பேராசிரியர் க. நெடுஞ்செழியன்

பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்களின் பணி முடிவுக்கு வந்தது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராகவும், தமிழ் இலக்கியத் துறையின் தலைவராகவும் பணியாற்றி  ஓய்வுபெற்ற எழுத்தாளர் க.நெடுஞ்செழியன் இன்று முடிவெய்தியிருக்கிறார். திராவிட கழக மேடைகளில் முழங்கி வந்தவர் பேராசிரியர். திருக்குறளுக்கு வலதுசாரி முத்திரையை ஒருவர் (நாகராஜனோ, ராமசாமியோ ஏதோ ஒரு பெயர் வரும் நினைவில் இல்லை) குத்திய போது முதன் முதலில் பொங்கி எழுந்து சினத்துடன் உரையாற்றியதை கேட்ட போது சிலிர்த்துப் போனேன். பேராசிரியரின் உரைகளிலிருந்து தான் … பேராசிரியர் க. நெடுஞ்செழியன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அசோகர் இந்துவா? முஸ்லீமா?

பொன்னியின்  செல்வன் என்றொரு திரைப்படம் வந்தாலும் வந்தது. ‘இ’னா ‘ஈ’யன்னா தெரியாவிட்டாலும் கூட இராஜராஜனைப் பற்றி பேசுவோம் என்று சமூக வலைதளங்களில் எழுதிக் குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். தஞ்சை பெரிய கோவிலில் இதுவரை இல்லாத அளவில் அன்றாட நாட்களில் கூட பெருங்கூட்டம் கூடுகிறதாம். வரலாற்றை அறிந்து கொள்வது குறித்த விருப்பம் தற்காலிகமாக சற்று கூடியிருக்கிறது என்பதைத் தவிர இந்த அலப்பல்களில் எந்தப் பயனும் இல்லை. ஆனால் எதையும் தன்னுடைய மேலாதிக்கத்துக்கு ஏற்ப திரிப்பதையே நோக்கமாகக் கொண்ட அதிகாரத்தில் … அசோகர் இந்துவா? முஸ்லீமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

வரலாற்றுப் போக்கில் தென்னக சமூகம்

பிற்காலச் சோழர்கள் என்று கூறியதும் தற்போது இணையப் பரப்பில் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வரும் ராஜராஜ சோழன் பார்ப்பனர்களை ஆதரித்தானா இல்லையா எனும் விவாதம் தான் நினைவில் வருகிறது. மறுபக்கம் பேராசான் மார்க்ஸ் முன்வைத்த ஆசியபாணி சொத்துடமை வடிவம் எனும் முடிவில் மாற்றங்கள் தேவையா என்பதும் முதன்மையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் ஆசியபாணி சொத்துடமை வடிவத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும், வரலாற்று ஆய்வாளர்கள் மாற்றுக் கருத்து கொண்டிருக்கிறார்கள். பேராசான் மார்க்ஸ் கூட இறுதியில் … வரலாற்றுப் போக்கில் தென்னக சமூகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

காணாமல் போன தேசங்கள்

இந்தியா குறித்து விரிவாக பேசத் தெரிந்த பலரும் - கம்யூனிஸ்டுகளும் கூட - உலக அளவில் எத்தனை நாடுகள் குறித்து தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று கேட்டால், அது கேள்விக்குறியாகவே முடியும். உலக அறிவு பெற்றவர்களும் கூட அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்சு என சில நாடுகளின் வரலாறுகளைத் தான் தெரிந்து வைத்திருப்பார்கள். அண்மைக் காலம் வரை நாடாக இருந்து பின்னர் பெயர் மாற்றம், உடைந்து போவது உள்ளிட்ட காரணங்களால் தற்போது இல்லாமல் போயிருக்கும் நாடுகள் குறித்து பெரும்பாலானோர் … காணாமல் போன தேசங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆதீனமா? அறிவற்ற ஈனமா?

அண்மையில் நடந்த மூன்று நிகழ்வுகள் எளிதாக கடந்து செல்லப்படுகின்றன. அறிவும், தன்மதிப்பும் கொண்ட யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத, ஏற்றுக் கொள்ளக் கூடாத செய்திகள் அந்த நிகழ்வுகளில் இருக்கின்றன. 1. சிதம்பரம் நடராசர் கோவில் ஆவணங்களை, கணக்குகளை அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட தணிக்கைக் குழுவுக்கு சரிபார்ப்புக்காக கொடுக்க மறுப்பதுடன் இதை ஒன்றிய பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கடிதம் எழுதி இருக்கிறோம் என்று இறுமாப்புடன் பேசும் தீச்சிதர்கள். 2. கிட்டத்தட்ட இதே விதயங்களுக்காக கோயில்களிலிருந்து அறநிலையத் துறை விலக … ஆதீனமா? அறிவற்ற ஈனமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய தேசியத்தின் தோற்றம்

