள் என்று பாh;க்கிறீர்கள்தானே! இவனுகளோடு தாக்குப் பிடிப்பது கஸ்டமாக இருக்கின்றது. தயவூ செய்து உங்கள் பதிவூகளைத் தொடா;ந்து செய்யூங்கள். அறிவியல் முஸ்லிம்களுக்கும் தேவை! முஸ்லிம்களுக்கு அறிவியல் விளங்கிவிடும் என்ற பயத்தில் மதவியாபாரிகளான இவனுக அறிவியலை லுஸ்தனமா வழங்கிக் கொண்டிருக்கின்றாh;கள்.
  எனக்கு இப்னு பசீh; சொன்ன ஐடியாவில் ஒன்னு பிடிச்சிருக்கு அது “ உதுமான் விட்டுவிட்டாh; என்பது தான்”
  நீங்கள் பிழைபிடிப்பது குர்ஆனிலல்ல உதுமானின் புத்தகத்தில்
  விமானம் கண்டபிடிப்புக்குக் காரணமாக இரும்பு பறக்குமென்று சொல்லியதாகச் சொல்லியே காலத்தைப் போக்கிறாங்கய்யா எங்க ஆளுக. யூத்தம் வந்தா எங்கட விமானங்கள் மட்டும் ஏன் பறக்குதில்லை என்று யோசிக்க வைங்கய்யா? நன்மை கிடைக்கும்.

 61. tharumam vellum. enga? jalra pasangalai ellam kaanavillai. sinthikka sollum mathathai sinthikkamal kurai koorum half boiled methavikal ellam engappaaa?

 62. மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்.

  சூரியனை, சந்திரனை நெருப்பை, நீரை, காற்றை, கல்லை, மண்ணை எந்த மனிதனும் கண்டுப்பிடிக்கவில்லை.

  அவற்றின் பெயர்களைத்தான் மனிதன் தெரிந்து கொண்டான்.இவற்றிற்கு விளக்கம் தேவை இல்லை. காரண காரியங்கள் தேவையில்லை. மனிதன் என்றால் இவைகளை அறிந்தே ஆகவேண்டும். இவற்றின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.ஆனால், கடவுள் அப்படி அல்ல;
  ஒருவன் சொல்லி அதுவும் சொல்லுவது மாத்திரமல்ல, நம்பும்படி செய்து, நம்பும்படி செய்வது மாத்திரமல்ல, நம்பும்படி கட்டாயப்படுத்தி மனித மூளைக்குள் புகுத்தியாக வேண்டும்.இந்தக் கதி சர்வ சக்தியுள்ள “கடவுளுக்கு” ஏற்பட்டது பரிதாபம்! மகா பரிதாபம்!கடவுள் கதை ஒரு முட்டாளுக்குத் தோன்றிய தோற்றம். இது உலக அறிவையே பாழாக்கிவிட்டது.

  நான் ஒரு நாத்திகன்

 63. உள்ளத்தைப் பங்கிட்டு உண்பது,” “உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது” என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு, வேலையோ, அவசியமோ இருக்காது.முன்ஜென்மம் – பின் ஜென்மம், கருமம், விதி, நரகம், சொர்க்கம், வைகுண்டம், கைலாயம் இப்படி இன்னும் பல பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றினது போல் உளறல் மேல் உளறல்கள்.

  மனிதனுக்குப் பிறகு முதல் சாவுவரை எதத்னையோ துன்பமும், தொல்லையும், இருக்க இந்தக் கடவுள் கருமம் மோட்ச – நரகத் தொல்லைகள் ஒருபுறம் மனிதனைச் சித்திரவதை செய்கிறது

 64. குர்ஆன் காட்டும் வழி என்பது மனிதர்களை அச்சுறுத்தும் வழியே! தன் வழிக்கு வராதவர்களை, வேறு வழியைப் பின்பற்றுபவர்களை மிரட்டிக் கொண்டே இருக்கிறது. தன் வழியில் இருப்பவர்களையும் சாகும் வரை மிரட்டிப் பணிய வைத்துக் கொண்டே இருக்கிறது. கடவுள் சர்வசக்தி படைத்த எஜமானாகவும் மனிதன் தினம் தினம் பயத்தினால் மடிந்து கொண்டே இருக்க வேண்டியவனாகவும் இசுலாத்தின் மதக் கொள்கையும் நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.மதவாதிகள் பதில் சொல்வார்களா? குரான் குறிப்பிடும் ஜின்,மல‌க்கு,வானவர் மனிதன் களிமன் படைப்பு இந்த கற்பனைகலுக்கு,குரான் கூறுவது அறிவியலாகுமா?
  http://naannaathigan.blogspot.com-

