இந்தியா மதச் சார்பற்ற நாடா?

செய்தி: 72ஆவது குடியரசு தினவிழாவையொட்டி டெல்லி ராஜபாதையில் நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. ராணுவத்தின் ஏவுகணை பிரிவு, இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பிரமோஸ் ஏவுகணையின் மாதிரி வடிவத்துடன் பங்கேற்றது. அப்போது முதன்முறையாக சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் ஒலிக்கப்பட்டது. முன்னதாக, கடந்த 15ஆம் தேதி ராணுவ தினம் கடைப்பிடிக்கப்பட்டபோது, அதில் பங்கேற்ற ஏவுகணை பிரிவு வீரர்கள் துர்கா மாதாகி ஜெய், பாரத் மாதாகி ஜெய் ஆகிய … இந்தியா மதச் சார்பற்ற நாடா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

சாத்திர, சம்பிரதாயங்கள் யாருக்காக?

தீண்டாமைக் கொடூரங்கள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பொதுப்புத்தியோ, “இப்பெல்லாம் யாரு சார் சாதி பாக்குறா?” என்றிருக்கிறது. அண்மையில் மனு சுமிரிதி குறித்து சச்சரவு எழுந்த போது அதே பொதுப்புத்தி, “மனு சுமிரிதி பழம் பஞ்சாங்கம் சார். யாரும் இப்ப அதெல்லாம் படிக்கிறதும் இல்லை, அதன்படி நடக்குறதும் இல்லை” என்று குழைகிறது. ஆனால் மக்களின் வாழ்வில் அவை எப்படி நுழைத்து சிந்தையை கைப்பற்றுகின்றன என விளக்குகிறார், பேரா. கருணானந்தன்.

CAA: முள்வேலி தடுப்பு கொட்டடிகள்

சட்டவிரோத குடியேறியவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக பெங்களூருக்கு வெளியே 40 கி.மீ தூரத்தில் கட்டப்பட்ட கர்நாடக அரசாங்கத்தின் தடுப்பு முகாம் இப்போது திறக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் விசா காலாவதியான ஒரு சூடான் நாட்டவர் இங்கு தடுத்து வைக்கப்பட்ட முதல் நபராகிவிட்டார். பெங்களூரு கிராமப்புற மாவட்டத்தில் நெலமங்கலாவுக்கு அருகிலுள்ள சோண்டேகோப்பா கிராமத்தில் அமைந்துள்ளது இந்த தடுப்பு முகாம். இது இந்த மாநிலத்தில் திறக்கப்பட்ட முதல் தடுப்பு முகாமாகும். இதன் கட்டுமானம் முடிவடைந்து ஒரு வருடம் கழித்து, இந்த அக்டோபர் … CAA: முள்வேலி தடுப்பு கொட்டடிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பீகார் தேர்தலில் வென்றது யார்?

நடந்து முடிந்த பீகார் மாநில தேர்தல் முடிவுகள் பல முரண்பாடுகளை உள்ளடக்கி வந்திருக்கிறது. தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் மீண்டிருக்கிறது. கடந்த முறை முதல்வராக இருந்த, இந்த முறையும் முதல்வராகப் போகின்ற நிதீஷ் குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கடும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியான பாஜக ஐக்கிய ஜனதா தளத்தை விட மிக அதிகமான இடத்தை பெற்றிருக்கிறது. ஆனாலும் நிதீஷ் தான் முதல்வர் என அறிவித்திருக்கிறது. இந்த முரண்பாடுகளை இணைத்துப் பார்த்தால் … பீகார் தேர்தலில் வென்றது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாம் என்றாலென்ன: மாற்றம் ஒன்றே மாறாதது

