தமிழகத்தில் ஆசீவகர்கள்

‘ஆசீவகம்’ தமிழ்ப் பரப்பின் சமூகவியல் ஆய்வாளர்கள் தற்போது அதிகம் உச்சரிக்கும் சொல் இதுவாகத் தான் இருக்கும். அந்த அளவுக்கு ஆசீவகம் குறித்த கவனம் கல்வியாளர்கள் இடையே பரவி வருகிறது.

கிமு ஆறாம் நூற்றாண்டு தொடங்கி, கிபி பதினான்காம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் நிலவில் இருந்தது இந்த வாழ்வியல் நெறி. அதன் கோட்பாடுகளும், தத்துவ விளக்கங்களும், அறிவியல் பார்வையும் மெய்யாகவே ஈர்க்கும் படியாக இருகின்றன. ஆனாலும், ஆசீவகம் குறித்த தரவுகள் அதிகம் கிடிக்காததும், கிடைத்தவையும் கூட ஆசீவகத்துக்கு எதிராக எழுதப்பட்டவைகளிலிருந்து ஊகித்தவையாகவும் இருப்பது வேதனைக்கு உரியது.

முனைவர் க. நெடுஞ்செழியன், ஆதி. சங்கரன் போன்றோர் ஆசீவகம் குறித்த ஆய்வுகளை நூல்களாக வெளியிட்டுள்ளனர். அதேநேரம் ஆசீவகம், இல்லுமினாட்டி, வேர்ச் சொல்லாய்வு, தமிழ் தேசியம் ஆகியவற்றை கலந்து கட்டி பாண்டியன் உள்ளிட்ட சிலர் பேசி வருகின்றனர்.

என்றாலும், ஆசீவகம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் பரவ வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அந்த வகையில் ஆசீவகம் குறித்து தமிழில் வெளிவந்த முதல் நூலான ‘தமிழகத்தில் ஆசீவகர்கள்’ எனும் நூலை பகிர்வதில் மகிழ்கிறேன். தென்இந்தியாவில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள், செப்பேடுகள், வரலாற்றுத் தடயங்கள், இலக்கியக் குறிப்புகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் முனைவர் ர. விஜயலட்சுமி இந்நூலை எழுதியிருக்கிறார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

படியுங்கள் .. புரிந்து கொள்ளுங்கள் .. பரப்புங்கள்

நூலை மின்னூலாக பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்