 65. 1.பரிணாமம் என்பதை இசுலாமியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக ஓட்டகச் சிவிங்கியினுடைய கழுத்து நீளமாக இருப்பது பரிணாம வளர்சியின் மாற்றத்தால் அல்ல. அது கழுத்து நீளமாகவே படைக்கப்பட்டது. அதனால் அதன் குட்டிகளும் கழுத்து நீளமானதாக பிறக்கின்றன என்பதே இசுலாமியக் கோட்பாடு.
  ஆனால் ஆதம் 60 முழம் உயரத்தில் படைக்கப்பட்டதாகவும், உலகம் அழித்த பிறகு மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் படும்போது எல்லோரும் ஒரே அளவுடையவர்களாக 60 முழம் உயர மனிதர்களாக இருப்பார்கள் என்று முகம்மது நபி கூறியுள்ளார்கள்.

  இதற்கான நபிமொழி. புகாரி 3326, 3327

  அப்படியானால் ஓட்டகச் சிவிங்கியினுடைய நீளமான கழுத்து போல் ஆதமுடைய மக்களான நீங்கள் 60 முழமாக இல்லாமல் 6 ஆடியாக பிறப்பதன் காரணம் ஏன்ன?

  1.கருவில் குழந்தையாக உருவமைத்த பிறகே அக்குழந்தை ஆணா? பெண்ணா? என்று தீர்மானித்து, அதற்கான சொத்து சுகம் எவ்வளவு? நன்மை செய்தவனாக இறந்துபோவானா? தீமை செய்தவனாக இறந்துபோவானா? என்று தலைவிதிகளை எல்லாம் லவ்ஹூல் மஹ்ஃபூல் பலகையில் எழுதிவிட்ட பிறகே அக்குழந்தைக்கு உயிர் கொடுக்கப்படுவதாக குர்ஆன் கூறுகிறது.
  இதற்குச் சான்றான குர்ஆன் வசனம் 32;9 மற்றும் நபிமொழி புகாரி; 3208

  அப்படியானால் விந்தணுவுக்கும் அண்ட அணுவுக்கும் உயிர் இருக்கிறதா? இல்லையா?

  1.“குடிபானங்களில் ஈ விழுந்துவிட்டால் அதனை நன்றாக உள்ளே முழுகச் செய்து பிறகு குடியுங்கள். ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் விஷமும், மறு இறக்கையில் இதற்கான முறிவும் உள்ளது” என்று முகம்மது நபி கூறியுள்ளார்கள்.
  இதற்கானச் சான்று; நபிமொழி புகாரி 3320

  இதுபற்றிய தங்களின் கருத்து என்ன?

 66. 1.நபிமுகமது மிகராஜ் என்னும் விண்ணுலகப் பயணம் செல்வதற்கு முன்பு மார்பு பிளக்கப்பட்டு உள்உறுப்புகள் சுத்தப்படுத்தப்பட்ட பின்னரே புராக் என்னும் கோவேறு கழுதையைவிட பெரியதுமான வெள்ளைநிற மின்னல்வேக மிருகவாகனத்தில் இவ்விண்ணுலகப் பயணம் நடைபெற்றுள்ளதாக ஹதீஸ் குறிப்புகள் தெரிவிக்கின்றன. .2.

