யூடியூப் சன்னல் அறிமுகம்

நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். கடந்த ஆண்டின் இறுதியில், குறிப்பாக நவம்பர் புரட்சி நாளில் சொல்லுளி என்ற பெயரில்  இணைய இதழும், யூடியூப் சன்னலும் தொடங்குவதாக திட்டமிட்டிருந்தேன். திட்டமிட்டிருந்ததற்கு சில நாட்கள் தாமதமாக சொல்லுளி இணைய மாத இதழ் கொண்டு வந்து விட்டேன். கடந்த இரண்டு மாதங்களாக வெளிவந்து போதிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால், யூடியூப் சன்னல் தொடங்குவது சில காரணங்களால் காலம் கடந்து கொண்டிருந்தது. இதோ, இன்று சொல்லுளி யூடியூப் சன்னல் தொடங்கப்பட்டு விட்டது. (இணைப்பு … யூடியூப் சன்னல் அறிமுகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

செல்லாத ரூபாய்:வீரியம் புரியாமல் அமைதி காக்கிறோம்

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் இதுவரை சந்தித்திராத பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். கருப்புப்பணத்தை, கள்ளநோட்டுகளை இந்த நடவடிக்கை ஒழிக்குமா? ஒழிக்காதா? மோடியின் நோக்கம் என்ன? பெருமுதலாளிகள் இதனால் இழந்தது பெற்றது என்ன? அறிவிப்புக்கு முன்னமே பணம் மாற்றிய தகவல்கள் என நாள்தோறும் செய்திகள் மக்களைத் தாக்கி செயலிழக்கச் செய்து கொண்டிருக்கின்றன. செய்தி ஊடகங்கள் முழுக்க முழுக்க மக்களைக் கை கழுவி விட்டு அரசின் ஊது குழலாய் அப்பட்டமாய் மாறி நிற்கின்றன. … செல்லாத ரூபாய்:வீரியம் புரியாமல் அமைதி காக்கிறோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெண்கள் என்றால் .. .. ..

மூதூர் மொகமட் ராபி செங்கொடி தளத்தை தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிந்த பெயர் தான். பலமுறை கேள்வி பதில் பகுதியில் தன்னுடைய கேள்விகளால் இந்தத் தளத்தின் ஈர்ப்புக் கவர்ச்சியை கூட்டியவர். அந்தக் கேள்விகளும், சில பின்னூட்டங்களும் அவரின் அகத் தேடல்களை, அற உணர்ச்சிகளை புறம் கொண்டு வந்தவைகள். அண்மையில் ஆணாதிக்கம் குறித்து ஒரு கட்டுரையை அனுப்பியிருந்தார். வெகு எதார்த்தமான கேள்விகள், எளிமையான விளக்கங்கள். அந்தக் கட்டுரையை உங்களுக்கும் அறியத்தருவதில் எனக்கு மகிழ்ச்சியே. இவருடைய வேறு ஆக்கங்களை வாசிக்க … பெண்கள் என்றால் .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.

மட்டக் குதிரை…!

வானத்தில் ஓட்டை விழுந்து விட்டதைப் போல் தொடர்ந்து மழை கொட்டிக் கொண்டிருந்து. மிகவும் அடர்த்தியாகவும் நெருக்கமாகவும். ஒவ்வொரு துளியும் ஒரு புளியாங்கொட்டை அளவுக்குப் பருத்திருந்தது. சாலையில் கணுக்கால் அளவுக்குத் தண்ணீர் நிரந்திருந்தது. அவன் மிகவும் சோர்ந்திருந்தான். அன்னாந்து வானத்தைப் பார்த்தான். இரவின் அடர்த்தியில் மறைந்து போயிருந்த வானத்திலிருந்து கலங்கலான நிறத்தில் மழை நீர் இறங்கிக் கொண்டிருந்தது.   “சனியன்…”  மழையைச் சபித்தான். நீண்ட நேரமாக பைக்கைத் தள்ளி வந்ததில் லேசாக முதுகு வலித்தது. தொடர்ந்து தண்ணீரில் நடந்து … மட்டக் குதிரை…!-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொதுப்பாடத்திட்டம் – சில வினாக்களும் விளக்கங்களும்

பிரச்சனை பள்ளிப் பொதுப்பாட நூல்களைப் பற்றியதுதானே, பிறகு ஏன் இதனை சமச்சீர் கல்வியுடன் இணைத்துப் பேச வேண்டும்? மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போதும், பொதுப்பாட நூல்களை அகற்றிவிட்டு பழைய பாடநூல்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதன் விளைவுகளை ஆராயும் போதும் இந்த பிரச்சனையுடன் சமச்சீர் கல்வி எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பது புரியும். முந்தைய பாடநூற்கள் நான்கு வகையானவை, நான்கு விதமான பள்ளிக் கல்வி வாரியங்களுக்கு உரியவை; அதாவது மாநில வாரியம்- மெட்ரிக் கல்வி வாரியம் – ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கல்வி … பொதுப்பாடத்திட்டம் – சில வினாக்களும் விளக்கங்களும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தியன் அன் மென் படுகொலை, அம்பலமாகும் பொய்கள்!