செய்தி: இஸ்லாமிய நாடுகளில் மதச்சட்டங்கள் கடுமையாக இருக்கும் என்பது உலகம் அறிந்ததே. காலம் மாறினாலும், நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொண்டாலும் மதச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர எந்தவொரு இஸ்லாமிய நாடும் தயக்கம் காட்டும். தற்போது ஐக்கிய அரசு அமீரகம் நவீன காலத்திற்கு ஏற்ப என்று சொல்லும் விதத்தில் இல்லையென்றாலும் மிகவும் புராதனமான இஸ்லாமிய சட்டங்களில் இருந்து சற்று விலக முடிவு செய்திருக்கிறது. தனிநபர் சுதந்திரம் தொடர்பான சட்டங்களில் நவம்பர் ஏழாம் தேதியன்று ஐக்கிய அரபு அமீரகம் … இஸ்லாம் என்றாலென்ன: மாற்றம் ஒன்றே மாறாதது-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேச துரோக வழக்கு போடவா?

செய்தி: கடந்த திங்கள் அன்று தி மீடியா ஃபவுண்டேசன், பிஜி வர்கீஸ் நினைவு கருத்தரங்கு 2020 என்ற காணொலி நிகழ்வினை ஒருங்கிணைத்திருந்தது. உச்சநீதி மன்றத்தின் முன்னள் தலைமை நீதிபதி மதன் பி.லோக்கர் கருத்தரங்கில் கலந்துகொண்டு, ’பேச்சு மற்றும் கருத்து உரிமை, எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை உள்ளிட்ட நமது அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது’ என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளார். ”சட்டத்தை முழுவதுவாக துஷ்பிரயோகம் செய்யாவிட்டலும் கூட, சட்டத்தை திரித்துக் கையாள்வதால் நம்முடைய பேச்சு உரிமை படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது. வேறு … தேச துரோக வழக்கு போடவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை தரமறுப்பது ஏன்?

செய்தி: சரக்குகள், சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மன்றத்தின் 42-வது கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக ஏற்படும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு கடன் பெற்றுமாநிலங்களுக்கு வழங்குவது சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளது. கடந்த வாரம் தமிழகத்துக்கு இழப்பீடாக ரூ.1,483 கோடி வழங்கியதற்கு நன்றி. தமிழகத்துக்கு கடந்த ஜூலை வரையிலான இழப்பீட்டுத் தொகை ரூ.10,774 கோடியே 98 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும். 2017-18 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த … ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை தரமறுப்பது ஏன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நியாயவிலைக் கடையும் திண்டாடும் மக்களும்

செய்தி: பயோ மெட்ரிக் முறை கடந்த 1-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அதனால் சில சிக்கல்களும் ஏற்பட்டுள்ளது. அதாவது சிலரின் கைரேகைப் பதிவு ஆதார் அட்டையுடன் உள்ள கைரேகையுடன் ஒத்துப் போகாமல் பொருள்கள் மறுக்கப்படுகின்றன. பயோ மெட்ரிக் முறையில் கைரேகை ஒத்துப் போகாத நபா்களுக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசியக் குறியீடு எண் (ஓ.டி.பி.) அனுப்பப்படும். அதனைப் பயன்படுத்தி உணவுப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். ஆதார் அட்டையுடன் … நியாயவிலைக் கடையும் திண்டாடும் மக்களும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனா பாதிப்பு: ஏன் இந்த கொல வெறி?

செய்தி: கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 74,383 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 70,53,807 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 918 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,08,334 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60,77,977 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 8,67,496 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். … கொரோனா பாதிப்பு: ஏன் இந்த கொல வெறி?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பசுக் குண்டர்களின் அடுத்த கட்டம்

செய்தி: மத்திய அரசு இந்தியப் பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்கான ஒரு குழுவினை அமைத்துள்ளது. இக்குழு தற்காலத்திலிருந்து 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான இந்திய கலாச்சாரம் குறித்தும் அதன் தொடக்கம் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். இந்தக் குழுவில் பண்டைய கலாச்சாரம் பெருமை படைத்துள்ள தமிழகத்திலிருந்தோ, தென்னிந்தியாவிலிருந்தோ, வடகிழக்கு மாநிலங்களிலிருந்தோ … பசுக் குண்டர்களின் அடுத்த கட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.