  இறந்தோரை எப்படி உயிர்ப்பிக்கிறாய் எனக் கேட்க நான்கு பறவைகளை துண்டுதுண்டாய் வெட்டி அவற்றை நான்கு மலையுச்சிகளில் வைத்துவிட்டு மீண்டும் அப்பறவைகளை அழைக்குமாறு சொன்னான். அவை உயிர்பெற்று வந்தன
  3.எந்த ஒரு மனிதருமே தீண்டாமல், அல்லாவின் ஆகுக என்ற சொல்லால் மட்டுமே அன்னை மர்யத்திற்கு கர்ப்பம் ஏற்பட்டு ஈஸாநபியை ஈன்றெடுக்கும் சம்பவம் குர்ஆனில் இடம் பெறுகிறது.4.மேலும் இறந்த ஒரு உடலை அடக்கம் செய்யும்போது கறுப்புநிற, நீலநிறக் கண்களுடைய இரு வானவர்கள் அவரி டம் வருவார்கள். ஒருவர் முன்கர். இன்னொருவர் நகீர். 5.மூசா நபி அந்த கைத்தடியை நிலத்தில் எறிந்தபோது மலம் பாம்பாக மாறியது. மிகப்பெரிய பாம்பாக உருவெடுத்து மந்திரவாதிகளின் பாம்புகளை விழுங்கியது. பாலைவனத்தில் தாகம் தணிக்க பாறையில் ஓங்கி அடித்தபோது அதிலிருந்து பனிரெண்டு நீரூற்றுகள் கிளம்பின. பிர்அவுன் கூட்டம் துரத்தியபோது அஸாவை செங்கடல்மீது வைத்த போது கடல் பிளந்து பாதை உருவாகியது. மூசாநபி கூட்டத்தை உயிர் பிழைக்க வைத்தது. 6.கடலில் தூக்கி வீசப்பட்டபோது மீன்விழுங்கி மீனின் வயிற்றில் யூணஸ் நபி வாழ நேர்ந்தது. நபிசுலைமான் போர் புரிய திரட்டிய ராணுவத்தில் மனிதர்கள், ஜின்கள், பட்சிகள் இருந்துள்ளனர். எறும்புடன் நபி சுலைமான் பேசுகிறார். ஸபா நாட்டின் மக்களை பல்கீஸ் என்ற இளவரசி ஆட்சி புரியும் செய்தியைக் கொண்டுவந்து சேர்ப்பதற்கு முன்பாக வெகு தொலைவிலுள்ள அவரது சிம்மாசனத்தை ஜின்களில் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டு வந்துவிடுகிறார்.

 67. அணுகியிருந்தால் குரானில் சொல்லப்படும் ஜின்களை எப்படி மெய்ப்பிப்பது எனும் பார்வை அவர்களுக்கு தோன்றியிருக்கும்===========
  உலகில் காண முடியாத எத்தனையோ விஷயங்களை நாம் நம்புகிறோம், நிரூபிக்க முடியாத பல விஷயங்கள் பொய்யல்ல, அந்த அளவுக்கு மனிதன் வளரவில்லை, ஆக சொர்க்கம் நரகம் சைத்தான் ஜின் போன்ற விஷயங்களை நிரூபிக்க முடியாது, அதனால் இல்லை என்று அர்த்தம் இல்லை, அதை நம்புவதால் மனிதன் மேன்மை அடைகிறான் தவிர, நாட்டம் ஒன்றும் இல்லை

 68. // மதங்களுமே தம்மை பின்பற்றும் மக்களை மூளை இல்லாத பிறப்பாகவே பார்க்கின்றன//

  குர்ஆன் அடிக்கடி சொல்லும் வார்த்தை “சிந்திப்பீராக., “சிந்தியுங்கள் ” “ஆராயுங்கள் ” என்று சிந்திக்கச் சொல்லி தூண்டுகின்றது..
  நீங்கள் சொல்வது போல் மக்களை மூளையற்ற பிறப்பாகப் பார்த்தால் சிந்திக்கவா சொல்லும்..

  உங்கள் பதிவு நாத்திகத்தை நிலைநிறுத்துவதற்காக நடுநிலையில் ஆராயாத வன்மப் பதிவு..

 69. சிந்தியுங்கள் எனும் சொல்லை பயன்படுத்தி விட்டாலே அது சிந்திக்கச் செய்து விட்டதாக பொருள் கொள்ள முடியுமா? திரு சலீம் அவர்களே! குரான் கூறும் சிந்தியுங்கள் எனும் சொல்லின் பொருள் குரானுக்கு சாதகமானவற்றை சிந்தியுங்கள் என்பதே. குரானுக்கு எதிராக நீங்கள் சிந்தித்தால் அந்தக் கணமே இஸ்லாத்திலிருந்து நீங்கள் வெளியேறி விடுவீர்கள். குரானின் ஒரு வசனந்த்தை எடுத்துக் கொண்டு இது சரியா தவறா என்று சிந்தித்துப் பாருங்களேன். அப்படி நீங்கள் சிந்திக்கும் பட்சத்தில் உங்களுடைய பெயர் என்னவாக இருக்கும்? சிந்தியுங்கள்.