இருபதாண்டுகளுக்கு முன்னர் உலக மக்களை ஏமாற்றிய மேற்கத்திய பொய்ப்பிரச்சாரம் தற்போது அம்பலமாகியுள்ளது. 1989 ல், சீனாவின் தலைநகரான பெஜிங்கில் நடந்த மாணவர் போராட்டத்தை அடக்கிய போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக அறிவிக்கப் பட்டது. பெய்ஜிங்கின் மையப் பகுதியான தியன் அன் மென் சதுக்கத்தில் இரத்தக் களரி ஏற்பட்டுள்ளதாகவும், சீன இராணுவம் மூவாயிரத்திற்கும் குறையாத மாணவர்களை கொன்று குவித்ததாகவும் வெளிவந்த செய்திகள் பொய்யானவை. தியன் அன் மென்னில் படுகொலை நடக்கவில்லை என்ற உண்மையை அம்பலப் படுத்தியுள்ள, விக்கிலீக்ஸ் கேபிளின் சாராம்சம் … தியன் அன் மென் படுகொலை, அம்பலமாகும் பொய்கள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

மே நாளில் சூளுரை ஏற்போம்

அடிமைகளின் எழுச்சி! ரோமானிய கனவான்கள், பிரபுக்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. ரோமானியப் பேரரசு ஆறாயிரத்திற்கு மேற்பட்ட அடிமைகளை சிலுவைகளில் அறைந்து, உயிரோடு சித்திரைவதை செய்து, நரமாமிசத்தினை தின்று தீர்த்தாலும் நிம்மதியாக தூங்கவில்லை. நித்தம் கனவில் அடிமைகளின் உரமேறிய கைகள். எத்தனை நாளைக்குத்தான் செத்து செத்து பிழைப்பது. ஆயிரக்கணக்கான அடிமைகளின் உழைப்பில் உல்லாசமாக வாழ்ந்த சொர்ணபுரியின் கனவான்கள் அதை எளிதில் இழக்க விரும்புவார்களா? ஆனால் காலம் அதை தொடராக அனுமதித்துதான் விடுமா? ஆண்டைகள் விரும்பித்தான் ஆகவேண்டும். அடிமைகள்! இனியும் அவர்களை … மே நாளில் சூளுரை ஏற்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தோலர் எண்ணெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! !!! – அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

உங்களுக்கெல்லாம் எண்ணெய்த்தோலரைத் தெரியுமோ தெரியாதோ, அது எனக்குத்தெரியாது ஆனால் அவரைப்பற்றி பேசாமலோ, அவரைப்பார்க்காமலோ யாரும் இருக்க முடியாது, ஏன் அவர் வரலைன்னா அன்னைக்கு குழம்பு ஆகாதுன்னா பார்த்துக்குங்களேன் இந்தக்கிராமத்தில். அது என்ன எண்ணைத்தோலர்ன்னு கேக்குறீங்களா? நீங்களெல்லாம்  எண்ணை எங்க போய் வாங்குவீங்க? கடையிலதானே, அங்க போய் கோல்டு வின்னர், உஷா சன் பிளவர்ன்னு கேட்டு வாங்குவீங்க, ஆனா 100 மி.லி கேட்டா கிடைக்குமா? ஆனா எங்க எண்ணெய்த் தோலர்  எங்க வீட்டுக்கே வந்து எண்ணெய் கொடுப்பார். 100 … தோலர் எண்ணெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! !!! – அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா-ஐ படிப்பதைத் தொடரவும்.

பூவரசியை சபிப்பதற்கு முன்னால் நாம் பதில் சொல்லவேண்டிய கேள்விகள் சில இருக்கின்றன நண்பர்களே

இந்த வார தமிழக அதிர்ச்சி சிறுவன் ஆதித்யாவின் கொலை. சாதாரணமாக ஒரு கொலைக்கு தமிழ்நாடு இவ்வளவு தூரம் முக்கியத்துவம் தருவதில்லை, இந்த முறை நமது அதிகப்படியான கோபத்துக்குக் காரணம் கொலை செய்தவர் ஒரு பெண் என்பதால்தான். தனது காதலரின் நான்கு வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்று பிறகு சூட்கேசில் வைத்து பஸ் ஒன்றில் வைத்துவிட்டு தப்பிவந்தது அவரது குற்றம். கேள்விப்பட்ட மக்களும் செய்தி வாசித்தவர்களும் கொதித்துப்போய் விவாதிக்கிறார்கள். மக்களின் சிந்தனையை தீர்மானிக்கிற ஊடகங்களும் பூவரசி மீது … பூவரசியை சபிப்பதற்கு முன்னால் நாம் பதில் சொல்லவேண்டிய கேள்விகள் சில இருக்கின்றன நண்பர்களே-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொச்சை படுத்தப் பட்ட ராவணன்

வழக்கமாக பீஃப் சாப்பிடும் பாய் கடையில் நல்ல சுவையான மாட்டு வறுவலை நண்பர்களோடு சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது பெரியார் தி.க. தோழர் ஒருவர் "ஏனுங் ராவணன் படம் பாத்திங்ளா படம் "நமக்கு' ஆதரவாக இருக்கிறது ,மணிரத்தனம் பரவாலிங் நல்ல ஆளாட்டந்தான் தெரியுதுங்" என்றார். ராவணன் என்ற டைட்டிலை வைத்து அதுவும் மணிரத்னம் எடுத்து இருக்கிறார் என்றால் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று ஒரு ஐடியா இருந்தது. ஏனென்றால் மணிரத்னம் ரோஜா படத்திலேயே தான் யார் என்பதை காட்டியவர் … கொச்சை படுத்தப் பட்ட ராவணன்-ஐ படிப்பதைத் தொடரவும்.