இந்தியா ஒற்றை தேசியமல்ல என்று சமூக அரசியல் ஆர்வமுள்ள பலரும் அறிந்திருக்கின்றனர். ஆனால் பார்ப்பனிய அரசியல் இந்தியாவை ஒற்றை தேசியமாக கட்டமைப்பதில் தான் அடங்கி இருக்கிறது. ஆக, இந்தியாவின் அரசியல் முரண்பாடு என்பது இந்தியா ஒற்றை தேசியமா? பல்தேசியமா? என்று தான் கூர்மைப்படுகிறது. இந்தியா பல்தேசிய நாடு தான் என்றும், அனைத்து பகுதிகளுக்கும் சம வாய்ப்பும் சம உரிமையும் கிடைப்பது உறுதி செய்யப்படும் போது தான் இந்தியா எனும் நாடு இருக்கும். இந்த புரிதலை வெகு மக்களிடம் … இந்திய தேசியத்தின் தோற்றம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியாவில் அடிமைகள்

மநு நீதி காத்த சோழர்கள் காலத்தில் சாதியும் ,வருணமும் செழித்தன என்கின்றன ஆய்வுகள். தமிழகத்தில் 17 ஆம் நூற்றாண்டில் தலித்துகளின்  பள்ளு இலக்கியம் தோன்றியுள்ளது. விவசாய வேலைகளில்  இருந்த கொத்தடிமை நிலை அதில் வெளிப்படுகிறது. சமஸ்கிருத மொழியின் பாரம்பரியத்தில் வந்த மநு (அ)தர்மமத்தின்படி  பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்குப் பிரிவில் சூத்திரர்கள் அடிமைகள் ! ஆனால், பஞ்சமர்கள் எனப்பட்டவர்கள் மனிதர்களே அல்ல. விலங்குகளிலும் கீழாக நடத்தப்பட வேண்டியவர்கள். அவர்களில் தமிழகத்தின் புதுரை வண்ணார்கள் போன்ற … இந்தியாவில் அடிமைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியாரும் அம்பேத்கரும் இன்று

ஆ. ராசாவை ஒரு அரசியல்வாதியாக மட்டுமே தெரிந்த பலர் இருக்கிறார்கள். துணிச்சலாக தன் வாதங்களை எடுத்துவைக்கக் கூடியவராக 2ஜி வழக்கிலும், அண்மையில் ஜெயலலிதா குறித்த பிரச்சனையிலும் ஊடாக சிலர் தெரிந்திருக்கிறார்கள். ஆனால் இவைகளுக்கு அப்பாற்பட்டு அவர் ஒரு சிறந்த திராவிடவியல் பேச்சாளர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இந்த சிறு நூலை படிப்பவர்கள் அதை தெரிந்து கொள்ளலாம். 2008 பிப்ரவரி 22ம் தேதியன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பெரியார் உயராய்வு மையமும், மகளிரியல் துறையும் இணைந்து … பெரியாரும் அம்பேத்கரும் இன்று-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழகத்தில் ஆசீவகர்கள்

‘ஆசீவகம்’ தமிழ்ப் பரப்பின் சமூகவியல் ஆய்வாளர்கள் தற்போது அதிகம் உச்சரிக்கும் சொல் இதுவாகத் தான் இருக்கும். அந்த அளவுக்கு ஆசீவகம் குறித்த கவனம் கல்வியாளர்கள் இடையே பரவி வருகிறது. கிமு ஆறாம் நூற்றாண்டு தொடங்கி, கிபி பதினான்காம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் நிலவில் இருந்தது இந்த வாழ்வியல் நெறி. அதன் கோட்பாடுகளும், தத்துவ விளக்கங்களும், அறிவியல் பார்வையும் மெய்யாகவே ஈர்க்கும் படியாக இருகின்றன. ஆனாலும், ஆசீவகம் குறித்த தரவுகள் அதிகம் கிடிக்காததும், கிடைத்தவையும் கூட ஆசீவகத்துக்கு எதிராக … தமிழகத்தில் ஆசீவகர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

முகலாய இந்தியாவில் நிலவுடமை உறவுகள்

இந்திய இடதுசாரிகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுள் முதன்மையானது, இந்திய சமூகம் குறித்த பருண்மையான ஆய்வுகள் செய்யப்படவில்லை என்பது. வரலாற்றியல் பொருள்முதவாத கண்ணோட்டத்தில் இந்திய சமூகம் குறித்த பருண்மையாக ஆய்வுகள் செய்யப்பட்டு அதனடிப்படையில் போர்த் தந்திரம், செயல் தந்திரம் வகுக்கும் போது மட்டுமே பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படை முன்னேறிச் செல்லும். அப்படியான ஆய்வுகளுக்கு, இந்திய சமூக வரலாற்றின் தவிர்க்க முடியாத பகுதியான முகலாயர்கள் ஆண்ட காலத்தின் நிலவுடமை உறவுகள் குறித்த புரிதலுக்கு, செய்யத் நூருல் ஹஸன் பாட்னா பல்கலைக் … முகலாய இந்தியாவில் நிலவுடமை உறவுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.