 70. உஙகள் கருத்துக்களை படித்தேன் மிக்க மகிழ்ச்சி இஸ்லாம் என்ற கட்டிடத்தின் மேல் உங்கள் பார்வை பட்டுள்ளது என்று அறிந்து கொண்டேன் இந்த கட்டிடத்தை எழுப்ப இறைவன் , உலகில் மனிதனைப் படைத்த நாள் முதல் ஆரம்பித்து சென்ற 1400 வருடங்களுக்கு முன் தன் பணியை முடித்தார் இந்த முழு கட்டிடத்தை இஸ்லாம் என்று பெயரும் அவனே சூட்டினான் இந்த கட்டிடத்தின் ஆரம்ப நிலையில் இருந்த மக்கள் தான் இஷ்டத்துக்கு பெயர் சூட்டி அழைத்து கொண்டனர் அதற்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லை அனால் கட்டிடத்தை எழுப்பிய அவன் ஒருவனே என்பது மட்டும் உண்மை. இனி நீங்கள் எல்லா வேதங்கள் புராணங்கள் படித்து விட்டு
  குரான் படியுங்கள் புரியும் நன்றி.

 71. ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்றால் ஆற்றலின் ஆரம்பம் எங்கே என்று சொல்ல முடியுமா?

 72. நண்பர் நூர் முகம்மது,

  உங்கள் கேள்விக்கு அறிவியலின் அடிப்படையில் பதில் கூற வேண்டும் என்றால்,ஒரே சொல்லில் தெரியாது என்று கூறி விடலாம். காலமும் வெளியும் பெருவெடிப்பிலிருந்து தோன்றின என்பது தான் அறிவியல் தேற்றம். இதிலிருந்து தான் பருப் பொருட்கள் உருக் கொள்கின்றன. அதிலிருந்து தான் ஆற்றலும் வருகிறது. இப்பேரண்டத்தில் ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது, மாற்றத்தான் முடியும். ஆகவே முதன் முதலில் ஆற்றல் எப்படி தோன்றி இருக்கும் எனும் கேள்விக்கு, அறிவியல் தெரியாது என்று தான் பதில் கூறுகிறது.

  ஆனால், இந்தக் கேள்வியை நீங்கள் எதன் பொருட்டு கேட்டுள்ளீர்கள்? இதை நீங்கள் வெளிப்படையாக கூறவில்லை. நான் இதை எப்படி புரிந்து கொள்கிறேன் என்றால் ….. எனவே, அல்லா தான் படைத்தான் என நீங்கள் பதிலளிக்க விரும்புகிறீர்கள்? அதன் தொடர்ச்சியாக அல்லா எப்படி தோன்றினான் என்று கேள்வி எழுப்பினால் உங்களால் என்ன பதில் கூற முடியும்? அல்லாவை அறிவியல் கொண்டு அளக்க முடியாது என்பதை பல்வேறு வாக்கியங்களில் பல்வேறு விதமாக கூறுவீர்கள். கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

  நீங்கள் அறிவியலை ஏற்பதாக இருந்தால் அனைத்தையும் அறிவியல் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அறிவியலை மறுப்பதாக இருந்தால் அறிவியல் கண்ணோட்டத்தை நீங்கள் பயன்படுத்தக் கூடாது. ஆனால் அறிவியல் கண்ணோட்டம் இல்லாமல் மனிதனால் வாழ முடியாது. ஏனென்றால் அது ஆய்வுகளினால் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகளைக் கொண்டுள்ளது. நீங்கள் ஒன்று செய்யலாம். உங்கள் வாழ்வில் நீங்கள் எதையெல்லாம் அறிவியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்? எதையெல்லாம் அறிவியல் கண்ணோட்டத்துக்கு அப்பாற்பட்டு பார்க்கிறீர்கள் என்று அட்டவணை இட முடியுமா? அப்படி அட்டவணை இட்டால் அல்லா தொடர்பானவைகளை தவிர ஏனைய அனைத்துக்கும் நீங்கள் அறிவியல் கண்ணோட்டத்தையே பின்பற்றுகிறீர்கள் என்பது உங்களுக்கு புரியும். என்றால் அடுத்து உங்களுக்கு ஒரு கேள்வி, ஏன் நீங்கள் அல்லாவை மட்டும் அறிவியலுக்கு அப்பாற்பட்டு பார்க்கிறீர்கள்?

  மெய்யாகவே, விவாத நேர்மையுடன் இந்தக் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க முன் வந்தால் அல்லா குறித்து அல்லது கடவுள் குறித்து நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் மூட நம்பிக்கையே என்பதை உங்களுக்கு புரிய வைக்கிறேன்.

  பதிலளிப்பீர்களா?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s